Thursday, March 03, 2011

கூல் கூல் வெங்கடகிரி புடவைகள்....

சென்னையிலிருந்து 3 மணிநேர பயணத்தில் நெல்லூர்.
இந்த நெல்லூரில் தயாரிக்கப்படுவதுதான் புகழ்பெற்ற
வெங்கடகிரி புடவைகள். இந்தப் புடவைகள் கைத்தறிவகை.
இன்றளவும் கைகளாலேயே நெய்யப்படுகிறது. தூய ஸ்பன்
காட்டன் வகையில் 100, 200 கவுண்ட்களில் நெய்யப்படுகிறது.
இந்த 100,200 எனும் எண்ணிக்கை புடவையின் கணத்தை,
நேர்த்தியை குறிப்பிடும்.

அதிக கணமில்லாத ரகங்கள் இவை. ஒரிஜனலாக இவை
பருத்தி வகைகள்தான். பட்டில் இருப்பது போல தங்க ஜரி,
இல்லாவிட்டால் வெள்ளி ஜரி இருக்கும். ஜிம்தானி டெக்னிக்
(வங்காளத்திலிருந்து பெற்றது) எனும் வகையில் நெய்யப்படுகிறது.
பார்டர்கள் மட்டும் நல்ல ரிச்சாக இருக்கும். சில புடவைகள் (கொஞ்சம்
விலை அதிகமாக இருப்பது) முந்தியிலும் ரிச் பார்டர்
இருக்கும். பட்டை ஒதுக்குபவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.




வெயில் காலத்தில் இருக்கும் திருமண முகூர்த்தங்களுக்கு
பட்டு கட்டிக்கொண்டு செல்வது கஷ்டமாக இருக்கும். அந்த
மாதிரி சமயங்களில் வெங்கடகிரி நல்லது. பார்க்கவும் ரிச்சாக
இருக்கும். 1000ம் ரூபாய்க்கு அகல பார்டர் புடவை முந்தியிலும்
வொர்க் செய்யப்பட்ட புடவை கிடைக்கும். கொஞ்சம் ப்ரைட்
கலர்களில்தான் இந்தப் புடவைகள் தயார் செய்யப்படுகின்றன
என்றாலும் மருதாணிக்கலர், வெளிர் பிங்க் என வித்தியாசமான
கலர்களிலும் காண்ட்ராஸ்ட் பார்டர்களுடன் கிடைக்கிறது.
சுத்தமான பருத்தியில் தயார் செய்யப்படும் இப்புடவைகளின்
அதே டிசைனில் பட்டிலும் சிலர் தயார் செய்கிறார்கள்.


அந்தக்காலத்தில் ராஜவம்சத்தினருக்காக சில புடவைகள் மட்டும்
தயாரிக்கப்பட்டு வந்தன. பதம்சாலி,தேவாங்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
தான் இந்த வகைப்புடவைகள் நெய்வதில் ஈடுபட்டிருந்தனர். இன்றும்
இவர்கள்தான் இந்த வகைப்புடவைகளை தயார் செய்தனர். ஜனாதிபதி
விருதை வென்றது இந்த வெங்கடகிரி புடவைகள். 4 நெசவாளர்கள்
இந்த விருதால் பாராட்டப்பட்டுள்ளனர்.


அடுத்த புடவைவகையுடன் நாளை சந்திக்கிறேன்.


17 comments:

சாந்தி மாரியப்பன் said...

எந்தக்காலமானாலும் காட்டன் புடவைகளுக்குத்தான் என் ஓட்டு. லேசா ஜரி போட்டதாயிருந்தா உடுத்துபவரை கம்பீரமா காமிக்கும். இந்தக்காரணத்துக்காகவே ஒருதடவை பெங்களூர் போயிருந்தப்ப வெங்கடகிரி காட்டன் ஒண்ணை வாங்கியாந்தேன் :-))

நட்புடன் ஜமால் said...

ரங்ஸ் சாக்கிரதை :P

ramachandranusha(உஷா) said...

பட்டு கட்டுவதில்லை என்பதால் என் சாய்ஸ், வெங்க்டகிரியும், பாலிகாட்டும்தான் . போன வாரம்தான்
ராசியில் எண்ணூறு ரூபாய் ரேஞ்சுக்கு ஒன்று வாங்கினேன். உங்க பதிவைப் பார்த்ததும் காண்டிராஸ்ட்
கலர், ஆந்திரா ஹேண்ட்லூமில் கிடைக்குதான்னு பார்க்கணும் ;-)

Chitra said...

அந்தக்காலத்தில் ராஜவம்சத்தினருக்காக சில புடவைகள் மட்டும்
தயாரிக்கப்பட்டு வந்தன. பதம்சாலி,தேவாங்க வம்சத்தைச் சேர்ந்தவர்கள்
தான் இந்த வகைப்புடவைகள் நெய்வதில் ஈடுபட்டிருந்தனர். இன்றும்
இவர்கள்தான் இந்த வகைப்புடவைகளை தயார் செய்தனர். ஜனாதிபதி
விருதை வென்றது இந்த வெங்கடகிரி புடவைகள். 4 நெசவாளர்கள்
இந்த விருதால் பாராட்டப்பட்டுள்ளனர்.


.....வரலாற்று பெருமையும் சிறப்பும் கொண்டதை அறிந்து கொண்டோம். தொடர்ந்து எழுதுங்க...

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

நம் நாட்டோட தட்பவெட்பநிலைக்கு காட்டன் தான் பெஸ்ட். குளிரும் தாங்கும், வெயில்காலத்துக்கு இதமாவும் இருக்கும். ஓ உங்ககிட்டயும் வெங்கடகிரி கலெக்‌ஷன் இருக்கா சந்தோஷம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஜமால்,

ஆமாம் சாக்கிரதையோ சாக்கிரதை :)))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க உஷா,

நீங்களும் நம்ம கட்சியா!! சந்தோஷம்.
ஆப்கோன்னு நம்ம கோஆப்டெக்ஸ் மாதிரி ஆந்திரா ஷோரும் இருக்கும் அதுல ட்ரை செஞ்சு பாருங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

வருகைக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

காஸ்ட்லியானாலும் லுக் இருக்கும்.பதிவு அருமை.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆமாம்.

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

ஒண்ணு செய்வீங்களாம். ஒரிஜினல் வெங்கடகிரி இங்க பத்து தள்ளுங்க. நான் ராசிபுரம் பத்து அங்க தள்ளிவிடுகிறேன்;) ரொம்ப அழகா இருக்குப்பா புடவைகள்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு. :))

வருகைக்கு நன்றி

raji said...

ஒரு அஞ்சு வெங்கடகிரி புடவை பார்சல்......

pudugaithendral said...

வாங்க ராஜி,

வெங்கடகிரி மட்டும் போதுமா?? மத்த வெரைட்டிகள் இன்னும் வருதுல்ல...

பேசாம நீங்க ஒரு எட்டு இங்கன வந்திடறது பெஸ்ட்.
:))

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

ரெண்டரை வருசம் ஆச்சு ஆனாலும் நிறைய தெரிஞ்சிக்கணும் போல இருக்கே
:)))))))))))))))))))

ADHI VENKAT said...

எனக்கும் ஒரு வெங்கடகிரி பார்சல்!

pudugaithendral said...

:))

வருகைக்கு நன்றி கோவை2தில்லி