வெங்கடகிரி புடவை வங்காள ஜிம்தானி டிசைனில் செய்யப்படுவது
போல இந்த நாராயாண்பேட் புடவைகள் அண்டை மாநிலமான
மஹாராஷ்டிரத்தின் இக்கல்,சோலாபூர் புடவைகள் போல இருக்கும்.
ஆந்திராவின் தெலங்கானா பகுதியில் இருக்கும் மெஹபூப் நகரில்
இருக்கும் ஒரு சின்ன கிராமம் தான் நாராயண்பேட். இங்கேயிருந்து
தயாரிக்கப்படும் இந்தப் புடவைகள் சிம்பிளி சூப்பர்ப்.
இந்தப் புடவைவகைகளில் முந்தி காண்ட்ராஸ்ட் கலரில் இருக்கும்.
பார்டரும் காண்ட்ராஸ்ட் கலர்களில் தங்க நூலிழைகளால் பார்டர்கள்
தயாரிக்கப்படுவதால் அமர்க்களமாக இருக்கும்.
பருத்தியில் தயாரிக்கப்படும் இப்புடவைகள், சில்க் காட்டன் வகைகளிலும்
தயாரிக்கப்படுகிறது. தண்ணீர் வசதியோ, ரயில்வே ஷ்டேஷனோ கூட
இல்லாத இந்த ஊரில் புடவை நெய்வது மட்டுமே ஜீவாதாரம். கிருஷ்ணா நதி
அருகிலேயே இருந்தாலும் அதை ஊருக்குள் கொண்டுவரும் வேலையைச்
செய்ய அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.
இளைய தலையமுலையினர் பிழைப்பிற்காக வெளிமாநிலங்களுக்கும்
அண்டை ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.
அதிக ஆர்பாட்டம் இல்லாத சாதாரண புடவைகள் அன்றாடம்
உடுத்தவும், அலுவலகங்களுக்கு உடுத்தவும் உபயோகிக்கிப்படுகிறது.
காஸ்ட்லியாகவும் கிடைக்கும், சாதாரண வகையும் உண்டு
என்பது இந்தப் புடவைகளின் ஷ்பெஷாலிட்டி. மெத்தென்ற
பருத்தி புடவைகளை அணிவதே ஒரு சுகம் தான்.
அடுத்த புடவை வகை நாளை....
12 comments:
பர்ஸுக்கு வேட்டை வைக்கறீங்க
ஹா ஹா ஹா ஹா
வருகைக்கு நன்றி எல் கே
மெத்தென்ற
பருத்தி புடவைகளை அணிவதே ஒரு சுகம் தான்.
...absolutely!
வருகைக்கு நன்றி சித்ரா
அட!அங்கே வந்து ஒரு அள்ளு அள்ளலாம் போலிருக்கே!
மஹாராஷ்ட்ரா பெண்களுக்கு இது ஃபேவரிட் :-)))
வாங்க அருணா,
ஆந்திரா முழுக்க நெசவு வேலை நடக்குது. அதனால வெரைட்டி வெரைட்டியா அள்ளலாம்.
ஒரு எட்டு வாங்க. நான் தான் இருக்கேன்ல
வாங்க அமைதிச்சாரல்,
மஹாரஷ்ட்ரா டிசைனில் வரும் இந்தப் புடவைகள் இங்கே இருப்பவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
வருகைக்கு நன்றி
/
அதிக ஆர்பாட்டம் இல்லாத சாதாரண புடவைகள் அன்றாடம்
உடுத்தவும், அலுவலகங்களுக்கு உடுத்தவும் உபயோகிக்கிப்படுகிறது.
காஸ்ட்லியாகவும் கிடைக்கும்
/
எப்பவும் வேஷ்டி, பாண்ட் தான்
:)))))))))))))))
எப்பவும் வேஷ்டி, பாண்ட் தான்
:)))))))))))))))
ஸ்மைலியும் நீங்களே போட்டுட்டீங்க
வருகைக்கு நன்றி
ஆஹா! ஆசையை கிளப்பி விடறீங்க.
வாங்க கோவை2தில்லி,
ஹைதைக்கு ஒரு டிக்கைட்டை உடனே போடுங்க. வந்து அள்ளுங்க.
வருகைக்கு நன்றி
Post a Comment