Tuesday, March 08, 2011

தர்வார் புடவைகள்

ஆந்திரா புடவை வகைகளையே பார்த்துக்கொண்டிருந்தோம். அதில்
ஒரு சின்ன ப்ரேக் விட்டு பக்கத்து மாநிலங்கள் சில வற்றின் வகைகளை
பார்க்கலாம். இன்று பார்க்க இருப்பது கர்நாடக மாநில ஷ்பெஷல்.
தர்வார் (தர்வார்ட்) புடவைகள். இவை காட்டன் புடவை வகைகள்.


பெங்களூரிலிருந்து 425 கிமீ தொலைவில் இருக்கிறது தர்வார்.
இங்கே தயாரிக்கப்படும் தர்வார் புடவைகள் பார்க்க பட்டுபோல
பளபளக்கும். ஆனால் இவை பருத்திபுடவைகளே.
ஜரிகள் பெரிதாக இருக்காது. காண்ட்ராஸ்ட் பார்டர்கள்,
டிசைன்கள், எம்ப்ராய்டரி வகைகள் என இருக்கும். அலுவலகத்துக்கு
உடுத்த வசதி. அன்றாட உபயோகத்துக்கும் பெஸ்ட். நாள்
முழுக்க உடுத்தி நின்றாலும் கசங்காது.


Saree utta Dharwada naari - aaga kaanathidhalu gruhalaxmiaagi, eega vishwasundari aagi.

High heels bandu saree myaga hodara, namma dharwada naari hokkalu saree myaga thandala

innu choli suddi enanantha helodri..
clothna kamaloo illa darji kamaloo - choli iddu illadanga kanathaitree..

ena helri, saree utta dharwada naari - ninaga neena maadri



தர்வார் புடவைகள் பற்றி தேடும்பொழுது நெட்டில் இந்தக் கன்னடத்து
கவிதை கிடைத்தது. தர்வார் புடவை உடுத்தி வரும் பெண்ணின்
அழகை வர்ணிப்பது போல இருக்கிறது. புரிந்தவர்கள் பின்னூட்டத்தில்
சொல்லுங்கள்.


10 comments:

வல்லிசிம்ஹன் said...

தென்றல் இப்படிப் புடவைக் கடை விரிக்கிறீர்களே. நாயமா.

அடுத்த தடவை இந்தப் பக்கம் வரும்போது வரிசைக்கு ஒண்ணா எடுத்து வரணும்:)
அந்தக் கன்னடப் பாடலில் என்ன எழுதி இருக்க்ம்னு ஊகிக்கலாமா:)

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

இந்தப் பக்கம் வரும்போது வரிசைக்கு ஒண்ணா எடுத்து வரணும்:)//

ஆஹா அதுக்கென்ன..

கன்னடப் பாடலில் என்ன எழுதி இருக்க்ம்னு ஊகிக்கலாமா:)//

கேக்கணுமா? சொல்லுங்க காத்திருக்கோம்

வெங்கட் நாகராஜ் said...

என்ன சகோ.... இது என்ன புடவை வாரமா...... :)

Chitra said...

இப்போதான் நானும் புடவைகள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறேன். ஹி,ஹி,ஹி,...

ADHI VENKAT said...

புடவை பார்க்க அழகா இருக்கு. கன்னடம் தெரியாதேப்பா! நீங்களே சொல்லிடுங்க.

pudugaithendral said...

வாங்க சகோ,

புடவை வாரம்லாம் இல்ல. புடவைப்பத்தின பதிவுகள் தொடர்ந்து ரங்குகளுக்கு கொஞ்சமா வேட்டு வைக்கத் திட்டம். அம்புட்டேதான்.:))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

நான் பட்டு கட்டுவதில்லை என்பதால தேடித்தேடி தெரிஞ்சுகிட்டு இருப்பதை பகிர்ந்துக்கிறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

எனக்கும் கன்னடம் தெரியாது. தெரிஞ்சவங்க யாராவது சொன்னாத் தேவலை. ஆளைப்பிடிப்போம் இருங்க.

வருகைக்கு நன்றி

Iyappan Krishnan said...

Saree utta Dharwada naari - aaga kaanathidhalu gruhalaxmiaagi, eega vishwasundari aagi.


சேலை உடுத்திய தார்வாட் மங்கை, அப்போ கிருஹலக்ஷ்மியாட்டம் இருந்தா இப்ப மிஸ்வோர்ல்ட் மாதிரி ஆயிட்டா

ஹை ஹீல்ஸு புடவைக்கு கீழ போனா, தார்வட் சுந்தரி புடைவையை தொப்புளுக்கு கீழ தந்தாளே

இன்னும் ச்சோளி, சுடின்னு என்னன்னமோ சொன்னாலும்
துணியின் அழகா இல்லை தச்சவன் அப்படி தச்சானா
சோளி இருந்தும் இல்லாத மாதிரிதான் தெரியுது

என்னதான் சொல்லுங்க, சாரி உடுத்திய தார்வாட் மங்கை உனக்கே நீயா பண்ணு ??? ( ninaga neena maadri - இது அப்படித்தான் அர்த்தம் வருது.)

pudugaithendral said...

dhanks jeevs