Tuesday, March 15, 2011

ஏ குருவி!! சிட்டுக்குருவி

இலங்கையைவிட்டு கிளம்புகையில் எத்தனையோ விஷயங்கள்
இனிக்கிடைக்காது என்று மனது கணத்த விஷயங்களில் மிகவும்
முக்கியமானது காலை எழுந்ததும் கேட்கும் இந்த சத்தம்.
பகல் முழுதும் கூட ஏதோ ஒரு பறவையின் சத்தம் வீட்டைச்
சுத்தி இருக்கும். வீட்டைக்காலி செய்வதற்கு முன்
முழு வீட்டையும் வீடியோ எடுத்த பொழுது பேக்ரவுண்ட் ம்யூசிக்
போல் அந்தச் சத்தம் தான் இருந்தது.
சிட்டுக்குருவி எனும் இனமே அழியும் சூழலில் இருக்கிறது.
மரங்கள் போய் மாடிவீடுகள் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய
வாழ்வில் கூடுகட்டி வாழ அதற்கென ஒரு இடமில்லை.
அங்கங்கே தொங்கும் ஒயர்கள், செல்போன் டவர்கள் அந்த
சின்ன உயிரை எடுக்கும் எமன்களாகிவிட அந்த இனிய
சத்தம் எழுப்பும் ஜீவன் இனி இருக்கவே இருக்காதோ என
அச்சம் ஏற்படுகிறது.மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அம்மாவிடம் கதை
பேசுதோ என நினைக்க வைத்த அந்த சிட்டுக்குருவி
இப்போது எங்கே சென்றது? இந்த நினைவு இப்பொழுதுதான்
உலக மக்களிடையே வந்திருக்கிறது. எதையோ இழந்த
அந்த குருவியின் சத்தமற்ற நேரங்கள் தந்த வலியால்
உலகம் விழித்துக்கொண்டு இந்தச் சிட்டுக்குருவிகளுக்காக
ஒரு விழிப்புணர்வு நாளைக்கொண்டு வந்துள்ளது.
மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகளின் தினம்.


இந்தக் குருவிகளைக் காக்க நாம் என்ன செய்யலாம்!!
நம்மால் ஆன சிலவற்றை பார்ப்போம்:
இதுபோல வீட்டுக்கு வெளியே கூடும், சுத்தமான தண்ணீருடன்
சில நெல்மணிகள் வைக்கலாம்.

மொட்டைமாடியில் சில தானியங்களை போட்டுவைக்கலாம்.

முகநூலில் சேர்ந்து என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு
நம்மால் இயன்றதை செய்யலாம்கெமிக்கல் உரங்களை உபயோகிப்பதை நிறுத்திக்கொண்டால்
அந்த நெல்மணிகளை தின்று அவை இறக்காமல் இருக்கும்.

சமீபத்தில் படித்த ஒரு கதையை இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன்.
நிலத்தில் விளைந்திருக்கும் நெர்க்கதிர்களை தின்ன வரும் காக்கா,
குருவிகளை விரட்ட சோலக்காட்டு பொம்மை தயார் செய்து கொண்டிருந்த
தாத்தாவைப் பார்த்து பேரன் என்ன செய்கிறார் என கேட்க,
சோலக்காட்டு பொம்மை செய்வதை சொல்வார்.

“அந்தச் சின்ன ஜீவன் எவ்வளவு சாப்பிடப்போகிறது 2 கிலோ கூட
ஆகாது. அதற்குப்போய் 300 ரூபாய் செல்வழிக்கிறீர்களே!!” என்று
சொல்ல தாத்தா தான் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு
யோசிப்பதாக ஒரு பக்க கதை அது.சிட்டுக்குருவிகளுக்கு பல்வேறு மொழிகளில் பெயர்கள் என்னென்ன
என்று தெரிஞ்சிக்கலாமா!!

தமிழிலும், மலையாளத்திலும் குருவி, தெலுங்கில் “பிச்சுக”pichhuka,
கன்னடத்தில் குப்பாச்சி gubbachchi, பஞ்சாபியில் chiri சிர்,
ஜம்முகஷ்மீரில் செஎர் chaer , வங்காளத்தில் சராய் பாகி Charai Pakhi ,
ஒரியத்தில் கராச்சிட்டியா gharachatia, உருதுவில் சிரயா chirya,
சிந்தி மொழியில் ஜிர்கி. ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும்
மணக்கும். இந்தச் சிட்டுக்குருவியும் அப்படித்தான்.

அழிந்துவரும் இந்த இனத்தைக் காக்க நம்மால் ஆனதைச் செய்வோம்.
இல்லையெனில் வருங்காலக்கவிஞர்களுக்கு கூட சிட்டுக்குருவி
என ஒரு இனம் இருந்ததாம் எனத் தெரியாது.
“ஏ குருவி! சிட்டுக்குருவி”
”சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே!”
என பாடல்கள் வராமலே போய்விடும்.
மறக்காம ஓட்டு போடுங்க. நன்றி

21 comments:

சமுத்ரா said...

அருமை...இன்றைய அவசர வாழ்க்கையில் குருவி சத்தங்கள் கேட்பதும் இல்லை..
கேட்டாலும் யாரும் ரசிப்பதும் இல்லை..

புதுகைத் தென்றல் said...

வாங்க சமுத்ரா,

//.இன்றைய அவசர வாழ்க்கையில் குருவி சத்தங்கள் கேட்பதும் இல்லை..
கேட்டாலும் யாரும் ரசிப்பதும் இல்லை.//

மனிதர்கள் தொலைக்கும் எத்தனையோ சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

வருகைக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத்தென்றல் - அருமையான சிந்தனை - இன்றைய அவசர உலகில் நாம் பல மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளை இழந்து விட்டோம். பறவைகளை ரசிப்பதை மறந்து விட்டோம். ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார்

சுந்தரா said...

வீட்டு உறுப்பினர்களைப்போலவே வீட்டுக்குள் சுதந்திரமாய்ப் பறந்து திரியும் அவற்றை நம்வீடுகளில் இப்போது பார்க்கமுடியாமலிருப்பது வருத்தம்தான்.

ஒரு ஆறுதல்... இங்கே அமீரகத்தில் சிட்டுக்குருவிகள் நிறைய இருக்கின்றன.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Nicely written. I remembered the days which I woke up listening to the songs of lovely birds. But now very difficult to see. Yes.. even i agree we are in a busy world. Is it the real problem. No.. Do we really think to keep shelter for our birds (trees)? In order to fullfill our nay needs, we are cutting many. Are we really concerned about them? If yes, great. Anyway very nice to see your post. Thanks for my comment space. My wishes!

fundoo said...

சிட்டுக்குருவி அழிவு என்பது 100சதம் மனித குலத்தின் தன்னலம். வயலில் போடும் விதைகளைக் கொத்தி தின்கும் அந்த ஜீவன் ரசாயன விதை நேர்த்தியினாலும், ரசாயன உர பயன்பாடுகளினாலும் நஞ்சை உண்டு மலட்டுத்தன்மை அடைந்து வெகு சீக்கிரமாக அழிவை நோக்கி நகர்த்திவிட்டன. முக்கியமாக தொலைபேசி கோபுரங்களும் அவைதம் அலைகளும் கொன்றேவிட்டன. நம் நலத்திற்காக இயற்கையை எப்படி எல்லாம் இன்னல் கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் கொடுக்கிறோம். கடலுக்குல் போக நமக்கு அவ்வளவு அவசரம் போல!

புதுகைத் தென்றல் said...

வாங்க சுந்தரா,

அமீரகத்துல இருக்கு ஆனா நம்ம நாட்டுலதான் காணம போய்க்கிட்டு இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

welcome pranavam ravikumar,

even i agree we are in a busy world. Is it the real problem//

its a problem because we are not spending time to listen to birds chirps or cuckoo's voice. loosing pleasures around as searching them some where else.... which is not there.

புதுகைத் தென்றல் said...

Do we really think to keep shelter for our birds (trees)? In order to fullfill our nay needs, we are cutting many. Are we really concerned about them? //

good question. answer lies in each individuals heart.

புதுகைத் தென்றல் said...

கடலுக்குல் போக நமக்கு அவ்வளவு அவசரம் போல!//

இனியாவது உணர்ந்து நம்மால் ஏதாவது செய்ய முடிந்தால் அதைச் செய்வோம். நம் வருங்கால சந்ததியினராவது கொஞ்ச காலத்துக்கு நிம்மதியாக வாழமுடியும்.

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

முன்பிருந்த ஊர்களில் எல்லாம் மரங்களும் இருக்கும் .அவற்றில் வந்தடையும் குருவிகளும் இருக்கும். திருச்சியில் நாங்கள் இருந்த வீடும் அப்படித்தான். . ஜன்க்ஷன் பக்கத்தில் ஆஷ்லி என்று ஒரு தங்கும் விடுதி இருக்கும். அங்கே சாயங்காலம் வரும் குருவிகளின் சத்தம் காதைப் பிய்த்துக் கொண்டு போகும். என்ன ஒரு அழகான பறவை.:(

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்னு இப்பவும் அப்பார்ட்மெண்ட்களில் ஒரு மரமாவது வளர்த்தால் பறவையினத்தை கொஞ்சமாவது காப்பற்றலாம்.

வருகைக்கு நன்றிம்மா

ஜிஜி said...

சூப்பரா இருக்குங்க பதிவும் சிட்டுக்குருவியின் படங்களும், வீடியோவும்.ஊர்ல எங்க வீட்டு பக்கத்துல சிட்டுக்குருவியை எப்போவாவது பார்ப்பதுண்டு. பார்த்தா பார்த்துட்டே இருக்கலாம்.அவ்வளவு அழகு.ஆனால் இப்போ அந்த இனமே அழிஞ்சு வர்றது நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு

ராமலக்ஷ்மி said...

சிட்டுக்குருவி ரொம்பப் பிடிக்கும். சின்ன வயதில் எங்கள் வீட்டில், உள்திண்ணையில் இரண்டு தூண்களுக்கு நடுவே பரண் அமைத்து குருவிக்கு வீடு செய்யப்பட்டிருக்கும். குருவிகளை இப்போ காண்பதே அரிதாகி விட்டதே:(!

நல்ல பகிர்வு தென்றல்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜிஜி,

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்‌ஷ்மி

ஹுஸைனம்மா said...

இங்கே வீட்டுப் பக்கம், குருவி, புறா, மைனா போன்ற சிறு பறவைகள் வந்து செலவ்தைப் பார்க்க்ம்போது என்னா சுகமா இருக்கு? மழலை மொழி ஒரு இன்பம்னா, இதுவும் அதுக்கு ஈடான ஒரு சுகம். ரசிச்சுக் கேக்கிறவங்களுக்குப் புரியும்.

அமைதிச்சாரல் said...

நல்ல பகிர்வு.. இதை எழுதும்போதும் சிட்டுக்குருவிகளில் குரல் பால்கனியிலிருந்து வந்து விழுந்துட்டேயிருக்குது :-))

புதுகைத் தென்றல் said...

மழலை மொழி ஒரு இன்பம்னா, இதுவும் அதுக்கு ஈடான ஒரு சுகம். ரசிச்சுக் கேக்கிறவங்களுக்குப் புரியும்.//

superb

புதுகைத் தென்றல் said...

சிட்டுக்குருவிகளில் குரல் பால்கனியிலிருந்து வந்து விழுந்துட்டேயிருக்குது :-))//

njoy