Monday, March 21, 2011

தலைநகரில் தரை இறங்கிய தென்றல்.... :))

குளிர் நடுக்கியது போய் வெயில் ஆரம்பிச்சிருக்கு அதனால்
ஒரு எட்டு வந்திட்டு போறதுன்னு மன்மோகன் சிங் ரொம்பவும்
கேட்டுகிட்டாப்ல. நாட்டை ஆள்பவர்(!!), கேக்காட்டி எப்புடி?? :))
சரின்னு டிக்கட்ட போட்டு கிளம்பியாச்சு. நாம ஒண்ணு நினைச்சா
கட்வுள் ஒண்ணு நினைக்கறாப்டி!! ஆஷிஷுக்கும் 11ஆம் தேதியே
பரிட்சை முடிஞ்சிடும்னு 12ஆம் தேதியே கிளம்பி 1 வாரம்
டூர் அடிக்க திட்டம்போட்டிருந்தேன். ஆனா திடும்னு கடைசி
பரிட்சையை 15ஆம் தேதி வெச்சிப்பிட்டாக. வேற வழியில்லாம
கொஞ்சமா ஆஷிஷையும் சீபிஎஸ்ஸி காரங்களை நிறையவும்
திட்டி டிக்கட்டை 16ஆம் தேதிக்கு மாத்தினோம். அதனால
போக நினைச்சிருந்த வாகாபார்டர் திட்டத்தையும் கைவிடும்படியா
ஆகிடிச்சு :((

எல்லாம் ஓகேன்னு நினைச்சுகிட்டு இருக்கையில மார்ச் 14&15
உடம்பு சரியில்லை!!! BP சும்மா ஆட்டம் காட்டுது.
94/54 இல்லாடி 97/60. ஊருக்கு கிளம்புவோமா? எல்லா
ஏற்பாடும் செஞ்சாச்சேன்னு டென்ஷன். என்ன ஆனாலும்
சரின்னு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். எப்படியோ கிளம்பும்
நாளும் வந்தாச்சு. உடம்பு ஓரளவு பரவாயில்லை.

ஹைதை ஷம்ஷாபாத் விமான நிலையம் எனக்கு ரொம்ப
பிடிச்சது. கார் பார்க்கிங்கே சூப்பரா இருக்கும். டிப்பார்சர்
மேலே, அரைவல் கீழே என பக்காவா ப்ளான் செஞ்சு இருக்கும்.
செக்கின் செஞ்சிட்டு திரும்பினா ஆஷிஷையும் அம்ருதாவையும்
பாத்துகிட்டே ஒருத்தங்க வந்து கிராஸ் செஞ்சு போனாங்க!!
யாரு அதுன்னு பாத்தா நடிகை ரோகிணி!!! அங்கேயிருந்து
நகர்ந்து வந்தா தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயணராவ்!!

நாங்க டிபன் சாப்பிட்டுகிட்டு உக்காந்திருந்த இடத்துல
ஒருத்தர் ஒரு வித கலரிங் தலையோட கிராஸ் செஞ்சு போனாரு!!
ஸ்டண்ட் மாஸ்ட் பீட்டர் ஹெயின்ஸ் அவரு. ஹைதையிலிருந்து
கோவைக்கு போய்கிட்டு இருந்தாரு. 4 தடவை ஃபைனல் கால்னு
சொன்னதுக்கப்புறம்தான் மனுஷன் கீழே இறங்கி தன் விமானத்துக்கு
போனாரு!! எங்க ப்ளைட்டுக்கு ஏரோபிரிட்ஜ் வழியா நுழைஞ்சோம்.
கரெக்டா 9.10க்கு புறப்பட்ட விமானம் டேக்ஆஃப் ரொம்ப
ஸ்மூத்தா இருந்துச்சு. 2 மணிநேரம் பயணம். போரடிச்சது
உண்மை.

டேக் ஆஃப் நல்லா இருந்துச்சேன்னு சந்தோஷப்பட்டதுக்கு
லேண்டிங் தடால்னு போட்ட பைலட்டை வெஞ்சுகிட்டே
இருந்தேன். அப்பதான் அயித்தான் T3 பத்தி சொல்லிகிட்டு
இருந்தாரு. எனக்கு இந்த பஸ்ஸுல கூட்டிகிட்டு போறது
பிடிக்காது. ஏரோ ப்ரிட்ஜா இருந்தா நல்லா இருக்கும்னு
நினைச்சுகிட்டு இருக்க அயித்தான் T3லதான் 78 aerobridge
இருக்குன்னு சொல்லிகிட்டே இருக்க என் அதிர்ஷ்டம்
T3ல ஃப்ளைட்ட நிப்பாட்டினாரு பைலட்.

ஏரோப்ரிட்ஜை கொண்டுவந்து விமானத்துல சேர்க்கும்
காட்சி ரொம்பவே சூப்பரா இருக்கும் இதைப்பத்தி
நம்ம பதிவர் தம்பி சஞ்சய்காந்தி பதிவு வீடியோவா
போட்டிருக்காரு.

”உங்களுக்கு நல்ல லக்!! இதுக்கு முன்னாடி கூட
நான் வந்திருக்கேன் ஆனா டி3 பாத்ததில்லை” அப்படின்னு
அயித்தான் சொல்ல ஆனந்தமா இறங்கி நடந்தோம்.
கார்ப்பட் ஒரேகலருல சூப்பரா இருக்கு. (கார்ப்பட்
மெயிண்டெனன்ஸ் ரொம்ப கஷ்டமில்ல!! அப்படின்னு
ஆஷிஷ் கமெண்ட் அடிச்சுகிட்டே வந்தாப்ல)



பேக்கேஜ் கலெக்‌ஷனுக்கு இறங்கும் இடத்தில் பரதநாட்டிய
அடவுகளை அழகா வெச்சிருக்காங்க.


பொட்டிகளை எடுத்துகிட்டு வெளியே வந்தா கார் பார்க் போகும்
இடத்துக்கு நடந்தோம்.... நடந்தோம்.... நடந்துகிட்டே இருந்தோம்!!!
ரொம்ப நடக்க தேவையில்லை. வாக்வே இருக்கு.
போட்டோ எடுக்க அனுமதியில்லையேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.
ஆனா நெட்டுல கிடைச்சிடிச்சு. இதுதான் டி3யின் Multi level car parking!!



அடுக்கடுக்கா இருக்கு!! அத்தோட கார் பார்க்கிங் காலியா இருக்கா? இல்லையான்னு?
சொல்ல பச்சை/சிவப்பு விளக்குகள் வெச்சிருக்காங்க. ரொம்ப சூப்பரா
இருந்துச்சு. சர்வதேச தரத்தோட டி3 சூப்பரோ சூப்பர்.

ஒரு வழியா சுத்தி சுத்தி வந்தோங்கன்னு ஏர்போர்ட் கார்பார்க்கிங்கிலேர்ந்து
வெளியே வந்தாச்சு. நல்ல வெயில்!!! இந்த இடத்துல தொடரும்னு
போட்டு நிப்பாட்டிக்கறேன்!!!


22 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, வீடு சேர்ந்த உடனே தில்லி சுற்றுலா பதிவு போட்டாச்சா! நல்லது. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

pudugaithendral said...

வாங்க சகோ,

பதிவு போட்ட உடன் உங்க பின்னூட்டம். மகிழ்ச்சி. மதியமே வந்தாச்சு. நல்லா ஓய்வு எடுத்து இரவு சாப்பாடும் முடிச்சுதான் பதிவு போட வந்தேன். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி

துளசி கோபால் said...

அருமையான ஆரம்பம்!

எல் கே said...

ஹ்ம்ம் புது டெர்மினல் பத்திக் கேள்வி பட்டு இருக்கேன். உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்

raji said...

என்னது? தொடருமா?
போகும் போது தொடரும் போட்டுகிட்டா போனீங்க?தொடர்ச்சியாதான போனீங்க!
எங்களை மட்டும் இப்பிடி ஏமாத்தினா எப்பிடி?

அன்புடன் அருணா said...

அட!அப்பிடியே ஜெய்ப்பூரையும் எட்டிப் பார்த்திருக்கலாமே!

raji said...

இப்ப பி பி எப்பிடி இருக்கு?ஏன் அப்பிடி ஆச்சு?

சாந்தி மாரியப்பன் said...

டெல்லி வெய்யில் எப்படியிருக்கு :-))

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

நலமா??

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க எல்கே,

நம்ம உடம்பு அப்படித்தான் அதுக்காக என்ன செய்யமுடியும். முடியும்போது எல்லாவேலையும் செய்வது, இல்லாட்டி கம்முனு படுத்துகிட வேண்டியதுதான் :))

pudugaithendral said...

வாங்க ராஜி,

//தொடர்ச்சியாதான போனீங்க!
எங்களை மட்டும் இப்பிடி ஏமாத்தினா எப்பிடி?//

அம்மாடி அப்ப பதிவு எம்புட்டு பெரிசா இருக்கும்னு யோசிச்சு பாத்தேன். அம்புட்டுதான் யாருமே படிக்க மாட்டாங்க. :))
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

உங்களை சந்திக்கும் எண்ணம் இருந்தது. நேரம் பற்றாக்குறை. இன்று காலை அயித்தான் அவரது பாஸ் வருவதால் ஹைதையில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து மொத்த திட்டத்தையும் மாத்திடிச்சு.

அடுத்தவாட்டி ஷ்பெஷலா வாகா பார்டர் & ஜெய்பூர் ஷ்பெஷல் ட்ரிப் ஒண்ணு வைச்சுக்கறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராஜி,

//இப்ப பி பி எப்பிடி இருக்கு?ஏன் அப்பிடி ஆச்சு?//

அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்பது போல எனக்கு இது சாதாரணம். லோ பீபியை ஹைபோடென்ஷன்னு சொல்வாங்க. ஹை பீபியைவிட கொடுமையானது!! ஏன் ஆனிச்சின்னு காரணங்கள் நிறைய்ய இருக்கும். அதெல்லாம் ரெஸ்ட் எடுத்து கொஞ்சம் வாக்கிங் போய் நல்லா சாப்பிட்டா சரியாகிடும். இப்ப நார்மலாத்தான் இருக்கு. கவலைப்படாதீங்க. அன்பிற்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

எங்க ஹைதை சொக்கத் தங்கம்! இதைவிட வேறேதுவும் சொல்லணுமா!! :))

வருகைக்கு நன்றி

Anonymous said...

படத்தில இருக்கிறதுக்கு பேர் முத்திரை. அடவுங்கரது இரண்டு மூணு வகையான கை அசைவுகளையும் கால் அசைவுகளையும் கொண்ட ஒரு கோர்வை. கராட்டேல காட்டா மாதிரி.

முத்திரைகளை இப்படி போடற ஐடியா யாரோடதுன்னு தெரியுமா? அமேசிங்க் வேர்க் !

ADHI VENKAT said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உடம்பு நார்மலா ஆயிடுச்சுன்னு படித்தேன். உடம்பை கவனித்துக் கொள்ளவும்.

அமுதா கிருஷ்ணா said...

நாங்களும் 4 வருடங்கள் முன்பு வரை லீவு விட்டா அன்று இரவே ட்ரையின் ஏறிடுவோம். இப்போ பசங்க காலேஜ் வந்ததால் எல்லாம் மாறிடுச்சு. பயணம் எப்படி இருந்தது. போன வருடம் இந்த டைம் நானும் சின்னவனும் மட்டும் ஜம்மு வைஷ்ணவி தேவி, டில்லி போய் வந்தோம்.

ஹுஸைனம்மா said...

பதிவர் சந்திப்பு நடந்துச்சா? அது பத்தியும் எழுதுங்க. ஆமா, மன்மோகன் கெஸ்ட்டாச்சே நீங்க, அப்ப அவர் வீட்டிலதான தங்கிருக்கீங்க, அதையும் படம் புடிச்சி போடுங்க!! :-)))))

அப்புறம், ஸேம் பிஞ்ச்!! (லோ பிபிக்கு) :-)))

pudugaithendral said...

வாங்க அனாமிகா,

விவரங்களுக்கு வருகைக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

எனக்கும் உங்க எல்லோரையும் சந்திச்சதில ரொம்ப சந்தோஷம்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

பசங்க பெருசாகும் வரைதான் ஜாலி ட்ரிப் எல்லாம். இன்னும் ஒரு வருஷம் எஞ்சாய் செய்யலாம். அப்புறம் கஷ்டம் எனக்கு. :) வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

பதிவர் சந்திப்பு பத்தி விவரமா போஸ்ட் வரும். வான்னு சொல்லிப்பிட்டு இந்த சிங் நம்மளை கண்டுக்கவே இல்லை. ஹோலி அன்னைக்காவது கூப்பிட்டு விருந்து வெச்சிருக்கலாம்!!! ஒண்ணும் சரியில்லை. :))

நீங்களும் சேம் ப்ளட்டா :((

வருகைக்கு நன்றி