ஏர்போர்டிலிருந்து ஹோட்டலுக்கும் போகும் வழியில் கொஞ்ச
தூரம் சென்றால் முதலில் குதுப்மினார் வருதுன்னு அயித்தான்
சொன்னார். மண்டைய பிளக்கும் வெயிலா இருந்தாலும் சரின்னு
வண்டியை குதுப்மினாருக்கு விட்டோம்.
டெல்லியில் ஆஹா என்ன ஒரு ட்ராபிக்!!! சும்மா சொல்லக்கூடாது.
நத்தை ஊறுவது போலத்தான்! ஹைதையில் தான் ராங் ரூட்டுல
வருவாங்க, கன்னாபின்னான்னு ஓட்டுவாங்கன்னு சிலர் சொல்வாங்க.
தலைநகரும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. கரெக்டா ஸ்பீடா
எதிர் திசையில் வர்றாங்க. டூ வீலர்களுக்குன்னு தனி லைன் இருக்கு.
ஆனா சைக்கிள் கூட அதுல போறதில்லை!!! அப்படில்லாம் ஒழுங்கா
இருந்திட்டா அது இந்தியா இல்லைன்னு நமக்குத் தெரியும் :)) அதனால்
அத்த விட்டு குதுப்மினாருக்கு வருவோம்!!
அஸ்திவாரம் போட்டது ராஜபுதினர்கள். ஆபகனிஸ்தானின் மினாரைப்போல
ஒன்று கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு டெல்லியின் முதல் முஸ்லீம்
மன்னர் 1193 முதல் தளம் வரை அமைத்தார்.
அடிபாகத்தில் சுற்றளவு 14.32மீ, கோபுரத்தில் சுற்றளவு 2.75, உயரம்
மொத்தமா 72.5மீ. இவ்வளவு அழகா இருக்கும் இந்த மினாரை
மேலும் இரண்டு தளங்கள் அமைத்து கட்டி முடித்தது ஐபக்கின்
மருமகன் Iltutmish. சூரிய ஒளி மினாரில் விழுவது போல
இருக்கும் இந்தப் போட்டோவின் கோணம் பார்த்தது ஆஷிஷ். :)
சந்திரகுப்த விக்கரமாதித்ய மன்னர் கட்டியதாகச் சொல்லப்படும்
இரும்புத் தூண் இந்த குதுப் காம்ப்ளக்ஸில்தான் இருக்கிறது.
6 டன் எடையும் 22 அடி உயரமும் இருக்கும் இந்த இரும்பு
1600 வருஷமா துருபிடிக்காமத்தான் இருந்துச்சு. ஆனா
இப்ப இருக்கும் சுற்றுச்சூழல் மாசுல கொஞ்சமா துரு பிடிக்க
ஆரம்பிச்சிருக்குன்னு சமீபத்தில டீவி நிகழ்ச்சி ஒண்ணுல
பாத்தேன்!!
ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டு
3 மணிக்கு கிளம்பியாச்சு அடுத்த ரவுண்டுக்கு. எனக்கும்
அயித்தானுக்கும் மொளனராகம் படம் ரொம்ப பிடிக்கும்.
அந்த படத்துல தான் எனக்கு விவரம் தெரிஞ்சு டெல்லியைக்
காட்டினது. அயித்தானுக்கு மொளனராகம் படத்துல மோகன்,
ரேவதி வீடு போல ஒரு வீடு வேணும்னு ஆசை. சொந்த
வீடு அந்த மாதிரி வாங்க முடியாட்டாலும் 7 வருஷம்
ஆசை தீர அதே மாதிரி காரில் உள்ளே நுழைஞ்சு வீட்டுக்கு
போவது போல ஒரு வீடு இலங்கையில் வாழ்ந்தது போதும்.
ஆசை படத்துல கூட ப்ரகாஷ்ராஜும் நிழல்கள் ரவியும்
மார்னிங் ஜாகிங் போவதுபோல காட்சி வரும் இடம்
இண்டியா கேட்டும் அதற்கு எதிரில் இருக்கும் ராஷ்ட்ரபதிபவனும்தான்.
சுற்றி பார்க் மாதிரி வெச்சிருக்காங்க. நாங்க அங்க இருந்த பொழுது
ரவுண்ட்ஸிற்காக ஒரு மிலிட்டரிவேனில் நிறைய வீரர்களுடன்
வந்ததைப் பார்த்த பொழுது ஒரு நிமிடம் எல்லோரும் இலங்கைக்கு
போன மாதிரி ஒரு ஃபீலிங். அங்க தான் சர்வசாதாரணமா
துப்பாக்கியோட ஆர்மிகாரங்க பாக்கலாம். ( ட்ராபிக் போலீஸ் கூட
துப்பாக்கியோட நிப்பதை இந்த ஊருலதான்க்கா பாக்கறேன்னு
புதுசா கொழும்பு வந்த ஒரு தம்பி பயந்ததை நினைச்சுகிட்டோம்)
அங்கபோய் நின்னப்ப நாமே! நாமான்னு எங்களுக்குள்ள ஒரு
சின்ன குதூகலம். உயிர் நீத்த போர்வீரர்களுக்காக கட்டப்பட்டு
இப்பவும் அங்கே ஒரு ஜோதி ஏத்தி வெச்சு காவலுக்கு இரண்டு
ஜவான்களையும் போட்டிருக்காங்க. அந்த நினைவுச்சின்னத்தை
கிட்ட போய் (ரொம்ப கிட்ட விடமாட்டாங்க) பார்த்தா உயிர்
நீத்த பல ஜவான்களின் பெயர்களை பதிச்சிருக்காங்க.
இண்டியாகேட்டிலிருந்து ராஷ்ட்ரபதி பவன்:
ராஷ்ட்ரபதி பவன் பக்கத்திலிருந்து இண்டியாகேட்டின் அழகு.
இண்டியாகேட்டுக்கு நேர் எதிரில் 2 கிமீ தொலைவில் ராஷ்ட்ரபதிபவன்
இருக்கு. அதற்கு வலதுபக்கத்தில் பிரதமரின் அலுவலகம். இடதுபக்கம்
நாடாளுமன்றம். அதற்கு பக்கத்திலேயே அமைச்சர்களின் அலுவலகங்கள்
அடங்கிய கட்டம். இதனால அங்கே டைட் செக்யூரிட்டி. வண்டியை
பார்க்கிங் செய்ய முடியாது. அதனால வண்டில இருந்துகிட்டே
போட்டோ பிடிச்சோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாடி இறக்கிவிட்டு
டிரைவர் ஒரு ரவுண்ட் அடிச்சு வர்றதுக்குள்ள போட்டோ எடுத்தோம்.
இவற்றிற்கு கொஞ்சம் அருகிலேயே அமைச்சர்களின் வீடுகள் இல்லையில்லை
பங்களாக்கள். நமக்குத் தெரிஞ்ச லிஸ்டில் டீஆர் பாலு அவர்கள் வீடு,
ஏகே ஆண்டணி அவர்கள் வீடு இப்படி எல்லாம் சுத்தி சுத்தி வந்து
பார்த்தோம். பிரதமரின் வீட்டு வழியாத்தான் போனோம். அவரு
பிசியா இருந்திருப்பாருன்னு டிஸ்டர்ப் செய்யாம வந்திட்டோம்!!!
இந்தப் பதிவே இம்புட்டு பெரிசாகிடிச்சே!!! அடுத்து போன இடங்கள்
பத்தி..... ஆமாம் அடுத்த பதிவுல!!!
27 comments:
ஆஜர் ஹோ!
//அத்தை விட்டு குதுப்மினாருக்கு வருவோம்!//
அவங்களை ஏங்க விட்டீங்க ? அவங்களையும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாமே ??
படங்கள் அருமை..
பதிவு அழகு!
நல்ல தகவல்கள்...
ஓர் பயனம் போனமாதிரியே இருக்கு..
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
ஆஹா வாங்க டீச்சர் வாங்க,
இன்னைக்கு நீங்கதான் பர்ஸ்டு
வாங்க எல்கே,
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகிப்போச்சு.
சுட்டிகாட்டியதுக்கு நன்னி.
நன்றி சமுத்ரா
நன்றி ரவிகுமார்
வாங்க கருன்,
அதுக்குத்தானே பகிர்வது.
வருகைக்கு நன்றி
அடுத்து எந்த இடம் காமிக்கப் போறீங்கக்கா?
இண்டியா கேட், ராஷ்டிரபதி பவன் எல்லாம் வந்தீங்களா! அங்கே இருந்து ஒரு சவுண்ட் விட்டு இருந்தா நான் வந்து பார்த்திருப்பேன் :)
குதுப்மினார் தூணில் துரு பிடிக்க மற்றுமொரு காரணமும் உண்டு! கையைப் பின்பக்கமாக வைத்து தூணைக் கட்டிப் பிடிக்க முடிந்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு இருக்கு! போற வரவங்க எல்லாம் கட்டிப் பிடிச்சு, ஒரு வழி பண்ணிட்டாங்க! அதுனால தான் இப்ப கொஞ்ச வருஷமா அதையும் ஜெயில்ல வச்சுருக்காங்க! கூண்டு போட்டு!
தொடரட்டும்!!
சுறு சுறு என்று பதிவு இருக்கிறது.
இந்தியாவுல போக்குவரத்துவிதிகளை கடைப்பிடிப்பதில் வொர்ஸ்ட்டுன்னு பேருவாங்கினது டெல்லி. பெஸ்ட்டு எதுன்னு சொல்லித்தான் தெரியணுமா ?? :-)) ஹி..ஹி.. நம்ம மும்பைதானாம்.
மௌனராகம் ..அந்த வீடு.. அந்த இண்டியாகேட் சுத்திய ரோடுகள் ந்னு தில்லி க்கு ஒரு அழகை நம்ம சினிமால நல்லா பாக்கலாம்.. நாங்களும் அதெல்லாம் பாத்து இந்த ஊருக்கு ஆசையா வந்தவங்க :))
வாங்க வித்யா,
அடுத்த பதிவு இன்னும் சில நிமிடங்களில்
:)
வாங்க சகோ,
கூப்பிட்டிருக்கலாம்னு அப்புறம்தானே தெரிஞ்சிச்சு :))
ஆமாம் சீனிகம் படத்துல கூட அப்படி ஒரு காட்சி வரும்.
வருகைக்கு நன்றி
நன்றி அமுதா கிருஷ்ணா
வாங்க அமைதிச்சாரல்,
அம்ச்சி மும்பை :))
ஓ நீங்களும் சேம்ப்ளட்டா கயல்
வருகைக்கு நன்றி
ஆஷிஷின் கைவண்ணத்தில் படங்கள் அழகாய் வந்திருக்கு. அவரிடம் வாழ்த்துக்களை சொல்லவும்.
/ஹைதையில் தான் ராங் ரூட்டுல
வருவாங்க, கன்னாபின்னான்னு ஓட்டுவாங்கன்னு சிலர் சொல்வாங்க.
தலைநகரும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. கரெக்டா ஸ்பீடா
எதிர் திசையில் வர்றாங்க. டூ வீலர்களுக்குன்னு தனி லைன் இருக்கு.
ஆனா சைக்கிள் கூட அதுல போறதில்லை!!!/
ஹீஹிஹி! ஜெய்ப்பூர் பார்த்ததில்லியே!!
அப்புறம் ஹைதை தில்லியெல்லாம் ஜுஜுபி ன்னு சொல்வீங்க!
சூரிய ஒளி மினாரில் விழும் ஃபோட்டோ சூப்பர் ஆஷிஷ்
கண்டிப்பா சொல்லிடறேன் கோவை2தில்லி
வாங்க அருணா,
ஹைதையில்தான் இப்படின்னு அயித்தான் எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. இந்த ட்ரிப் மொத்தமும் ஊருக்கு வந்து இனி ஹைதைக்காரங்களை நீங்க எதுவும் சொல்ல முடியாது! தலைநகரே இப்படி இருக்குன்னு சொன்னேன். பாவம் மனுஷன்.
வருகைக்கு நன்றி
வாங்க ராஜி,
ஆஷிஷுக்கு சொல்லிடறேன்.
my article about this same place will come soooooon!!
Post a Comment