Thursday, March 24, 2011

அடுத்த நாள் தில்லி ரவுண்ட்அப்.....

அடுத்த நாள் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ரவுண்ட்ஸுக்கு
கிளம்பியாச்சு. அதே நொய்நொய் டிரைவர்தான் :(
ரூமைக்காலி செஞ்சிட்டு வேற இடத்துக்கு போறதால
பொட்டிகளை காரில் ஏத்திகிட்டு கிளம்பினோம்.முதலில்
சென்றது தாமரைக்கோவில். தாமரைவடிவில் அமைஞ்சிருப்பதால
இந்தப் பெயர். ஆனா உண்மையில் அதற்கு பெயர் பஹாய்கோவில்.


பெரிய நிலப்பரப்பில் அருமையான கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
பசுமையுடன், பூக்களால் வடிவமைத்த தோட்டம். அதற்கு
நடுநயமாக தாமரைப்பூ வடிவம். படிக்கட்டில் ஏறி உள் நுழைகையில்
உள்ளே வரிசையாக நிற்க வைத்து அனுப்புகிறார்கள். உள்ளே
அப்படி ஒரு நிசப்தமான அமைதி. எந்தவித மதசார்பும் இல்லாத
அனைவருக்கும் தியானம் செய்ய ஏற்ற ஒரு இடமாக இருக்கிறது
பஹாய். நாங்கள் நால்வரும் அமர்ந்து தியானம் செய்தோம்.
தியானத்தின் போது உடலில் ஒருவித வைப்ரேஷன் ஏற்பட்டதை
உணர்ந்தேன். மனதுக்கு இதமாக ஃப்ரெஷ்ஷாக இருந்தது. உள்ளே
எந்த வித சப்தமும் இல்லை. வெளியில் வந்து புகைப்படங்கள்
எடுத்துக்கொண்டோம்.

அருகில் இருக்கும் இஸ்கான் கோவிலுக்கு அழைத்துச்செல்லச்
சொன்னால் அந்த டிரைவர் காதிலேயே விழாத மாதிரி வண்டியை
நேராக ராஜ்காட்டுக்கு விட்டார்.


தேசப்பிதா மஹாத்மா காந்தி, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி,
சரண்சிங் என பல தலைவர்களின் சமாதி இங்கேதான் இருக்கிறது.
இந்த இடமும் மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
பசுமைமிகு தோட்டமாக பராமரித்து வருபவர்கள் எங்கெங்கே
எந்தெந்த தலைவர்களின் சமாதி இருக்கிறது என்பதை கொஞ்சம்
கண்ணுக்குத் தெரியும்படி வைக்கலாம். அவ்வளவு பெரிய
இடத்தில் ஒரேஒரு வரைபடம், அதுவும் கம்பிகளுக்கு அப்பால்.

ராஜீவ்காந்தி அவர்களின் சமாதி பக்கத்தில்தான் இந்திராகாந்தி
அவர்களின் சமாதி இருக்கிறது. ஆனால் அது வெளியே
வந்ததும் தான் தெரிந்து கொண்டோம். அது சரி மஹாத்மா
காந்தியின் சமாதிக்கு செருப்புடன் செல்லக்கூடாது என்று
சொல்லி செருப்பை வாங்கி வைப்பவர்கள் அங்கிருந்து
செல்லும் பாதையில் சுவற்றில் இருக்கும் பான் கரையையே
சுத்தம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். மாபெரும்
தலைவரின் சமாதியை பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு
இதெல்லாம் தெரியாது. நம்மவர்களுக்குத் தெரியும்தானே?
அங்கேபோய் கூட பான் கரையா??? என மனம் நொந்தோம்.
அயித்தான் அந்த செருப்புக்களை பாதுகாப்பவர்களிடம்
சொல்லவே செய்தார். அந்த ஆள் முகத்தில் எந்த ரியாக்‌ஷனையும்
காணோம். :((


ராஜ்காட்டிலிருந்து ஜும்மா மசூதி சென்றோம். நம்ம டிரைவர்தான் நொய்நொய்
ஆச்சே. ”நான் ஜும்மாவில் இறக்கிவிட்டு வண்டியை ரெட்ஃபோர்ட்டில்
பார்க்கிங்கில் வைத்து காத்திருக்கிறேன். எல்லா இடமும் பக்கத்தில்
தான்... ரிக்‌ஷாவில் போய்வந்திவிடுங்கள்னு”சொல்லிட்டு போயே
விட்டார் :((

தொலைந்துபோன்னு நாங்க ஜும்மா போனோம். கேமிரா,வீடியோவுக்கு
250 ரூபாயாம். அது மொபைல் கேமிராவா இருந்தாலும் சரின்னு
போர்டு போட்டிருந்தது. ஹிந்துக்களுக்கு அனுமதி உண்டுன்னாலும்
அங்க போய் பெருசா எதுவும் பாக்கமுடியாது. மசூதி மூடியிருக்கும்.
அங்க மட்டும் காலையிலும் மாலையிலும் தொழுகை நேரத்தில்
கொஞ்ச தூரத்தில் நின்னு பார்க்க அனுமதியாம். அயித்தான் வெளியேவே
இருக்கேன்னு சொல்ல நானும் பசங்களும் மட்டும் போனோம்.
பெர்முடாஸ் போட்டிருந்தா மேலே ஒரு லுங்கியை சுத்தி விடறாங்க.
ஸ்லீவ்லெஸ் இல்லாட்டி துப்பட்டா இல்லாத குர்தியா இருந்தா
லாங்கவுன் மாதிரி ஒண்ணை மாட்டிக்க கொடுக்கறாங்க. வெளிநாட்டினரை
லுங்கியோட பாத்தப்ப விஜய் படம் ஒண்ணில் போர்டர்கள் மாதிரி
வருவாங்க அது ஞாபம் வந்துச்சு. :))


அங்கேயிருந்து ரிக்‌ஷாவில் சாந்தினிசவுக் பக்கத்துலேயேதான் இருக்கு
அங்க போனோம். பர்ச்சேஸிங் செய்யலாம்னு போனோம். பெருசா
எதுவும் அட்ராக்ட் செய்யவில்லை. ஆனாலும் எதுவும் வாங்காம
வந்தா சாமி குத்தமாகிடுமே :)) போனா போகட்டும்னு எனக்கும்
அம்ருதாவுக்கும் லக்னோவி வேலைப்பாடு செஞ்ச டாப்ஸ் வாங்கினோம்.
ஆஷிஷும் அயித்தானும் வருத்தப்படக்கூடாதுன்னு பெர்முடாஸ்,டீ ஷர்ட்ஸ்
வாங்கினோம். எதிர்லேயேதான் ரெட்ஃபோர்டுன்னாலும் வெயில் தாங்கவில்லை.
ரிக்‌ஷாவில் போனோம். எங்க எல்லோருக்கும் இந்த ரிக்‌ஷா ரெய்ட் ரொம்ப
பிடிச்சிருந்தது. ஒரே ரிக்‌ஷாவில் நாலு பேரும் உக்காருவதுபோல சூப்பரா
இருக்கு.

ஆக்ரா போரடிச்சு போனதக்கப்புறம் தனது தலைநகரமா தில்லியை ஷாஜகான் மாத்தினதக்கப்புறம் கட்டியதுதான் இந்த செங்கோட்டை.
உள்ளே அருங்காட்சியகம் இருக்கு.


ராஜாவுக்கு என்ன கஷ்டம்? பல்லக்குல போவாரு இல்லாடி
குதிரை, ரதம். அதனால அம்மாம் பெரிய இடத்தை நடப்பது
நமக்குத்தான் கஷ்டமா போச்சு. ஏம்ப்பா தில்லியில இப்படி
எல்லா இடத்தையும் பெரிய பெரிய இடத்தை ஆக்ரமிச்சு
கட்டி வெக்கறாங்க!!! இங்க ஹைதையிலும் சிகந்திராபாத்
ஷ்டேஷன்லேர்ந்து 3 கிமீ தூரத்துலேயே மிலிட்டரி
ஏரியா துவங்கிடும். அதைச் சுத்திதான் ஊரே இருக்கு.
எங்கபோனாலும் அவங்க ஏரியா வந்திடும். தில்லியிலும்
பிரதமர் அலுவலகம், மந்திரி சபை, அவங்க வீடுகள்,
தவிர இந்த மாதிரி முக்கியமான இடங்களுக்கு அப்புறம்
தான் சாதரணமா மக்கள் வாழும் இடங்கள் வருது.

சுத்தி சுத்தி வந்து டயர்டாகிடிச்சு. இதுக்குமேல டிரைவர நம்பி
எங்கயும் சாப்பிட போக முடியாது. சாந்தினி சவுக்ல சுத்தும் பொழுதே
ஒரு ரெஸ்டாரண்ட் பாத்து வெச்சிருந்தேன். அங்க போயிடலாம்னு
சொல்லி கூட்டிகிட்டு போனேன். சாந்தினி சவுக்ல இருக்கும் ஜெயின்
கோவில், கொளரிசங்கர் கோவிலுக்கு கொஞ்சம் எதிர்ல இருக்கு
வினீத் அப்படிங்கற ரெஸ்டாரண்ட். தில்லிவாழ் தமிழர்களுக்கு அதுவும்
ஷ்பெஷலா நம்ம ஊரு இட்லி,தோசை எதிர் பார்ப்பவங்களுக்கு
சந்தோஷமான செய்தி என்னன்னா இந்த ஹோட்டலில் இட்லி,தோசை
கிடைப்பது என்பதுதான். :) நாங்க நார்த் இண்டியன் மீல்ஸ் சாப்பிட்டோம்.
அளவுச்சாப்பாடுதான்! 1 பராத்தா, கொஞ்சமா வெஜிடபிள் ரைஸ்,
மிக்ஸ்டு வெஜிடபில், பனீர் பட்டர் மசாலா, ஒரே ஒரு குலாப்ஜாமூன்,
ஒரே ஒரு தஹிபல்லா. :))

செம வெயில்... தாங்க முடியலை. ஆனா அடுத்த இடத்துக்கும்
போயிட்டு அப்புறமா ரூமுக்கு போக திட்டம்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் போன இடம்...
யெஸ்ஸு அடுத்த பதிவில்.


35 comments:

துளசி கோபால் said...

//நாங்க ஜும்மா போனோம். கேமிரா,வீடியோவுக்கு
250 ரூபாயாம். அது மொபைல் கேமிராவா இருந்தாலும் சரின்னு
போர்டு போட்டிருந்தது. ஹிந்துக்களுக்கு அனுமதி உண்டுன்னாலும்
அங்க போய் பெருசா எதுவும் பாக்கமுடியாது. மசூதி மூடியிருக்கும்.
அங்க மட்டும் காலையிலும் மாலையிலும் தொழுகை நேரத்தில்
கொஞ்ச தூரத்தில் நின்னு பார்க்க அனுமதியாம்..//

அட! முந்தி இப்படியெல்லாம் இல்லையேப்பா!!!!

சரி. நேரம் கிடைச்சால் இத்தைப்பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_10.html

ADHI VENKAT said...

பான் கறை இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம். ஒரு கல்யாண மண்டபத்தில் சீலிங் முழுவதும் பான் கறை. எகிறி எகிறி துப்பினாங்களான்னு தெரியலை?
ரிக்ஷா அருகில் இருக்கும் இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும். நான்கு பேர் அமர்ந்து கொள்ளலாம்.
இங்க நிறைய நார்த் இண்டியன் ஹோட்டல்களிலேயே இட்லி தோசை கிடைக்குது. ஆனா ட்ரை பண்ணினதில்லை! எதுக்கு வம்பு!
லோட்டஸ் டெம்பிள் அழகான அமைதியான இடம்.

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

வெளியிலேயே பெரிய போர்டா மாட்டி வெச்சிருந்தாங்க.

இதோ பாக்கறேன்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஹைதையும் பான் கறை நிறைஞ்ச ஊருதான். ஆனா காந்தி சமாதில நான் எதிர் பார்க்கவேயில்லை. சீலிங்கில பான் கறை வித்தியாசமா யோசிச்சிருப்பாங்களோ :))

வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டிரைவர் நல்லவரா இருந்தாலும் நீங்க அந்த இடத்துல ரிக்‌ஷால தான் போயாகனும்..இப்பல்லாம் கார் நிறுத்த அருகில் இடம் கிடையாது.. மாற்றிவிட்டார்கள்.. அதனால் நாங்களுமே கார் வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரிக்‌ஷாவில் தான் ரெட்போர்ட் சாந்தினி சௌக் செல்வோம்..

வல்லிசிம்ஹன் said...

மார்ச் மாதமே அங்கே வெய்யிலா. நான் அப்புறமா அரம்பிக்கும்னு நினைச்சேன். நாலு பேர் உட்காரும் ரிக்க்ஷாவும் குழந்தைகளும் அழகு:))
இப்ப பதிவர்களின் மெக்கா ஆகிவிட்டதா தில்லி!!!
படங்கள் எல்லாம் அழகு.

pudugaithendral said...

வாங்க கயல்,

எங்களுக்கும் ரிக்‌ஷாவுல போகணும்னு ப்ளான் இருந்துச்சு. பிக் அப்புக்கு கூட வரமாட்டேன்னு அந்தாளு ஒரே அளும்பு.
அதான் கோவம் எனக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

வெயில் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.
நவம்பர்-மார்ச் மாதங்கள்தான் தில்லி,ஆக்ரா சுத்தி பாக்க சரியான மாதமாம்.


வருகைக்கு நன்றிம்மா

Chitra said...

Lotus Temple is one of my favorite places to visit in New Delhi. Thank you for bringing back lot of memories. :-)

அமுதா கிருஷ்ணா said...

நார்த்தில் பெரும்பாலும் இந்த ரிக்‌ஷா பயணம் சீப் அண்ட் பெஸ்ட்.

அன்புடன் அருணா said...

டெல்லி ஜெய்ப்பூர் எல்லா இடத்திலும் பார்க்கிங்க் ஒருபக்கமும் சுத்திப் பார்க்க ஒருபக்கமுமாக அலைச்சல் ஜாஸ்திதான்!

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் பான் கரையில்லாத இடமே இல்லாது ஆக்கிவிட்டார்கள்! காந்தி சமாதி மட்டும் விதிவிலக்கல்ல!! திருந்தாத ஜன்மங்கள்.

நல்ல பகிர்வு. நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தாங்கள் படித்துக்கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி( HUSBANDOLOGY) பேராசிரியரின் வலைப்பூவை//
வாவ்...இது சூப்பர்.... "துணை-பேராசிரியர்"னு நான் போட்டுக்கலாமா? ஜஸ்ட் கிட்டிங்...:)
("பேராசிரியை"னு இருந்தா இன்னும் சூப்பர் அக்கா... )

//தாமரைக்கோவில்//
காலேஜ் ட்ரிப்ல போன நினைவுகளை கொண்டு வந்துட்டீங்க... நல்ல பயண பதிவு..

Aashish & Amrutha - lovely shot...:)

சாந்தி மாரியப்பன் said...

'பான்'??.. கறை நல்லதுன்னு நினைச்சிட்டாங்களோ :-(

pudugaithendral said...

வாங்க சித்ரா,

கொசுவத்தி சுத்துதுன்னு சொல்லுங்க

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் அமுதா,

ரொம்ப வசதியாவும்வித்தியாசமாவும் இருந்துச்சு. சின்ன வயசுல ரிக்‌ஷா + குதிரை வண்டிதான். ரொம்ப நாளைக்கப்புறம் அந்த அனுபவம்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

நல்ல உடற்பயிற்சி:)
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

திருந்தாத ஜன்மங்கள்...

நல்ல கமெண்ட்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க புவனா,

"துணை-பேராசிரியர்"னு நான் போட்டுக்கலாமா? ஜஸ்ட் கிட்டிங்...:)//

தாரளமா போட்டுக்கோங்க. துணைக்கு ஆள் இருந்தா அடுத்த கட்டம் வகுப்பு ஆரம்பிக்க வசதில்ல. :))
("பேராசிரியை"னு இருந்தா இன்னும் சூப்பர் அக்கா... )

போட்டிடுவோம்.
//தாமரைக்கோவில்//
காலேஜ் ட்ரிப்ல போன நினைவுகளை கொண்டு வந்துட்டீங்க... நல்ல பயண பதிவு..

இங்கேயும் கொசுவத்தியா குட் குட்.
Aashish & Amrutha - lovely shot...:)

நன்றி

raji said...

//காந்தியின் சமாதிக்கு செருப்புடன் செல்லக்கூடாது என்று
சொல்லி செருப்பை வாங்கி வைப்பவர்கள் அங்கிருந்து
செல்லும் பாதையில் சுவற்றில் இருக்கும் பான் கரையையே
சுத்தம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள்//


பயணம் நல்லா இருக்கு

அதுதான் நம்ம ஊர்

தாமரைக் கோவில் எனப்படும் பஹாய் கோவில் பத்தி
நம்ம சக பதிவர் திருமதி பி எஸ் ஸ்ரீதர் ஒரு பதிவே போட்டிருக்காங்க.
நல்லாருக்கு.முடிஞ்சா படிச்சு பாருங்க.லிங்க் கொடுத்துருக்கேன்.

http://aatchi.blogspot.com/2011_02_01_archive.html

raji said...

ஆஷிஷ்,அம்ருதா புகைப்படம் அருமை

pudugaithendral said...

வாங்க ராஜி,

லிங்க்குக்கு நன்றி. கண்டிப்பா படிக்கறேன்.

Anonymous said...

எந்தவித மதசார்பும் இல்லாத

They do give brochures about Bhai' faith. U r supposed 2 meditate on their God inside. The temple has been built to propogate their faith. U will become curious to know their faith and, as a result, give up ur own - that s their objective.

Anonymous said...

திருந்தாத ஜன்மங்கள்

Venkat Nagraj

U cant blame northeners w/o knowing who do that. The grave is daily visited by 1000s from all parts of the country.

How come no such pan stains in metro, puthugai?

So, it is the supervisory authority who r to blame.

Anonymous said...

லக்னோவி வேலைப்பாடு

Surprisingly, it s called chikan. meaning nunniya velaippadu. But it originates from the nabob Lucknow times.

Anonymous said...

chiken does not mean chicken. It is, as i said, exquisite and delicate embroidery

Anonymous said...

சிகந்திராபாத்


Incorrect tamil spelling.

Sikanderabad is near Agra. Akbar moved his capital from Agra to Sikenderabad.

Secunderabad and Hyderabad r twin cities, created by Nizams. U r referring to that.

Anonymous said...

அவங்க ஏரியா வந்திடும்

Who those avanga?

Anonymous said...

Muslims?

Anonymous said...

வினீத் அப்படிங்கற ரெஸ்டாரண்ட். தில்லிவாழ் தமிழர்களுக்கு அதுவும்
ஷ்பெஷலா நம்ம ஊரு இட்லி,தோசை எதிர் பார்ப்பவங்களுக்கு
சந்தோஷமான செய்தி என்னன்னா இந்த ஹோட்டலில் இட்லி,தோசை
கிடைப்பது என்பதுதான்.

Amusing to read this.

According to the last census, about 10 lac Tamil speakers r among NCT of Delhi population.

Idli, vada and dosas r part of Delhi regular food for eating out. None looks at these items as different foods.

Closeby Jamma masjid area, there is a slum accomodating more than 10 k people among whom the majority r Tamil speakers. All of them came to Delhi in the 1983 genocide in SL. They r SL Tamils. The hotels in and around the area u visited employ them.

But u r a stranger to Delhi, so ok

Anonymous said...

Finally, the sad part of all travellogues written by people like u s this:

In Sikhism, the second most worshipful shrine, next to Golden temple, is Chandni Chowk gurudwara where the beheaded body of Guru Teg Bhaadur was brought and the head was presented to Aurangazeb. His son swore then and there to change the faith into a kalsa panth and gave the FIVE to sikhs.

Ur rikshaw must hav passed thro that Gurudwara. U shd tell ur children about this faith. Let them develop deep respect for Sikhs.

No Tamil s interested. Travellogues need also to be educative to children. Hope u agree.

Anonymous said...

Not to finish like that.

Ur children r cute.

pudugaithendral said...

welcome j.amalan,
Thanks for your first visit and 10 comments in post.

Regarding bahai temple no one gave us brouchers and one fellow in the front of the gate just told u can do meditation as per your religious thing, there is no prescribed shrine inside. That is what i have ment as எந்தவித மதசார்பும் இல்லாத ok

//How come no such pan stains in metro, puthugai?//

I have't seen any stains so i can't comment on this.

lucknovi or chikan there are two names. This is for your kind info.

yes i am talking about twincities, secunderabad only. No body says செகந்திராபாத் here.

pudugaithendral said...

அவங்க ஏரியா வந்திடும்//
here avanga means military people. not muslims.

during my 3 days stay in delhi i haven't come across none of the south Indian restaurant or the restaurants which offers these foods other than the one i have mentioned the post.


I do respect and teach my kids about other religion. in chandini chowk i have seen the buildings of Jain and temple and gowrishanker temple but because of lack of time i couldn't enter into it. The same way i have missed gurudwara. (in fact i had a plan to go to golden temple and wanted to show them)Any thank u for the information u have given about gurudwara. //

Thanks for u r compliment about my kids

Anonymous said...

நான் சொல்ல வந்தது எழுத்துவடிவமே. எப்படி பேசுகிறார்கள் என்பதன்று. சிக்கந்திராபாத் என்றால் அக்பரின் தலைநகரையேக் குறிக்கும்.

நானும் செகந்திராபாத்தில் 3 ஆண்டுகள் வாழ்ந்தவந்தான். எவரும் சிக்கந்திராபாத் என்று சொல்லி கேட்டதில்லை

But it s left to u

Abt Bhai' temple.

A bare prayer hall s their style of worship just like Pentecostal.
Volunteers to distribute leaflets r not found these days.

There r prayer times for them during which v aren’t allowed. During other times tourists r allowed in and to meditate on their gods, and perchance to get 'vibrations' like u.

They have another temple which has not been degenerated into a picnic spot. It s near Andhra Bhawan, but difficult to trace as it s in a narrow by lane tucked away from the main road. I went to attend a lecture on their faith.
It s just an bungalow renovated barely.