சகோ வெங்கட் நாகராஜ் அவர்கள் கிட்ட ஆஷிஷ் இன்பர்மேஷன்
எங்க பர்ச்சேசிங் செய்ய பெஸ்ட்ன்னு விசாரிச்சு வெச்சிருந்தாரு.
ஆனா இடத்தை மறந்திட்டாரு. காலையில் அவருக்கு போனைப்போட்டு
இடத்தை விசாரிச்சேன். இரண்டு இடம் சொன்னாரு. ஆனா நம்ம
நொய்நொய் அதெல்லாம் ரொம்ப தூரம் அது இதுன்னு புலம்ப
சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கு வண்டியை விடுய்யான்னு சொன்னோம்.
பர்ச்சேசிங்கிற்கு சூப்பரா இருக்கு ஏரியா. வெயில் கொளுத்த
நல்லா சுத்தி பர்ச்சேஸ் கொஞ்சமா செஞ்சோம்.
முதல் நாள் அக்ஷர்தாம் எதிரில் சர்புர்ன்னு மெட்ரோ
ரயில் போவதைப் பார்த்து “நானா,கண்டிப்பா மெட்ரோவுல
கூட்டிகிட்டு போங்கன்னு!!” பசங்க ரெக்வஸ்ட் வெச்சிருந்தாங்க.
அதனால் டிரைவர் கிட்ட பக்கத்துல இருக்கும் மெட்ரோ ஷ்டேஷனில்
எங்களை விட்டுட்டு அவரை பொட்டிகளை எடுத்துகிட்டு
குர்காவ் வரச் சொல்லிட்டோம். அங்கதான் இரவு தங்கல்.
சரோஷினி நகருக்கு பக்கதில் தில்லி ஹாட் வந்தாரு டிரைவர்.
வந்தது வந்தோம் அங்கயும் ஒரு எட்டு பாத்திட்டு அப்புறம்
ட்ரையின் ஏறலாம். டிரைவர் காரில் வந்து சேர நேரமாகும்னு
ப்ளான் செஞ்சு தில்லி ஹாட் போனோம்.
விலைகள் கிட்டகூட போகமுடியாதபடி இருக்கு. சும்மா ஒரு
ரவுண்ட் மட்டும் அடிச்சோம். உள்ளே ஒவ்வொரு மாநில
உணவகங்கள் இருக்கு. டீ குடிக்கும் நேரம் என்பதால் டீ
குடிப்போம்னு ஆர்டர் செஞ்சோம். ஆந்திரா ரெஸ்டாரண்டில்
15 ரூபாய் அந்த டீ. தமிழ்நாட்டு கடையில் 10ரூபாய். :)
தில்லி ஹாட்டுக்கு பக்கத்து ஷ்டேஷன் INA (INDIAN NATIONAL ARMY)
அங்கேயிருந்து குர்காவ் போக டிக்கெட் எடுத்தோம். இறங்கவேண்டியது
குர்காவில் இருக்கும் குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷன்.
அதுவும் அம்ருதாவுக்கு சப்வேயில் போகும் ட்ரையின் வேணும்னு
ஆசை. அந்த ஷ்டேஷனில் எண்ட்ரி அப்படித்தான். அங்கேயிருந்து
5 ஷ்டேஷனுக்கு சப்வேயில் போய் அப்புறம் மேலே வருவது
அழகு.
உள்ளே நுழைகிறோம்.
இதுதான் டிக்கெட். இதைக் காட்டினால் அதாவது அந்த
மிஷினில் மீது வைத்தால்தான் கதவுதிறந்து வழிவிடும்.
விமானநிலையம் போல செக்கிங் எல்லாம் ஜாஸ்தி.
இதோ ஷ்டேஷனில் ரயில் வந்துவிட்டது. எத்தனை நிமிடத்தில்
அடுத்த ரயில் என எல்லாம் பக்காவாக டிஸ்ப்ளே செய்கிறார்கள்.
வெளிநாட்டில் இருப்பது போல இருந்ததே தவிர இந்தியாவில்
இருப்பது போல தோணவில்லை. (மலேசியா ஞாபகம் வந்தது)
ஒவ்வொரு ஷ்டேஷன் வருவதற்கு முன்னர் அறிவிப்பு செய்கிறார்கள்.
எந்தப் பக்கம் ஷ்டேஷன் வரும், கதவு எந்தப் பக்கம் திறக்கும்
என்று சொல்கிறார்கள்.( ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்)
தவிர கதவுக்கு மேலே இருக்கும் ரூட் மேப்பில் அந்தந்த
ஷ்டேஷன் கடந்ததும் சிகப்பு விளக்கு எரிகிறது. பார்த்தும்
தெரிந்து கொள்ளலாம்.
குதுப் மினார் ஷ்டேஷனிலிருந்து கூட குதுப் மினார்
பார்க்க முடிகிறது.
GURGAON இந்த இடம் ஹைதையின் ஹைடைக் சிட்டி மாதிரி.
மிக அழகான நேர்த்தியான கட்டிடங்கள்.
ஹரியானாவில் இருக்கும் இந்த இடம் இந்தியாவின் 6ஆவது
பெரிய நகரம். வாழ்வதற்கும் வேலைபார்ப்பதற்கு சிறந்த நகரமாக
பிஸினஸ் டுடே நாளிதழ் இந்த இடத்தைத்தான் குறிப்பிடுகிறது.
Airtel, American Express, EXL, IBM, Microsoft, Sapient, DLF, Maruti Suzuki, Hero Honda, Infosys, Ericsson, Oracle, Bank of America, American Airlines, The Coca-Cola Company, Nokia போன்ற கம்பெனிகளின் கால்செண்டர்கள் இங்கேதான்
இருக்கிறது.
அது என்ன குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷன் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
சமீபத்தில் தான் இந்த ஊருக்கும் புராணகாலத்திற்கும் இருக்கும் சம்பந்தம்
புரிந்தது. மஹாபாரத காலத்தில் குரு த்ரோணாச்சாரியரின் ஊராக
இருந்தது தான் தற்போதைய குர்காவ்.கொளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்
பாடம் சொல்லிக்கொடுத்ததற்காக தட்சிணையாக த்ரோணாச்சாரியருக்கு
இந்த இடத்தை கொடுத்தாக வரலாறு சொல்கிறது.
இவ்வளவு இருந்தாலும் இங்கே பிரச்சனைகள் இருக்கிறது.
ரோடுகள் அவ்வளவாக நல்லாயில்லை. பொல்யூஷன் ஜாஸ்தி.
ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் 1 கார் திருடப்படுகிறதாம்.
போதிய தண்ணீர் வசதி இல்லை. 10 கிமீ தூரத்தில் இருக்கும்
துவாரகாவில் கடும் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீர் உப்புகரிக்கிறது.
(உறவினர் வீட்டுக்கு போய் பாத்தோம்ல)
ஹல்திராம்ஸ் ஸ்னாக்ஸ் ஞாபகம் இருக்கா. அந்த ஃபேக்டரி
இங்கேதான் இருக்கு. எங்க அனில் அண்ணாவும் இப்ப இங்கதான்
இருக்காரு. அவரு விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு போயிருந்ததால
அவரை சந்திக்க முடியலை. அது ஒண்ணுதான் வருத்தம்.
குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷனில் இறங்கினோம். பசங்களுக்கு
மட்டுமல்ல எங்களுக்கும் இந்த பயணம் ரொம்ப பிடித்திருந்தது.
ஹைதையிலும் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பித்திருக்கிறது.
டிரைவர் ஷ்டேஷனில் காத்திருந்தார். (ஷ்டேஷனுக்கு வெளியே
பார்க்கிங் வசதி இருக்கு) ஏறிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் சென்று
ரிலாக்ஸ் ஆகி அடுத்த நாளின் பயணத்திற்கு காத்திருந்தோம்.
16 comments:
சரோஜினி நகர் மார்கெட்டில் ஜீன்ஸ் டாப்ஸ் நிறைய கிடைக்குமே.மெட்ரோ சென்னையில் ரெடி ஆகிக் கொண்டு இருக்கிறது.
ஷாப்பிங் மற்றும் சப்வே ட்ரெய்ன் பற்றிய
பகிர்வுக்கு நன்றி.
குர்கான் பற்றிய தகவல்கள் அருமை
அருமையாக நகரை சுற்றி காட்டுறீங்க... படங்களும் தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.
வாங்க அமுதா,
ஆமாம்பா குறைஞ்ச விலையில் நல்லா இருக்கு. வாங்கினோம்ல :))
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி ராஜி
வருகைக்கு நன்றி சித்ரா
சகோ வெங்கட் நாகராஜ் என்று ஆரம்பித்த உங்கள் பகிர்வு சூப்பர்!!! :)))) சரோஜினி மார்க்கெட் நன்றாக இருக்கும். அப்ப லாஜ்பத் நகர் மார்க்கெட் போகலையா! சரி அடுத்த பயணத்தில் வச்சுக்கலாம்!!!
நல்ல பகிர்வு. மெட்ரோ வந்ததிலிருந்து வெளியில் செல்ல வசதியாக இருக்கிறது. ஸ்டேஷனிலும், ரயிலிலும் சுத்தமாகவும் இருக்கும். நன்றாக பராமரிக்கிறார்கள்.
வாங்க சகோ,
லஜ்பத் போகலை. ரொம்ப டயர்டாகிட்டோம்.
வருகைக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
அந்த பராமரிப்பு சுத்தம்தான் இது நம்ம இந்தியாவான்னு நினைக்க வைக்குது. இன்னொரு ரயில்வே ஷ்டேஷன் பத்தியும் எழுதணும் :)
வருகைக்கு நன்றி
இன்னும் தில்லி மெட்ரோவில் போகலைப்பா.
படங்கள் பார்த்தால் ஜோரா இருக்கு!
குருவின் கிராமம்தான் குர்காவ். ஆனால் ஸ்டேஷனுக்கு குரு த்ரோணாச்சார்யா என்னும் தகவல் எனக்குப் புதுசு.
சண்டிகர் வந்தபிறகு, நாம் வழக்கமாத் தங்கும் ஹொட்டேல் அங்கேதான். ஏர்ப்போர்ட்டுக்குப் பக்கமுன்னு இப்பெல்லாம் எப்பப்போனாலும் அங்கேதான்.
ம், டெல்லில நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது. மெட்ரோ வந்ததுல இருந்து தூரமெல்லாம் குறைஞ்சிடுச்சு.
வாழ்வதற்கும் வேலைபார்ப்பதற்கு சிறந்த நகரமாக
பிஸினஸ் டுடே நாளிதழ் இந்த இடத்தைத்தான் குறிப்பிடுகிறது.//
வேலை பார்க்க வேணும்னா சொல்லலாம். வாழ கண்டிப்பா நல்ல இடம் இல்லிங்க. நீங்களே சொல்லிருக்கீங்களே...
ரோடுகள் அவ்வளவாக நல்லாயில்லை. பொல்யூஷன் ஜாஸ்தி.
ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் 1 கார் திருடப்படுகிறதாம்.
போதிய தண்ணீர் வசதி இல்லை. 10 கிமீ தூரத்தில் இருக்கும்
துவாரகாவில் கடும் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீர் உப்புகரிக்கிறது.//
தவிர, குர்கானில் லோக்கல் ட்ரான்ஸ்போர்டேஷன் மிக சிக்கலான ஒன்று. குர்கான் தொழில் நகரம் மட்டுமே.
ஆதி கொடுத்த லின்க் வழியாக வந்து உங்கள் தில்லி பயணத்தை பார்த்தேன்,அக்ஷர்தாம் பற்றி நான் பதிவிட நினைத்திருந்தேன்.மெட்ரொ பதிவும் சூப்பர்.படஙள் இணையதளத்தில் பெட்றவையா,தாஙளே கிளிக்கியதா?
2008 ல் நான் ஒரு முறை கிளிக்கிய போது போலிசார் வாரி அடித்துக் கொண்டு எங்களை ரவுண்டப் செய்ததில் கதி கலங்கிப் போனேன்.தெரிந்த கொஞ்ச ஹிந்தியும் பயத்தில் அடைத்துப் போன காதில் விழவே இல்லை,கணவர் விளக்கவுரை கொடுத்து என்னை விடுவத்ததை மறக்க முடியாது,அதன்பின் மெட்ரொவில் போனால் அந்த டிக்கெட் டோகன் தவிர கைகுட்டை கூட வெளியில் எடுக்கமாட்டேன்.அந்த பிளாஷ்பேக் சொல்லி வெறு்ப்பேத்தாமல் இருங்கப்பானு கணவர்கிட்ட சொல்லிட்டு சுப்சாப்பா அழகை ரசித்துச் செல்வேன்.இப்ப அலோ பன்றாங்களானு தெரியல.
வாங்க துளசி டீச்சர்,
மெட்ரோ பயணம் அனுபவிக்க வேண்டியஒண்ணு.
வருகைக்கு நன்றி
வாங்க விக்னேஷ்வரி,
முடிஞ்ச மட்டுக்கும் எஞ்சாய் செஞ்சோம். குர்காவ் பத்திய மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி
வாங்க திருமதி பிஸ் ஸ்ரீதர்,
மெட்ரோ ரயில் போட்டோ மட்டும்தான் நெட்டில் சுட்டது. மற்றது நாங்க கிளிக்கியது. மெட்ரோ ப்ளாட்பார்ம் போட்டோ எடுக்க நினைச்சேன். முறைச்சு பாத்துகிட்டு இருந்த கேமிராக்களைப் பாத்து கேமிராவை உள்ளே வெசிட்டேன். :))
வருகைக்கு நன்றி
Post a Comment