தமிழ்த் தெய்வம் முருகன் தன் மனைவி குறவள்ளியை மணம்புரிந்த
இடம் (அங்கே அப்படித்தான் சொல்றாங்க. என்னை யாரும் திட்டாதீங்க)
தன் மனைவியுடன் வாழ்ந்து அருள் பாலித்த இடம் கதிர்காமம்.
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு தெய்வீகம் அந்த
இடத்துக்கு உண்டு. வெறும் திரைச்சீலைதான் வழிபடப்படுகிறது
என்றாலும் அதற்கு இருக்கும் சக்தி என் அனுபவத்தை சொல்ல
வார்த்தைகள் இல்லை.
அங்கே செல்லும் பொழுது சாயந்திர நேர பூஜையாக இருக்க வேண்டும்
அந்த நேரம் சந்நிதிக்குள் நான் நிற்க வேண்டும் என்பதை திட்டமிட்டே
செல்வேன். 2 வருடங்கள் முன்பு சென்ற பொழுது பூஜை துவங்கிவிட்ட
நிலையிலும் கெஞ்சி கூத்தாடி உள்ளே நுழைந்து விட்டேன். :))
அந்தச் சந்நிதியை நீங்களும் பார்த்திட இங்கே காணொளியாக
தந்திருக்கிறேன். என்னப்பன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.
இனிய வார இறுதியாக அமைய வாழ்த்துக்கள்.
8 comments:
நல்ல தகவல்.
நல்ல பகிர்வு. நாங்களும் கதிர்காமம் காண வைத்ததற்கு நன்றி.
தரிசனம் செஞ்சு வச்சதுக்கு நன்றி.
ஆமாம்........ பூஜை ஆரம்பிச்சுட்டா உள்ளே விடமாட்டாங்களா?
வருகைக்கு நன்றி ஐயா
உங்க வருகைக்கு நன்றி கோவை2தில்லி
வாங்க துளசி டீச்சர்,
பூஜை ஆரம்பிச்சுட்டா உள்ளே விடமாட்டாங்களா?
அங்கே பொளத்த மத பூஜைதான் நடைபெறும். சந்நிதிக்கு இரண்டு பக்கமும்கயிறு கட்டி கூட்டத்தை நிறுத்தி வைத்துவிடுவார்கள். பூஜை நேரத்தில் உள்ளே நிற்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். பூஜை துவங்கும் முன்னாடி கூட கயிறைத் தாண்டி யாருக்கும் அனுமதி இல்லை.
வருகைக்கு நன்றி
கதிர்காமக் கடவுளை எங்களையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி சகோ.
வாங்க சகோ,
கந்தனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
வருகைக்கு நன்றி
Post a Comment