Friday, March 11, 2011

பொம்மை கதை

குழந்தைகளின் உலகம் பொம்மைகள். கார்ட்டூன் படங்கள் அதிகம்
பார்க்க வாய்ப்பில்லாத காலகட்டத்தில் கற்பனையில் பொம்மை
உருவகம் செய்து அந்த உலகத்திலேயே வாழ்ந்தது இனிமையான
நினைவுகள்.

சாக்லேட்டுக்கு அடுத்து பிள்ளைகள் மிகவும் விரும்புவது
பொம்மைகள்தான். பொம்மையில் எத்தனையோ வகைகள்.
அவற்றில் ஆந்திராவின் கொண்டபள்ளி பொம்மைகள் ஒன்று.


கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் கொண்டபள்ளி எனும் ஊரில்
தயாரிக்கப்படும் இந்தப் பொம்மைகள் தசரா, சங்கராந்தி கொலுவில்
கட்டாயம் இடம் பெறும். விஜயவாடாவிலிருந்து 14 கிமீ தொலைவில்
இருக்கும் இந்த ஊரில் ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்
தான் இந்த பொம்மைவகைகளைத் தயாரிக்கிறார்கள்.


”தெல்ல போனிகி” எனும் வெள்ளை நிற மென்மையான மரக்கட்டையில்
தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாகமும் அழகாக வடிவமைக்கப்பட்டு
புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பிசின் கொண்டு ஒட்டப்படுகிறது.
அழகுக்கு அழகு சேர்க்க வாட்டர்கலரை குதிரையின் வாலால்
செய்யப்பட்ட பிரஷ் கொண்டு வண்ணம் சேர்க்கிறார்கள்.பொம்மல காலனி என அழைக்கப்படும் இந்த இடத்தில் வீட்டில்
இருக்கும் ஒவ்வொருவரும் பொம்மை தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.
ஆண்கள் செதுக்கி, வெட்டி ஒட்டி பொம்மை தயாரிக்க அதற்கு
வண்ணம் சேர்ப்பது பெண்கள். அவர்களின் கைவண்ணத்தில்
பொம்மைகள் அழகாக உருப்பெறுகிறது.

கொண்டபள்ளி பொம்மைகளில் பெரிதும் விரும்பி வாங்கப்படுவது
அம்பாரி யானை, தசாவதாரம், பல்லக்கில் மணமகளைத் தூக்கி
வருவது. நம் தஞ்சாவூர் பொம்மை போல பேப்பர் மேஷ்ஷில்
செய்யப்படும் பொம்மையும் அதிகம் விரும்பப்படுகிறது.இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக செத்துவருவதாகச் சொல்கிறார்கள்.
பெருகி வரும் விலைவாசிக்கு ஏற்ப பட்ஜட்டுக்குள் செய்து முடிக்க
வற்புறுத்தப்படுவதால் இயற்கை டை, ஆயில் பெயிண்ட், வாட்டர்
பெயிண்ட் பயன்பாட்டை விடுத்து எனாமல் பெயிண்ட்டில் தற்போது
விற்கப்படும் சூழல்.

11 comments:

Chitra said...

இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாக செத்துவருவதாகச் சொல்கிறார்கள்.
பெருகி வரும் விலைவாசிக்கு ஏற்ப பட்ஜட்டுக்குள் செய்து முடிக்க
வற்புறுத்தப்படுவதால் இயற்கை டை, ஆயில் பெயிண்ட், வாட்டர்
பெயிண்ட் பயன்பாட்டை விடுத்து எனாமல் பெயிண்ட்டில் தற்போது
விற்கப்படும் சூழல்.


.......பாரம்பரிய கலைகளை, கலாச்சார சின்னங்களாக மதித்து வளர்க்காமல், இப்படி ஒரு நிலையா?

வேடந்தாங்கல் - கருன் said...

Nice.,

புதுகைத் தென்றல் said...

வாங்க சித்ரா,

பாரம்பரியக் கலையை விடாம செய்யறாங்க. ஆனா பொருளாதாரச் சூழலில் காய்கறி பெயிண்டிங்கெல்லாம் காணமப்போய் கெமிக்கல் பெயிண்ட் வர ஆரம்பிச்சதுதான் கொடுமை. ஆனாலும் தான் படும் கஷ்டம் தன் பிள்ளைகள் படக்கூடாதுன்னு படிக்க அனுப்பிடறாங்க.:(

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கருன்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

பதிவு மிக அருமை..வாழ்த்து!

புதுகைத் தென்றல் said...

முதல் வருகைக்கு நன்றி ரவிகுமார்

அமைதிச்சாரல் said...

பாரம்பரியக்கலைகள் ஒண்ணொண்ணா அழிஞ்சிட்டு வரும் சூழ்நிலையில் வருங்காலத்துக்கு எதை விட்டுட்டு போகப்போறோம்கறது நிச்சயமா கேள்விக்குறிதான்..

வெங்கட் நாகராஜ் said...

விஜயவாடாவின் ரயில் நிலையத்தின் அருகில் வீடு அமைத்துக் கொண்டு இந்த பொம்மைச் செய்பவர்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பொம்மைகள் செய்வதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். இந்த முறை சென்றபோது அங்கே ஒருவருமே இல்லை! நல்ல பகிர்வு.

புதுகைத் தென்றல் said...

வருங்காலத்துக்கு எதை விட்டுட்டு போகப்போறோம்கறது நிச்சயமா கேள்விக்குறிதான்..//

இன்னைக்கு ஜப்பானை பார்த்தக்கப்புறம் எதுவுமே இருக்காதுன்னு தான் தோணுது :(

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

சில சமயம் ரயில்களில் கூட வித்துகிட்டு வருவாங்க.

வருகைக்கு நன்றி

கோவை2தில்லி said...

இந்த பொம்மைகளை தில்லியில் வருடாவருடம் நடத்தப்படும் அகில இந்திய வர்த்தக கண்காட்சியில் பார்த்திருக்கிறேன்.