Thursday, March 31, 2011

ஹோலிப்பண்டிகையா? கிலிப்பண்டிகையா???

குளிர்காலம் முடிந்து வெயிலின் துவக்கத்தை கொண்டாடுவதற்காக,
வசந்தத்தை வரவேற்கும் ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியுடன்
அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகைதான் ஹோலி.
ஆனால் காலச்சக்கரத்தில் இந்த ஹோலிப்பண்டிகை எத்தனையோ
மாற்றங்களை சந்தித்து இன்றைக்கு கிலிதரும் பண்டிகையாகி இருக்கிறது.


கண்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவனம், நந்தகாவ் ஆகிய இடங்களில்
தான் ஹோலிப்பண்டிகை கொண்டாட ஆரம்பித்தனர். இன்றளவும்
16 நாட்களுக்கு ஹோலி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர், ராதை
மற்றும் கோபிகைகர்களுடன் ஹோலி கொண்டாடியதாக சொல்கிறார்கள்.


பிரகலாதனின் அத்தை ஹோலிகா, நெருப்பு சுடாத வரம் பெற்றவள்.
ஹிரண்யகசிபு பிரகலாதனை நெருப்பில் போட உத்திரவு இட்ட பின்
தன் தங்கை ஹோலிகாவை அழைத்து தன் மகனை பத்திரமாக
காத்து வரச்சொல்ல, அவ்வாறே செய்யும் ஹோலிகாவை நெருப்பு
சுட்டு பொசுக்கிவிடுகிறது. (நெருப்பு அவள் மட்டும் தனியாக இருந்தால்
ஒன்றும் செய்யாதாம்) அதனால்தான் முதல் நாள் ஹோலிகா தகனம்
செய்கிறார்கள். மறுநாள் ஹோலி கொண்டாடுகிறார்கள் என்றும்
புராணக்கதை சொல்கிறது.

எது எப்படியோ! கொண்டாடப்படும் பண்டிகைகள் காலவர்த்ததேசமான
மாறுதல்கள் பெற்றுள்ளது என்றாலும் ஹோலி அளவுக்கு இல்லை.
பிருந்தாவனத்தில் தற்போது ஹோலி சகதி ஹோலியாகி விட்டது.
வண்ண வண்ணக் கலர்களை கரைத்து ஹோலி ஆடியது போய்,
சாணி, சாக்கடைத் தண்ணீர் ஆகியவற்றில் கூட நடக்கிறதாம்.
அன்று யாரும் யாரையும் அடிக்க தடையில்லையாம். அதனால்
பகை தீர்க்கும் நாளாகவும் இதை சொல்கிறார்கள். போலீஸால்
கூட ஏதும் செய்ய முடியாதாம்!!! பெண்கள் ஹோலி விளையாட
வருவதே இல்லையாம். காரணம் குடித்து கும்மாளமிட்டு
கலாட்டா செய்யும் ஆண்கள். இதில் படித்தவர்கள், மேல்வர்க்கத்தினர்
இப்படி செய்வதில்லை என்றும் சராசரிக்கும் கீழ் உள்ள மக்கள்தான்
இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்றும் புலம்புவதை கேட்க நேர்ந்தது.

பர்ஸானா என்னும் இடத்தில் லாத் மார் ஹோலி ப்ரபலம்.


ஆண்களை பெண்கள் அடித்து துரத்துவார்களாம். ஆண்களும்
பெண்களை கலாட்டா செய்து பாடல்கள் பாடுவார்களாம்.
இன்று குஜ்ஜர் இன பெண்கள் ஹோலி அன்று குடித்தும்
மயங்கிக்கிடக்கும் கணவனை அடிப்பார்களாம். வருடம்
முழுதுவதும் துன்புறுத்தும் கணவனை பகைத் தீர்த்துக்கொள்ளூம்
நாளாக நினைப்பதாக மதுராவில் ஒரு பெண் சொன்ன பொழுது
உலக மஹா அதிர்ச்சி எனக்கு!!!


தில்லியில் கூட ஹோலி பயம் தான். இந்த முறை பெண்கள் அமைப்பும்,
காவல்துறையும் சேர்ந்து கல்லூரி பெண்களுக்கு “விசில்” கொடுத்திருக்கிறார்கள்.
ஏதாவது பிரச்சனை என்றால் விசிலானால் ஒலி எழுப்பி உதவிக்கு
ஆள் அழைக்க ஏற்பாடு!!! ஹோலி பயத்தில் மக்கள் யாரும அதிகமாக
வெளியே வரவில்லை. காலை 6 முதல் மதியம் 2 மணி வரை
மெட்ரோ ரயில் கூட ரத்து செய்து வைத்திருந்தார்கள்.


இயற்கை கலர்களை உபயோகப்படுத்துவது போய் தற்போது
சிந்தடிக் கலர்கள் உபயோகிக்கிறார்கள். அது தோல் அலர்ஜி
தருகிறது. தலையில் ஊற்றப்படுவதால் முடியும் பாதிக்கப்படுகிறது.
கண்கள் 4 நாள் ஆனாலும் சிகப்பாய் தெரியும் அளவுக்கு
இந்த சிந்தடிக் கலர் இருக்கிறது. இயற்கை கலர்கள் விலை
கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் சர்வசாதரணமாக சிந்தடிக் கலர்கள்
உபயோகிக்கிறார்கள். இவை உடலில் ஒட்டிக்கொள்கின்றன.

மார்ச் 20ஆம் தேதி ஹோலி. ஊரடங்கு உத்தரவு போட்டது போல
கடைகள் எல்லாம் அடைப்பு. ஆமை போல் ஊறும் வாகனங்களைப்
பார்த்திருந்த எனக்கு அன்று காலியாக அங்கும் இங்கும் ஏதோ
சில வாகனங்கள், அது கூட ஏர்போர்டுக்கு அருகில் மட்டும்
கொஞ்சம். மாநகரப்பேருந்துக்கள் கூட இயக்கப்படவில்லை!!!
மதியம் 2 மணிக்கு மேலே ஆரம்பித்தது டிராபிக்.


நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக
கொண்டாட வேண்டிய பண்டிகையை இப்படி ஊரடங்கு
உத்தரவு போட்டு கொண்டாடும் நிலைக்குத் தள்ளியவர்களால்
பண்டிகைக்கான கோலாகலம் போய் பீதி கிளப்பும் நாளாக
ஆனதே என்ற வருத்தம்தான் இந்தப் பதிவு போடக் காரணம்.


9 comments:

Chitra said...

நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக
கொண்டாட வேண்டிய பண்டிகையை இப்படி ஊரடங்கு
உத்தரவு போட்டு கொண்டாடும் நிலைக்குத் தள்ளியவர்களால்
பண்டிகைக்கான கோலாகலம் போய் பீதி கிளப்பும் நாளாக
ஆனதே என்ற வருத்தம்தான் இந்தப் பதிவு போடக் காரணம்.......... It is a sad scene!

அமைதிச்சாரல் said...

லாத் ஹோலி ரொம்பவே ஓவரு.. இங்கியும் சிலபகுதிகள்ல panniன்னு சொல்லப்படும் குட்டியான பாலிதீன் பைகள்ல சாக்கடைத்தண்ணியில் கலர் கலந்தது, முட்டை கலந்ததுன்னு நிரப்பி போறவர்றவங்க மேல வீசறது உண்டு.. ஏரியாவை பொறுத்தது இதெல்லாம் :-)))

Anonymous said...

=((

புதுகைத் தென்றல் said...

நன்றி சித்ரா

பலூனில் கலர் நிறப்பி அடிப்பாங்க, அழுகிய முட்டை அடிப்பதும் கூட மும்பையில் பார்த்திருக்கிறேன் அமைதிச்சாரல். சாக்கடைத் தண்ணீர் எல்லாம் ரொம்பவே ஓவர்.

நன்றி அனாமிகா

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. சிந்தடிக் கலர் ரொம்ப கெடுதல் தான் ஆனா யார் கேட்கிறார்கள். சாக்கடைத் தண்ணீர், சாணி ஆகியவற்றால் அடிப்பது இப்போ தான் கேளிவிப்படறேன். ரொம்ப ஓவர்!!!!!

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்பவே ஓவர்

வெங்கட் நாகராஜ் said...

லட் மார் ஹோலி அன்று அடி பிய்த்து விடுவார்கள் பர்சானா மற்றும் சில கிராமங்களில்! ஒரு ஹோலியன்று நேரடியாகவே [அறைக்குள் பூட்டிக்கொண்டு ஜன்னல் வழியே!!!] பார்த்திருக்கிறேன் ஒரு பர்சானா பயணத்தின் போது!! ரத்தம் வழிய ஓடித் தப்பித்து செல்வார்கள் :(

மாதேவி said...

ஹோலி இப்படியாகியது மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஹுஸைனம்மா said...

ஆஹா, இங்கெயெல்லாம் (தின்னவேலில) இங்க்தான் அடிப்பாங அதுக்கே கடுப்பாருக்கும். நீங்க சொல்ற விதங்களைப் பாத்தா இது பரவால்ல போல.