இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு
எப்போதும் மவுசு அதிகம் தான். இந்த முறை நடந்த போட்டியை
நானும் பார்த்தேன். கிரிக்கெட்டே வேண்டாம் என்று இருந்தேன்.
இந்தப் போட்டி என்னை மிகவும் கவர்ந்திழுத்து உட்கார வைத்திருந்தது.
இருவரும் சமமாக போட்டி இட மேட்சும் ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருந்தது. கபில்தேவ்
தலைமையில் ஒரு அணியாக இல்லாமல் ஒரு குடும்பம் போல
கலந்து இருப்பார்கள் வீரர்கள். இந்த போட்டியில் அப்படி ஒரு உணர்வு
எனக்கு ஏற்பட்டது. எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல்
தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று தோனி இருந்தது
பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தோனி.
உலக அதிசயமாக அயித்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க அரை நாள்
விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்திருந்தார்!!! அன்றைக்கு ஹைதையில்
ஏதோ பந்த் போல ரோடுகள் வெறிச்சோடி கிடந்தன. 6 மணிக்கு முதல்
இன்னிங்ஸ் முடிந்த பிறகு கொஞ்சம் போல மக்களை வெளியே
பார்த்தேன். அதன் பிறகு ம்ம்ஹூம்.. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்
இருக்கும் பார்க்கில் கிரிக்கெட் விளையாடும் பொடிசுகள் கூட வெளியே
வரவில்லை.
நாளை இறுதிப்போட்டி. இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.
இதுவும் மற்றொரு விருவிருப்பான போட்டியாகத்தான் இருக்கும்.
தில்ஷானையும், தரங்கவையும் சீக்கிரம் அனுப்பிவிட்டால்
நிம்மதியாக இருக்கும்.
யே துனியா எக் துல்ஹன் துல்ஹன் துல்ஹனிக்கி மாதேகி பிந்தியா
யே மேரா இந்தியா... ஐ லவ் மை இந்தியா...
நம் பிரார்த்தனைகள் நம் வீரர்களின் வெற்றிக்காக. இந்த வெற்றி
நம் ஒவ்வொருவரின் வெற்றியாக நாம் கொண்டாடுகிறோம்.
இந்த சக் தே இந்தியா பாடலும் அவர்களுக்காகத்தான்!!!
கபில் தேவும் அவரது அணியினரும் சேர்ந்து 1983ல் படைத்த
அந்த வரலாறு.... நாளை மீண்டும் இந்த வரலாறுச் சாதனை
நடை பெற எங்கள் வாழ்த்துக்கள் நம் இந்திய அணிக்கு.
வென்று சரித்திரம் படைத்து வாருங்கள் தோழர்களே!!
இறைவன் உங்களுக்குத் துணை இருப்பான்!
என்னுடைய இந்த 750ஆவது பதிவை வெற்றி வாகை சூடிய
கபில்தேவுக்கும், நாளை வெற்றி வாகை சூடப்போகிற இந்திய
அணிக்கு சமர்ப்பணம்.
16 comments:
mic testing
750க்கு வாழ்த்துக்கள். விரைவில் 1000 வது பதிவை வெளியிடவும் வாழ்த்துக்கள்.
இங்கயும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் அன்றைக்கு பார்க்கில் பெரிய ஸ்கீரீன் வைத்து ஒவ்வொரு ஓவர் முடிந்ததும் பாட்டு போட்டு அமர்க்களபடுத்தினார்கள். நாளைக்கும் இது போல் உண்டு.
இறுதிப்போட்டியில் இந்தியா வெல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்கு நன்றி கோவை2தில்லி. போன வருஷமே 1000 பதிவு போட்டிருக்க வேண்டியது மிஸ்ஸாகிடிச்சு. இந்த வருஷத்துக்குள்ள அடிச்சு ஆடிட வேண்டியதுன்னு திட்டம். பாப்போம். :))
வருகைக்கு நன்றி
பூங்கொத்து! 750க்கு!
super videos!
ஹஸ்பண்டாலஜி பேராசிரியை கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சாச்சா! நல்லது! :) இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்த அன்று பெட்டிங் மட்டுமே கோடிக் கணக்கில் இருந்தது என கேள்வி!!
750க்கு வாழ்த்துக்கள்.
750 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா...
ஆனா நம்ம பிரார்த்தனை எல்லாம் இலங்கை வெற்றி பெறத்தான் (பிறந்த பொன் நாடு இல்லையா :))
பணிவான மிரட்டல் :
ரொம்ப நாளுக்கு பிறகு நானும் பதிவெல்லாம் போட்டு இருக்கிறேன் வந்துட்டு போங்க
750க்கு வாழ்த்துக்கள்.
இன்று இந்தியா வெற்றிப் பெறும் நாளை அனைத்துப் பதிவுகளும் அதை மட்டுமே பேசும் :)
நன்றி அருணா
நன்றி சித்ரா
வாங்க சகோ,
முன்னால பார்த்துகிட்டு இருந்ததுதான். நடுவுல் இண்ட்ரஸ்டே இல்லாம இருந்தது. :)
வருகைக்கு நன்றி
நன்றி ஃபாயிஷா,
வாங்க சுதர்ஷிணி,
அப ஸ்ரீலங்கா மாதா..... ஸ்ரீ லங்கா... நமோ நமோ :)) நடக்கட்டும்.
கண்டிப்பா வர்றேன். வருகைக்கு நன்றி
ஆமாம் எல்கே,
அதான் என் ஆசையும் பிராத்தனையும். வருகைக்கு நன்றி
750வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வாழ்த்துவோம்.
750க்கு வாழ்த்துக்கள் ! It could not have come at a better time !!
Congratulations !!
thanks jiji,
thanks uran,
thanks bala's bits
:)
750-க்கு வாழ்த்துகள்..
நன்றி அமைதிச்சாரல்
Post a Comment