Tuesday, April 05, 2011

இந்தத் தொல்லை எப்போது போகும்??!!!

எங்க அவ்வா ஒரு வசனம் சொல்வாங்க. என்ன அவ்வா! இப்படியா
நடந்துக்குவாங்கன்னு? கேப்பேன். அவங்க சொல்வதுல இருக்கும் அர்த்தம்
வளர வளர புரிஞ்சது. அவ்வா சொல்லும் வசனம் வந்த அன்னைக்கு
வாழை இலை, மறுநாள் தையலை, அடுத்த நாள் கையில!!!

விருந்தாளியாப்போனா மொதோ நாளு ராஜஉபசாரம் நடக்கும்.
தலைவாழை இலைப்போட்டு சாப்பாடு. அதான் வந்த அன்னைக்கு
வாழை இலை. மக்கா நாள் தையல் இலையில சாப்பாடு. மூணாம்
நாளு கையில தானாம். விருந்தாளியா போறவங்களுக்கும் ஒரு
வரைமுறையோட நடந்துக்கத் தெரியணும். அது இல்லாட்டி
ரொம்ப கஷ்டம்.

நான் 8த் படிச்சுகிட்டு இருந்த பொழுது எங்க வீட்டுக்கு ஒரு உறவினர்
வந்திருந்தாரு. அவ்வாவுக்கு தூரத்துல தம்பி சொந்தம். வந்தவங்களை
உபசரிப்பதுதானே நம்ம பண்பாடு!! அன்னைக்குத்தான் அவ்வா
மாவாட்டி வெச்சிருந்தாங்க. அதிகம் புளிப்பில்லாத மாவு. இட்லி
சும்மா பஞ்சு மாதிரி இருந்துச்சு. எங்களுக்கு 1 ஈடு அதாவது 24 இட்லி
போதும்னு அவ்வா ஊத்தி இறக்கிகிட்டு இருக்கும் பொழுதுதான் இந்த
உறவினர் வந்தாரு!! வந்தவங்களுக்கும் சேர்த்து இருக்கட்டும்னு
அவ்வா அந்த இட்லியை எடுத்து அடுத்து ஒரு ஈடு அடுப்பில
ஏத்தினாங்க. கையோட நல்ல டிகிரி காப்பி போட்டு கொடுத்தாங்க.
குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கும்பொழுது அம்மாவும் அப்பாவும்
வேலையிலேர்ந்து வந்தாங்க.

சாப்பிடலாமான்னு!! கேக்க தட்ட வெக்கும் முன்னாடி அம்மாவுக்கு
என்னவோ தோணி எதுக்கும் இருக்கட்டும்னு இன்னொரு ஈடு
அடுப்புல வெச்சாங்க. எதுக்கு வெக்கறன்னு அவ்வா அம்மாவை
வைய்ய, தேங்காய்ச் சட்னி அரைச்சுகிட்டு இருந்தேன். அவ்வாவேற
அன்னைக்கு மதியம் தான் ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலில்
இட்லி பொடி செஞ்சுவெச்சிருந்தாங்க! சாப்பிட தட்டு வெச்சாச்சு.
சூடான இட்லி தொட்டுக்க, தேங்காய்ச்சட்னி, காரசாரமான
இட்லிப்பொடி எல்லாம் இருந்தா கூட இரண்டு இட்லி சாப்பிடத்தோணும்.


வந்தவரு நீயும் போட்டுக்க ரமணின்னு!! சொல்லி அப்பாவுக்கு
பரிமாறிட்டு தானும் சாப்பிட ஆரம்பிச்சாரு. அப்பா,தம்பி வந்தவரு
3 பேரும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. வந்தவரு அன்னைக்கு
சாப்பிட்டது 48 இட்லி!!!! தம்பி தான் உக்காந்து எண்ணிக்கிட்டு
இருந்தான். தன்னைத் திட்டின அவ்வாவை அம்மா இப்ப பாத்த
பார்வை சூப்பர்!! அவங்க மட்டும் இன்னொரு ஈடு ஊத்தி
வெச்சிருக்காட்டி சாப்பிட இன்னும் காத்திருந்திருக்க வேண்டி இருந்திருக்கும்!!
1 கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலில் வெச்சிருந்த இட்லிப்பொடி பாதி
பாட்டில் காலி.” சும்மா சொல்லக்கூடாது! நல்லா செஞ்சிருக்கக்கா”ன்னு
அவ்வாவுக்கு பாராட்டு வேற.


அரைச்சு வெச்சிருந்த மாவு அரைபக்கட் ஒரே நாளில் காலி!!
ஒரு வாரத்துக்காவது வரக்கூடிய மாவு அது! அவ்வாவுக்கும்
ரொம்ப வேலை செய்ய முடியாது. அம்மாவும் வேலைக்கு போறவங்க.
இதுல அடுத்த நாள் அப்பாவுக்கு ஆபிஸ் வேலையா சென்னைக்கு
போகவேண்டியது இருக்கலாம்னு நிலமை. இதுல விருந்தாளி
இரண்டு நாள் இருக்கப்போவதாகச் சொல்ல அவ்வாவுக்கு தலை
சுத்த ஆரம்பிச்சிடிச்சு!!! இராத்திரி டிபனுக்கு பட்ட அல்லோகலமே
தாங்க முடியலை! இதுல இன்னும் இரண்டு நாள்னா!!!

வேற வழியில்லாம உள்ளூரில் இருந்த அம்மாவின் அவ்வாவுக்கு
உடல்நிலை சரியில்லாத்தால் நாங்க எல்லோரும் அங்க போறோம்னு
சொன்னாங்க. ஐயோ அவங்களை எனக்குத் தெரியுமே! நானும்
வர்றேன்னு சொல்ல பக்குன்னு ஆகிடிச்சு. அப்புறம் அப்பா ஏதோ
நைச்சியமாச் சொல்லி தம்பியும் அப்பாவுமா பஸ்ஸ்டாண்ட் போய்
பஸ் ஏத்திவிட்டு வந்தாங்க. ஒரு வேளை திரும்ப வந்தாலும்
வரலாம்னு அவ்வா பீதியைக் கிளப்ப அந்த அர்த்த ராத்திரியில்,
ஸ்ரீநிவாச நகரில் இருக்கும் அம்மம்மா வீட்டுக்கு போய்
இரவு தூங்கி காலேல எந்திருச்சு வீட்டு வந்தோம்!!

நான் இலங்கையிலிருந்த பொழுது அயித்தானோட அக்கா கணவரின்
நண்பர்கள் சுத்தி பார்க்க வந்திருந்தாங்க. எனக்கு அவங்களை முன்னபின்ன
தெரியாது! ஆனாலும் வீட்டுக்கு வர்றவங்களை வேணாம்னா சொல்வோம்!
வந்தவங்க ரொம்ப நல்ல டைப். என் வீட்டு பாத்ரூம் எப்பவும் ட்ரையா
இருப்பதை தெரிஞ்சுகிட்டு குளிச்சவுடன் அந்த அங்கிள் தானே மாப்ஸ்டிக்
போடுவாரு! “நான் செஞ்சுக்கறேன்னு!” சொன்னாலும் மத்த வேலையை
கவனிம்மா!! அப்படின்னு சொல்லிடுவாங்க. அந்த ஆண்டிக்கு முழங்கால்
வலி. ஆனா சோபால காலை நீட்டின மாதிரி உக்காந்துகிட்டு காய்கறி
நறுக்கிக் கொடுப்பாங்க. 5 நாளும் ஏதோ என் உறவினர் இருந்த மாதிரி
தான் இருந்தது. அந்நியமாத் தெரியலை. சிரிச்சு பேசி மகிழ்ந்து அவங்களோட
ஊர் சுத்தினதுன்னு ஜாலியா இருந்ததுச்சு. கிளம்பும் அன்னைக்கு
அவங்க சொன்னது இப்பவும் மனசுல இருக்கு,” என் சொந்த மகள் வீட்டுல
இருந்த மாதிரி இருந்ததும்மா” அப்படின்னு சொன்னாங்க.

ஆனா ஹைதைக்கு வந்தப்புறம் வேற ஒரு கோஷ்டி வந்தாங்க.
அப்பா அவங்களோட நான் பட்டப்பாடு!!! சாமி ரங்கா!!!
ப்ரிட்ஜுல இருந்த பாதாம், முந்திரி, திராட்சை, சாக்லேட்டுகள்
எல்லாம் வந்த அன்னைக்கே காலி. அடுத்து என்ன டிபன்
செய்வ? எங்க கூட்டிகிட்டுப்போற? இதுதான் அவங்க கேள்வி?
ஆட்டோ செலவுக்கு கூட பணம் எடுக்க மாட்டாங்க. எங்களுக்கு
தெரிஞ்சவங்களும் இல்ல, உறவினரும் இல்ல!!! ஆனா
உறவினருக்கு தெரிஞ்சவங்கன்னு தங்க ஓகே சொன்னதுக்கு
நான், அயித்தான் குழந்தைங்களும் ரொம்ப கஷ்டப்பட்டோம்.
2 1/2 நாளில் போதும்டா சாமின்னு ஆகிடிச்சு!!

சரி இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
சொல்றேன். போன வருஷம் ஆஷிஷுக்கு ஹிந்திப்பாடம்
ஒண்ணு. அதிதி தும் கப் ஜாஓகே! (விருந்தினரே எப்ப கிளம்புவீங்க?)
பாடத்தின் தலைப்பு இதான். தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை
நல்லா பாத்துக்கணும்னு நினைக்கும் ஆசிரியர், ஆனா விருந்தினரின்
நடவடிக்கையால எப்படா சாமி கிளம்புவாருன்னு!! யோசிச்சு
கிள்ப்ப திட்டம் போடுவது போல இருக்கும். அந்தப் பாடம்
எடுத்தப்பத்தான் ஆஷிஷுக்கு முதலில் சொல்லியிருந்த 48 இட்லி
சாப்பிட்டவர் வீட்டுக்கு வந்ததைச் சொல்லியிருந்தேன். 48 இட்லியா?
எப்படிம்மா சாப்பிட்டாருன்னெல்லாம் கேள்வி மேல கேள்வி.
அப்படிச் சாப்பிட்டவருக்கு அப்போ வயசு 45க்கு மேல இருக்கும்னு
சொல்ல செம ஷாக்.




நேற்று டீவியில இந்தப் படம் பாத்ததும் செம கொசுவத்தி.
ஆஷிஷின் பாடமாக படித்திருந்த கதையை கொஞ்சம்
மாடிஃபிகேஷன் செஞ்சு அஜய்தேவகன், கொங்கனா சென்,
பரேஷ் ராவல் நடிப்பில் கிளாஸாக இருந்தது. படத்தோட
கிளைமாக்ஸ்தான் சூப்பர். ஃபாள்ட் நம்பர் மாறி அஜய்தேவகன்
வீட்டில் உறவினராக வருகிறார் பரேஷ் ராவல். 20 வருடங்களாக
பார்த்தேயிராத உறவினர் இவர்தான்னு அஜயும் அவரது
மனைவியும் விருந்தோம்பல் செஞ்சு படும் அவஸ்தைதான்
கதை. நல்லாயிருக்கு. போன வருஷம் வெளிவந்தப் படம்.

இந்தப் பாட்டையும் ரசிப்பீங்க :)



இந்தப் படத்தில் பரேஷ் ராவல் சொல்லும் ஒரு டயலாக் ரொம்ப
பிடிச்சிருந்தது. நிதர்சனமான உண்மை அதுதான்.

“ விருந்தினரை தெய்வமாக போற்றுவது நம் பண்பாடு.
ஆனால் கடவுளே (கணேசா) 11ஆம் நாள் கிளம்பி விடும் பொழுது,
விருந்தினரை கடவுளாக போற்ற வேண்டும் என்றால் அவரும்
சீக்கிரம் கிளம்பினால் தான் நல்லது.” இது நாம் விருந்தினராக
போகும் பொழுதும் பொருந்துமோ!!

விருந்தும், மருந்தும் 3 நாளைக்குத்தான்னு சும்மாவா சொன்னாங்க!!!

25 comments:

Anisha Yunus said...

ha ha haa.....ithu maathiri nadanthathellaam ninaivukku varuthu. kuzanthaigalukke rendu naalaikku meela aachunna bore adichidum!!!

:))

pudugaithendral said...

வாங்க அன்னு,

சரியாச் சொன்னீங்க.

வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))))

ஹுஸைனம்மா said...

ஆஹா, வடை போச்சே!! இதே டாபிக்கில் ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முந்திகிட்டீங்க.

அருமையா சொல்லிருக்கீங்க. உங்க அவ்வா சொன்னத என் பாணியில் சொல்லணும்னா, முத நாளு பீங்கான் பிளேட், ரெண்டாநாளு சில்வர் பிளேட், மூணாநாளு டிஸ்போஸபிள்!! :-)))))))

காற்றில் எந்தன் கீதம் said...

எனக்கும் இதே அனுபவம் இருக்கு :(
இதனாலேயே நான் எங்க போனாலும் பார்த்து பார்த்து நடந்துக்கொள்வேன்......

ADHI VENKAT said...

எனக்கும் இந்த அனுபவம் இருக்கு. :)))))

Chitra said...

“ விருந்தினரை தெய்வமாக போற்றுவது நம் பண்பாடு.
ஆனால் கடவுளே (கணேசா) 11ஆம் நாள் கிளம்பி விடும் பொழுது,
விருந்தினரை கடவுளாக போற்ற வேண்டும் என்றால் அவரும்
சீக்கிரம் கிளம்பினால் தான் நல்லது.” இது நாம் விருந்தினராக
போகும் பொழுதும் பொருந்துமோ!!

விருந்தும், மருந்தும் 3 நாளைக்குத்தான்னு சும்மாவா சொன்னாங்க!!!


....... செம பஞ்ச்! உங்கள் கலகலப்பான பகிர்வுக்கும் வீடியோ கிளிப்ஸ்க்கும் நன்றிங்க.... நல்லா இருந்துச்சு .

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பர் படம்ப்பா.. மொதல்ல வெரட்டறதுக்காக பாடுபடறதும், அப்றம் மனசு மாறுறதும், பரேஷ் ராவல் அடிக்கும் லூட்டிகளும் ரசிக்கவைக்கும் :-))

எனக்குத்தெரிஞ்சு ஒரு குடும்பமே இப்படி இருக்குப்பா.. அடுத்த வீட்டுக்கு போனா, பாத்திரத்தையே கழுவி கவுத்துடுவாங்க.. அந்த வீட்ல சின்னப்பசங்க இருப்பாங்களேன்னு கூட நினைக்கமாட்டாங்க. இதுவே அவங்க வீட்டுக்கு யாராச்சும் போனா, நிலைமை தலைகீழ்..

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கயல்

pudugaithendral said...

! இதே டாபிக்கில் ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சிருக்கேன். நீங்க முந்திகிட்டீங்க.//

நமக்கு இது ஒண்ணும் புதுசு இல்லையே!!! நீங்க உங்க பதிவையும் போடுங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் சுதர்ஷிணி,

நாம பாத்துதான் நடந்துப்போம். ஆனா நம்ம வீட்டுக்குன்னு வருவாங்க பாருங்க!!..... வீட்டு வாசப்படி வரைக்கும் நல்லாத்தான் இருப்பாங்க. நம்ம முகராசியைப் பார்த்ததும் அப்படியே தடாலடியா மாறி உசுரை எடுத்திட்டுத்தான் போவாங்க. :))

நம்மைப் போல சிலர் வாங்கிவந்த வரம்

pudugaithendral said...

எல்லோருக்குமே இப்படி அனுபவங்கள் இருக்கு போல இருக்கே கோவை2தில்லி!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

உங்கள் கலகலப்பான பகிர்வுக்கும் வீடியோ கிளிப்ஸ்க்கும் நன்றிங்க.... நல்லா இருந்துச்சு .//

நன்றி சித்ரா

புகழன் said...

நல்லா இருக்கு.

pudugaithendral said...

நன்றி புகழன்,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.

வருகைக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

அடராமா..48 இட்லியா..எங்க அம்மா சொல்வாங்க அவுங்க சின்ன வயதில் ஒரு உறவினர் 32 பூரி அம்மா வீட்டில் சாப்பிட்டதாய்.முன்பெல்லாம் ரொம்ப சாப்பிடுவார்கள் போல.

pudugaithendral said...

வாங்க அமுதா,

அந்தக்காலத்து ஆளுங்களே அப்படித்தான் போல. வஞ்சனை இல்லாம சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

நானானி said...

அண்ணாநகர் முதல் தெரு படத்திலும் இதே போல் கலாட்டாக்கள் நடக்கும்.
சத்யராஜ் படத்தில் கலக்கியிருப்பார்.

விருந்தும் மருந்தும் மூணு நாளே! முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வந்தவரு அன்னைக்கு சாப்பிட்டது 48 இட்லி!!!!//
சாப்பாட்டு ராமன் கேள்விப்பட்டு இருக்கேன்... இவர் இட்லி ராமனோ... ஹும்... அவர் கஷ்டம் என்னமோ... இட்லி சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சோ... சரி விடுங்க பாவம்... :)))

//அதிதி தும் கப் ஜாஓகே//
படம் பாக்குற ஆர்வத்த கிளப்பு விட்டுட்டீங்க... தேடி பாக்குறேன் கிடைக்குதான்னு...:))

Anonymous said...

அன்றே எழுதினது. ரொம்ப பெரிதானதால் பதிவாக போட்டுட்டேன். படிச்சு பாருங்க. உங்க கஷ்டம் எல்லாம் ஜூஜூப்பின்னு சந்தோசப்படுவீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://reap-and-quip.blogspot.com/2011/04/blog-post.html

Anonymous said...

48 இட்லி எல்லாம் பரவாயில்லைக்கா. நானே ஒரு 24 சாப்பிடுவேன். இட்லிமாமி வீட்டுக்குப் போனால் மட்டும் எதுவுமே சாப்பிடமாட்டேனாக்கும். ஹி ஹி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

:))

படம் பார்க்கிறேன்..

pudugaithendral said...

வாங்க அனாமிகா,

லிங்க்குக்கு நன்றி வந்து படிக்கறேன்.

மங்களூர் சிவா said...

ஹைதராபாத் வந்து 49 இட்லி சாப்பிட்டு சாதனையை முறியடிக்கிறேன்.

அதுவரைக்கும் எஸ்க்கேப் ஆகீக்கங்க.

:)

pudugaithendral said...

வர்றேன் வர்றேன்னு சொல்லிக்கிட்டே தான் இருக்கீங்க. ஆனா வரவழித் தெரியலை. வாங்க சிவா அப்புறம் பாக்கலாம். கஷ்டபடப்போறது நீங்களா? நானான்னு? :)))

சும்மா வகை வகையா செஞ்சு போட்டு 4 கிலோ வெயிட் ஏத்தித்தான் அனுப்புவேன்.