Wednesday, April 13, 2011

ஹபரானா....... ஆனந்தம்

த்ரிலோக சஞ்சாரி மாதிரி அயித்தான் ஊர் ஊரா சுத்திகிட்டு இருப்பாரு.
ஆனா அவரோட அதிகமா சுத்தினதில்லை. ஆபிஸ் வேலையா போகும்பொழுது
நாமும் போனா அவருக்கு தொந்திரவா இருக்கலாம் என்பதால்தான் இப்படி.
இல்லாட்டி நிறைய்ய இடங்கள் பாத்திருக்கலாம்:(

தொடர்ந்தாப்ல ரொம்பவே டூர் போய்க்கிட்டு இருந்த ஒரு சமயம்,
பசங்களுக்கும் விடுமுறையா இருக்க, திரும்ப வந்த உடனும்
வெளிநாடு போவதால எங்களையும் தன்னுடன் ஹபரானா அழைத்துச் சென்றார்.
அநுராதபுரத்தில் இருக்கும் ஓர் ஊர் ஹபரானா. அங்கே cinnamon hotelsன்
THE LODGE ஹோட்டலில் தங்கினோம். பேர் தான் லாட்ஜ். ஆனா சூப்பர்
ஹோட்டல். சுத்தியும் பசுமை... பசுமையே!!
ரூம் இப்படித்தான் இருக்கும்.



கொழும்புவிலிருந்து 6 மணிநேரத்தில் ஹபரானா. ரோட் சும்மா சூப்பரா
இருக்கும். எங்களை ரூமில் விட்டுட்டு அவரு தன் வேலையை பார்க்க
போயிட்டாரு. வீட்டு வராண்டா மாதிரி இருக்கும் ரூம் வாசலில்
சேர் போட்டு நான் பசங்களோட கதை பேசிகிட்டு இருந்தோம். அப்போ
எங்களுக்கு எதிரில சும்மா சர்வ சாதாரணமா நடந்து போய்க்கிட்டு
இருந்தது உடும்பு!!!!! ஆஷிஷ்க்கு அதை பள்ளி மாணவர்களோடு
சேர்ந்து சிங்கள பெயரில் தான் தெரியும். கப்பரகோயானாம்!!
அம்ருதா அப்ப ரொம்பவே சின்னது என்பதால கெட்டியா
பிடிச்சுகிட்டு அண்ணாகிட்ட விவரம் கேட்டுகிட்டு இருந்தாப்ல.
அண்ணா ஸ்கூல் பக்கம் அப்பப்போ வரும்!!!!

ஹபரானாவில் இன்னொரு விஷயம் ரொம்ப பிடிச்சது Elephant safari.
இலங்கையில் யானை பார்த்து தீராது. அவ்வளவு இருக்கும். இங்கே
காட்டுக்குள்ள ஜீப்ல போய் யானையை பார்ப்பது செம த்ரில்.
சரின்னு போணோம். வழியிலேயே தென்படும்னு டிரைவர் சொன்னாரு.
ம்ஹூம்... நம்ம நேரம்!!! கொஞ்சம் உள்ளே போனதும் தண்ணி
குடிக்க சின்ன ஓடைகிட்ட இருந்த யானைகளைப் பார்த்து பசங்களுக்கு
செம குஷி.




ஹபரானா வரை வந்திட்டோம். அங்கேயிருந்து கிட்டத்தான் திரிகோணமலை.
வந்தது வந்தோம் கோணேஸ்வரரை தரிசனம் செஞ்சிடலாம்னு சொல்லி
அயித்தான் அடுத்த நாள் லீவு போட்டு அங்கே கூட்டிகிட்டு போனாரு.
அடிச்சது லக்குன்னு ஜாலியா இருந்தது.

ஹபரானாலேர்ந்து திரிகோணமலைக்கு 1 மணிநேரத்துல போயிடலாம்.
அந்தப் பாதை காட்டுப்பாதை!!! அங்கங்கே யானைகளின் படம் வெச்சு
”நிதானமா போங்க, நீங்க உபயோகிச்சுகிட்டு இருப்பது அவர்களின்
வழக்கமான பாதைன்னு!”” எச்சரிக்கைல்லாம் இருந்தது. எங்க
வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் கண்ணுக்கு எட்டின தூரம் வரை
வேற வண்டிகளும் இல்லை. கொஞ்சம் பக்குன்னு தான் இருந்துச்சு.
கொஞ்ச தூரம் போயிருப்போம். சலசலன்னு சத்தம் கேட்டு அயித்தான்
வண்டியை அப்படியே நிப்பாடினாங்க!!! பாத்தா!!!!!!!!
தப தபன்னு சின்னதும் பெரியதுமா 25க்கும் மேற்பட்ட யானைகள்!!!!

வலது பக்கத்துலேர்ந்து இடது பக்கத்துக்கு போய்க்கிட்டு இருந்துச்சு.
அப்ப கார்ல இருந்த ரேடியோவுல என்ன பாட்டுங்கறீங்க!!
“அப்படிப்போடு.... போடு... அசத்திப்போடு” யெஸ்ஸு கில்லி
பாட்டு!! :)) மெல்ல வால்யுமையும் குறைச்சாரு அயித்தான்.
ஒரு சின்ன யானை நின்னு திரும்பி பார்க்க....... அதை கூப்பிட
இன்னொரு பெரிய யானையும் திரும்ப வற காரை ரிவேஸ் எடுக்க
ரெடியானாரு அயித்தான். கூட்டமா போனா பிரச்சனையில்லையாம்.
தனியானைக்கிட்ட மாட்டினோம் அம்புட்டுத்தான். நல்லவேளை.
சின்ன யானை கூட்டத்தோட சேர ஓட, பெரிய யானையும்
அதோட போயிடிச்சு.

சிச்சுவேசனுக்கு தகுந்த பாட்டுன்னு அம்ருதா கமெண்ட் அடிக்க,
ஆஷிஷோட கமெண்ட்,”நேத்து காசு கொடுத்து பாக்கப்போனாக்க
கொஞ்சமே கொஞ்சம் யானை இருந்துச்சு. ஆனா இங்க ஃப்ரியா
ஒரு கூட்டமே பாத்தோம்ல!!!””

யானைப்பாகனோட நடந்து வரும் யானையைப் பார்ப்பது ஒரு
சுகம்னா, காட்டுல கூட்டமா யானைப் பார்ப்பதும் சுகம்.
இலங்கையில் நிறைய்ய இடங்களில் இந்த மாதிரி பார்க்க
கிடைக்கும். கதிர்காமம் போகும் பொழுது கூட உடவளவுல
காசு போட்டு பாக்க கூட்டமா வந்திருப்பங்களுக்கு தண்ணி
காட்டிட்டு காட்டுப்பகுதியில் மின்வேலிக்கிட்ட வந்து காத்திருக்கும்.

நாளை திரிகோணமலைப் பயணத்தை பத்தி சொல்றேன்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

காசு பணம் செலவில்லாம எங்க எல்லோரையும் இலங்கை சுத்தி காட்டறீங்க. நன்றி :)

//கப்பரகோயானாம்!!//

நல்ல பேரு வைச்சாங்கப்பா.

//அம்ருதா அப்ப ரொம்பவே சின்னது என்பதால கெட்டியா
பிடிச்சுகிட்டு அண்ணாகிட்ட விவரம் கேட்டுகிட்டு இருந்தாப்ல.//

உடும்பையா? :)

pudugaithendral said...

வாங்க சகோ,

காசு பணம் செலவில்லாம எங்க எல்லோரையும் இலங்கை சுத்தி காட்டறீங்க. நன்றி :) //

நன்றிக்கு நன்றி

உடும்பையா? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணனைத்தான் உடும்பு பிடியா அம்ருதா பிடிச்சுகிட்டு இருந்தா. :)))

Chitra said...

WOW!! Superb!

மாதேவி said...

ஹய்... நம்ம சிறீலங்கா.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சித்ரா

pudugaithendral said...

ஆமாம் நம் ஸ்ரீலங்கா தான்.

வருகைக்கு நன்றி மாதேவி

ADHI VENKAT said...

திடீரென்று 20 25 யானைகள் வந்த போது செம த்ரில்லிங்கா இருந்திருக்குமே!

சூப்பர் அனுபவம்.

pudugaithendral said...

sema thrilling

thanks kovai2delhi

விக்னேஷ்வரி said...

வாவ், செம த்ரில்லிங்கா பயணம் பண்ணியிருக்கீங்க. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு. கண்டினியூ..