Wednesday, April 20, 2011

டீ குடிக்க வாரீகளா!!!

2001ல் போனப்பவே அயித்தான் கிட்ட சீதாதேவி வனவாசம் இருந்த
இடத்தைப் பாக்கணும்னு கேட்டேன். அது ரொம்ப தூரம் (4 மணிநேரப்
பயணம் தான்) போகணும்னு சொல்லிட்டாரு. அந்த ட்ரிப்ல ஒரு மாசம்
தான் கொழும்பில் இருந்தேன். தவிர அப்ப அதிகம் கர்ஃப்யூ இருந்தது.
கதிர்காமத்துக்கு ஆயிரம் கஷ்டப்பட்டு போனோம். கிளம்ப நினைச்ச
அன்னைக்கு முதல் நாள் பெட்டா பகுதியில் ஏதோ களேபரமாகி
அடுத்தநாள் ஊரடங்கு இல்லாட்டாத்தான் வெளியவே தலைகாட்ட முடியும்
எனும் நிலை!!!!

ரெசிடண்ட் விசா வந்து அங்கயே இருக்கப்போறன்னதும் திரும்ப ஜிவ்வுன்னு
சந்தோஷம்!! விட்ட இடத்தையெல்லாம் பாத்திடலாமே. இந்த வாட்டி
அயித்தான் விசாரிச்சு வெச்சு ட்ரிப் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.
ஆஹா நினைத்தாலே இனிக்கும்!! அப்படின்னு பாடத்தோணும் ஒரு
பயணம். நம்ம ஊட்டி மாதிரியான மலைப்ரதேசம் நுவரேலியா.
கொழும்பிலிருந்து 4 மணிநேரப்பயணத்தில் நுவரேலியா. போகும் வழியில்
இன்பயமான ஆச்சரியம். ரம்போட அனுமான் கோவில். சின்மயா மிஷன்
அவர்களின் கோவில் சுத்தமாக நிசப்தமான மலை உச்சியில். தரிசிக்காம
இருக்க முடியுமா. இறங்கி ஒரு கும்பிடு போட்டோம்.


st.clairs நீர்வீழ்ச்சி. நுவரேலியா போகும் வழியில் இரண்டு
நீர்வீழ்ச்சிகள் இருக்கும். st.clairs டீ ஃபேக்டரியோட டீஷாப்பில்
ஆனந்தமா டீ குடிக்க ரொம்ப பிடிக்கும்.

இப்ப இந்த நினைவுச்சின்னம் அங்கே இல்லை. இடிச்சிட்டாங்க.
வெறுமையான அந்த இடம் மனசை என்னவோ செய்யுது.


நுவரேலியா டீ ரொம்ப பேமஸ். தேயிலை எவ்வளவு உயரத்தில் விளையுதோ
அதோட ருசியும் அவ்வளவு ஜாஸ்தி. கண்டியைவிட அதிக உயரம் என்பதால்
நுவரேலியா டீயும் ருசி தான்.

இலங்கைக்கு போன புதுசுல அங்க இருக்கற டீயெல்லாம் வாங்க மாட்டேன்.
நமக்கு எப்பவும் வாஹ் தாஜ்! தான். அதனால இங்கேயிருந்து எடுத்துகிட்டு
போவேன். இப்ப அதே கதை உல்டா ஆகிடிச்சு. சிலோன் டீ என்னவோ
தங்கக்கலரில் சூப்பரா இருக்கும். ப்ளாக் டீ குடிக்க பழகினது அங்கேதான்.
என்ன ஒரு ருசி!!!!



தேயிலை தயாரிக்கும் இடத்துக்கு போகணும்னு ஆசை. வழியில்
Glenloch ஃபேக்டரி போனோம். இனிமையான உபசரிப்பு.



BOPF இதுதான் பெஸ்ட் வெரைட்டி. டஸ்ட் டீ வகையைவிட ருசியும்
கலரும் சூப்பரா இருக்கும்.


டீஃபேக்டரின்னு ஒரு ஹோட்டலே இருக்குத் தெரியுமா!!!
Aitken spence grup in இந்த ஹோட்டல் ரொம்ப பேமஸ்.
பழைய டீ பேக்டரி உருமாற்றி ஹோட்டலா ஆக்கியிருக்காங்க.
இந்த ஹோட்டலே விசித்ரம்னா அதுக்குள்ள இன்னொரு
விசித்ரமும் இருக்கு. என்னன்னு தெரியணுமா?
இங்க போய் பாருங்க.


இது ஹோட்டலின் உள்ளே!


பெஸ்ட் டீ வேணும்னா, அது இந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும்
டீ தான். ஏன்னு கேக்கறீங்களா? மலை உச்சியில் கிடைக்கும் டீ தான்
பெஸ்டுன்னு சொல்லிருந்தேன்ல. இந்த ஹோட்டல்தான் நுவரேலியாவின்
உச்சி. அங்கே விளைவிக்கப்படும் தேயிலை தான் டாப்!!!

சீதாதேவி வனவாசம் இருந்த இடத்தைப் பத்தி சொல்றேன்னு
டீ புராணம் சொல்ல ஆரம்பிச்சிட்டேனே!! என்ன செய்ய.
தேத்தண்ணியோட ருசியே ருசி. அதைப் பத்தி சொல்ல
ஆரம்பிக்க ட்ராக் எங்கயோ போயிடிச்சு.

சரி. சூடா டீ குடிச்சிட்டு வாங்க. அடுத்த பதிவுல கண்டிப்பா
சீதாதேவி வனவாசம் இருந்த இடத்தைப் பத்தி சொல்றேன்.

24 comments:

Unknown said...

பதிவும் படங்களும் ரொம்ப ருசியாக இருக்கு... தென்றல்..

pudugaithendral said...

வாங்க ஃபாயிஷா,

நலமா. எப்பவோ போனது அதைப் பத்தி இப்பத்தான் எழுதும் சூழல். வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

நல்ல டிரிப்பாக இருந்திருக்கும். படித்தவுடன் தேநீர் குடிக்க வேண்டும் போல் தோன்றிவிட்டது.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்பவே நல்ல ட்ரிப். நிறைய்ய தடவை போயிருக்கேன்.

வருகைக்கு நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

எனக்கும் டீ குடிக்க ஆசை வந்திட்டு,இப்ப போய் டீ குடிச்சிட்டு உங்க அடுத்த பதிவுக்கு வரேன்.

படங்களும் காட்சிகளும் சூப்பர்

Jaleela Kamal said...

அந்த பெரிய பயிலர் ரொம்ப நல்ல்ல இருக்கு

Chitra said...

Super photos.... good narrative style. :-)

சாந்தி மாரியப்பன் said...

இலங்கையில் இருந்தப்ப நல்லா சுத்தியிருக்கீங்கன்னு தெரியுது :-))

pudugaithendral said...

வாங்க திருமதி ஸ்ரீதர்,

டீ குடிச்சிட்டு வாங்க. இப்போதைய வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

good narrative style. //

நன்றீஸ்

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இலங்கையில் இருந்தப்ப நல்லா சுத்தியிருக்கீங்கன்னு தெரியுது//

ரொம்ப நல்லா சுத்தியிருக்கேன்.

வருகைக்கு நன்றி

எல் கே said...

//சீதாதேவி வனவாசம் இருந்த இடத்தைப் பத்தி சொல்றேன்//

சிறை வைக்கப்பட்டிருந்த இடம் என்று வர வேண்டுமோ ?? வனவாசம் இந்தியாவில் மட்டும்தானே . இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு அசோகவனத்தில் அல்லவா இருந்தார்கள்

ஹுஸைனம்மா said...

//ஹோட்டலே விசித்ரம்னா அதுக்குள்ள இன்னொரு
விசித்ரமும் இருக்கு. என்னன்னு தெரியணுமா?//

போய்ப்பார்த்தேன். என்னன்னு புரியலையே. சொல்லுங்களேன்.

Mahi said...

படங்கள் அழகா இருக்கிறது..நான் அவ்வளவா டீ குடிக்க மாட்டேன்(டீ கரெக்ட்டான பக்குவத்தில் போடத்தெரியாது! :) )

உங்க பதிவு டீ பருகும் ஆசையைத் தூண்டிவிடுகிறது.யாராவது நல்ல டீ போட்டுக்குடுத்தா நல்லா இருக்கும்! :)

தெய்வசுகந்தி said...

நல்ல டீ கதை!!

pudugaithendral said...

வாங்க எல்கே,

ஆமாம் சிறைவாசம்னுதான் சொல்லணும். சுட்டி காட்டினதற்கு நன்றி. அசோகவனம்னு சொல்வாங்களா,அதனால வனவாசம்னு ஆக்கிட்டேன்.

எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இதானோ!!

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஹுசைனம்மா அந்த லிங்குல ரயில்பெட்டியில் ரெஸ்டாரண்ட் போட்டோஸ் வருதே!! அதான் ஷ்பெஷல்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

எங்க வீட்டுக்கு வாங்க மஹி,

வகை வகையா டீ போட்டுத்தர்றேன். காபியை விட டீதான் நல்லா போட வரும். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி தெய்வசுகந்தி

ஷர்புதீன் said...

kalakkunga!

Bragi said...

உங்க பதிவ படிசோண கோட்டயம் ல நான் கொட்டயதுல பாத்த தேயிலை தோட்டம் தான் ஞாபகம் வருது. படங்களும் உங்க விவரிப்பும் நல்லா இருந்தது. நல்லா தகவல்.

pudugaithendral said...

நன்றி ஷர்புதின்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ப்ராகி