கண்டியில் இருக்கும் பெரதனியா பொடானிக்கல் கார்டன் மிக
அழகு. பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்க்யில் பாட்டு
இங்கேதான் எடுத்திருக்காங்க.
பாட்டு ரசிச்சாச்சா!!. அவ்வளவு பெருசு இல்லாட்டியும் நுவரேலியாவில்
இருக்கும் ஹக்கல பொடானிக்கல் கார்டனும் பார்க்க வேண்டிய ஒண்ணு.
இந்த தோட்டத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் தான் சீதையம்மன்
கோவில் இருக்கு. சீதாஎலிய என்று இந்த இடத்துக்கு பெயர்.
சீதை இருந்த அசோகவனத்தில் இப்போ ஸ்ரீராமர்,சீதை,லட்சுமணன்
கோவில் இருக்கு. அந்தக் குளு குளு இடத்தில் பின்னால் ஓடும்
அருவியின் சலசல சத்தம் காதில் ஒலிச்சுகிட்டே இருக்கு.
சீதையை பார்த்து கண்டேன் சீதையைன்னு அனுமன்
பரவசம் அடைந்து மரத்திலிருந்து குதிக்க அவருடைய
கால்தடங்கள் பதிந்த இடம் இங்கதான்.
கொஞ்சமா கீழே இறங்கிப்போனா கோவில் ப்ரகாரம். அனுமன்
காலடி பதிந்த இடமெல்லாம் வரும். இதான் கோவிலின் முகப்பு.
அனுமனின் காலடி பதிந்த இடம் இது:
ஃப்ளைட்டிலிருந்து இந்தியா இலங்கையை சேரும் அழகை பார்க்க
ரொம்பப்பிடிக்கும். நெட்டில் தேடிய பொழுது இந்தப் படம்
அந்த அழகை கண்முன் நிறுத்துது!!!
இராவண எல்ல என்று ஒரு நீர்வீழ்ச்சிக்கு பெயர். எல்ல என்றால்
நீர் வீழ்ச்சி. இராவணன் குகை Bandarawela, Senapitiya at Halagala, Ramboda, Labookelle, Wariyapola/Matale, and Sitakotuwa/Hasalaka. ஆகிய
இடங்களில் இருக்கு. இதில் பண்டாரவெல குகைக்கு அருகில் தான்
இராவணன் நீர்வீழ்ச்சி. அடர்ந்த மலைக்குள் இருந்து வரும் அருவியைப்
பார்ப்பதே சுகம்.
அடுத்த பதிவில் சிவன் கோவில்பத்தி பாப்போம்.
18 comments:
WOW!!! lovely photos....
nice song and videos.
Thank you for sharing them.
சுகமான பாடலுடன் இனிமையான பகிர்வு. நம்மாளு கால் பதித்த இடம் புகைப்படம் அருமை...
பகிர்வுக்கு நன்றி சகோ.
படங்களெல்லாம் அழகா இருக்குங்க.. அதுவும் அந்த, பறவைப்பார்வையில் இந்தியாவும் இலங்கையும் அருமை.
வருகைக்கு நன்றி சித்ரா,
அப்பொழுது என்னிடம் டிஜிட்டல் கேமிரா இல்லை. எல்லாம் நெட்டில் சுட்டதுதான் :)
வாங்க சகோ,
வருகைக்கு மிக்க் நன்றி
பறவைப்பார்வையில் இந்தியாவும் இலங்கையும் அருமை.//
வாங்க அமைதிச்சாரல்,
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது
சீதை மட்டும்தான் இல்லை,படங்களையும்,வீடியோ காட்சியும் ரசித்தேன்.
இந்தத் தொடர் உங்களிடமிருந்து ரொம்ப நாட்களாக எதிர்பார்த்தது கலா...ஏதோ காரணங்களால் ஆரம்பத்தில் தடைப்பட்டது நினைவுள்ளது..படங்களுக்கும்...பகிர்வுக்கும் நன்றி...
படங்களுடன் நல்ல பகிர்வு. பாட்டும் மிகவும் பிடித்த பாடல்.
வருகைக்கு மிக்க நன்றி திருமதி ஸ்ரீதர்
ஆமாம் பாசமலர்,
தடைபட்டதை இப்பத்தான் எழுத வாய்ப்பு கிடைத்தது. வருகைக்கு மிக்க நன்றி
நன்றி கோவை2தில்லி
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்...நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_04.html
-
நன்றி ஷர்புதீன்.
அடிக்கடி வாருங்கள்
நன்றி ஷர்புதீன்.
அடிக்கடி வாருங்கள்
நன்றி புவனா
Post a Comment