Wednesday, June 08, 2011

100%love

காதலின் பொன் வீதியில்.... என்ன இருக்கும் காதல்
மட்டும்தானா??? பிரச்சனைகளும் இருக்குமே. காதலுக்கும்
எதிரிகளாக பெரியவர்களையே காட்டி காட்டி அலுக்க வைத்துவிட்ட
இயக்குனர்களின் மத்தியில் காதலர்களுக்கு இடையே இருக்கும்
ஈகோவை வில்லனாக்கி இயக்குனர் சுகுமார் எடுத்திருக்கும்
படம் தாம் 100%லவ்.

இதயத்தை திருடாதே ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா,
தமன்னா ஜோடியில் வெளி வந்திருக்கும் இப்படத்தின் பாடல்கள்
ஆகட்டும், படமாகட்டும் சக்கப்போடு போடுகிறது.தமிழில் மார்க்கெட் போன நடிகை தமன்னாவுக்கு தெலுங்கில் இந்தப் படம்
சூப்பர் இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தை
உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் தமன்னா. டயலாக் டெலிவிரி,
உணர்ச்சி பூர்வமான நடிப்பு என அசத்தியிருக்கிறார் தமன்னா. நாகசைதன்யாவும்
குறைவில்லை.

கதை என்ன? கிராமத்திலிருந்து வரும் அத்தைமகள் மகாலட்சுமி (தமன்னா)
மாமன் மகன் பாலு (நாகு ஜூனியர்) படிக்கும் கல்லூரியில் சேர்கிறார்.
கல்லூரியில் ஃபர்ஸ்டாக இருக்கும் பாலு படு ஸ்ட்ரிக்ட் பார்ட்டியாக
காட்டிக்கொள்கிறார். அது ஏதும் இல்லாவிட்டாலும் போகப்போக தமன்
படிப்பில் முன்னேறி பாலுவை பீட் செய்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது
ஈகோ. மஹாலட்சுமியின் அப்பா மகளுக்கு ஒரு வரன் பார்க்க அவரை
மணக்க மறுக்கிறார். பாலுவின் உதவியோடு அந்த சம்பந்தத்தை தட்டிக்
கழிக்கிறார் மஹாலட்சுமி. பாலுவும் மஹாலட்சுமியும் காதலிக்க துவங்கும்
பொழுது மஹாலட்சுமி பாலுவின் ஈகோவை தாக்கிட இருவரும் பிரிகிறார்கள்.
இருவரும் இணைகிறார்களா????? வெள்ளித் திரையில் பார்க்க வேண்டிய
ஒரு படம்.இப்போதைய யூத்களின் காலர் ட்யூனாக மட்டுமல்ல அவர்களின்
மனதை சொல்லும் வரிகளாக இந்தப் பாடல். :))
தமன்னாவுக்கும், பாலுவுக்கும் வெவ்வேறு வரன்களுடன் நிச்சயதார்த்தம்
முடிந்துவிட்ட சூழலில் பாலுவின் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டத்தை
தடுத்து நிறுத்த இரவும் பகலும் பாலுவுடன் சேர்ந்து தோள் கொடுக்கிறார்
தமன்னா. தமன்னாவின் வருங்காலக் கணவன் வந்து ,”இப்படி நேரம்
கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவது தவறு!” என சொல்லும் பொழுது
தமன்னா,” நம் திருமணம் நாளை கழித்துதான். என் கழுத்தில் தாலி
ஏறும் அந்த நொடி வரை நான் இந்த வீட்டு மகள். என் கடமையை
நான் செய்ய வேண்டும். நீயும் புரிந்துகொண்டு, உன் வீட்டினருக்கும்
புரியவைக்க வேண்டும்!” என தழுதழுக்கும் குரலில் கூறும் இடம் சூப்பர்!!

பாலுவின் பாட்டி தாத்தாவாக கே.ஆர்.விஜயா, விஜயக்குமார் ஜோடி.
இருவரின் பிரிவுக்கும் கூட காரணம் இந்த ஈகோ தான். இடைவேளைக்குப்
பிறகான சினிமாவின் பகுதியில் குடும்ப உறவுகளும், அதன் முக்கியத்துவத்தையும்
கூறும் படி அழகாக அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அதுவும் லேப்டாப்பில் தன் மனைவியின் வீடியோவை பார்க்கும் விஜயகுமார்,
கணவரின் வீடியோவை பார்க்கும் கே.ஆர்.விஜயா காட்சி மனதில் நிற்க்கிறது.


மெலடி,சோகம் என பாடல்கள் இருந்தாலும் டைட்டில் சாங் போல
வரும் இந்தப் பாட்டை பாடியது யார் என்று சொன்னால் அசந்து போவீர்கள்.
கண்கள் இரண்டால் பாட்டில் கண்களால் கவிதைச் சொன்ன சுவாதியை
பாடகியாக்கி இருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
Get this widget | Track details | eSnips Social DNA


இளைஞர்கள் இந்தப் படத்தின் மீது 100%காதல் கொள்ள வைக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை. பாடல்களும் அருமை.


10 comments:

அமுதா கிருஷ்ணா said...

என்னது தமன்னா ”நடித்து” இருக்கிறாரா?

எல் கே said...

வருகையை பதிவு செய்யறேன். எனக்கும் படத்துக்கும் அதிகத் தொலைவு

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

மொதல்ல எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. தெலுங்கில் அவருக்கு நடிக்கும் ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் கிடைக்குதுன்னே சொல்லலாம். ஹேப்பி டேஸ், 100 லவ் எல்லாம் அந்த ரகம்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

எல் கேவுக்கு அட்டெண்டென்ஸ் மார்க்டு.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்ப் படங்களே பார்க்க இங்கே அவ்வளவு வசதியில்லை... விருப்பமும் இல்லை... இதில் தெலுகு ? :)

ஆனாலும் நீங்கள் பகிர்ந்த தெலுகுப் பாடலின் காணொளி பார்த்தேன். வழக்கமான தேவிஸ்ரீ பிரசாத்...

ஷர்புதீன் said...

நான் ஹைதராபாத்தில் இருந்தநேரத்தில் வேடம் ( தமிழில் வானம்) படம் மட்டும்தான் PVR தியேடரில் பார்த்தேன்., அந்த தியேட்டரும் கொஞ்சம் ஓகே. அப்புறம் தெலுங்கு அவ்வளாவாக புரியாத காரணத்தினால் மற்ற படங்களையும் பார்கவில்லை., இனி உங்களை போன்றவர்கள் ரெகமென்ட் செய்யும் இந்த மாதிரியான படங்களை பார்த்திட வேண்டியதுதான்.

கமிசனை தயாரிப்பாளரிடம் இந்த கமெண்டை காட்டி வாங்கிகொள்ளவும்!

:-)

கோவை2தில்லி said...

படத்தகவல்களுக்கு நன்றிங்க. முடிந்தால் பார்க்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

இங்கேயும் தமிழ் பாடம் பார்க்க கொஞ்சம் கஷ்டம் தான். ”கோ” சனி,ஞாயிறுகளில் காலை 9 மணி காட்சியில் மட்டுமே தற்போது.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஷர்புதின்,
இனி உங்களை போன்றவர்கள் ரெகமென்ட் செய்யும் இந்த மாதிரியான படங்களை பார்த்திட வேண்டியதுதான்.
//இதுலயும் பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கே. எனக்கு பிடிச்ச படம் உங்களுக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாதே!! மினிமம் கியாரண்டி தர்றேன்// :)
கமிசனை தயாரிப்பாளரிடம் இந்த கமெண்டை காட்டி வாங்கிகொள்ளவும்!

:-)//

ஆஹா.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு நன்றி