ரொம்ப நாளாச்சு பிரியாணி போட்டு. அதான் ஆரம்பமே
ஆவக்காய பிரியாணி.
CELEBRITY CRICKET LEAGUE அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு
கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட், பாலிவுட் டீம்கள்
மேட்சு நடந்துச்சு பாத்தேன். நம்ம வலைப்பூக்களில் வருவதை
இப்ப எல்லா தரப்பினரும் ஆர்வமா படிப்பதால இந்த மேட்டரை
சொல்லி வைக்கிறேன். தெலுகு வாரியர்ஸ் டீம் டோலிவுட் நடிகர்கள்
இருக்கும் டீம்னு எல்லோருக்கும் தெரியும்.
அந்த டீம் மெம்பர்ஸுல ஒரு பையனை சேர்த்திருக்காங்க பாருங்க.
அதுதான் எனக்கு சரிப்பட்டு வரலை. தாத்தா பெரிய நடிகர்,
அப்பா பெரிய நடிகர், அம்மாவும் அந்தக்கால நடிகை என்பதாலேயே
இவர் விளையாடுவதைப் பத்தி யாரும் கேக்காம இருக்கலாம்!!! ஆனா
பச்சக்குழந்தையா இருந்தப்ப சுசீந்திரின்னு பேபீஸ் டே அவுட் படத்தை
தெலுங்கில் எடுத்தப்ப நடிச்ச ஒரே காரணத்துக்காக நாகார்ஜுனா-அமலாவின்
மகனை கிரிக்கெட்டில் சேத்திருக்காங்க. இதுல இன்னொரு மேட்டர்
என்னன்னா? அகில் கிரிக்கெட்டில் பயிற்சி பெற்ற ப்ளேயர். அவரை
நேஷனல் லெவலிலோ, ஸ்டேட் லெவலிலோ சேர்க்க முடியாட்டி
இப்படி டோலிவுட் டீம்ல் சேர்ப்பது எந்த ஊரு நியாயம்?????
நடிகர்கள் விளையாட்டுன்னு சொல்லிப்புட்டு இப்புடி சின்னப்புள்ளைய
சேர்த்துகிட்டு விளையாடுவது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!!
போன தடவை டோலிவுட்டுக்குள்ளே நடந்த கிரிக்கெட் மேட்சில்
நாகார்ஜுனா டீம் ஜெயிக்க அகில்தான் காரணம். இதெல்லாம்
நல்லாவா இருக்கு???
நம்ம சென்னை டீம் முதல் மேட்ச்சில் அற்புதமா விளையாடியதற்கு
வாழ்த்துக்கள்.
***************************************************************
இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்திருக்கு. வழக்கம்போல
ஆந்திரா தான் டாப்பு!!!! பட்டையக் கிளப்பறாங்க பசங்க.
எண்டரன்ஸ் எக்ஸாம்கள் எல்லாத்தையும் எடுத்திடலாமா? இல்லாட்டி
நேஷனல் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்டுன்னு ஒண்ணே ஒண்ணு வைக்கலாமான்னு
யோசிச்சுகிட்டு இருக்காங்களாம். ஆன்லைனில் ஓட்டெல்லாம்
போடச் சொல்லி கேட்டுகிட்டு இருக்குது அரசு.
ஆந்திராவும்,தமிழ்நாடும் மட்டும்தான் எதிர்க்கறாங்க.
பாப்போம்!!!
***************************************************************
வருண பகவான் ரொம்ப நாளைக்கப்புறம் சீக்கிரமா வந்திட்டாரு.
இந்த வாட்டி ஹைதையில் வெயில் 42 டிகிரியைத் தாண்டவில்லை.
அப்பப்போ சிறு தூறலும் போட்டதனால குளிரிச்சியவே இருந்துச்சு.
ஆனா போன தடவை பெய்த அதிக மழையால விளைச்சல்
குறைஞ்சு போச்சு!!! கிலோ 20 விக்கும் திராட்சைகள் இந்த தடவை
50,60 ரூபாய்க்கு வித்ததும் அதுவும் குறைவான அளவில்தான்
இருந்துச்சு. மாம்பழம் சீசன் நடக்குது. ஆனா அதுவும் மகசூல் கம்மிதான்.
விலையும் 30,60ன்னு தான் இருக்கு!!!
**********************************************************
2லேர்ந்து 3 வயசு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வேலையில்
சில பெற்றோர்கள் பிசியாக இருப்பாங்க. நாம நம்ம காலம் பரவாயில்லைன்னு
சந்தோஷப் பட்டுக்குவது போல ஆஷிஷ் வயசு இருக்கும் பசங்கள்லாமும்
சந்தோஷப்பட்டுக்க கூடிய இல்லாட்டி பேசக்கூடிய விஷயமா எனக்கு
தோணுவது நர்சரி, எல்கேஜி அட்மிஷன்!!!!
அப்பா அம்மாவுக்கு சும்மா ஒரு கலந்துரையாடல் மாதிரி வெச்சாங்க,
அப்புறம் அது நேர்முகத் தேர்வாக மாறி பெத்தவங்க வயித்துல
புளி கரைச்சிச்சுன்னா, இப்ப அட்மிஷம் ஃபீஸ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஷிஷ் இப்ப 10த். ஐயாவுக்கு கூட எனக்கு அம்புட்டு செலவானதில்லை!
ஆனா நர்சரி பாப்பாவுக்கு பிரபல ப்ளே ஸ்கூலில் சேர்க்கணும்னா
வருஷத்துக்கு 30000!!!! இல்ல வேணாம் சாதாரணமான இடத்துல
சேக்கலாம்னா அது ஸ்கூல் மாதிரியே தெரியலை!! வீட்டுலயே ஒரு
ரூமை ஸ்கூலுக்குன்னு ஒதுக்கி(!!) வெச்சிடறாங்க. அந்த மாதிரி
ஸ்கூலுக்கும் மாசம் 1000 ரூபாயாம்!!!
எஞ்சினியரிங், டாக்டர் அட்மிஷன் எல்லாம் அப்புறம் ஆனா ஆவன்னா
கத்துக்கொடுக்க ஸ்கூலில் சேர்க்க சொத்துன்னு ஒண்ணு இருந்தா
அதை எழுதி கொடுத்திடச் சொல்லி கேப்பாங்க போல இருக்கே!!!
இந்தக் கால பெற்றோர் ரொம்பவே பாவம்!!!!!
***************************************************************
மகதீரா தெலுங்கு படம் தமிழ்ல டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கு.
டப்பிங் படம் பார்ப்பது ஒரு கொடுமைதான். ஆனாலும் இந்தப்
படத்தை கண்டிப்பா பாருங்க. அரசர் காலம், இந்தக்காலம்னு
ஒரு நல்ல கலவையா இருக்கும் படம். காஜல் அகர்வால் ரொம்பவே
அழகா தெரிவாங்க. ராம் சரண் தேஜாவுக்கு இந்தப் படத்துக்கப்புறம்
அதிகமான ஃபேன்ஸ் சேர்ந்தாங்க.
***************************************************************
திஹார் ஜெயிலைப் பத்தி ஒரு மேட்டர் பார்ப்போம். சத்தியமா
இது கனிமொழி பத்தி இல்லை.
இந்த ஜெயில் ரொம்பவே வித்தியாசமானது. இங்கே இருக்கும்
கைதிகளை ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வைக்கும்
நோக்கில் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து உள்ளேயே வேலை வாய்ப்பையும்
செய்யறாங்க. அதில் ரொம்பவே லாபம் கொடுக்கக்கூடியதா இருப்பது
பேக்கரி பொருட்கள். பிரட்,பிஸ்கட்ஸுன்னு வகைவகையா தயாராகுதாம்.
ஆரம்பத்தில் உள்ளே இருப்பவர்களின் தேவைகளுக்குன்னு தயார் செய்ய
ஆரம்பிச்சது இப்ப வெளி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு வருது.
அதில் கிடைக்கும் லாபத்தை வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கறாங்களாம்!
தரமும் சூப்பரா இருக்கு, விலையும் மலிவா இருப்பு என்பதுதான்
இதன் சிறப்பு.
TJ ஃபுட்ஸ் அப்படிங்கற பெயர்ல தில்லியிலும் அதன் சுற்று இருக்கும்
சில இடங்களிலும் இந்த பொருட்கள் கிடைக்கின்றன்.
வாழ்த்துக்கள்
6 comments:
வாங்க சகோ... பரீட்சை எல்லாம் நல்லபடியா முடிந்ததா! வலையுலகமே உங்க ஆவக்காய் பிரியாணி இல்லாம ”சப்”-னு இருந்தது. இனிமேதான் கலகலப்பாக இருக்கும்.
வாங்க சகோ,
முந்தைய பதிவு படிக்கலியா?? பரிட்சை எழுதலை. இனி அடிக்கடி பிரியாணி போட்டு கார சாரமாகிடறேன். :))
வருகைக்கு நன்றி
வாங்க. உடல்நிலை இப்ப தேவலையா? கவனிச்சுக்கோங்க.
பிரியாணி நல்லாயிருந்தது. பதிவுகள் தொடரட்டும். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வாங்க வாங்க வாங்க ...... இப்ப எப்பிடி இருக்கு உடம்புக்கு...
முதல் பதிவுக்கு கமென்ட் போடா முதல்ல ரெண்டாம் பதிவு போட்டு அசத்திட்டிங்க... நல்ல சுவையான பிரியாணி.....
வாங்க கோவை2தில்லி,
இப்ப சமாளிக்க முடியும். வருகைக்கு நன்றி
வாங்க சுதர்ஷிணி,
இப்ப ஓகே. பதிவு போட ஆரம்பிச்சா புயல் வேகம் தான். அதுதானே என் ஸ்டைல். :))
வருகைக்கு நன்றி
Post a Comment