Tuesday, June 14, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/6/11

இடி மின்னலோட மழை பெஞ்சுகிட்டு இருக்கும்பொழுது சர்தார்ஜி
ஒருத்தர் அடிக்கடி வெளியே வந்து வானத்தை பார்த்து சிரிச்சாராம்.
எதுக்குன்னு கேட்டா,”யாரோ போட்டோ பிடிக்கறாங்க!!அதான் வெளிச்சம்
வருது. அதுக்காகத்தான் சிரிச்சேன்” அப்படின்னு
சொன்னாரம்!!!

இப்ப ஹைதையிலயும் சிலர் வண்டி ஓட்டவா?சிரிக்கவான்னு
குழம்பி அதனால ஆக்சிடண்ட் ஆகக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. :))
டிராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் கையில கேமிராவை கொடுத்து
வெச்சிருக்காங்க. பி.சி.ஸ்ரீராம்னு நினைச்சு ஓடியாடி, புகுந்து
போட்டோ பிடிக்கறாங்க. டிராபிக்கை மதிக்காம போகற வாகனங்களை
போட்டோ பிடிச்சு, அந்த வண்டி நம்பருக்கு “லவ் லெட்டர்” அனுப்புறாங்க.
பேப்பர்ல யார் யாருக்கெல்லாம் லவ் லெட்டர் போனிச்சுன்னு அறிவிப்பு
வேற வருது.

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஓடியாடி போட்டோ பிடிப்பது சரி, ஆனா சில
இடங்களில் சிக்னிலேயே கேமிராவை வெச்சிருக்காங்க. பளிச் பளிச்சின்னு
போட்டோ பிடிக்குது அந்த கேமிரா. அதுலயும் இரவு நேரத்துல இந்த
வெளிச்சத்துனால வண்டி ஓட்டுனருக்கு கஷ்டம் இருப்பதை புரிஞ்சிக்கிறமாதிரி
தெரியலை!!!

*******************************************************************

அனுபம் கெர். ஹிந்தியில் வில்லன்,குணசித்திர நடிகர். அவரு நடிப்பு
பயிற்சிக்காக ஒரு பள்ளி தொடங்கி நடத்திகிட்டு இருக்காரு. நடிப்போட
இன்னொரு பயிற்சியும் அங்கே கிடைக்குது. அது THE POWER WITHIN.
அந்த பயிற்சி பத்தி தெரிஞ்சிக்க இங்கே போய் பார்க்கலாம்.
Deccan chronicle நாளிதழில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர்
எழுதும் கட்டுரையை தவறாம படிக்கிறேன். ஒவ்வொண்ணும் அற்புதம்.

வாழ்த்துக்கள்.

****************************************************************

நீதா அம்பானி- முகேஷ் அம்பானி அவர்களின் மனைவி. எப்படி
ஸ்லிம்மா,ட்ரிம்மா இருக்காங்கன்னு அவங்களை பாக்கும் போதெல்லாம்
ஆச்சரியம்மா யோசிப்பேன். தன்னோட உடம்பை மெயிண்டென்
செய்வது ரொம்ப முக்கியம்னு நினைச்சு கட்டுகோப்பா வெச்சிருக்காங்கன்னு
சந்தோஷப்பட்டிருக்கேன். இந்த ஃபோட்டோவி பார்க்கும் வரை
அவங்கமேல ஒரு மதிப்பு இருந்துச்சு. மேல அவங்க போட்டோவை
பாத்தீங்கள்ல!! கீழே இருக்கும் போட்டோவை கொஞ்சம் பாருங்க.

இது முகேஷ்-நீதா தம்பதிகளின் மகன்கள். தன்னை மட்டும் கவனிச்சா
போதாது, தன் பசங்களையும் கொஞ்சம் கவனிக்கணும்னு அவங்களுக்கு
யார் புரிய வைப்பது????
*********************************************************************
ஆந்திரா அரசியல் ரொம்ப கேவலமா இருக்கு!! என்ன நடக்குதுன்னே புரியலை.
காங்கிரஸ் ஆட்சி Y.S.R செத்ததுக்கப்புறம் ரொம்ப கேவலமா இருக்கு.
(அதுக்கு முன்ன கேவலமா இருந்துச்சு) எதிர் கட்சியான தெலுகு தேசத்தில்
வாரிசு உருவாக்குவதுல பிசியா இருக்காரு சந்திரபாபு நாயுடு. தன்
மகன் லோகேஷை முன்னிறுத்தும் வேலையில் இருப்பதால் ஆந்திராவைப்
பத்தி அவரும் கவலைப்படலை. பிராஜ ராஜ்யம் ஆரம்பிச்சாரு சிரஞ்சீவி.
கேப்டன் கணக்கா ஏதும் செய்வாருன்னு பாத்தா அவரு காங்கிரஸோட
இணையப்போறாரு!!!

நாங்க மட்டும் சும்மா இருப்போமான்னு தெலங்கானா கட்சி காரங்க்
பந்த்,போராட்டம் தீவிரமா இருக்கும்னு அறிவிச்சிருக்காங்க.
ஒரு காலத்துல முன்னனி மாநிலமா இருந்த ஆந்திரா ஒரு 15 வருஷம்
பின் தங்கிடிச்சு!!!
*******************************************************************

ஐ.ஐ.டி,ஏ,இ.இ. பரிட்சை எழுதினவங்க/எழுதப்போறவங்களுக்கெல்லாம்
புது பிரச்சனை ஒண்ணு வந்திருக்கு. இதுவரைக்கும் நுழைவுத்தேர்வில்
கணக்கு,அறிவியல் மட்டும்தான் இருந்தது. ஆனா அதுல டாப் ரேங்க்
வாங்கினவங்களுக்கு கூட ஆங்கில அறிவு அம்புட்டா இல்லயாம். அதனால
கல்லூரில சேரும் முன் ஆங்கில அறிவு சோதிக்கும் பரிட்சை எழுதணுமாம்!
அதுல ஃபெயில் ஆகிட்டா, காலேஜுல சேத்துகிட்டு முதல் செமஸ்டருக்குள்
ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துகிட வேணுமாம். இந்தக் கொடுமைக்கு
ஆங்கில மார்க்கும் முக்கியம்னு அதுக்கும் சேர்த்தே டெஸ்ட் வெக்கலாமே,
இல்லாட்டி நுழைவுத் தேர்வையே எடுத்திட்டு +2 மதிப்பெண்ணை வெச்சே
அட்மிஷன் கொடுக்கலாம். உனக்கு அறிவியல் தெரியுது! ஆங்கிலம் தெரியலைன்னு
பசங்களை குழப்ப வேணாமே!!
****************************************************************************

நவாப்பழம் சிலருக்கு பிடிக்காது. அதோட துவர்ப்பு சுவை ஒருபக்கம்,
நாக்கு கலர் மாறுது, தொண்டை கட்டும் அப்படின்னு சிலர் சொல்வாங்க.
ஆனா நவாப்பழம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. சர்க்கரை வியாதிக்கு
சிறந்த மருந்தா ஆயுர்வேதம் சொல்வது நவாப்பழத்தைத்தான். சர்க்கரை
வியாதி இல்லாதவங்களும் சாப்பிடுவதால நோய் வரும் வாய்ப்பு குறைவுன்னு
மருத்துவ உலகம் சொல்லுது.

சீசன் பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் உடம்புக்கு முறையா கிடைக்கணும்.
அந்தந்த சீசனுக்கான பழத்தை கண்டிப்பா சாப்பிடுவதுன்னு கொள்கை
வெச்சுகிட்டாலே போதும்.

நவாப்பழத்தை கழுவி, உப்பு போட்டு பிசிறி வெச்சிருக்கேன். நான் போய்
எஞ்சாய் செய்யறேன்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

காரசாரமான ஆவக்காய் பிரியாணியில் கடைசியில் நாவல் பழத்தின் துவர்ப்பும்.... :)

இன்னும் தில்லில சீசன் ஆரம்பிக்கல... இங்கே பேப்பர் கவரில் நாவல் பழம் போட்டு, மேலே மசாலா [காலா நமக்] போட்டு ஒரு குலுக்குக் குலுக்கி தருவாங்க.... ம்.... டேஸ்டி...:)

pudugaithendral said...

வாங்க சகோ,

இங்க சீசன் ஆரம்பிச்சிருக்கு. கால்கிலோ ஜஸ்ட் 25 ரூவாத்தான்!!!!


வருகைக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

இங்கேயும் நாவல் பழம் சீசன் வந்திடுச்சு.அந்த பசங்களை பார்த்தா தைராய்டு பேசண்ட் மாதிரி தெரியுது.

goma said...

நாவல்பழம் எடுத்து உப்பு போட்டு ஊறவைத்து எடுக்க ஆரம்பித்தால் ....நிறுத்தவே முடியாது ....
ஔவையாரே அந்த பழத்துக்கு மயங்கினார் என்றால் நாமெல்லாம் ஜுஜூபி....ஊதாமலேயே சாப்பிடுவோமே

pudugaithendral said...

வாங்க அமுதா,

தைராய்டா இருந்தாலும் முறையான சாப்பாடு, உடற்பயிற்சின்னு கொஞ்சமாகவேணும் மெயிண்டையின் செய்ய முடியும். ஆனா அவர்கள் குஜராத்தியர்கள் என்பதால் அந்தவகை உணவு தந்திருக்கும் பருமன்னே தோணுது.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோமா,

நலமா. ஆமாம் ருசி அபாரமா இருக்கும்.

//..ஊதாமலேயே சாப்பிடுவோமே//
:))

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

பையன்கள்ல ஒருத்தரப் பாத்தா, அப்படியே முகேஷ் மாதிரி இருக்குது!! நீதாவுக்கு ஆண்டிலியாவுல இருக்க மாடிகளில் ஏறியிறங்கியே வெயிட் குறைஞ்சிடுச்சு போல. பசங்கள அங்கருக்க ஸ்விம்மிங் பூல்(களி)ல் நீந்தச் சொன்னாலே போதுமே!! குஜராத்தின்னா, வெஜிடேரியந்தானே? அதுலயே இம்புட்டு வெயிட்டா!!

இங்கயும் பல இடங்களிலும், கேமரா வச்சிருப்பாங்க. இரவு நேரத்த்ல ஃப்ளாஷ் அடிக்கும்போது, சிறு தடுமாற்றம் + நம்ம காருக்கா அடிச்சுதுங்கிற குழப்பமும் இருக்கும். இருந்தாலும் வெகத்தைக் கட்டுப்படுத்தத் தேவைதான்!!

முத சில நாட்கள் தடுமாறும். அப்புறம், கரெக்டா காமிரா இருக்க இடத்துல மட்டும் பிரேக்கை அழுத்திட்டு போற அளவுக்கு தேறிடுவாங்க.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

//குஜராத்தின்னா, வெஜிடேரியந்தானே? அதுலயே இம்புட்டு வெயிட்டா!!//

குஜராத்தி சாப்பாட்டுல நிறைய்ய நெய், ஸ்வீட்டுக்கள் இருக்கும். அதான் மேட்டர்

pudugaithendral said...

. இருந்தாலும் வெகத்தைக் கட்டுப்படுத்தத் தேவைதான்!!//

முத சில நாட்கள் தடுமாறும். அப்புறம், கரெக்டா காமிரா இருக்க இடத்துல மட்டும் பிரேக்கை அழுத்திட்டு போற அளவுக்கு தேறிடுவாங்க.//

:)))