Monday, June 13, 2011

பூண்டு ஊறுகாய் ஆந்திரா ஸ்டைல்

ரொம்ப நாளாக எப்பம்மா செய்யப்போறன்னு? ஆஷிஷ் கேட்டுகிட்டு இருந்தாப்ல.
தொணதொணப்பு ஜாஸ்தியாகி ஒரு வழியா செஞ்சு கொடுத்திட்டேன். :))
எங்க அப்பாவுக்கு பூண்டுன்னா ரொம்ப பிடிக்கும். ஆஷிஷும் அதே மாதிரிதான்.
பூண்டில் என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவான். அதிலும்
அவனுக்கு ரொம்ப பிடிச்சது பூண்டு குழம்பு/ பூண்டு ஊறுகாய்.

இந்த ஊறுகாய் போடுவது ரொம்ப சிம்பிள் (பூண்டு உரிப்பது ஒண்ணு தான்
கஷ்டம்). தேவையான பொருட்களை பாப்போம்.

உரித்த பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,
உப்பு - 1/2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - கொஞ்சமாக
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன்,

செய்முறை பாப்போம்:

வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.



பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.


8 comments:

எல் கே said...

சரி செஞ்சு பாக்கலாம்

காற்றில் எந்தன் கீதம் said...

ம்ம்ம் பார்க்க நல்ல இருக்கு செஞ்சு பார்க்க போறேன்... (இப்போஎனக்கு 7 மாதம் இது சாப்பிடலாமா?)

வெங்கட் நாகராஜ் said...

பூண்டு ஊறுகாய்.... ம்... பார்க்க நல்லாத்தான் இருக்கு...

ஆனா உரிக்கணும்னு நினைக்கும்போது... :)) கொஞ்சம் கஷ்டம்தான்...

pudugaithendral said...

வாங்க எல்கே

செஞ்சு பாத்து அசத்துங்க

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

கங்கிராட்ஸ். குழந்தை பிறந்த பிறகு கண்டிப்பா பூண்டு சாப்பிடலாம். நல்லா பால் ஊறும்னு சொல்வாங்க. கர்ப்பமா இருக்கும்பொழுதும் கொஞ்சமா எடுத்துக்கோங்க. இதனால ஏதும் அதிக பாதிப்பு இருக்காது. வாயுத் தொந்திரவு குறையும்.

pudugaithendral said...

வாங்க சகோ,

ஃப்ரபைல் போட்டோ சூப்பர். நீங்களா உரிக்கப் போறீங்க!!!! :)) சூப்பர் மார்க்கெட்டுகளில் உரித்தவையே கிடைக்குதே!!

வருகைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

super. paakkave tastyaa irukku. enga veela nodiyil kaanaamap poyidum.
thanks thenral.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

இங்கயும் அதே கதைதான். :))

செஞ்சு பாத்து சொல்லுங்க.

வருகைக்கு நன்றி