Tuesday, June 21, 2011

மாம்பழமாம்!! மாம்பழம்....

ஒண்ணாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு ஞாபகம் இருக்கா??
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம்!! :))

மே மாதம் தான் ஆந்திராவில் மாம்பழ சீசன் என்றாலும் இந்தத்தடவை
ஜூன் கடைசி வரைக்கும் மஞ்ச மஞ்சேருன்னு மாம்பழங்கள் கிடைக்குது.
மாம்பழம். அதோட ருசியே அலாதி. முக்கனியில் ஒரு கனி இந்த
மாம்பழம். அந்தக் கலரே அழகு. மஞ்சளில் இருக்கும் நிறைய்ய ஷேட்களில்
மாம்பழ மஞ்சள் கண்ணுக்கு அழகு.இந்த வாட்டி மாம்பழம் கிலோ 25 ரூவாய்தான். இங்க கிடைக்கும் நிறைய்ய
வகைகளுக்கு பெயரே தெரியவில்லை. தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்றேன்.
பங்கனபள்ளி, தோத்தாபுரி(கிளி மூக்கு) ரசால்லு,சுவர்ணரேகா, நீலம்.
மல்கோவா,அல்போன்சாவும் கிடைக்கும். கேசர்னு ஒரு வகை கூட
சூப்பர் மார்க்கெட்ல பார்த்தேன். ரசால்லுன்னு சொல்லும் வகை மாம்பழத்தை
கட் செஞ்சில்லாம் சாப்பிட முடியாது. ஜுர்ருன்னு ஜுர்ரிக்க வேண்டியதுதான்.:)
ஃபுல்லா மாம்பழ ரசமா இருக்கும். அதனாலத்தான் ரசால்லுன்னு பேரு.


மாம்பழத்தை பலரும் ருசிக்கணும்னு நினைக்கும் பொழுது கூடவே ஒரு
பயம். மாம்பழம் சாப்பிட்டா வெயிட் போட்டுடுவோம் என்பதுதான்.
ஆனா மாம்பழம் அதிகமா சாப்பிட்டத்தான் சரியா செரிமாணம் ஆகாம,
மாந்தம்னு சொல்லும் அஜீரணம் ஏற்படும். அளவோட சாப்பிட்டா மாம்பழம்
ஒரு அருமருந்து. அதுல உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கு.விட்டமின் ஏ,சி,பொட்டாஷிச்யம், காப்பர், அமினோ அமிலம்,
இப்படி நிறைய்ய இருக்கு. உடம்புக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழம் சாப்பிடுவதால கிடைக்குது.

நம்ம தேசிய பழம் இந்த மாம்பழம் தான். அது தெரியுமா?
பாகிஸ்தானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் கூட இதுதான் தேசிய பழம்.
பங்களாதேஷுக்கு தேசிய மரம் மாமரம் என்பது கூடுதல் தகவல்.

நம்ம இந்தியாவுலத்தான் அதிகமா மாம்பழம் தயாராகுது. ஆனா
நாமளே அதிகம் உபயோகம் செஞ்சிடறதால ஏற்றுமதியில் முதலிடம்
பாகிஸ்தானுக்கு போயிடிச்சு.

இப்ப வீட்டுல நுழைஞ்சதுமே சும்மா கும்முன்னு மாம்பழ வாசனை
தூக்குது. விசாகப்பட்டிணத்துலேர்ந்து வந்த உறவினர் கொண்டு வந்த
பழத்தோட, நேத்து அப்பார்ட்மெண்டில இருக்கறவங்க அவங்க
தோட்டத்துல விளைஞ்சதுன்னு மொத்த அப்பார்ட்மெண்டுக்கும்
கொடுத்திருக்காங்க. :)))

ஆம் ரஸ் பூரி இந்த சீசன்ல நிறைய்ய வாட்டி செஞ்சாச்சு. பூரிக்கு
மட்டும்தான் ஆம்ரஸ்னு இருந்த ஆஷிஷ், அம்ருதா மேத்தி சப்பாத்திக்கும்
ஆம்ரஸ் சாப்பிடறாங்க.

மாம்பழத்தை அளவா சாப்பிட்டு அதோட நற்பலன்கள் நம்ம உடலுக்கு
சேர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடல் சூடாகிடாம இருக்க பால்
ஒரு டம்ப்ளர் கண்டிப்பா எடுத்துக்கணும்.13 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... பங்கனபள்ளி மாம்பழம்... பழைய சுவையான நினைவுகளைக் கிளப்பி விட்டது உங்கள் பகிர்வு.

தோத்தாபுரி அல்ல அது தோத்தாபரி... இங்கே உத்திரபிரதேச மாநிலத்தில் நிறைய கிடைக்கும் வகை... சோசாவுடன் சேர்த்து...

ரசால்லு - ஜலால் இரண்டும் ஒன்றா... என்னுடைய சிறு வயது பெஜவாடா பயணங்களின் போது ஜலால் என்று தான் கேள்விப் பட்டதாய் நினைவு....

சுவையான பகிர்வுக்கு நன்றி சகோ..

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

மாம்பழ வாழம் இழுத்திடிச்சா! பதிவு போட்ட உடனே உங்க கமெண்ட்.
தோத்தாபுரின்னு இங்க சொல்வதையே எழுதிட்டேன். :)) ரசால்லு தான் கேள்விப்பட்டிருக்கேன். ஜலால் பத்தி தெரியாது. தெரிஞ்சு சொல்றேன்.

வருகைக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

மாம்பழம் பற்றி சொன்னீங்க

அத விட முத்தல் போட்ட பாட்டு ஞாபகம் சிறு வயதிற்கு கொண்டு சென்று விட்டது ...

புதுகைத் தென்றல் said...

:)) வருகைக்கு நன்றி ஜமால்

Geetha6 said...

நன்றி

தினேஷ்குமார் said...

மாம்பழம் நானும் ரசித்து ருசித்தேன் ஒன்னாம் வகுப்பு பாடலை ....

ஹுஸைனம்மா said...

அதென்ன ஆம் ரஸ் பூரி/சப்பாத்தி?

அமுதா கிருஷ்ணா said...

போன மாதம் இங்கேயும் நல்ல மாம்பழங்கள் இல்லை.இப்ப தான் அருமையான பழங்கள்.விலையும் பரவாயில்லை.

ஸாதிகா said...

சுவை மிகு மாம்பழத்தைப்பற்றிய சுவை மிகு பகிர்வு

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல்கள் தென்றல். இங்கேயும் தினம் தினம் மாம்பழம்:)!

புதுகைத் தென்றல் said...

நன்றி கீதா

மிக்க நன்றி தினேஷ் குமார்

ஹுசைனம்மா மாம்பழத்தை தோல் நீக்கி கொஞ்சமா சர்க்கரை, பால் சேர்த்து மிக்சியில் அடிச்சா ஆம்ரஸ் (ஆம் மாம்பழம்-ரஸ்-ரசம்) இது வட இந்தியாவில் ரொம்ப பேமஸ். ஆம் ரஸ்ஸோட ஜோடி பூரி. சப்பாத்தியும் நல்லா இருக்கும். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஓ அப்படியா அமுதா, வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி ஸாதிகா,

நல்லா எஞ்சாய் செய்யுங்க ராமலக்‌ஷ்மி, வருகைக்கு நன்றி

அன்புடன் அருணா said...

அட! இன்னிக்கு எங்க வீட்டுலே ஆம்ரஸ் பூரி!!!