Wednesday, June 15, 2011

நாம ஒண்ணு நினைச்சா............

எப்பவும் பாசிட்டிவ்வாவே நினைக்கனும் என்பது என்னோட பாலிசி.
முடிஞ்சவரைக்கும் அப்படியே நினைச்சு நடந்துக்குவேன். ஆனா
சில சமயம் நாம நியாயமா ஆசைப்படுவது கூட நடக்காம போயிடுது.
அப்பத்தான் இந்த நெகட்டிவிட்டு மண்டையில வந்து குடையுது.

அயித்தான் உசுப்பி விட்டு கார் டிரைவிங் கத்துக்க கட்டாயப் படுத்தினாரு.
ரொம்ப யோசிச்சு.... ஒரு வழியா டிரைவிங் கிளாஸ்ல சேர்க்க சம்மதம்
சொன்னேன். மாருதி டிரைவிங் ஸ்கூல்ல சேத்தாரு. அவங்களுடைய
சொல்லித்தரும் டெக்னிக் ரொம்ப பிடிச்சது. தியரி,சிமுலேஷன்,அப்புறம்
ப்ராக்டிக்கல்னு நல்லா ப்ளாண்டா இருக்கும்.

தியரி கிளாஸ் ரொம்ப பிடிச்சிருந்தது. என தப்பு செஞ்சிடக்கூடாதுன்னு
அழகா வீடியோல காட்டி இருக்கும் பாடம். டக்கு டக்குன்னு நான்
பதில் சொல்வதைப் பார்த்து அந்த இன்ஸ்ட்ரக்டர் (கொஞ்சம் வயசானவர்)
உனக்கு நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கும்மான்னு!! பாராட்டினார்.

சிமுலேஷன்ல வீடியோ கேம் மாதிரி ப்ராக்டிஸ் செஞ்சு பார்த்திட்டு
அப்புறம் ப்ராக்டிகல். எப்படா அந்த நந்நாள்னு காத்திருந்தேன்.
முதல் நாள் நான் ரோட்டில் கார் ஓட்டப்போறேன்னு ரொம்பவே
ஆர்வமா இருந்தேன். காலை 8.30-9.30 டைமிங் எடுத்திருந்தேன்.
டிரைவிங் ஸ்கூல்லேர்ந்து கொஞ்ச தூரத்துல இருக்குற நெக்லஸ் ரோடுக்கு
வண்டியை எடுத்துகிட்டு போய், அங்க ஓட்டப் பழகணும்னு சொன்னாரு
இன்ஸ்ட்ரக்டரு. சரின்னு கிளம்பினோம்.

வண்டியை ஓட்ட ஆரம்பிச்சது இன்ஸ்ட்ரக்டருதான் (இது வேற ஆளு). வண்டியை
ரோட்ல எடுக்க ஆரம்பிச்ச உடனே அவருக்கு போன் வந்தது.
கேர்ள் ப்ரெண்டோ/லவ்வரோ தெரியலை. ஆனா சூடான வாக்குவாதம்.
15 நிமிஷ பயணத்துல நாங்க நெக்லஸ் ரோடு போரவரைக்கும்
தொடர்ந்துதது.....

வேகன் ஆர் கார். இப்ப நீங்க ஓட்டுங்கன்னு சொல்லி, என்ன
செய்யணும்னு சொன்னாரு. மெல்ல இஞ்சினை ஸ்டார்ட் செய்து
வண்டியை மூவ் செய்ய வெச்சு லேசா கார் ரோட்ல மூவ் ஆன
அந்த தருணம் ஏதோ ஒரு சாதிச்ச திருப்தி எனக்கு.

நான் கார் ஓட்டுறேன்! அதுவும் நெக்லஸ் ரோட்ல!! என்னால்
அந்த சந்தோஷத்தை எப்படி சொல்லத் தெரியலை. ஸ்மூத்தா
ஓட்டினேன். சிமுலேஷன்ல வண்டியைத் திருப்ப கஷ்டப்பட்ட
நான் ச்சும்மா அநியாசமா வண்டியை ட்ர்ன் செஞ்சேன்.
பக்கத்துல உக்காந்திருந்த அந்த இன்ஸ்ட்ரக்டர் இப்படி பண்ணுங்க,
அப்படி பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு. அதுவும்
அந்த ரோட்ல சின்னதா ஒரு ப்ரிட்ஜ் வரும் பாருங்க... அதுல
ஏத்தி இறக்கினது... சூப்பர் கலான்னு எனக்கு நானே பாராட்டு
பத்திரம் வாசிச்சுக்கிட்டேன்.

அங்கேயிருந்து வண்டி மினிஸ்டர் ரோட் வழியா வந்து பேகம் பெட்
ஃப்ளை ஓவர் கீழே வந்து, பழைய ஏர்போர்டுக்கு முன்னாடி திருப்பி
மெயின் ரோட்ல இருக்கும் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போகணும்னு
சொன்னாரு. முதல் தடவை ஓட்டும்போது அந்த மாதிரி பிசி ரோட்ல
சாத்தியமில்லை. அதுவும் மினிஸ்டர் ரோட், பேகம் பெட் ஏரியால்லாம்
காலை நேரத்துல செம ட்ராபிக் இருக்கும். என்னால இன்னைக்கு
முடியாதுங்க! வேற ரூட்ல ஓட்டுறேன்னு சொன்னேன். அந்த ஆளு
கேக்கலை. இப்படி பயப்பட்டா கஷ்டம். வண்டியை ஓட்டினாத்தான்
நல்லதுன்னு சொல்ல. சாரிங்க. பழகினதுக்கப்புறம் தானா ஓட்டலாம்
முதல் நாளே இப்படி பிசி ரோட்ல ஓட்டுவேன்னு எதிர்பார்க்கறீங்களேன்னு!
சொன்னேன்.

அம்புட்டுதான். அந்த ஆளு லேடீஸ் வண்டி ஓட்டவே வரக்கூடாதுங்கற
மாதிரி லெக்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாரு. பொறுமையா இருந்தேன்.
உங்களைச் சொல்லி குத்தமில்லீங்க! இத்தனை வருஷம் வீடு குடும்பம்னு
இருந்துட்டீங்க, இப்பத் திடும்னு இந்த மாதிரி வெளியுலகத்துக்கு
வர்றதுன்னா கஷ்டம்... அது இதுன்னு தன்னோட கேர்ள்ப்ரண்டு
மேல இருந்த கோவத்தை எல்லாம் காட்டி கத்த, எனக்கு செம கோவம்.
எல்லோருமே வீட்டுக்குள்ளயே இருக்கறதில்லை, அவங்க எப்படி ஏதுன்னு
தெரிஞ்சிக்காம ஏதோ கோவத்துல பொத்தாம்படையா பேசுறது சரியில்லை.
அதை அப்பச் சொல்லவும் முடியாது.

மினிஸ்டர் ரோட் சிக்னலுக்கு கொஞ்சம் முன்னாடி வண்டியை ஓரங்கட்டி
நிப்பாட்டிட்டு, டக்குன்னு இறங்கினேன். என்னாச்சு மேடம்னு கேக்க?
உங்க பேரு என்னன்னு கேட்டேன்? சொன்னாரு. இதுக்குமேல நான்
வண்டி ஓட்ட மாட்டேன். அப்படின்னு சொல்லிட்டு வந்த ஆட்டோவை
பிடிச்சு வீட்டுக்கு வந்திட்டேன். அயித்தான் அப்ப ஊர்ல இல்ல.
அவரு வந்ததும் நடந்ததைச் சொன்னேன். ஆனா பெண்களுக்கு மரியாதை
தராத ஜன்மங்கள் இருக்கும் இடத்துக்கு போகக்கூடாதுன்னு முடிவு
செஞ்சிருந்தேன். ஒரு அவமானப்படுத்தப்பட்டது போல உணர்வு.

அயித்தான் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போய் பேசறேன்னு சொன்னாரு.
நீங்க பேசுங்க நானும் பேசணும்னு சொன்னேன். அங்க போய் ரிஷப்ஷன்ல
இருந்தவங்க கிட்ட மேட்டரைச் சொல்ல,”ஐயோ! இப்படி நடந்திருக்குன்னு
தெரியாது?வேற இன்ஸ்ட்ரக்டரை வெச்சு வேணாம் சொல்லித்தர
சொல்றேன்னு சொன்னாங்க.” நான் அந்த ஆளுகிட்ட பேசணும்னு சொல்லி
போன் செஞ்சு,”ஐயா சாமி, சொல்லிக்கொடுப்பதுன்னா உன் மண்டையில
இருப்பதை அடுத்தவங்க மண்டைல ஏத்தறது இல்லை. அடுத்தவங்களுக்குள்
இருக்கும் திறமையை வெளிக்கொணர்வது தான். நான் ஒரு டீச்சர்.
நான் என்னவோ ஒண்ணுமே தெரியாம படிக்காத முட்டாள் ரேஞ்சுக்கு
பேசின. அன்னைக்கு நானும் சொல்ற நிலையில இல்லை. நீயும் கேக்கற
நிலையில இல்ல. அதான் இப்ப சொல்றேன். யூ ஆர் நாட் ஃபிட் டுபி அ
இன்ஸ்ட்ரக்டர்னு” சொன்னேன். பதிலே இல்லை. மாருதி ஸ்கூல்லேர்ந்து
அப்புறம் 3 தடவை போன் வந்திச்சு. பட் எனக்கு அந்த இடத்து மேல
இருந்த மதிப்பு போயிடிச்சு.

நிஜமா எனக்கிருந்த கோவத்துக்கு அந்த அமைப்பின் மீதும், அந்த ஆளின்
மீதும் கம்ளெய்ண்ட் கொடுக்கலாமான்னு இருந்தேன். தொலையுதுன்னு
விட்டுட்டேன்.

கோதாவரின்னு ஒரு தெலுங்குப்படம். அதுல கதாநாயகி ஒரு பொட்டீக்
வெச்சு நடத்துறவங்க. தன்னோட டிசைனைக்காட்டப்போன இடத்துல
ஒரு ஆளு கையப்பிடிச்சு இழுக்க, வீட்டுல அப்பா கத்தி கடையை
பூட்டிடறதாச் சொல்வாரு. அப்ப கதாநாயகி சொல்வாங்க,”ஒரு ஆம்பிளையால
என் கடையை மூட வேண்டிய நிலமை வந்திருக்குன்னு!” இந்த மாதிரி
தருணங்களாலத்தான் ஆண்கள் அப்படீன்னாலே வெறுக்கும் ஒரு மனப்பான்மை
வருது. பெண் என்றால் இளக்காரம்னு நினைக்கிற ஜன்மங்கள் இன்னமும்
இருக்காங்க என்பதுதான் நிஜம். இத்தனைக்கும் அந்த இன்ஸ்ட்ரக்டருக்கு
மிஞ்சிப்போன 26 வயசு தான் இருக்கும்.

காலை நேரங்களில் அங்கே நிறைய்ய லேடீஸ்தான் கோச்சிங்கிற்கு வருவாங்க.
என் நேரம் எனக்கு இப்படி ஒரு ஆளு சொல்லிக்கொடுக்க வாச்சிருந்தது.
குரங்கு புத்தி. பெண்கள் மேல அப்படி ஒரு இளக்காரம். ஏதோ இந்த ஒரு
ஆளு மட்டும்தான் அப்படின்னு இல்ல. இப்படி பலரும் இருக்காங்க. அவங்க
வீட்டுலயும் அம்மான்னு ஒருத்தி இருக்கான்னு நினைப்பே இருக்காது போல்.
தன் தாய், சகோதரி கிட்ட பக்குவமா நடந்துக்கும் ஆணுக்கு இப்படி
பெண்களை மட்டமா நினைக்கும் புத்தி வராது.

இப்பவும் மினிஸ்டர் ரோட்ல போகும் பொழுது நான் ஆனந்தமா
வண்டி ஓட்டின தருணத்தை நினைச்சு பாத்துப்பேன். அவ்வளவு
ரசிச்சு ஓட்டினேன் அன்னைக்கு.

இந்த உலகம் ஆண்கள் உலகம் தான். அப்படின்னு சொல்ல இதுவும்
ஒரு காரணம்.


24 comments:

வெங்கட் நாகராஜ் said...

:( அடடா ரொம்பக் காயப்பட்டுட்டீங்க போல! லூசுல விடுங்க சகோ... இப்படியும் சிலர்... இப்பல்லாம் பெண்களே கார் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தறாங்களே சில இடங்களில். ஹைதையில் இது போன்ற ஸ்கூல் இருக்கா பாருங்க...

சீக்கிரம் கத்துக்கோங்க... அப்பத்தானே நாங்க வரும்போது கொஞ்சம் வசதியா இருக்கும்.. :)

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

எல் கே said...

:((

GEETHA ACHAL said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அனுபவம்...

நானும் இது மாதிரி கார் ஓட்ட கற்று கொள்ளும் பொழுது திட்டு வாங்கியது உண்டு...

நட்புடன் ஜமால் said...

யக்கோவ் கத்துகிட்டீங்களா இல்லையா இன்னும்

don't give up ...

ஹுஸைனம்மா said...

இப்படியும் சிலபேர்.. இன்னும் மாறாமல்..

சரி, இதையெல்லாமா சீரியஸா எடுத்துகிட்டு, பயிற்சியைத் தொடராம இருப்பீங்க? அப்படிக்கப்படி துடச்சிப்போட்டுட்டு, போய்ட்டே இருக்கணும். வேற இன்ஸ்ட்ரக்டர் பாருங்க; இல்லே வேற ஸ்கூல்.

:-))))))

புதுகைத் தென்றல் said...

vanga sago

//சீக்கிரம் கத்துக்கோங்க... அப்பத்தானே நாங்க வரும்போது கொஞ்சம் வசதியா இருக்கும்..

ennayum intha ulagam nambuthunnu nenaikumbothu santhoshama iruku
:)) varugaiku nandri

புதுகைத் தென்றல் said...

varugiaku nandri l k

புதுகைத் தென்றல் said...

vaanga geetha,

thappu senja thittina paravaillai enbathu en ennam

varugaiku nandri

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜமால்,

அதுக்கப்புறம் பிபி லோலோலோன்னு படுத்துதேன். அதனால் சுகமானது நல்ல இடத்தில சேரலாம்னு இருக்கேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

இப்படிப்பட்ட ஜன்மங்களை வாழ்வில் சந்திச்சுக்கிட்டேத்தான் இருப்போம். அதுக்காக நிப்பட்டலை. ஜமாலுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க.

கண்டிப்பா கார் ஓட்டுவேன்.

வருகைக்கு நன்றி

புதுகை.அப்துல்லா said...

சீக்கிரம் கத்து முடிங்க. ராஜவீதில ஒரு ரவுண்டு போய்ட்டு வருவோம் :)

கோவை2தில்லி said...

ஆண்கள்ல சில பேர் இப்படித் தான் இருக்காங்க. உடம்பு சரியானதும் திரும்ப கத்துக்கோங்க.

அன்புடன் அருணா said...

அய்யய்யோ...அதை விடுங்க...
"நாம ஒண்ணு நினைச்சா.........."
நீங்க நினைக்கிறது நடக்குமுங்க!!!!

Vetrimagal said...

கட்டாயம் கற்றுக்கொள்ளுங்கள். அதே மாருதி ஸ்கூல் வாசலில் போகும் போதெல்லாம் ஆரன் அடித்து கை அசையிங்கள். அப்படியே முடிந்தால் ஒரு கடிதம் எழுதி உங்கள் கண்டனத்தை தெரிவிப்பது, பின்னால் வரும் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

;-))

அப்பாவி தங்கமணி said...

எல்லா ஊர்லயும் இப்படி தாங்க... இங்கயும் லேடி டிரைவர்ஸ்'னா கொஞ்சம் இளக்காரம் தான்... வேணும்னே ஓவர்டேக் பண்ணி டென்ஷன் பண்ணுவாங்க... எதுனா accident னு நியூஸ் பாத்தா உடனே "லேடி டிரைவர் தானே"னு கிண்டல் வரும்... உண்மையா சொல்லணும்னா accidents லேடீஸ் ஓட்டற வண்டில ரெம்ப கம்மி... லேடி driven கார்னா செகண்ட் ஹான்ட் கார் கூட நம்பி வாங்கறது தான் உண்மைல நடக்குது...

ரங்கன் said...

ஆமா..உடனே ஆறுதல் சொல்ல கிளம்பிட்டாரு துரை-ன்னு என் மனசாட்சி என்னை கிண்டல் பண்ணுது..ஹாஹாஹா!!

சீக்கிரம் கத்துக்கோங்க.. ஆனா வேற ஸ்கூலில்.. நீங்க தேரோடும் வீதிகளில் காரோட்டு போறதை உங்க அத்தான் பார்த்து மகிழும்படி செய்யுங்கள்..!!

வாழ்த்துக்கள்..!!

மங்களூர் சிவா said...

வேற ஸ்கூல்ல சேர்ந்து டிரைவிங் கத்துடுங்க சீக்கிரம்!!

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

ராஜவீதியில கார் ஓட்ட நான் ரெடி. வண்டிக்கு ஏற்பாடு செய்ங்க. :))

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை2தில்லி

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வெற்றிமகள்,

அந்தமாதிரி செய்ய நினைச்சிருந்தேன். என்னவோ விட்டுட்டேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்பாவி தங்கமணி,

நீங்க சொல்வது உண்மை. லேடி ட்ரவைன் வெகிள்னு அதுக்கு மதிப்புகுறையாம எடுப்பாங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி ரங்கன்