Thursday, June 23, 2011

ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி....

இந்தக்கோவிலின் கதை கொஞ்சம் பார்ப்போமா?
கீலா எனும் யட்சன் அன்னையின் அருள் வேண்டி தவம் செய்ய
அவன் தவத்துக்கு மனமிறங்கிய அன்னை அருள் செய்ய வந்த
பொழுது,’ என் மனதை விட்டு நீங்காமல் என்னுடன் இரு தாயே!
என்று கேட்கிறான். நீ இங்கே கிருஷ்ணா நதி தீரத்தில் மலையாக
இரு. அசுர சம்ஹாரம் முடித்து இங்கே வந்து நான் கோவில்
கொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள்.

மஹிஷாஷுரனை வதம் செய்த பிறகு மஹிஷாஷுர மர்தினியாக
கீல மலையில் அன்னை கோவில் கொள்கிறாள். கோடி சூரிய பிரகாசமாய்
ஜொலிக்கும் அன்னையின் அழகைக் கண்டு கனக துர்க்கை என
நாமம் சூட்டப்படுகிறாள். கனக- பொன்.
கீல மலை இந்திரகீலாதரி ஆனது எப்படி? இந்திராதிதேவர்கள் வந்து செல்லும்
இடமாக இந்த மலை இருக்க இந்த மலை இந்திரகீலாதரி ஆனது.

அம்மை கோவில் கொண்டு விட்டாள், அப்பனும் அங்கேயிருந்தால் நல்லது
என நினைத்த இந்திரன் அஸ்வமேத யாகம் செய்து சிவனை பூஜிக்க
மனம் குளிர்ந்த சிவன் ஜோதிர்லிங்கமாக இந்த மலையில் தங்கிவிடுகிறார்.
முதல் தடவை இந்திரன் மல்லிகைப்பூ கொண்டு சிவனை பூஜிக்க
மல்லிகேஸ்வரர் என நாமம் சிவனுக்கு. இந்த சிவனை நினைத்து
இங்கே தவம் செய்து தான் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றது.

அம்மையும் அப்பனும் இங்கே சுயம்புவாக இருப்பதைப் போல இன்னொரு
விசேஷும் இந்தக் கோவிலுக்கு உண்டே. பொதுவாக இறைவனின்
இடப்புறத்தில் தான் இறைவி. ஆனால் மல்லிகேஸ்வரருக்கு வலப்பக்கம்
அன்னையின் கோவில் இருக்கிறது. இந்திரக்கீலாதரியில் சக்தியின்
ஆட்சி என்பதை இது சொல்கிறது.அன்னைக்கு எந்த பூஜை செய்தால் சந்தோஷப்படுவாள். அதிலும்
அவளின் இருப்பிடமாக கருத்தப்படும் ஸ்ரீ சக்ரம் பூஜை மிக விசேஷம்.
இந்திரகேலாதரி மலையில் கனக துர்கையாக வீற்றிருக்கும் அன்னைக்கு
அனுதினமும் சமர்க்கிப்படும் பூஜைகளை ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியாகவே
ஏற்கிறாள். ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜை அன்னைக்கு செய்ததற்கு
சமானம் என்பார்கள்.
கனகதுர்கா கோவிலில் அனுதினமும் ஸ்ரீ சக்ர நவாவர்ணர்ச்சன பூஜை
நடைபெறுகிறது. ஸ்ரீ சக்கரத்திற்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை
நடக்கும். சங்கல்பத்தின் பொழுது பணம் கட்டியவர்கள் பெயர்கள்
சேர்த்துக்கொள்வார்கள். உட்பிரகாத்திற்கு வெளியே இந்த பூஜை
நடைபெறும். இதற்குத்தான் பணம் கட்டியிருந்தேன்.

இதைத் தவிர கோவிலில் சண்டிஹோமம், லட்ச குங்குமார்ச்சனை
(லலிதா சஹஸர்நாமம் சொல்லி), சாந்திக் கல்யாணம் ஆகிய
சேவைகளும் நடக்கின்றன. ருத்ராபிஷேகம் ,கட்கமாலா அர்ச்சனை கூட உண்டு.


சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் அன்று ஏதோ ஒரு
அரசாங்க விடுமுறை தினமுமாக இருக்க சரி கூட்டம்.
9 மணிக்குத் துவங்கிய அபிஷேகம் 11.30 மணிக்கு முடிந்தது.
உடன் தரிசினத்திற்குச் சென்றோம். தள்ளு முள்ளூத்தான்!!
அதனால்தான் முதல்நாளே நல்ல தரிசனம் தந்தாளோ என்னவோ!
மனதார வேண்டிக்கொண்டு பிரஹாரத்திற்கு வந்தால் பிரசாதம்
கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 1 கிலோவுக்கு மேல சுடச்சுட
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, 1 லட்டு.

ப்ளாஸ்டிக் பையில் கொடுத்தார்கள். அதுதான் கொஞ்சம் வருத்தம்.
கொஞ்சம் கூட பணம் வசூலித்தால் கூட பரவாயில்லை எவர்சில்வர்
தூக்கில் கொடுத்திருக்கலாம். நெய் டொக் டொக்குன்னு சொட்டியது!!!


தொடரும்....

5 comments:

நானானி said...

how do you know that i was listening to 'sri chakra raja...' in your post. just gone to my gmail saw your comment on brinjal!
what a co-incidense!
may be same blood?
nice to see you after a long time.

புதுகைத் தென்றல் said...

வாங்க நானானி,

உங்களைத் தொடர்ந்துகிட்டுத்தானே இருக்கேன் :)) அதான் உங்க பதிவு உடன் படிச்சேன்.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

இனிய பாடல்..... சக்கரைப் பொங்கலும், லட்டும் நாங்களும் எடுத்துக் கொண்டோம்... மானசீகமாய்.... நன்றி சகோ.

கோவை2தில்லி said...

அருமையான கனக துர்க்கையின் தரிசனம் பெற்றோம் தங்களால். நெய் சொட்ட சொட்ட சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டும் எடுத்துக் கொண்டோம். நன்றி.

பொன்ஸ்~~Poorna said...

ஏங்க, ஜோதிலிங்க மல்லிகார்ச்சுனர் ஸ்ரீசைலம் இல்லீங்களா?

இது விஜயவாடா கனக துர்கை கதைன்னு நினைச்சேனே?!

ஹைதராபாத்தில் ஜூபிலி ஹில்ஸ் பக்கம் இருப்பதும் கனக துர்கை கோயில் தானே?