Wednesday, June 22, 2011

திவான் படுத்தும் பாடு!!!!

இப்படி கூட நடக்குமான்னுல்லாம் நாம யோசிக்க முடியாத அளவுக்கு
நிகழ்வுகள் இருக்குது! மேட்டர் என்னன்னு சொல்றேன் கேளுங்க.

எங்க அம்மாவுக்கு பாக்ஸ் டைப் திவான் வாங்கிப்போடணும்னு ஆசை.
ஆனா எங்க புதுகையில் அதெல்லாம் கிடைக்காது. அப்பா,அம்மாவுக்கு
அன்புப் பரிசா இருக்கட்டும்னு ஹைதையிலிருந்து வாங்கி அனுப்ப
முடிவு செஞ்சோம். அயித்தானும்,நானும் கடைக்குப் போய் நல்லதா
பாத்தோம். அவங்களையே புதுகைக்கு அனுப்பச் சொல்லிக்கேட்டோம்.
சாரிங்க! அந்த ஊருக்கெல்லாம் எங்களுக்கு சர்வீஸ் இல்லை. சென்னை
வரை மட்டும்தான்னு சொன்னாங்க. இப்ப என்ன செய்யலாம்னு
முடிவு செஞ்சப்பதான் “Chennai packers” இங்கே இருப்பது
ஞாபகம் வந்து அவங்களுக்கு போன் செஞ்சு கேட்டோம்.

டிரான்ஸ்போர்ட் சார்ஜ் திவான் விலையில் முக்கால் பாகம்! இருந்தாலும்
பரவாயில்லை அப்படின்னு சொன்னோம். 4 நாள்ல அனுப்பிடுவோம்னு
சொன்னாங்க! சரின்னு ஏற்பாடு செஞ்சு பணத்தை முன்னமே கட்டச் சொல்ல
அதையும் கொடுத்து பக்காவா பேக் செஞ்சிருந்த திவானையும் எடுத்துகிட்டு
போயிட்டாங்க.



ஒரு வாரமாகியும் திவான் போகலை. அப்ப ஆரம்பிச்சிச்சு அவங்களுக்கு
போன் செய்யும் வேலை. இதோ போயிருங்க! நீங்க கவலைப்படாதீங்க,
நாங்க டோர் டெலிவரி செஞ்சிடறோம் இப்படியே ஹைதை ஆபிஸில்
பதில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. 20 நாள் ஆச்சு. ம்ஹூம்.
1 மாசமும் ஆச்சு. நிறைய்ய வாட்டி போன் செஞ்சிருந்ததால நம்ம
நம்பரை பாத்தாலே அவங்க எடுப்பதில்லை. சரின்னு ஆபிஸுக்கு
ஆள் அனுப்பி கேட்டா இங்கேயிருந்து அனுப்பிட்டோம். பெங்களூரில்
இருக்கு. அங்கேயிருந்து திருச்சி போய் அப்படியே புதுகைக்கு அனுப்பிடறோம்னு
சொன்னாங்க. அவங்க பேசும் விதமே சரியில்லை. தெனாவெட்டா
பேசுறாங்க. பாவமே பணத்தைக்கொட்டி அனுப்பிருக்காங்களே! அப்படின்னு
ஒரு ஃபீலிங்க்ஸே இல்லை!! பேசும் விதத்தைப்பாத்து சாமானை ஏதும்
உடைச்சு அனுப்பிடுவாங்களோன்னு பயந்தே கொஞ்சம் பொறுமையா
இருந்தோம்.


நடுவில் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு விசாரிச்சா
இந்தோ அந்தோன்னாங்களேத் தவிர அங்கயும் ஒரு ஸ்டெப் எடுக்கலை.
என்னோட இமெயில் எந்த கிடப்புல இருக்குன்னு தெரியலை. ஒரு
ரிப்ளை கூட கிடையாது. அயித்தான் டென்ஷனாகி என்னதான் ஆச்சு
திவானுக்கு? போலீஸ் ஸ்டேஷன் போகவான்னு கேக்க உண்மை
வருது.

திவானை தவறுதலா வேறு வீட்டுல இறக்கியிருக்காங்க. அவங்க
வாங்கி வெச்சிட்டு வெளியூருக்கு போயிட்டாங்களாம். அவங்க வந்து
கதவைத் திறந்து எடுத்துக்கொடுத்தாத்தான் உண்டாம்! இது எந்த
அளவுக்கு நிஜமோ புரியலை. வெறுத்துப்போய் நீங்க திவானை
கொடுக்க வேண்டாம். உங்களுக்கு போன் செஞ்சு வாழ்க்கையே
வெறுத்துப்போகுது,” திவான் + டிரான்ஸ்போர்ட் செலவு + அநாவசிய
போன் கால் செலவு எல்லாம் சேர்த்து 10,000 கொடுத்திடுங்கன்னு”
சொன்னோம்.

நாளைக்கு திவானா! பணமான்னு சொல்றோம்னு சென்னை ஆபிஸில்
சொன்னாங்க. அடுத்த நாள் போன் செஞ்சு 2000 தர்றோம். திவான்
அந்த வீட்டுக்காரங்க வந்தாதான் தர முடியும்னு சொல்ல வெறுத்துப்போயி
நுகர்வோர் கோர்ட்டுக்கு அப்ளை செஞ்சிருக்கோம்.

மதர்ஸ்டேக்கு போயிடும்னு நினைச்சோம். ஃபாதர்ஸ்டே கூட போயிடிச்சு!!
திவான் எப்ப வருமோன்னு பாவம் அவங்க எங்கயும் ஊருக்கு கூட
போக முடியாம 1 மாசம் கஷ்டபட்டாங்க.

இப்படி கூட கஸ்டமர்களோட கஷ்டம் புரியாத ஒரு கூட்டம்.
கடவுளே!!!!!!!!!!!!

29 comments:

வெங்கட் நாகராஜ் said...

இந்த பேக்கர்ஸ் & மூவர்ஸ் பண்ற அட்டூழியம் தாங்க முடியாதது... தில்லியிலிருந்து சென்னை செல்லும் பெரும்பாலான இந்த வாகனங்கள் பெங்களூரு வழியாகத்தான் செல்லும். இங்கே ஏற்றும்போது ஒரே வண்டி உங்கள் வீடு வரை சொல்லும் என்று சொல்லும் நிறுவனத்தினர், பெங்களூரு சென்றவுடன் வேறு வாகனத்தில் ஏற்றிவிடுவார்கள்... அது நல்ல நிலையில் போய்ச் சேர நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...

நல்ல படியா திவான் போய்ச் சேர ஆண்டவனை வேண்டுவோம்... :(

pudugaithendral said...

வாங்க சகோ,

ரொம்பவே அட்டூழியமா இருக்கு. ஒரு சின்ன திவானுக்காக தனி வண்டி போகாது என்பதாலத்தான் 15 நாளாகியும் பேசாம இருந்தேன். நல்ல நிலமையில் திவான் இருக்கா என்பது எனக்குள்ள இருக்கும் கேள்விக்குறி!! :((

வருகைக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா,பதிவு போடுவேன் என்று பயமுறுத்தினீர்களா?
இந்த வாரமே போய்விடும் என்று நம்புவோம்.

சாந்தி மாரியப்பன் said...

ஆசையா எவ்ளோ பார்த்துப்பார்த்து செலக்ட் செஞ்சுருப்போம்.. அப்படிப்பட்ட ஒரு பொருளை மத்தவங்க மோசமா கையாண்டா,.. என்னன்னு சொல்றது.

Ungalranga said...

மா..கவலை வேண்டாம்..உங்கள் திவான் உங்கள் அம்மாவுக்கு நிச்சயம் சேரும்.

ஷர்புதீன் said...

இந்த மாதிரியான நிகழ்வு வியாபாரிகளுக்கு அடிக்கடி நடக்கும், அவர்களுக்கு இது பழகி போன ஒன்று, பினவுத்தொகை வாங்கி விட்டு அடுத்த வேலையை பார்பார்கள்.,

ஆனால் நாம் எப்போதாவது ஒரு முறை அனுப்புவோம் அதுவும் நிறைய இது போன்ற சென்டிமென்ட் கலந்த விசயமாக இருக்கும், அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான், அதனால் இப்படி நடக்கிறது..

நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுகிறேன்

துளசி கோபால் said...

அடக் கடவுளே! பொய்யும் புனைசுருட்டும் இங்கே அதிகமா இருக்கேப்பா:(

அடுத்தவருசம் மதர்ஸ் டே கிஃப்ட் இது.

pudugaithendral said...

வாங்க அமுதா,

நீங்க போலீசுக்கு வேணா போங்கன்னு சொல்லிட்டாங்க. எனக்கு நம்பிக்கை இல்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அப்பா,அம்மாவுக்கு இருந்த எதிர் பார்ப்பும் போய் வேணவே வேணாம்னு சொல்லக்கூடிய மனநிலைக்கு வந்திட்டாங்க.

pudugaithendral said...

உங்க வாக்கு பலிச்சா சந்தோஷப்படுவேன் ரங்கன்.

pudugaithendral said...

ஆமாம் ஷர்புதீன்,

அதனாலத்தான் அவங்க பேசும் தொனியே மாறுது.

நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

தொழில் தர்மமே இல்லாத உலகில் பொய்யும், புனை சுருட்டும் தானே இருக்கும்.

இனி கிஃப்ட் ஏதும் அனுப்பும் உத்தேசமே இல்லை. :(

ADHI VENKAT said...

கவலைப்படாதீங்க. உங்க திவான் கண்டிப்பா போய் சேர்ந்துடும். அம்மா சந்தோஷப்படுவாங்க பாருங்க.

அன்புடன் அருணா said...

அச்சச்சோ...இதென்ன கொடுமை?

வல்லிசிம்ஹன் said...

Sorry to hear this Thenral.
I really hope your parents have the luck to get it in good shape.
For the love that is coming along with it.

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி,

கொடுமையேதான் அருணா :((

நன்றி வல்லிம்மா

நானானி said...

you should have sent the diwan by, 'pay on delivery'. in that case the receiver will be alert. they are 'oosi phenoil case' isn't it?

we sent a maruthi to mumbai and got back from mumbai for a six month period by a packers&movers safely. it depends upon....
wishing the diwan a safe reach to your mom.

pudugaithendral said...

வாங்க நானானி,

'pay on delivery'. இப்படித்தான் அனுப்ப இருந்தேன். இல்லையில்லை இப்பல்லாம் அப்படி ஏத்துக்கறது இல்லை. பணத்தை முன்னாடியே கட்டிடுங்கன்னு வற்புறுத்தியதாலத்தான் பணம் கட்டி எடுத்து போக அனுமதித்தேன்.

நாம தடுக்குல பாஞ்சா அவங்க கோலத்துல பாயறாங்க.

உங்க பிரார்த்தனை பலிக்கட்டும்

வருகைக்கு நன்றி

புதுகை.அப்துல்லா said...

புதுக்கோட்டை சமஸ்தான ராணிகிட்ட சாதாரண திவான் வேலையைக் காட்டுறாரே! :)

ஹுஸைனம்மா said...

என்னாச்சு இப்ப? என்ன கிடைச்சுது - திவானா இல்லை தீர்ப்பா?

பீர் | Peer said...

நீதி தேடி மன்றம் போயி, இதுக்கு பேக்கர்ஸே பரவாயில்லைன்ற நெலமை வராதிருக்க வாழ்த்துகிறேன்.

ஆமா.. என்னாச்சு இப்போ?

pudugaithendral said...

ஆஹா இது வேறயா அப்துல்லா

pudugaithendral said...

கன்ஸுயூமர் கோர்ட்லயும் போட முடியாதாம். காரணம் இன்ஷ்யுரன்ஸ் செய்யாததால் நாம் கிளைமும் செய்ய முடியாது என்பதால்.

அவனுங்களா கொடுத்தா உண்டு. இல்லாட்டி அவங்க தரும் 2000த்தை வாங்கிக்கிட வேண்டியதுதானாம்!!

அதனால வேற வழியில்லாம பேசாம திவான் வரும் வழி பார்த்து காத்துகிடக்க வேண்டியதுதான்!!

pudugaithendral said...

இன்னைக்கு வந்த தகவல் படி அந்த கஸ்டமர் வீட்டிலேர்ந்து திவானை பெங்களூர் அலுவலகத்துக்கு கொண்டு வந்திட்டாங்க. ஆனா புதுகைக்கு அனுப்ப வண்டி கிடைக்கலை!!!!!!!

அடுத்த வாரம் போயிடும்னு சொல்றாங்க. பிரார்த்தனைதான்!!

மங்களூர் சிவா said...

any update ?

சுரேகா.. said...

ஆம்.. இது அட்டூழியம்தான்..!

நிறுவனம்தான் பொறுப்பு!

இன்னும் நடக்கலைன்னா சொல்லுங்க!

சென்னை அலுவலகத்துக்குப்போய் பிரச்னை பண்ணுவோம்!

சுரேகா.. said...

இதோ...இன்று பிரச்னை தீர்ந்துவிட்டது.


இந்த பிரச்னையை கையாள நீங்கள் கொடுத்த சுதந்திரத்துக்கு நன்றிங்க!

இதற்குத்தான் இயக்கமே!

கேட்டால்..கிடைக்கும்!!

உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி!

pudugaithendral said...

மனமார்ந்த நன்றிகள் தலைவரே.

உங்களுக்கும் பயங்கர டென்ஷனை கொடுத்துவிட்டார்கள் இந்த சென்னை பேக்கர்ஸ்.

pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2011/08/blog-post_30.html

திவான் அம்மாவீட்டுக்கு போய்ச்சேர்ந்ததுபத்தி பதிவு போட்டிருக்கேன்.