Wednesday, July 06, 2011

180

நான் பார்த்தது தெலுகு வெர்ஷன் படம். காசியில் பார்த்த சின்னப்பையனின்
பெயரை தன் பெயராக்கிக்கொள்கிறார் ஹீரோ. அந்தப் பெயரோடு ஹைதையில்
வந்து இறங்குகிறார். எங்க ஏரியாவில்தான் ஷூட்டிங் நடந்திருக்கு.
தெரியவே இல்லை. அடடே நம்ம பார்க், நம்ம ஏரியான்னு படம் பாக்கும்
பொழுதுதான் தெரியுது.

எனக்கு இந்தப் படத்துல பல விஷயங்கள் பிடிச்சிருக்கு. காமிரா அழகு,
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. காமெடிங்கற பேர்ல கொலை
நடக்கலை. அரைகுறை ஆடை நடனங்கள் இல்லை. பாடல்கள்
மெலடியாத்தான் இருக்கு (இன்னும் இரண்டு வாட்டி கேட்டா மனசுல
நிக்கும்னு நினைக்கிறேன்)

மொளலி-கீதா தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு குடி போகிறார்.
6 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்துவிடுகிறார். அதற்கு ஒரு நாள்
கூட அதிகம் இருக்க மாட்டேன் என்று சொல்லி மொளலியின் பைக்கையும்
வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார்.


பேப்பர் பையனுடன் சேர்ந்து பேப்பர் போடுவது, இஸ்திரி செய்வது
என தனது ஒவ்வொரு நாளையும் எஞ்சாய் செய்கிறார். வித்யா மேனன்
ஒரு பத்திரிகையின் போட்டோகிராபர். வித்யாசமான புகைப்படங்கள்
இவரது ஹாபி. சித்தார்த் தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடிக்க
பைக் நம்பர் வைத்து அட்ரஸ் வாங்கி மொளலியை பார்த்து அதிர்ந்து
பிறகு சித்தார்த்தை சந்திப்பது சுவாரசியம். மொளலி தம்பதியினரின்
பணக்கஷ்டத்திற்கு மெஸ் ஆரம்பித்து கொடுப்பது என பல
உதவிகளை பலருக்கும் பல தருணங்களில் செய்யும் சித்தார்த்தின்
நடிப்பு நன்றாக இருக்கிறது.பேப்பர் போடும் பையன்களை பள்ளிக்கு அனுப்ப நிதியுதவி பெற
வித்யாவை உதவச்சொல்லிக் கேட்க, தனது பத்திரிகையின் விளம்பரம்
செய்து அதன் மூலம் 10 லட்சம் பணம் பெற்று அந்தபிள்ளைகள்
படிக்க வழிசெய்கிறார். இதெல்லாம் வித்தியாசமாக நன்றாக
செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா. அந்த நிகழ்ச்சியின் இறுதியில்
வித்யா மேனன் சித்தார்த்தை காதலிப்பதாகச் சொல்ல அவரை
தவிர்க்க ஆரம்பிக்கும் சித்தார்த்தின் ஃபிளாஷ் பேக் விரிகிறது.ப்ரியா ஆனந்த் அழகு தேவதையாக வருவதுடன் நல்ல நடிப்பிலும்
அசத்தியிருக்கிறார்.அமெரிக்க மருத்துவமனையில் சித்தார்த்
ஒரு டாக்டர். பேஷண்டாக வரும் ப்ரியாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்து
கல்யாணம் செய்து கொள்வது மிக அருமையாக சித்தரித்திருக்கிறார்
இயக்குனர். அவர்களது திருமணத்திற்காக அமெரிக்கவரும் சித்தார்த்தின்
தாயார், மகனுக்கு நல்ல துணை அமைந்துவிட்டது எனும் சந்தோஷத்தில்
இறந்து போகிறார். பிறகு திருமணம், ஆனந்தமான வாழ்க்கை என
போகும் வாழ்க்கையில் வில்லனாக வருகிறது கேன்சர்.

அதுவரை சித்தார்த்தின் நடிப்பு இயல்பாக அருமையாக இருக்கிறது.
தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் சித்தார்த்தின் நடவடிக்கைகள்
மெச்சூரிட்டி இல்லாதது போல இருக்கிறது. சோகமான சமயங்களில்
எக்ஸ்பிரஷனை கொஞ்சம் வித்யாசமாக செய்ய சித்தார்த் கற்றுக்
கொள்ள வேண்டும்.

வித்யா மேனனின் காதலை ஏற்க்க முடியாமல் அந்த வீட்டை
விட்டு காலி செய்து போகும் சித்தார்த்தை ஸ்கூட்டரில் சென்று
பிடிக்க நினைத்த வித்யாவிற்கு விபத்து ஏற்பட அந்த விபத்து
அவரது தண்டுவட ஆபரேஷன் வரை செல்கிறது. இதற்காக
அவரை சித்தார்த் அமெரிக்க அழைத்துச் சென்று தான் வேலை
செய்த மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் கிடைக்க
ஏற்பாடு செய்யும் வேளையில், தனது மனைவியைப் பார்க்க
நினைத்து அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு செல்கிறார்.
அவரைப் பார்த்தாரா? வித்யா மேனனை ஏற்றாரா என்பது
கொஞ்சம் ஜவ்வு மிட்டாயாக இருக்கிறது.

மருத்துவர் ஒருவர் தனக்கு தீராத நோய் வந்திருப்பதை அறிந்து
நடந்துக்கொள்ளும் விதம் இப்படித்தான் இருக்குமா? மனைவி
படும் வேதனையை தாங்க முடியாமல் அவளை விட்டு பிரியும்
கணவனாக சித்தார்த்தை சித்தரித்திருக்கும் இயக்குனர், கடைசி
நேரம் வரை தன் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என
காதல் மனைவி தவிப்பாள் என்பதை உணரவில்லை போலும்.

முடிவு எனக்கு பிடிக்கவில்லை. மனதுக்கு நிறைவான
முடிவாக இல்லை. படத்தை ரசித்து பார்க்கலாம்.6 comments:

கோவை2தில்லி said...

உங்க ஏரியாவில் ஷூட்டிங் நடந்தும் உங்களுக்கு தெரியலையா!

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை பார்க்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

உங்க ஏரியாவில் ஷூட்டிங் நடந்தும் உங்களுக்கு தெரியலையா!//

ஆமாம் தெரியாம போயிடிச்சு. :))

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை பார்க்கிறேன்.//

பாருங்க

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்லயும் வந்து இருக்கு போல.... நேற்றோ அதன் முன் தினமோ அதன் விளம்பரம் பார்த்தேன்.... :)

முடிந்தால் பார்க்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

தமிழ்லயும் வந்திருக்கு. பாருங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி இராஜேஸ்வரி