Thursday, July 14, 2011

மீண்டும் பயங்கரம்

நேற்று 7.30 மணிவாக்கில் எதேச்சையாக செய்தி சேனல் பார்க்க
உட்கார்ந்தேன். அப்பொழுதுதான் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு
பற்றி தெரியும். ஜவேரிபஜார்,தாதர்,ஒபேரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களில்
12 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. மீண்டும் மும்பை
ரத்தம் கசிய!!!!

அயித்தான் மும்பையில் இருப்பதால் போன் போட்டால் ம்ஹூம் ரீச்சே
இல்லை. என் மாமாக்களுக்கு போன் செய்தேன் அவர்கள் வீட்டில் தான்
இருந்தார்கள். அயித்தானுக்கு அவர்களும் ட்ரை செய்து பார்த்து கடைசியில்
நான் மாமாவுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சின்ன மாமாவுக்கு
லைன் கிடைத்து அயித்தானிடம் பேசும் வரை உயிரில்லை. போரிவிலி
ஷ்டேஷனிலிருந்து வசாய் செல்ல ரயில் ஏறிக்கொண்டிருந்தார் அயித்தான்.

wednesday படத்தில் நஸ்ருதின் ஷா சொல்வது போல நம் உறவினர்கள்தான்
என்று இல்லை முகம் தெரியாத அந்த மனிதர்கள் பலியாவது கூட வருத்தத்தை
தருகிறது. இன்று செய்தித்தாள்களில் நடந்த பயங்கரத்தை விடவும்
பயங்கரமாக உடலில் ரத்தம் கசிய, ரத்தக்குளத்தில் தன் கால் போய்,கைபோய்
கிடக்கும் மனிதர்களின் படங்களை பார்க்கும் பொழுது மனம் கொந்தளித்து
போகிறது. இதுவரை 21பேர் தன் உயிரை இழந்திருக்க,140 பேர் படுகாயம்
அடைந்திருக்கின்றனர்.

எந்த தீவிரவாத அமைப்பும் தாங்கள் செய்ததாக மார்தட்டிக்கொள்ளவில்லை
என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படியானால் கள்ளன் நம்
நாட்டுக்குள்ளேயேவா?? நமக்கு மோசமான அண்டைநாடுகள் இருக்கிறது
நிஜம்தான் என்றாலும்.....

உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து
விட்டு இருப்பதை விட அரசு வேறு என்ன செய்திருக்கிறது? முழங்காலுக்கு
கீழே துண்டாகி உயிர்பிழைத்து அடுத்தவர்களுக்கு பாரமாகவும், நடந்த
குண்டு வெடிப்பின் சாட்சியாகவும் மிச்ச காலத்தை அவஸ்தையுடன்
வாழப்போகும் இவர்களின் காலம் எவ்வளவு கொடூரமானது.
ஏதாவது ஒரு தீர்வு கிடைத்த பாடில்லை. உலகத்தின் ஏதாவது
ஒரு பாகத்தில் ஏதாவது ஒரு நாடு குண்டு வெடிப்புக்கு ஆளாவதுதான்
இப்பொழுதைய தலைப்புச் செய்தியாகிவிட்டது. இதுவும் கடந்து போகும்
என இந்த நிகழ்வுகளுகு சொல்ல முடியாது.

இயற்கை பாதிப்பு,தீவரவாத தாக்கம் என எத்தனை அடிகள் பட்டாலும் அடுத்த நாளே
மும்பை எழுந்து நடப்பதுதான் இப்பொழுதும் நடக்கிறது. NDTV24*7 சேனலில்
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ஒட்டி இயக்கம் அவ்வளவாக இல்லை
என்று மதியச் செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மும்பையில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்து
இல்லை. தஹிசர்-மிராரோட் பகுதியில் மழையால் தண்ணீர்க்குழாய் பாதிக்கப்பட்டு
ஒரு பாலத்தில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் தரை மார்க்கமாகவும் பயணம்
பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் மக்கள் நடமாட்டம் குறைவாக
இருக்கிறதே தவிர பயந்து போய் யாரும் வீட்டில் அமர்ந்துவிட வில்லை.

மும்பை மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும் பாதுகாப்பானது
அல்ல என உள்துறை அமைச்சர் கொடுத்திருக்கும் பேட்டி சாமானியனின்
மனதில் இன்னமும் எரிச்சல் கொடுக்கிறது.

நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோன்
என்பதை இந்த மாதிரி நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றன.

உயிரிழந்தவர்களுக்கு என் இதய அஞ்சலிகள்!!
உயிர்பிழைத்தோருக்கு வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுபட
என் பிரார்த்தனைகள்.

9 comments:

Anonymous said...

பயங்கரவாதம் கண்டிக்கத்தக்க ஒன்று. வெடிவிபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு என ஆழ்ந்த அஞ்சலி.

வெங்கட் நாகராஜ் said...

இன்னுமு எத்தனை பேரை இழக்கப்போகிறோம்.... கோழைத்தனமான செயல் இது....

உயிர் இழந்தவர்களுக்கு எனது அஞ்சலி. காயப்பட்டவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.

ஹுஸைனம்மா said...

எப்பத்தான் திருந்துவாங்களோ இந்த அரக்கர்கள்!! இறந்தவங்க, படுகாயமடைஞ்சவங்க, அவங்க குடும்பத்தார்கள், இன்னும் இதைக் காரணம் காட்டி, வதைபடுத்தப்படப்போகும் அப்பாவிகள்னு யாரை நினைச்சு வருத்தப்படன்னு புரியலை!!

உளவுத் துறையும், அரசாங்கமும் இன்னும் இப்படி கவனமில்லாம இருக்கீறதுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். ராணுவ ஆட்சி வந்தாக் கூட நல்லதுன்னு தோணுது தென்றல்.

சாந்தி மாரியப்பன் said...

மும்பைக்கு எப்போதான் விமோசனம் கிடைக்கப்போவுதுன்னு தெரியலை..

அப்பாதுரை said...

பயங்கரவாதம் பற்றிய வருத்தமும் ஆத்திரமும். ஏன் இப்படி!!

அப்பாதுரை said...

ஆமா... நைசா திருக்குறளை பின்னூட்ட செய்தியா திணிச்சிருக்கீங்களே... யாரும் உங்க பதிவைப் படிச்சு கன்னாபின்னானு சொல்லிறக்கூடாதுனா?

settaikkaran said...

ஏறக்குறைய மூன்று வருடங்களாய், எவ்வித அசம்பாவிதமும் நிகழாதிருந்த மும்பையில் மீண்டும் அதிர்ச்சியலைகளை இந்தக் குண்டுவெடிப்புகள் எழுப்பியிருக்கின்றன. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.

ஷர்புதீன் said...

:-(

அஞ்சலி.

pudugaithendral said...

வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.