Sunday, August 14, 2011

சுதந்திர தின சிறப்புப் பதிவு

”ஆர்ட் எக்சிபிஷனுக்கு ஏதேனும் படம் வரைந்து கொடு!” என்று
ஆசிரியை கேட்க ஆஷிஷ் வரைந்தது இந்தப் படம்.


வரைந்த இடம் கொழும்புவில் இருக்கும் பள்ளியில். அவனது ஆசிரியை
அவனை மிகவும் மெச்சினார். 6 1/2 வயதுக்குழந்தைக்கு தன் தேசத்தின்
மீது இருக்கும் மதிப்பு பற்றி மகிழ்ந்து அந்தப்படத்தை எக்சிபிஷனில் வைத்தார்
அவனது ஆசிரியை.

இந்தியாவை விட்டு வெளிநாட்டில் இருக்கும்பொழுது நமக்கு ஜாதி,மதம்,
பேதம் இருப்பதில்லை. யாருடைய கையிலாவது இந்தியன் பாஸ்போர்ட்டை
கண்டாலே உள்ளம் பொங்கும். எங்காவது நம் தேசத்து மொழி காதில்
கேட்டால் ஏதோ உறவினரைப் பார்த்தது போல இருக்கும் அந்த உணர்வு
உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இங்கே இந்தியாவுக்குள் இருப்பவர்களுக்கு நாற்றுப்பற்று இல்லாமல்
போய்விடவில்லை. குளத்தில் அழுக்கு சேர்ந்திருப்பது போல ஏதோ ஒரு
மாயை, தடையை நமக்கு நாமே போட்டுக்கொண்டுள்ளோம். அதை
களைந்து நாம் அனைவரும் ஒருவர் எனும் எண்ணம் வந்தால் நமக்குள்
பிரிவினை என்பது ஏது?



கையில் இருப்பதை தொலைத்துவிட்டு தேடி பின்பு கிடைத்திருக்கிறது
இந்தச் சுதந்திரம். மறுபடியும் அதை அடமானம் வைத்துவிடாமல்
ஒற்றுமையாக இருந்து நம்மை நாமே
காத்துக்கொள்வோம்.

அருமையான இந்தப் பாடலைக் கேட்க

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி சேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..

ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு

படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹு அல்லா
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…

ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்………….

5 comments:

settaikkaran said...

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத்
தாழ்ந்துபணிந்து புகழ்ந்திட வாரீர்!

இனிய சுதந்திரதின வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

சுதந்திர தினத்திற்கு நல்ல பகிர்வு. அதிலும் அந்த இரண்டு பாடல்கள் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.

Jaleela Kamal said...

சிறப்பு பதிவு உங்க மகன் வரைந்தது பாடல் எல்லாமே அருமை

Unknown said...

பாரத்விலாஸ் திரைப்படத்தின் அருமையான பாடல் வரிகளுடன் நாட்டுப்பற்றைத் தூண்டும் பதிவு.இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.பள்ளியில் படிக்கும்போது சுதந்திர தின விழாவில் தவறாமல் இடம்பெறும் பாடல்.

Pandian R said...

****

இந்தியாவை விட்டு வெளிநாட்டில் இருக்கும்பொழுது நமக்கு ஜாதி,மதம்,
பேதம் இருப்பதில்லை. யாருடைய கையிலாவது இந்தியன் பாஸ்போர்ட்டை
கண்டாலே உள்ளம் பொங்கும். எங்காவது நம் தேசத்து மொழி காதில்
கேட்டால் ஏதோ உறவினரைப் பார்த்தது போல இருக்கும் அந்த உணர்வு
உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

********

அன்பின் தோழியார் அவர்களே, புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பணி நிமித்தம் குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் சாதி மத பேதம் மட்டுமன்றி கூடுதலாக வர்க்க பேதமும் உள்ளது. தாங்கள் சொல்லும் உள்ளம் பொங்குவது எல்லாம் நீங்கள் சொல்வது மாதிரி முதலில் பார்க்கும்போதுதான். இரண்டொரு நாட்கள் பழகிப் பாருங்கள்!!