வரலட்சுமி விரதம் முடிந்து மாயக்கண்ணன் வீட்டுக்கு வந்தான்.
வரலட்சுமி விரதத்திற்கு வைக்கும் அம்மன் முகம் ரொம்பவே
சின்னதாக இருந்தது. இத்தனை வருடம் பூஜித்த அம்மனை என்ன
செய்வது? வெள்ளிக்கிழமை பூஜைக்கு அவளை வைத்துவிட்டு
புதிதாக அம்மன் முகம் வாங்கினேன். (அவளுடைய அருளே அருள்.
நான் வாங்கிய அன்று கிராம் 51 இப்போது 61 ரூபாய்)
(படத்தை அப்லோட் செய்ய விடாமல் ப்ளாக்கர் படுத்துகிறது. இன்னொரு
சமயத்தில் கண்டிப்பாய் போடுறேன். லட்சுமி அம்புட்டு அளகு)
சித்தி கோலம் போடுவதில் எக்ஸ்பர்ட். கோலமாவு, காட்டன் பட்ஸ்
கொண்டு சித்தி போட்ட கோலம் இது.
கிருஹப்ரவேசத்திற்கு வாங்கியிருந்த தஞ்சாவூர் பெயிண்டிங்கில்
வரலட்சுமியையும் தோதாக வைத்து பூஜை நடந்தது.
என்னுடைய சின்ன கிருஷ்ணன் வீடு மாற்றும் பொழுது காணாமல்
போய்விட்டான்!! மார்ச் மாதம் மதுரா போயிருந்த பொழுது
இந்த லட்டு கோபாலை வாங்கிவந்தேன். பீதாம்பரிக்கு மஞ்சள்
உடையும், மகுடம், மாலை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன்.
சனிக்கிழமை முதல் வீட்டில் விருந்தினர். சித்தியும் அவர்களின்
நட்புக்களும் டப்பர்வேட் மீட்டிஙிற்காக வந்திருந்தனர். அவர்களுடன்
பிர்லா மந்திர் போயி, ஷாப்பிங் அழைத்துச் சென்று ரொம்ப
டயர்டாகிவிட்டேன். அவர்கள் 4 மணி ட்ரையினில் ஊருக்கு
கிளம்பினார்கள். ஆஷிஷ்தான் அலங்காரம் செய்தான். பூஜை
அப்பாவுடன் சேர்ந்து செய்தான்.
சென்றவாரம் ஒரு ஷார்ட் ட்ரிப்பாக சென்னை போயிருந்தார் அயித்தான்.
வரும்போது சீடை, முறுக்கு வாங்கி வந்திருந்தார். அத்தோடு தயிர்,அவல்,
வெண்ணெய் வைத்து பூஜை முடிந்தாகிவிட்டது.
இங்கே ஒரு மழலையர் பள்ளியில் ஜன்மாஷ்டமி சிறப்பு நிகழ்ச்சிக்கு
போயிருந்தேன். அங்கே ராதையுடன் கண்ணன் அருமையாக புல்லாங்குழல்
இசைத்துக்கொண்டு இருந்தான். சுட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.
ஆயர்பாடி மாளிகையில் பாடல் அந்தக் கண்ணனுக்காக
எல்லாம் அந்த மாயக்கண்ணனுக்கே அர்ப்பணம்
15 comments:
புகைப்படங்கள் அருமை.கண்ணன் பாதங்கள் படம் போடவில்லையே???
கிச்சா ரொம்ப அழகா இருக்கான் :-)
(படத்தை அப்லோட் செய்ய விடாமல் ப்ளாக்கர் படுத்துகிறது. இன்னொரு
சமயத்தில் கண்டிப்பாய் போடுறேன். லட்சுமி அம்புட்டு அளகு)
..... கண்டிப்பாக அப்லோட் பண்ணுங்க. பார்க்க ஆசை. கோலம், ரொம்ப அழகாக வந்து இருக்கிறது.
வாங்க ரசிகன்,
நலமா? பாதங்கள் போடவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்தான் ஆஷிஷ் பூஜை. விருந்தோம்பலினால் உடம்பு கொஞ்சமா டேமேஜ் ஆகிடிச்சு :))
வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
கிச்சா எப்பவுமே அழகுதானே!
வருகைக்கு நன்றி
வாங்க சித்ரா,
சித்தி கோலப்போட்டியில் நிறைய்ய பரிசு வாங்கியிருக்காங்க
வருகைக்கு நன்றி
அட நம்ம மதுரா லட்டு கிருஷ்ணா அழகா இருக்கானே..
புகைப்படங்கள் அழகு....
பகிர்வுக்கு நன்றி.
பண்டிகைக் கால அனுபவங்கள் இனிமை.
மதுராவில் வாங்கிய கிருஷ்ணன் தான் எங்க வீட்டிலும்.
படங்கள் அருமை.
வருகைக்கு நன்றி சகோ
வாங்க கோவை2தில்லி,
பண்டிகை கால அனுபவங்கள் இனிமை//
ஆமாம்ங்க வருகைக்கு நன்றி
ஆயர் பாடி மாளிகையில் - என்னுடை டாப் ஐம்பது பாடல்களில் ஒன்று!
நீண்ட நாட்களுக்கு பின் ஆயர்பாடி பாடலை உங்கள் பதிவில் கேட்டேன்.நன்றி.
மிக்க சந்தோஷம் ஷர்புதீன்
வருகைக்கு மிக்க நன்றி
முதல் வருகைக்கு மிக்க நன்றி KSGOA
இந்த முறை எங்கள் புது வரவால் கிருஷ்ணா ஜெயந்தி நஹி .... உங்கள் பதிவு படிச்சது நானே கொண்டாடின பீலிங் வருது..( நானும் லட்டு கிருஷ்ணர் வச்சிருக்கேனே ...)
வாங்க சுதர்ஷிணி,
குட்டிம்மா எப்படி இருக்காப்ல??
வருகைக்கு நன்றி
Post a Comment