Monday, October 17, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 17/10/11

தெலங்கானா போராட்டம் தீவிரமாகத்தொடங்கி 1 மாசத்துக்கு அப்புறம்
ஆளுங்கட்சிக்கு முழிப்பு வந்து போக்குவரத்து ஸ்ட்ரைக்கை வாபஸ்
வாங்க வெச்சிருக்காங்க. பள்ளிகள் நடத்தலைன்னா ரெஜிஸ்ட்ரேஷனை
இழக்க நேரிடும்னு பயமுறுத்தி இருக்காங்க. பள்ளிகள் வளமை போல்
இயங்கும்னு நம்பிக்கை வந்திருக்கு. நவம்பர் 5 ஆம்தேதி தெலங்கானா
பத்தி ஒரு முடிவுக்கு வருவாங்க போல இருக்கு. பாப்போம்!!!
*************************************************************
நாளிதழ் ஒன்றில் மூளை வேலை செய்வதைப்பற்றி போட்டிருந்தது.
அதில் சராசரியாக பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகளும்,
ஆண்கள் 2000 வார்த்தைகளும் உபயோகிக்கிறாங்கன்னு போட்டிருந்தது.
மகள் கொண்டுவந்து காட்டினாள். ஆண்கள் பலரும் மொளனச்சாமியா
இருக்க அவங்க மூளைதான் காரணம்னு நினைச்சுகிட்டேன்.
பொம்பளைங்க அனாவசியமா பேசுறாங்க அப்படின்னு கூட ஒரு
ஆண் புலம்பியதை முன்பு எப்பொழுதோ மகள் படிச்சிருக்காங்க போல
ஏம்மா! வொக்காபுலரியே கம்மியா இருந்தா ஆண்களுக்கு எப்படி
பேசணும்? என்ன பேசணும்னு தெரியாதுல்ல? அப்படி இருக்க
அதிகமா பேசறாங்கன்னு பெண்களைச் சொல்வது தப்பு இல்ல!!
இது கூட ஏம்மா புரிய்ய மாட்டேங்குது”!!!
அப்படின்னு கேட்க,”ஆஹா நமக்கு ஒரு வாரிசு உருவாகிடிச்சு!
ஹஸ்பண்டாலஜி பாடங்கள் எதிர்காலத்திலயும் தொடர வாய்ப்பிருக்குன்னு!”
சந்தோஷப்பட்டுகிட்டேன்.:)))))) சில விஷயங்கள் சொல்லித்தரப்படாமலேயே
பெண்கள் புரிந்து கொள்கிறார்கள்.
**************************************************************
இந்த வாட்டி ரயில்ரோக்கோவை ஒரு சூப்பரா ஹேண்டில் செஞ்சிருக்காங்க.
சாதரணமா ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ரயில்வே ஊழியர்களை
கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வெச்சு, ரயில்வே சட்டத்தை உபயோகிச்சு
14 நாள் ரிமேண்ட்ல, விஜயசாந்தி, கேசிஆர்,கவிதா, கேடிஆர்,
கோதண்டராம் எல்லாரையும் உள்ள தள்ளிட்டாங்க. பெயில்ல
வெளியில வர கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. தாங்க முடியலை
கோதண்டராமால. பொம்பளைங்களை போலீஸ் ஸ்டேஷன்ல
வெச்சிருக்காங்க, என்ன அரசு இதுன்னு? காட்டமா பேட்டி கொடுக்கிறார்.

பெண் என்பதால எந்த சலுகையும் எங்கயும் கிடைக்காது. தப்பு
செஞ்சா யாருக்கும் தண்டனை கண்டிப்பா கிடைக்கும். விஜயசாந்தி
எம்பி, பெண் என்பதால அவங்களை அரெஸ்ட் செய்யக்கூடாது
அப்படின்னா வூட்டுல சும்மா உக்காந்திருக்கணும். தர்ணா செய்ய
வரக்கூடாது.

ஆனா சும்மா சொல்லக்கூடாது. குண்டாந்தடியா இருந்த
போலீஸ் அக்காக்கள் ரயில் பட்டியில உக்காந்து தர்ணா செஞ்ச
பெண்களை குண்டு கட்டாத்தூக்கி அப்புறப் படுத்தி வண்டியில
ஏத்தின காட்சியை பாக்கணும். ஹாட்ஸ் ஆஃப் டு வுமன் போலீஸ்.
***************************************************************

பசங்க ரொம்ப குஷியா இருக்காங்க. இந்த வார விடுமுறையின் போது
அவங்க மாமா ஊர்லேர்ந்து வர்றாப்ல. அதனால குஷி. தீபாவளிக்கு
புதுகைக்கு போகும் முன் தம்பி இங்க வந்திட்டு போறாப்ல. இரண்டு
வருஷம் கழிச்சு தம்பி ஹைதை வருகிறார். 10 நாள் முன்னாடி
தம்பி போன் போட்டு “அக்கா ஏதாவது வாங்கி வரணும்னா லிஸ்ட்
அனுப்பு. முஸ்தபா மட்டும்தான் போக நேரம் கிடைக்கும்னு சொல்ல!”
அம்ருதம்மா கொடுத்த லிஸ்ட்.

2 செயின், 4வளையல், 1 ஒட்டியாணம் (தங்கத்துலதான்) முஸ்தபாவுல
கோல்ட் ஷாப்பும் இருக்கு மாமா!!

தம்பி,” நான் ஊருக்கே வர்றல்ல!!”...........
*******************************************************************
தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடக்கும் சம்பாஷணைகள் தாங்கமுடியவில்லை.
அப்பாவுக்கு பிடித்த பவுடர் இங்கேயிருந்து தம்பியிடம் அனுப்பச்சொன்னார்
அப்பா. அதற்கான காசு அம்ருதாவிடமிருந்து வாங்கி கொள்ளச் சொன்னார்.
போன் போட்டு தாத்தா பேத்தியிடம் சொல்ல,”நான் எதுக்குத் தாத்தா
காசு கொடுக்கணும். உங்க பொண்ணாச்சு நீங்க ஆச்சு!!””

ரவா உருண்டை பொடி அனுப்பச் சொல்லுங்க அம்மம்மாவை,
அதுக்கு வேணாம் காசு தர்றேன். எப்படி இருக்கு??!!

****************************************************************
zindagi na milege dobara தியேட்டரில் பார்க்க வேண்டும் என
நினைத்திருந்த படம். மிஸ்ஸாகிவிட்டது. சனி, ஞாயிறு இரண்டு
நாளும் இந்தப் படம் ஸ்டார் ப்ளஸ்ஸில் வந்தது. நல்லாத்தான் இருக்கு.
ரொம்ப நாளைக்கப்புறம் பாசிட்டிவான படம் என்று கூட சொல்லலாம்.


ஆனாலும் சில நெருடல்கள் ஆங்கிலப்படங்கள் தோற்றுப்போகும் அளவுக்கு
லிப்லாக், சீன்கள் ஆகியவற்றை குறைத்திருக்கலாம். பாலிவுட் எப்பொழுதுமே
இந்த மாதிரி விவகாரங்களுக்கு அதீதம். தரம் ஹாலிவுட் போல் இருக்கிறதோ
இல்லையோ இந்த மாதிரி விஷயங்கள் சில சமயம் ஹாலிவுட்டே
தோற்றுப்போய்விடும் போல இருக்கும். இந்த அழுக்கை யார் கழுவிவிட்டு
போகப்போகிறதோ!!
*********************************************************************

15 comments:

ஹுஸைனம்மா said...

//பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகளும், ஆண்கள் 2000 வார்த்தைகளும்//

எங்கோ படிச்ச விஷயம்: ஆண்களுக்கு எதையுமே ஒருமுறைக்குப் பலமுறை சொன்னால்தான் விளங்கும் என்பதால்தான் பெண்கள் நிறையப் பேச வேண்டியுள்ளதாம்!! :-)))))

தெலுங்கானா விஷயத்தில், அட்லீஸ்ட் ‘தூரத்தில் ஒரு ஒளி’யாவது தெரியுது!! :-)))

//2 செயின், 4வளையல், 1 ஒட்டியாணம் (தங்கத்துலதான்) //
ஹஸ்பண்டாலஜிக்கு வாரிசுன்னா, இதுவும் அப்படித்தானா? (ச்சும்மா....) :-))))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல ஆவக்காய் பிரியாணி....

நல்லதொரு இந்திப்படம் என்று சொல்ல மனம் வந்தாலும்..சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது உண்மையே..

Appaji said...

<<<<<<<>>>>>>>>ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் என்ன பண்றது? <<<<<>>>>>Good <<<>>>>எதோ...அந்த ரெண்டு செயின்....மட்டுமாவது வாங்கி வர சொல்லுங்க ? பாவம்..பிள்ளை கேக்குது இல்ல..!!!<<>>>>>அப்படி போடு !!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ஆண்களுக்கு எதையுமே ஒருமுறைக்குப் பலமுறை சொன்னால்தான் விளங்கும் என்பதால்தான் பெண்கள் நிறையப் பேச வேண்டியுள்ளதாம்!! :-)))))//

அட்சர லட்சம் பெறும்னு சொல்வாங்களே அப்படிப்பட்ட வாக்கியம் இது ஹுசைனம்மா.

pudugaithendral said...

தெலங்கானா ஒளி எல்லாம் தெரியலை. சீக்கிரமே அரசு கவிழ்ந்து தேர்தல் வரும்னு தான் நினைக்கிறேன் ஹுசைனம்மா.

ஹஸ்பண்டாலஜிக்கு வாரிசுன்னா, இதுவும் அப்படித்தானா?//

வாரிசுன்னா எல்லாத்துலயும் இருக்கணும்ல :))

சாந்தி மாரியப்பன் said...

ஒரு வாரிசு உருவாகிறதே :-)))

ஜி.நா.மி.தோ எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது.. சில காட்சிகளைத் தவிர.

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

நலமா. ஆமாம்பா நல்ல மெசஜை சொல்லும் படம்னாலும் காட்சிகள்....
ஹிரிதிக்கின் நடிப்பும் நல்லா இருந்தது. அதிசயமா இந்தப்படத்துல எனக்கு கட்ரினாவையும் பிடிச்சிருந்தது.

ஜாவேத் அக்தரின் மகன் ஃப்ர்ஹான் அக்தர், தர்மேந்த்ராவின் மகன் அபய் தியோல், ராகேஷ் ரோஷன் மகன் ஹ்ரிதிக்னு வாரிசுகளின் படம்னு கூட சொல்லலாம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

லிஸ்டா கேட்டதாலத்தான் இம்புட்டு. ஆனா ஒட்டியாணம் விஷயத்துல காம்ப்ரமைஸ் செஞ்சுக்கற மாதிரி இல்ல மேடம். :)) இப்ப இல்லாட்டியும் மாமா கல்யாணத்துக்கு ஒட்டியாணம்னு கராறா சொல்லியிருக்காங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

லிஸ்டா கேட்டதாலத்தான் இம்புட்டு. ஆனா ஒட்டியாணம் விஷயத்துல காம்ப்ரமைஸ் செஞ்சுக்கற மாதிரி இல்ல மேடம். :)) இப்ப இல்லாட்டியும் மாமா கல்யாணத்துக்கு ஒட்டியாணம்னு கராறா சொல்லியிருக்காங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

மேடத்தை பத்தி ஒண்ணும் சொல்லிக்கறதுக்கில்லை. :))

எனக்கும் பிடிச்சிருந்தது. வருகைக்கு நன்றி

மாதேவி said...

ஆவக்காய் பிரியாணி சுவைக்கின்றது.

தங்கத்தீபாவளிதான் :))))

வல்லிசிம்ஹன் said...

அம்ருதாம்மா நல்லாதான் வளர்ந்திருக்காங்க:)
புத்திசாலிப் பொண்ணுக்கு என் வாழ்த்துகள் தென்றல்.
எங்க வீஇட்டில் ஆண் 15 வார்த்தைகளும் பெண் 10 வார்த்தைகளுமே பேசுகிறோம்.
தொலைபேசிப் பேச்சு இதில் அடங்காது:)

pudugaithendral said...

:))) வருகைக்கு நன்றி மாதேவி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

போன்ல(ஆண்கள்) பேசும் வார்த்தைகளை கணக்குப்போட்டா அது 20ஆயிடம் கூட இருக்கும் வல்லிம்மா. :)) அம்ருதாவுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிடறேன்.

வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

) சில விஷயங்கள் சொல்லித்தரப்படாமலேயே
பெண்கள் புரிந்து கொள்கிறார்கள்./

அருமையான பெருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>