Tuesday, October 11, 2011

பேரு வாயில நுழையாட்டி என்ன??!!! :))

மஹாலட்சுமி கோவில் தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் இடங்களில்
அழகா பந்தல் அமைச்சு அதில் ஃபேன் எல்லாம் வெச்சிருந்தாங்கன்னு
சொன்னேன். இதோ படம்.


நம்ம ஊர்ல பூ கட்டுவது ஒரு அழகுன்னா, மும்பையில ஒரு ரக.
இதோ அழகழகா கட்டி வெச்சிருக்காங்க பாருங்க.



சிறுதிண்டிகளுக்கு மும்பைதான் பெஸ்ட். என் ஆல்டைம் ஃபேவரீட்
வடாபாவ். சேவ் பூரி பிடிக்கும் அதைவிட தஹிபூரி. பேல் கொஞ்சம்
சரியாக கலக்காவிட்டால் காரபேல் ஆகி நம் வாய் பணால்
ஆகிவிடும். ஜுஹூ பீச்சில் சுடச்சுட பாவ் பாஜி சாப்பிடுவது ஆனந்தம்.
கோல்கப்பா எனப்படும் பானிப்பூரி வீட்டில் செய்தால் பிடிக்கும்.
ஆலு பேட்டீஸ், சமோசா ரகடா இவைகள்தான் எனக்குத் தெரியும்.
ஊருக்கு போனதிலிருந்து பெரிய மாமாவின் சின்ன மகள் “ஒதினா
ஆப்.... கானா ஹி சாஹியே!” என்று சொல்லிக்கொண்டிருந்த பண்டத்தின்
பெயர் என் காதில் சரியாக விழவே இல்லை. காதில் விழுந்தால்தானே
மண்டைக்குள் செல்லும்.

மாமாவின் சின்ன மகள் பிறந்த 9ஆவது மாதத்தில் என் திருமணம்.
மேடம் இப்போ +2 படிக்கறாங்க. கைக்குழந்தையாக தூக்கி கொஞ்சிக்
கொண்டிருந்த என் பாப்ஸ் என்னை டூவீலரில் உட்கார வைத்து
பர்ச்சேசிங்கிற்கு அழைத்துச் சென்றாள். பேரம் பேசுவது
இவளிடம் தான் கற்கவேண்டும். நாங்களும் பேசுவோம். கொஞ்சம்
இதமாக இருக்கும். மேடம் அடித்து பேசி வாங்கிவிடுவாள்.
அம்ருதாவுக்கு ஜெக்கின்ஸ் வாங்கினேன். மேடமின் பேரத்தால்
200ரூபாயில் முடிந்துவிட்டது!!

சசியும் பெரியவளாகிவிட்டாள். டாக்டரம்மா இப்பொழுது பிசி. இந்த பாப்ஸ் +2.இந்த முறை என் பயணம் ஏதோ சகோதரிகளுடன் அளவளாவிய ஒரு இனிதாக
மனதில் பதிந்துவிட்டது. உண்மையில் எனக்கு உடன் பிறந்த
சகோதரி கிடையாது. தம்பி மட்டும்தான். இந்த முறை சசியும்,
வர்ஷாவும் அந்தக்குறை நீங்கியது போல் நடந்து கொண்டார்கள்.
சரி மேட்டருக்கு வருவோம்.

வர்ஷா சொல்லிக்கொண்டிருந்த பண்டம் தபேலி. (Dabeli)
த்ரீ இடியட்ஸ் படத்தில் கரீனா சொல்வது போல இந்த குஜராத்தி
ஐட்டங்கள் இப்படித்தான் கொஞ்சம் கரடு முரடா இருக்கும் போல.
ஆனா தபேலி சாப்பிட்ட பொழுது என் உச்சி மண்டையில சுர்ருன்னது!!

அதென்ன தபேலின்னு சொல்லி வயிற்றெரிச்சலைக்கொட்டிக்காட்டா
தப்பாச்சே!


தபேலி அப்படின்னா அமுக்கியதுன்னு குஜராத்தியில் அர்த்தம்.
கிட்டத்தட்ட நம்ம பர்கர் மாதிரி இது. வேகவைத்த உருளை மசியலுடன்
தபேலி மசாலா சேர்த்து அதை பர்கர் பன்னின் நடுவில் வைத்து,
நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நெய் ஊற்றி தவாவில் சுட்டெடுத்து கொடுப்பார்கள்.
அதோடு ஒரு சாஸ் + புதினா சட்னி கொடுப்பார்கள். புதினா சட்னி +
சாஸ் மிக்ஸ் செய்து தொட்டு சாப்பிட்டால் உச்சி மண்டையில் சுர்ருன்னு
ஏறும். அந்த சட்னி சாஸ் தான் ருசியைக்கூட்டும். தபேலி மசாலா
ப்ளண்ட்டாக இருக்கு.


தபேலி எங்கே எப்படி ஆரம்பிக்கப்பட்டதுன்னு பாக்கலாம்.
கட்ச் பகுதியில் Keshavji Gabha Chudasama alias Kesha Malam,
அப்படிங்கறவர் கண்டுபிடிச்சதுதான் இந்த உணவு.
ஆரம்பிச்சப்போ 1 அணா 6 பைசாவுக்கு வித்தாராம். (1960ல)
இப்போ 8 ரூபாய். வடா பாவுக்கு போட்டியா இதுவும் ருசிக்கப்படுது.
கட்ச்ல இவங்க கடை இன்னமும் இருக்காம். கட்சி பகுதியில்
பிரபலமானதால கச்சி தபேலின்னும் சொல்வாங்களாம்.

இதைத்தான் என் மாமன் மகள் டேஸ்ட் செய்யச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆஹா நிஜமாவே நல்ல ருசி. தேசி பர்கர் என்று கூட இதற்கு
பெயர் உண்டாம். Mumbai, Pune, Delhi, Nagpur, Aurangabad, Nizamabad, Nasik, Raipur, Bilaspur, Jabalpur, Indore, Bhopal, Udaipur, Jaipur,
இங்கெல்லாம் கூட தபேலி கிடைக்குதாம்.


எனக்கு ரொம்ப ஃபேவரீட்டான வடாபாவ் அம்ருதாவுக்கு
ரொம்பவே பிடித்துவிட்டது. ஊருக்கு கிளம்பும் அன்று அத்தை
சப்பாத்தி சப்ஜி செய்து கொடுத்திருந்தாலும் சர்ச்கேட் ஷ்டேஷனில்
வடாபாவும் வாங்கிக்கொண்டாள்!! ஹைதையிலும் கிடைக்குதும்மா,
ஆனா இந்த டேஸ்ட் வராதுல்ல!! அண்ணா ஊருக்கு வந்ததும்
வடாபாவ், தபேலி சாப்பிட்டதை சொல்லி அவன் காதில்
புகை விட வைத்தாயிற்று

:)))

22 comments:

ADHI VENKAT said...

தபேலி சாப்பிட்டதில்லை...தில்லியிலும் கிடைக்குதா!

ஊருக்கு போய்விட்டு வந்த அனுபவங்கள் எல்லாமே நல்லாயிருந்தது.நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க.

அமுதா கிருஷ்ணா said...

சாப்பிடனுமே..

Appaji said...

Mumbai ...Chat Item த்த எல்லாம் லிஸ்ட் போட்டு சாப்பிட்டு..
ஒரு பதிவு வேற போட்டு...பசிய உண்டாகிட்டிங்களே..
இன்றைக்கு வீட்டுக்கு போய் வீட்டு சாப்பிட முடியாது போல இருக்கே..ஆண்டவா..!!!
முன்பே சொல்ல வேண்டும் என நினைத்தேன்...கையெழுத்து போடும் இடத்தில்..
Pudugai Thendral ...க்கு போட்டிருக்கும் பான்ட்...அருமை..........சார் Selection.ஆ :(

இராஜராஜேஸ்வரி said...

அண்ணா ஊருக்கு வந்ததும்
வடாபாவ், தபேலி சாப்பிட்டதை சொல்லி அவன் காதில்
புகை விட வைத்தாயிற்று
பேரு வாயில நுழையாட்டி என்ன??!!! :))"

very Tasty.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

தில்லியிலும் கிடைக்குதுன்னு சொல்றாங்க. தேடிப்பார்க்கணும்னு நினைக்கறேன். நல்லா எஞ்சாய் செஞ்சாச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா,

சரி வாங்க ஒரு எட்டு பாம்பே போயிட்டு வரலாம். இங்கேயிருந்து ஒரு ராத்திரி பயணம் தான்.

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

நான் எழுதியிருக்கும் 810 பதிவுகளில் அயித்தான் 10 பர்சண்ட் கூட படித்தது இல்லை. ப்ளாக்குக்கும் அவருக்கும் எந்த சம்பதமும் இல்லை. நண்பர்கள் வலைப்பூவில்பார்த்து அந்த லிங்கில் தொடர்ந்து உருவாக்கியதுதான் அந்த ஃபாண்ட்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

ADHI VENKAT said...

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு ப்ளேட் தபேலி பார்சல்.....

ஒரு கர்னாடக நண்பர் குஜராத்தி பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் - அடுத்த மாதம்.... போய்ட வேண்டியதுதான் - தபேலி கண்டிப்பா போடணும்னு சொல்லிட்டு :)

Muthu said...

Dabeli,

I have tasted this chat item in Mithai Mandir in Pondicherry.

Very nice post.

pudugaithendral said...

நன்றி ஆதி

pudugaithendral said...

ஆஹா கண்டீஷன் நல்லா இருக்கே சகோ.

எஞ்சாய் செய்ய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க முத்து,

புதுவையில் சாப்பிட்டீங்களா!! இங்க ஹைதையிலும் கிடைக்குதுன்னு விக்கீபீடியா சொல்லுது. ஆனா எங்கன்னு பாக்கணும்.

வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

தாபேலி, டபுள் ரோட்டின்னு சொல்லப்படற இதை இன்னும் சாப்பிடாமலா இருந்திருக்கீங்க :-)

சில இடங்கள்ல வறுத்த நிலக்கடலையை ரெண்டொண்ணா பொடிச்சுப் போட்டிருப்பாங்க.. ருசி அள்ளும்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இந்த வாட்டிதான் மும்பையில் ஷார்ட்டா இருந்தாலும் நல்லா எஞ்சாய் செஞ்ச ஒரு ட்ரிபா இருந்ததுன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

நானானி said...

பேர் வாயில் நுழையாட்டா என்ன? பண்டம் வாயில்நுழைந்தா சரி.

pudugaithendral said...

வாங்க நானானி,

அதுவும் சரிதான்.

வருகைக்கு நன்றி

settaikkaran said...

//கோல்கப்பா எனப்படும் பானிப்பூரி வீட்டில் செய்தால் பிடிக்கும்.//

மும்பையில் கோல்கப்பா என்றால் புரிவதில்லை. பானி பூரி என்று தான் கேட்கணும். எனக்கென்னமோ அதை அவங்க அந்தப் பானையிலே முக்கி எடுப்பதைப் பார்த்தாலே பிடிக்கிறதில்லை. ஐ லைக் ஒன்லி வடா பாவ்; ஆல்டைம் பேவரிட்! :-)

pudugaithendral said...

வாங்க சேட்டைத்தம்பி,

ஐ லைக் ஒன்லி வடா பாவ்; ஆல்டைம் பேவரிட்! :-)//

சேம் ப்ளட்டா இருக்கீக. வருகைக்கு நன்றி. உங்க பதிவையும் ரசிச்சேன்.

Vaishnavi said...

How r u madam.Yeppa madam seethakku kalyanam panni vaipeenga?unga postuku yeppadi comment podarathunu theriyala.adhan yedo 1 postkku undanathula potrukken.now r u recover from ur pains?

pudugaithendral said...

வாங்க வைஷ்ணவி,

சீதாவுக்கு கல்யாணம் நடக்காததுல எனக்கும் ரொம்ப வருத்தம். என்ன செய்ய? அந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்ச நேரம் செம வேலை, உடம்பு படுத்தல்கள்னு ஒரே கஷ்டமா போச்சு. உண்மைக்கு சொல்லணும்னா ஓவர் ஸ்ட்ரெஸ் ஆனதுதான் ப்ராப்ளம். அதனால பதிவு போட அந்த ஃப்ளோ இல்லாம போச்சு. இப்பவும் ட்ரீட்மெண்ட் ஓடிகிட்டு இருக்கு. வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அக்டோபரில் விஜயதசமியின் போது சுபமா ஆரம்பிச்சிடலாம் :)

அன்புக்கு மிக்க நன்றி