தாத்தாவுக்கும் அம்மம்மாவுக்கும் பெருமை தாங்கவில்லை. பேரன்
பள்ளி சுற்றுலாவில் குல்லு மணாலி சென்று வந்ததிருக்கிறார் என்று.
ஆஷிஷ் கிளம்புவதற்கு முதல் நாள் போன் போட்டு ஸ்வெட்டர் வாங்கிக்
கொடுத்தாயா, குளிருக்கு இதமான உடைகள் எடுத்துக்கொண்டானா?
அவசரமான மருந்துகள் கொடுத்தாயா என குடைந்து எடுத்துவிட்டார்
தாத்தா. பாலைவிட பாலாடை ருசிக்கும்!!! ம்ம்ம்ம்ம் :)))
எனக்கு டில்லியிலிருந்து அழகான புடவை வாங்கிவந்திருக்கிறான்.
அப்பாவுக்கு ஷர்ட், தங்கைக்கு வாட்ச். என் குட்டி குட்டி ஆஷிஷ்
இன்று தனியாக பர்ச்சேஸ் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்
என்பதை நம்பமுடியாமல் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
இன்று எங்கள் செல்லத்திற்கு பிறந்தநாள். 14 வசந்தங்கள் முடிந்து
15ஆவது வசந்த்ததில் அடி எடுத்துவைக்கும் இந்த நந்நாளில் இறைவன்
அவனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்வான வாழ்வையும்,
நல்ல குடிமகனாக, நல்ல மனத்தோடு,உடலோடும் வைக்க பிரார்த்தித்து
வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்ளும் அன்பான அப்பா, அம்மா.
ஆஷிஷ் அண்ணா பர்த்டே ஷ்பெஷல்:
காலை டிபன் : இட்லி + சாம்பார் (வடநாட்டு டூர் அடித்து வந்திருப்பதால்)
மதியம் : மிக்ஸ்ட் வெஜிடபிள் புலாவ் (ப்ரெட்டெல்லாம் சேர்த்து நான்
செய்யும் ஷ்பெஷல்)
ஸ்வீட்: ஆஷிஷுக்கு பிடித்த ரஸமலாய்.
டின்னர் வளமை போல அவுட்டிங். அண்ணா சாய்ஸ்.
19 comments:
அன்பான ஆஷிஷ் - க்கு எங்களின் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள் சகோ...
அனைத்து நல்ல விஷயங்களையும் இன்றும் வரும் எல்லா நாட்களிலும் ஆண்டவன் அவருக்கு வழங்கட்டும்.....
ரோஷ்னி, ஆதி மற்றும் வெங்கட்.
manamaarntha vaazhthukal....:)
ஆஷிஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்களது செல்வம்....எல்லா செல்வங்களையும் பெற்று ...வாழ்க வளமுடன்...
பிறந்த நாள் வாழ்த்துகள்...ஆசிஷ்..(எனக்கு என்ன வாங்கி வந்தாய் ...கரோல் பாகிலிருந்து...என கேட்க மாட்டேன்..!!!!!!!!!!!)
(எங்கள் இல்லத்துக்கு எதிரில். ..பத்து வருடங்களுக்கு முன் ஒரு மும்பை தம்பதியர் குடி வந்திருந்தனர்...
அவர்களது முதல் குழந்தை பெயரும்...ஆசிஷ் தான்..அவர்கள் மாற்றல் ஆகி மும்பைக்கே சென்று விட்டனர்..
தொடர்பு இல்லை...எங்களது இல்லத்தில் தான் விளையாடி கொண்டு இருப்பான்...குட்டி கண்ணனை போல்...கொழுக் மொழுக்
என்று இருப்பான்...தங்களது மகன் பெயரை படித்ததும்...அந்த நினைவு விட்டது. :(
முதல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)
\\பாலைவிட பாலாடை ருசிக்கும்!!! \\
சூப்பரு ;-)
வாங்க சகோ,
ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
மிக்க நன்றி ரசிகை
வாங்க அப்பாஜி,
வாழ்த்துக்களை சொல்லிடறேன்.ஆஷிஷும் குட்டியாக இருந்த பொழுது கொழுக் மொழுக் கென்று செரிலாக் பேபியாக அழகாக இருப்பான். சிரிக்கும்பொழுது அழகாக குழி இரண்டு பக்கமும் விழும். அவனைப் பார்க்கும் யாரும் கொஞ்சாமல் இருக்கமாட்டார்கள். இப்பொழுதைய ஆஷிஷ் ஒல்லிப்பிச்சான். உடம்பை ஏத்துன்னு சண்டை போட்டுகிட்டே இருப்பேன்.
மணாலி ட்ரிப் போய் வந்ததில் அநியாயமாக 4 கிலோ குறைந்து வந்திருக்கிறான்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆஷிஷ்.
வாங்க கோபி,
வாழ்த்தை சொல்லிடறேன். அதென்னவோ பேரன் பேத்தி எது செஞ்சாலும் சந்தோஷம் தாத்தா, பாட்டிக்கு. என்னை எதுக்கெல்லாம் திட்டி இருப்பாங்களோ அதே பேரன் பேத்தி செஞ்சா அப்படி புளகாங்கிதமாகிடறாங்க. அதான் பாலாடை ருசி :)))
வருகைக்கு நன்றி
very happy birthday to Ashish....
may all your dreams come true akka
மனமார்ந்த வாழ்த்துகள் ஆஷிஷ்க்கு.
பால் - பாலாடை: முதல்ல புரியலை. உங்க விளக்கம் பாத்ததும் புரிஞ்சுகிட்டேன். உண்மைதான். பொறாமை வருமளவு இருக்கும் சில சமயம்!! :-))))
வாழ்த்துக்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆஷிஷ்.
வாங்க சுதர்ஷிணி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்களைச் சொல்லிடறேன் அமைதிச்சாரல். மிக்க நன்றி
பொறாமை வருமளவு இருக்கும் சில சமயம்!! :-))))//
பொறாமை மட்டுமல்ல ஹுசைனம்மா எங்களை என்ன பாடு படுத்தீனீங்கன்னு கோவம் கூட வரும் சில சமயம் :))
மிக்க நன்றி
நன்றி அமுதா
நன்றி மாதேவி
Post a Comment