Monday, November 07, 2011

டப்பர்வேர் பாத்து ஓடாதீங்க!! - 2

டப்பர்வேர் பொருட்கள் பத்தி தெரியும். ஆனா அதை வாங்கனும்னா
எனக்கு பயம். விலையாலதான். ஆனாலும் எப்படியோ ஆசைப்பட்டதை
வாங்கி கிச்சனை அழகு செய்யலாம், அதோட பொருட்களும் பத்திரம
இருக்குமேன்னு நான் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஒரு
சமயம் சென்னையில் இருக்கும் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட்
டப்பர்வேர் கன்ஸல்டண்ட் என்பதால அவங்க கிட்ட வேணுங்கறதை
சொல்லியிருந்தேன். சுமார் 5000 ஆச்சு. அதுக்கு ஒரே ஒரு சின்ன
டப்பா கிஃப்டா கொடுத்திருந்தாங்க.!!!!

அது முடிஞ்சு மதுரையில் எங்க சித்தியைப் பாக்க போயிருந்தேன்.
மதுரை அக்ரிணி குடியிருப்பில் சித்தி இருக்காங்க. அங்க நிறைய்ய
டப்பர்வேர் கன்ஸல்டண்ட். அங்க போனதக்கப்புறம்தான் எனக்கு
நிறைய்ய தெரிஞ்சது. எங்க சித்தி மெம்பர் ஆனாங்க. இப்ப எங்க
சித்தி ஒரு டப்பர்வேர் மேனேஜர்.


எங்க சித்தி மெம்பரா சேந்ததற்கப்புறம் தான் எனக்கு பல உண்மைகள்
புரிஞ்சது. MRP ரேட்டில் 24 சதவிகிதம் கன்ஸல்டண்டுக்கு போகும்.
இதைத் தவிர இவ்வளவு பணத்துக்கு ஆர்டர் கொடுத்தா ஆக்டிவிட்டி
கிஃப்ட் ஒண்ணும் கிடைக்கும். இது ஒவ்வொரு வாரத்துக்கும் மாறும்.
உதாரணமா இந்த வாரம் 3000 ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தா ஆனியன்
கீப்பர் டப்பா ஃப்ரி. இந்த 3000த்தில் கம்பெனிக்கு கொடுக்க வேண்டியது
2660 தான்!!

எனக்குத் தேவையான பொருட்களை சித்திகிட்ட ஆர்டர் செஞ்சு
வெச்சிடுவேன். இல்லை நான் அங்கு போகும் பொழுது வாங்கிக்குவேன்.
சித்திக்கு கிடைக்கும் கன்சல்டண்ட் ரேட்டிலேயே எனக்கு கிடைக்கும்.
சித்திக்கும் டார்கெட் அச்சீவ் செய்ய ஈசியா இருக்கும். எல்லோருக்கும்
இந்த மாதிரி உறவினர்கள் மெம்பரா இருக்க மாட்டாங்கல்ல!! இருந்தாலும்
தனக்கு வரும் லாபத்தை குறைச்சுக்கவும் சிலர் விரும்ப மாட்டாங்க.
அதனால டப்பர்வேர் பொருட்கள் வாங்கணும்னா இந்த மாதிரி செய்யலாம்.

1. சென்ற பதிவுல ராமலக்‌ஷ்மி பின்னூட்டத்துல சொல்லியிருக்கற
மாதிரி அவங்க இஷ்டப்படி பொருட்களை வாங்காம, எனக்கு என்ன
தேவையோ அதை வாங்கிக்கறேன்னு கண்டிப்பா சொல்லணும்.
அவங்க கிட்ட ஃப்ளையர்னு டப்பர்வேர் புத்தகம் இருக்கும். அதை
வாங்கி நமக்குத் தேவையானதை செலக்ட் செய்யலாம்.

2. அதைத் தவிர சில பொருட்கள் ஆஃபரில் வரும். ட்ராபிகல் ட்வின்ஸ்னு
ஒரு டப்பா இருக்கு அது 4 வாங்கினா 1 இலவசம். இந்த மாதிரி
வாங்கும் பொழுது நமக்கும் லாபம். அந்த சமயத்துல என்ன ஆஃபர்
இருக்குன்னு தெரிஞ்சிகிட்டு அது நமக்குத் தேவைன்னா வாங்குவது
புத்திசாலித்தனம்.


3. அவங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கண்டிப்பா பேசுங்க.
அதாவது எம் ஆர் பியில் டிஸ்கவுண்ட் குறைஞ்ச பட்சம் 10 பர்சண்ட்
வேணும்னு சொல்லுங்க. இரண்டாவதா 3000 அதுக்கு மேலன்னு ஒரே
சமயம் ஆர்டர் செய்தா அதுக்கு உண்டான ஆக்டிவிட்டி கிஃப்டும்
எனக்கு வேணும்னு சொல்லுங்க.



4. இன்னொரு வழி நாமளே மெம்பர் ஆவது. 700 ரூவா கட்டினா
அதுக்கு ஒரு பேக் 3 டப்பர்வேர் சாமான் எல்லாம் கொடுப்பாங்க.
அப்ளிகேஷன் ரெடி செஞ்சு கொடுத்தா நாமும் மெம்பர் ஆகலாம்.
நாம மெம்பர் ஆன 26 சதவிகிதம் நமக்கு கிடைக்கும். நமக்கு
டப்பர்வேர் சாமான்கள் வீட்டுக்கு வாங்கணும் எனும் பொழுது
இதுதான் பெஸ்ட் ஆப்ஷன். MRPயை விட குறைந்த விலையில்
நாம சாமான்கள் வாங்கலாம்.

5. நல்லா புரிந்துகொள்ளும் நட்பு இருக்கறவங்க நாலு பேர் சேர்ந்து
பணம் போட்டு ஒருத்தரை மெம்பராக்கி ஆர்டர் வெச்சு சாமான்கள்
வாங்கிக்கலாம். இதனால குறைந்த விலையில் எல்லோருக்கும்
கிடைக்கும். அதே சமயம் மெம்பரானா தொடர்ந்து ஆர்டர் போடணும்னு
இருக்கறதையும் சமாளிக்கலாம். குறைந்த பட்சம் 2000 ஆர்டர்
போடணும். வாராவாரம். (2000 ஆர்டர் என்றாலும் 1600 தான்
கம்பெனிக்கு கொடுக்கணும்)உடனே வாங்கலாம் எனும் நிலையில்
இருக்கும் தோழிகள், நட்புக்கள் ஒண்ணா சேர்ந்து பலம் பெறலாம்.

6. சில டீலர்கள் மெம்பரானா நீங்க உங்க தேவையின் பொழுது
மட்டும் ஆர்டர் போட்டு வாங்கிக்கங்க, நான் பாத்துகறேன்னு
சொல்வாங்க. அப்படி சொல்லும் பொழுது கறாரா எனக்கு
எப்பத் தேவையோ அப்ப மட்டும் போடுறேன்னு சொல்லி
தோழிகளுக்குத் தேவையான பொழுது ஆர்டர் போட்டு வாங்கிக்கலாம்.
கம்பெனியில வாங்கும் விலைக்கே நாம் தோழிகளிடம்
பகிர்ந்துக்கும் பொழுது நமக்கு லாபம் இருக்காது. ஆனா
குறைந்த விலையில் டப்பர்வேர் சாமான் நாம சேர்க்கலாம்.

7. இப்ப பரிசுப்பொருளா டப்பர்வேர் பொருட்கள் கொடுப்பதில்
நல்ல வரவேற்பு இருக்கு. இந்தப் பொருள் சீக்கிரம் பாழாகாது
என்பதாலும் இதன் மதிப்பு தெரிந்ததாலும் பலரும் இப்ப
கல்யாணம், பிறந்தநாள் எல்லாவற்றிற்கும் டப்பர்வேர் டப்பாக்கள்தான்
தர்றாங்க. சமீபத்தில் நான் கூட என் உறவினருக்கு இப்படி
பரிசளித்தேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மெம்பரானவங்க
எம் ஆர் பி விலைக்கும் குறைச்சலாத்தான் பணம் கட்டி
எடுத்திருப்பாங்க. ஆனா கொடுக்கும் பொழுது நிறைக்க கொடுத்தது
போல இருக்கும்.


இந்த பீகாக் கலெக்‌ஷன் இப்ப சூப்பரா இருக்கு. இதுலயே யானை,
ஒட்டகம் எல்லாம் போட்டும் வருது. கொடுக்கவும் நல்லா இருக்கும்.
MRP 595.

நாமளே மெம்பர் ஆனா டப்பர்வேர் சாமான்களை பரிசளிக்க ரொம்ப
ஈசி. விலையும் குறைவா இருக்கும். தரமான பொருளை பரிசளித்த
திருப்தியும் கிடைக்கும். இப்ப வெள்ளியில் கூட பரிசுப்பொருள்
வாங்க முடிவதில்லை. அதே 500 ரூபாய்க்கு இரண்டு டப்பாக்கள்
மேலே சொல்லியிருக்கும் பீகாக் கலெக்‌ஷன் கொடுக்கலாம். இதை
ஃபிரிட்ஜில் தான் வைக்க முடியாது. மற்றபடி ட்ரை ஸ்டோரேஜாக
உபயோகிக்கலாம்.





இப்ப BUYER'S MARKET தான். அதனால எனக்கு இவ்வளவு பர்சண்ட்
கமிஷன் வேணும்னு தாரளமா கேளுங்க. முன்ன மாதிரி எல்லாம்
இல்ல. எனக்குத் தெரிஞ்சு பலர் இப்ப கம்பெனி ரேட்டுக்கே
கொடுக்கறாங்க. அவங்களுக்கும் பணத்தட்டுப்பாடு இல்லாம இருக்கும்.
அந்த வாரத்துக்கான ஆர்டர் போடவும் வசதியா இருக்கும்னு தான்.
நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட பேசி அப்புறம் நமக்குத் தேவையானதை
மட்டும் வாங்கிகணும். இது ரொம்ப முக்கியம்.

எனக்குத் தெரிஞ்சதை இங்கே பகிர்ந்துகிட்டேன். இன்னும் வேற
ஐடியாக்கள் யாருக்கும் தெரிஞ்சா தயவு செஞ்சு பகிர்ந்துக்கொள்ளும்
படி கேட்டுக்கறேன். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.
நன்றி



35 comments:

வெங்கட் நாகராஜ் said...

டப்பர்வேர் பற்றி டப்பு-டப்புன்னு புட்டு புட்டு வச்சுட்டீங்க சகோ... நல்ல விஷயம்... பகிர்வுக்கு நன்றி....

pudugaithendral said...

வாங்க சகோ,

பதிவு போட்ட உடன் உங்க பின்னூட்டம் :))

வருகைக்கு மிக்க நன்றி

Vidhya Chandrasekaran said...

பருப்பு, மாவு பொருட்களுக்கெல்லாம் நான் MM Oval கண்டெய்னர்களை வைத்திருக்கிறேன். ரெண்டு மாசமானாலும் கெடாம இருக்கு. நல்ல பதிவு.

Appaji said...

வாங்க வேண்டும் ...என ஐடியா உள்ளவர்களுக்கு...இதை விட...தெளிவாக சொல்ல முடியாது....நிறைய விஷயங்கள் பகிர்ந்து உள்ளீர்கள்..."tupper war" நடந்து முடிந்தது போல் உள்ளது...இதை படித்தது!!!

ராமலக்ஷ்மி said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க. வெகு சிலபேர் ஆக்டிவிடி கிஃப்ட்டை உங்களுக்கே தர்றோம்னு அவங்களே சொல்வாங்க. சொல்லியிருக்கும் ஆலோசனைகள் அனைத்தும் பயனுள்ளவை தென்றல். நன்றி.

பால கணேஷ் said...

அட... வர்ற மாசம் 5 கல்யாணங்கள் அவசியம் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு. என்ன கிப்ட் கொடுக்கறதுன்னு (இருக்கற கொஞ்சம்) முடியைப் பிச்சுட்டிருந்தேன். அருமையான சொல்யூஷன் கொடுத்துட்டிங்களே... நன்றிங்க...

வல்லிசிம்ஹன் said...

இப்பதான் பக்கத்து வீட்டு ஷாந்திக்காக ஆயிரம் ரூப்பாய்க்கு டப்பாக்கள் வாங்கினேன். ஒரு டப்பா ஃப்ரீ:)
நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கீங்க. பயனுள்ளதா இருக்கும்.

pudugaithendral said...

வாங்க வித்யா,

சித்திகிட்ட ஆர்டர் செஞ்சது, சித்தி கிஃப்ட் கொடுத்தது, ஆகஸ்ட் மாதம் சித்தி ஃப்ரெண்டுகள் வந்த போது கொடுத்ததுன்னு நிறைய்ய சேர்ந்து போச்சு. டப்பர்வேர் வைக்கன்னே ஒரு கப்போர்ட் செய்யணும் உனக்குன்னு அயித்தான் கிண்டல் செய்யறாங்க. :))

வருகைக்கு நன்றி வித்யா

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

எனக்குத் தெரிஞ்சதை நட்புக்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் தான் எப்பவும். அதுக்குத்தான் இந்தப் பதிவு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

இப்பத்தான் நிலமை மாறியிருக்கு.டப்பர்வேர் பத்தி அவேர்ன்ஸ் வந்திருக்கு. நான் முதன் முதலில் வாங்கிய பொழுது ஆக்டிவிட்டி கிஃப்ட் ஏதும் கிடைக்கலை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கணேஷ்,

எங்க சித்திகிட்டேயிருந்து கிடைத்த ஐடியாதான் இது. கிருஹப்ரவேசம், கல்யாணம், பிறந்தநாள் எல்லாத்துக்கும் டப்பர்வேர்தான் கொடுப்பாங்க. கொடுக்கறவங்களுக்கும் பெருமை, வாங்கிக்கிறவங்களுக்கும் பெருமையா இருக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

சந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

பகிர்வுக்கு நன்றி , இனி வாங்க வேண்டியது தான்

uday said...

ungaludaya seithigal nandraga irukkindrana..member avadhu yeppidi yendru velakkinal nandraga irukum

துரைடேனியல் said...

O.k. Follow panniralaam. Thanks.

கிரி said...

புதுகைத் தென்றல் ரொம்ப பயனுள்ள குறிப்புகள் தந்து இருக்கீங்க.

நான் சென்னையில் இருந்த போது டப்பர் வேர் தான் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன் அது கூட பலர் நன்றாக இருக்கும் என்று கூறியதால் ஆனால் இந்த அளவிற்கு விரிவாக எனக்குத் தெரியாது. என்னுடைய அக்கா இதைத் தான் பயன்படுத்துவார்கள் அவர்களுக்கு இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை அவருக்குக் கொடுக்கிறேன் (லிங்க்)

நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

இனி வாங்க வேண்டியது தான்//

மிக்க சந்தோஷம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க உதய்,

முதல் வருகைக்கு மிக்க நன்றி. எதுல மெம்பரா சேரணும்னு கேக்கறீங்க? இந்த வலைப்பூ நான் தனியாத்தான் எழுதறேன். படிக்க மெம்பர்ஷிப் எதுவும் தேவையில்லை. தொடர்பவர்கள் லிஸ்டில் நீங்க விரும்பினா சேர்ந்துக்கலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க துரை டேனியல்,

மொதல் தடவை என் வலைப்பூவிற்கு வந்திருக்கீங்க மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க கிரி,

உங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

இந்தப் பதிவை தொடர்பவர்களுக்கு ஒரு செய்தி.

டப்பர்வேர் பொருட்கள் எப்படி உபயோகிக்கலாம், என்னென்ன வகைன்னு ஒருத்தர் பதிவெழுதறார். இங்க போய் ஒரு எட்டு பாருங்க

http://tarunak.wordpress.com/2011/11/07/tupperware-citrus-peeler/

goma said...

நானும் ஒரு 10 வருஷமா டப்பர்வேர் ஏஜண்ட் ...என்ன பிரயோஜனம் தயாள மனசோட எல்லோருக்கும் டிஸ்கௌண்ட் ரேட்டிலேயே வாங்கிக் கொடுத்து.....
நமக்கெல்லாம் பிசினஸ் திறமையே கிடையாதுங்க.....

என் இல்லத்தரசனுக்கு ஆகாத ஒரு பொருள் உண்டென்றால் அது இந்த டப்பர்வேர்தான்

ராமலக்ஷ்மி said...

//இங்க போய் ஒரு எட்டு பாருங்க //

தளத்தை புக் மார்க் செய்து கொண்டேன்:)! எந்தெந்த வாரம் என்னென்ன ஆஃபர்னும் சொல்றாங்க பாருங்க. இங்கே செய்து விட்டு வேண்டுவதை நம் டீலர்களிடம் வாங்க ரொம்ப வசதி.

இன்னொரு முறை நன்றி:)!

pudugaithendral said...

வாங்க கோமா,

நலமா, ஆனா டார்கெட் அச்சீவ் செய்ததற்காக பரிசுகள் கிடைத்திருக்கணுமே. எங்க சித்தி சமீபத்தில் மைக்ரோ அவன் ப்ரைஸ் அடிச்சாங்க. :))

எங்க சித்தப்பாவுக்கும் டப்பர்வேர் பிடிக்காது. காரணம் எந்த நேரமும் வீட்டுல ஆளுங்க வந்து போன மனியமா இருப்பாங்க. சித்தியும் பிசியா இருப்பாங்கன்னுதான்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராமால்க்‌ஷ்மி,

நான் அந்த வலைப்பூவை மெயிலில் தொடர ஆரம்பிச்சிட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி

துளசி கோபால் said...

தெரிந்தபெயர் தெரியாத விவரங்கள்!!!!! பேஷ் பேஷ்

ஆஹா.....யானை போட்டது நமக்கு நாலு பார்ஸேல்!!!!!!!!!!!!!!!!


நல்லா உழைக்குதுன்றது உண்மைதான். நம்ம வீட்டுலே 26 வயசுள்ளதுகள் நிறைய இருக்கு:-)))))

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

நலமா. நெஜமாவே யானைப்போட்ட அந்த டப்பாவை பார்த்த பொழுது உங்க ஞாபகம் தான் வந்துச்சு. உங்களுக்கு யானைகள்னா ரொம்ப இஷ்டமில்ல. பத்திரமா ஒரு பக்கம் எடுத்து வெச்சிடறேன். நீங்க இந்தியா வரும்பொழுது தர்றேன். :))

வருகைக்கு நன்றி

kaialavuman said...

சென்ற பதிவிலேயே விளக்கமாக எழுதுவதாகக் கூறியிருந்தீர்கள். நல்ல விளக்கங்கள். நன்றி.

pudugaithendral said...

நன்றி வேங்கட ஸ்ரீநிவாசன்

ஹுஸைனம்மா said...

டப்பர்வேர் என்பது பிளாஸ்டி டப்பா போலத்தான் என்று நினைத்த்டிருந்தேன். வண்டு, புழு, பூச்சி வராது என்பது புதுத் தகவல்.

பிஸினஸ் ஆப்ஷனும் இருக்கு போல!

//கொடுத்ததுன்னு நிறைய்ய சேர்ந்து போச்சு. //
யாமிருக்க பயமேன்? :-))))

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா நலமா.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சுரேகா.. said...

நல்ல யோசனைகள்!

செயல்படுத்திருவோம்..!!

pudugaithendral said...

வாங்க தலைவரே,

நலமா?

வருகைக்கு நன்றி

CS. Mohan Kumar said...

நிறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிஞ்சது ! மிக பயனுள்ள பதிவு !

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மோகன் குமார்