Friday, November 25, 2011

EXPRESS YOURSELF!!!!

ஒருத்தரோட பேசும் பொழுது தன்னுடைய வெளிக்காட்டாம சிலர் இருப்பாங்க.
சிலர் முகம் முழுதும் சிரிப்போட பேசுவாங்க. சிலரோ உம்மணாமூஞ்சியா
இருப்பாங்க. ஆனா மொளனச்சாமியாரா இருக்கறவங்கதான் நல்லவங்கன்னோ,
லொடலொட பார்ட்டி கெட்டவங்கன்னோ முடிவு செய்திட முடியாது. தன்னை
மொத்தமா வெளிக்காட்டிக்காம அளவோட அளவளாவறவங்கதான் ஜாஸ்தி.
அதனால இவங்க இப்படி பட்டவங்கன்னு நம்மளால முடிவு செய்ய முடியாது.


ஆனா இப்ப எல்லா இடத்துலயும் EXPRESS YOURSELF!வாக்கியம் தான்
அகத்தின் அழகு முகத்துலன்னு சொன்னதுலாயோ என்னவோ இணைய
தளத்துல முகநூலை பயன் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. உங்க மனசுல
இந்த நிமிஷத்துல என்ன ஓடுதுன்னு சொல்லுங்க!ன்னு அவங்க இடம்
கொடுத்து நமக்கான பக்கத்தை திறந்து வெச்சு அதில் நம் உணர்வை
சொல்வதுன்னு இருக்கு. ஆனா அதுக்காக ஒரு வரையறை இல்லாம
சொல்லிட முடியாது. ஃபேஸ்புக்ல (உடம்பு முடியலைன்னு) லீவ் போட்டு டூர் போயிட்டு வந்த போட்டோவைப்பார்த்த அதிகாரி உடனடியா அந்த பொண்ணை வேலையை
விட்டு நீக்கி இருக்காரு. நாங்கல்லாம் டாடா பை பை போறோம்னு ஸ்டேட்ஸ்
மெசெஜ் போட்டுட்டு போனவங்க வூட்டுல கள்ளன் உள்ள புகுந்த கதைன்னு
இருக்கு.


எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியர் ஃபேஸ்புக்கில் தான் இல்லைன்னு சொன்னார்.
காரணம் கேட்டப்ப ,”என் ஸ்டூடண்ட்ஸ் ஏதாவது கமெண்ட் போட்டு, அதுக்கு
நான் பதில் சொன்னாலும் தப்பு, பதில் சொல்லவில்லைன்னாலும் தப்பு.
அதனாலேயே அக்கவுண்ட் வெச்சுக்கலைன்னு சொன்னார். :)) இதுவும் சரி.
60 வயதான தாத்தா ஒருத்தர். அட இந்த உலகம் புதுசா இருக்கு. என்
வெறுமையை போக்குது. ஆனா நான் யாரோட நட்பு கொள்ளனும் என்பதில்
உறுதியா இருக்கேன். ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்வதில்லைன்னு” சொன்னார்
இதுவும் சூப்பர். நமக்கு என்ன தேவை, எப்படி இருக்கணும் என்பதை நாம
தான் முடிவு செய்துக்கணும். எதுவும் அளவுக்கதிகமாகி அவதிப்படாமல்
இருப்பது நல்லது.



மைக்ரோப்ளாகிங்னு அழைக்கப்படற டுவிட்டரில் மெசெஜ் ரசிக்கறாப்ல
கொடுக்கறாங்க. சில விகடன் புத்தகத்துல கூட இடம்பெருது. ஆனா
அங்கயும் சிலர் வாயக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கிறா மாதிரியான
சம்பவங்கள் இருக்கு. நடிகை, நடிகர்கள் மட்டுமில்லாமல் சாதாரண
மக்களும் ஒருத்தருக்கு ஒருத்தட் அடிச்சிக்கறது நடக்கது.

நம்ம வலைப்பூக்களும் இதில் விதிவிலக்கல்ல. இங்கயும் நம் உணர்வுகளை
பதிவிடுகிறோம் என்றாலும் பல நல்ல விஷ்யங்களுக்காகவே நடத்தப்படும்
வலைப்பூக்களும் உண்டு. பத்திரிகையில் படிப்பதையும் விட அதிக அளவில்
கதை, கவிதை, கட்டுரைன்னு நாம வாசிக்க இப்ப இணையம் ஒரு நல்ல
இடம். எல்லா இடத்துலயும் நம்ம மனசுல பட்டதை அப்படியே சொல்வதை
விட எதை எங்கே எப்படி சொல்லனுமோ அப்படி சொல்லனும்.
EXPRESS YOURSELF! அப்படின்னு சொல்லிட்டாங்களே என்பதற்காக எதை
வேணா சொல்லிட முடியாது. இணையம் மட்டுமில்ல எங்கேயும் ரொம்ப
ஓபனா இருப்பது சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கற மாதிரியான
அனுபவத்தை கொடுத்துவிடும்.

அதற்காக ரொம்ப மூடியாவும் இருந்திரக்கூடாது. எதையும் அளவோட
வெச்சுப்பது அவசியம். எனக்கு இந்த ஃபேஸ்புக்கெல்லாம் தெரியாது.
டுவிட்டர்லாம் வேணாம், அப்படின்னு புலம்புவதை விட சரியா,
முறையா தெரிஞ்சுகிட்டு அளவோட இருந்தா நல்லது. பர்சனல்
டீடெய்ல்ஸ், மொபைல் நம்பர் எல்லாம் பொதுவுல கொடுக்காம
இருப்பதே நல்லது. (இதுல ஆண்/பெண் பேதமெல்லாம் இல்லை)

முகநூல் குழந்தைகள் உபயோகப்படுத்துவது பற்றி பேரண்ட்ஸ்கிளப்பில்
பதிவு எழுதியிருக்கிறார் நண்பர் செல்வகுமார். ரொம்ப உதவியா
இருக்கும். மொத்தம் 3 பாகம் இருக்கு. நேரம் கிடைக்கும் பொழுது
படிச்சு பாருங்க.

நம்மை முழுதுமாக நம் குடும்பத்தினரிடம் மட்டும் வெளிப்படுத்திக்
கொள்வோம்.

இனிய வார இறுதி



HAPPY WEEKEND

17 comments:

பால கணேஷ் said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். நமக்கான எல்லைகளை நாம் சரியாக நிர்ணயித்துக் கொண்டு விட்டால் எங்கும் பிரச்னை இல்லை. அவசியமான கருத்துப் பகிர்விற்காக தென்றலுக்கு ஒரு சல்யூட்!

துளசி கோபால் said...

Well said!

Unknown said...

நன்றி..
அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
http://mydreamonhome.blogspot.com

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் கணேஷ்

pudugaithendral said...

மிக்க நன்றி துளசி டீச்சர்

pudugaithendral said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி வினோத். நாங்களும் வர்றோம். நீங்களும் அடிக்கடி வாங்க. :))

அன்புடன் மலிக்கா said...

மிகச் சரியாகச் சொல்லியிருக்கீங்க.தென்றல் அவசியமான கருத்துப் பகிர்வு..

ADHI VENKAT said...

நல்ல பகிர்வுங்க. சரியா சொல்லியிருக்கீங்க.

வெங்கட் நாகராஜ் said...

அழகாய் சொல்லி இருக்கீங்க சகோ.. தேவையான பகிர்வு....

pudugaithendral said...

நன்றி மல்லிக்கா. நலமா?

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி

pudugaithendral said...

நன்றி சகோ

நட்புடன் ஜமால் said...

True ...

"Express Yourself"
but by
"not hurting even yourself" ...

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

pudugaithendral said...

சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ஜமால். மிக்க நன்றி

ஷர்புதீன் said...

nice article !