Friday, December 23, 2011

color of the year 2012!!!!!!!!!!

நாலஞ்சு வருஷமாத்தான் எனக்கு ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு கலர்
இருக்குன்னு தெரியும். (டீவி9 புண்ணியம்) ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் மாதம் Pantone அறிவிக்கும் கலர் பற்றி தெரிஞ்சுக்க ஆவலா
இருப்பேன்.

நம்ம அழகர் ஆற்றில் இரங்கும் பொழுது கட்டி வரும் ஆடையை
வெச்சு அந்த வருஷ மழை, மகசூல் பத்தி சொல்வாங்கன்னு
அவ்வா சொல்வாங்க.

இந்த முறை திருக்கார்த்திகையின் போது எங்கம்மா இங்க
இருந்தாங்க. திருவண்ணாமலை ஜோதியின் போது க்ஷணநேரத்திற்கு
ஆடி வரும் அர்த்தநாரீஸ்வரர் கட்டிவரும் ஆடை வெச்சு
இனி வரப்போகும் காலத்தை பத்தி சொல்வாங்கன்னு அம்மா சொன்னாங்க.

Pantone நிறுவனம் வரப்போகும் 2012 ஆம் வருடத்திற்கு ரொம்பவே
அழகான ஒரு கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. அழகு கொஞ்சும் அந்த
கலருக்கு பெயர் “Tangerine Tango” :))


சிவப்பு கலந்த இந்த ஆரஞ்சு வர்ணம் தான் வரும் வருடத்தை
ஆளப்போகிறது.


இந்த நிறம் ரொம்ப ஆழமானதா சொல்றாங்க இந்த நிறுவனத்தினர்.
இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் கலந்திருப்பதா தெரிஞ்சாலும் வேறு
சில வர்ணங்களையும் தனக்குள்ளே வெச்சிருக்கு.

அந்திநேரத்துச் சூரியனின் சிவப்போடு, மனதுக்கு இதத்தையும்
நட்பான பாவனையும் தரும் இளம் மஞ்சளையும் தனக்குள்
வெச்சிருக்கு. அதாவது சுருக்கமா சொன்னா
இந்த நிறம் HEAT AND ENERGYயின் அடையாளம்.



பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பனிமூட்டத்தை நீக்க
இந்த நிறம் உதவும்னு Pantone நம்புது. மூடு பனியை
மெல்ல விலக்கி நமக்கு சரியான பார்வையை தர
சூரியனின் வெளிச்சம், சூடு, சக்தி வேண்டுமே.
அருமையான தேர்வுதான்.

இந்த நிறத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நமக்கு மிகவும்
பரிச்சயமான ஒரு மலரின் வர்ணம் ஞாபகத்திற்கு வருது.
ஆமாம். கனகாம்பரம். இந்த பூவுக்கு வாசமிருக்காது.
அதனால எனக்கு பிடிக்காது. ஆனா அந்தக் கலர்
மயக்கும் அழகு.

இந்தக் கலரில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வீட்டுல வெச்சுக்கோங்க.
(புடவை, சுடிதார்லாம் வாங்கினாகூட தப்பில்லை.) தோட்டம் போட
வசதி இருக்கறவங்க கனகாம்பரச் செடி வளர்க்கலாம். தினம் இந்தக்
கலர் கண்ணில் படுவது போல இருந்தால் மனதுக்கு நல்லது.

இதோ வரப்போகிறது கிறிஸ்துமஸ் தினம். எனக்கு மிகவும்
பிடித்த ஒரு பண்டிகை. தொழுவதில் எனக்கு எந்த வேறு பாடும்
இல்லை. இறைவன் ஒருவனே என்பது என் அப்பா எனக்கு
சொல்லித் தந்தது.






என்னை மறக்கச் செய்யும் கானகந்தர்வன் குரலில் இந்தப் பாடல்
கேட்கும் பொழுது இன்னும் இளகும் மனது.



நட்புக்களுக்கும், உடன் பிறப்புக்களுக்கும் என் மனமாந்த
கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா பதிவு போட்டதன் காரணம் ஹி ஹி... ஒரு வாரம் லீவு.


8 comments:

kaialavuman said...

//ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு கலர்
இருக்குன்னு தெரியும்//

தகவலுக்கு நன்றிகள்.

Appaji said...

தங்கள் ப்ளாக் மூலம்....அனைவருக்கும்...கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ...

கே. பி. ஜனா... said...

வண்ண மயமான புது வருட வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

அந்தக் கலர் எனக்கு மிகப் பிடித்த கலர் என்பதால் சந்தோஷமாக உள்ளது- தகவலுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

//சிவப்பு கலந்த இந்த ஆரஞ்சு வர்ணம் தான் வரும் வருடத்தை
ஆளப்போகிறது.//

அழகான வண்ணம். எனக்குப் பிடித்த ஒன்றும்:)!

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விழாக்கால வாழ்த்துகள்:)!

ADHI VENKAT said...

அழகான நிறம். நல்லது செய்தால் நன்று.

அனைவருக்கும் கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

காற்றில் எந்தன் கீதம் said...

Wish you and your family a very happy new year...
may this 2012 bring all the happiness you wish

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வேங்கட ஸ்ரீனிவாசன்,

வருகைக்கு நன்றி அப்பாஜி

நன்றி ஜனா

நன்றி கணேஷ்,

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி கோவை2தில்லி

நன்றி சுதர்ஷினி