ஒவ்வொரு வசந்தத்தையும் வரவேற்க ஒவ்வொரு வகை பண்டிகை.
இதமான குளிர் காலத்தில் இயற்கையை பூஜிக்கும் பண்டிகை
தைத்திங்கள் முதல் நாளில். இங்கே ஆந்திராவில் சங்கராந்தி
என்று கொண்டாடுகிறார்கள்.
முதல் நாள் போகி:
தமிழகத்தில் கொண்டாடுவதைப்போலவே பழையவற்றை எரித்து
வீட்டைச் சுத்தாமாக்குவார்கள். 'Bhogi Pallu' இது
பலவிதமான சின்ன பழங்கள் (எலந்தை, நெல்லி, திராட்சை
போன்றவற்றை) வைத்து சின்னக்குழந்தைகள் தலையில்
கொட்டி போகிபண்ட்லு செய்வார்கள். சில சில்லறைகளையும்
பழங்களுடன் போடுவார்கள். இப்படிச் செய்வதால் குழந்தைகளுக்கு
நல்ல ஆயுள், ஐஸ்வர்யம் சேரும் என்று நம்பிக்கை.
படம் நெட்டில் சுட்டது)
சங்கராந்தி:
சூரியனை பூஜிக்கும் பொங்கல் திருநாள். பொங்கல்நாளிலிருந்து
உத்தராயணம். புது அரிசியில் செய்த பொங்கலுடன்
அதிரசம், கர்ஜிக்காய் என பல வகை ஸ்வீட்கள் செய்வார்கள்
ஆந்திராவில். சுற்றமும் நட்பும் கூடி களித்து பட்டம் விடுவார்கள்.
கனும: மூன்றாம் நாள் கனும. இன்று நம் மாட்டுப்பொங்கல்
போல கோமாதாவிற்கு பூஜை நடக்கும்.
இந்த பொங்கல் சமயத்தில் கலர்கோலம், ரங்கோலி போட்டு
அதன் நடுவில் பசுஞ்சாணம் வைப்பது கட்டாயம் இருக்கும்.
அந்த பசுஞ்சாணத்தை ”கொப்பில்லு” என்பார்கள். MUTHYALA MUGGU
அதாவது முத்தைப்போன்ற அழகான கோலம். அதன் நடுவே
கொப்பில்லு.
நம் ஊரில் பூம்பூம்மாட்டுக்காரர் என பிள்ளைகள் கொண்டாடுவார்களே
அது இங்கேயும் உண்டு. நாதஸ்வரம் இசைத்த படி பொங்கல் சமயத்தில்
கண்டிப்பாய் வீடு வீடாக வருவார்கள்.
சில வீடுகளில் முக்கியமாக ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள்
(தெலங்கானா, ராயலசீமா பகுதிகளும் இருக்கு) இந்த சமயத்தில்
தான் பொம்மை கொலு வைப்பார்கள். (சிலர் தீபாவளிக்கு
வைப்பார்கள்)
இயற்கைக்கு நன்றி சொல்லும் இந்த பண்டிகை அனைவருக்கும்
மனதை இதத்தை கொடுத்து, பேதத்தை தவிர்த்து
பொங்கிடும் பாலைப்போல நம் மனதும் சந்தோஷத்தில்
பொங்கி, தித்திக்கும் பொங்கலைப்போல வாழ்வும்
இனிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
7 comments:
தை மகளை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி கணேஷ்
இனிய பொங்கல் வாழ்த்துகள்! நலமா நீண்ட நாள் ஆச்சு நான் உங்க வலைப்பூ வந்து!
என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
சங்கராந்தி என்றே இந்த வீட்டுப் பாட்டி சொல்வார். ரதம் போல கோலம் போடச் சொல்வார்.
அருமையான ஹைதைப் பொங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி தென்றல். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஷைலஜா,அருணா,வல்லிம்மா, கோவை2தில்லி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment