Tuesday, January 17, 2012

பொங்கல் புகைப்படங்கள்

எல்லார் வீட்டிலும் நல்லபடியா பால் பொங்கிச்சா?
எங்க வீட்டிலும் இந்த புத்தாண்டின் முதல் பண்டிகை நல்லாவே
நடந்ததுச்சு. பசங்களுக்கும் 3 நாள் லீவு, அயித்தானுக்கு 2 நாள்
லீவுன்னு இருந்ததால ரொம்பவே நல்லா இருந்தது.

போகி அன்னைக்கு முதல் நாளே எங்க அம்ருதம்மா என்ன
கோலம் போடப்போறோம்னு ஒரே நச. 6 மாசமா எங்க
அம்ருதம்மாவுக்கு கோலம் மேல ஒரு ஈடுபாடு வந்திருக்கு.
காலையில் சில சமயம் அவங்கதான் வாசலில் கோலம்
போடறாங்க. கலர் கோலப்பொடி வாங்க போனப்ப
பசுஞ்சாண உருண்டை 5 அது மேல ஜிகினாதூள் தூவி
விப்பதை பாத்தேன். 5 உருண்டை 10 ரூவா.
அடக்கொடுமை மார்க்கெட்டுக்கு எது கிராக்கியோ
அத்தனையும் விலை பேசி வாங்கிட முடியுதேன்னு
நினைச்சுகிட்டே அலுமினியம் ஃபாயில் டப்பாவில் ஒண்ணு
கொண்டாந்தேன். போகி அன்னைக்கு கலர் கோலம்
போடலாம்னு பொடியெல்லாம் வாங்கியாந்து சின்ன சின்ன
டிஸ்போஸபிள் கப்புகளில் போட்டு கோலமாவு கலந்து,
(எங்க அம்மா ஆத்து மணலை சலிச்சு கலரில் கலந்தது
ஞாபகத்துக்கு வந்தது) கோலம் போடலாம்னு 9 மணிக்கு
கதவைத் திறந்தா................. சில் அல்லவான்னு
குளிர் காத்து!!!!!!!!!அடுத்த நாள் காலையில் எழுந்து கோலம் போடுவதற்கு
பதில் நான் முதல் நாளே கோலம் போட்டு விடுவேன்.
ராத்திரி செம குளிர். ஆனாலும் சரின்னு கோலம்
போட்டோம். புள்ளி வெச்சு கோலம்னு அம்ருதம்மா
முடிவு செஞ்சிருந்தோம். என்னென்ன கலர்னு நானும்
அம்ருதம்மாவும் பேசி முடிவு செஞ்சு போட்டோம்.
உடனே அப்பாவை கூப்பிட்டு போட்டோ எடுக்கச் சொன்னாங்க.
இந்த கோலத்துக்கே 1 மணிநேரம் ஆனுச்சு. ரொம்ப
குளிரா இருக்கு. இப்பவே 14 டிகிரி. போதும் உள்ள
வாங்கன்னு அயித்தான் திட்டிகிட்டு இருந்தாங்க.

போகிக்கு போளி செய்யாட்டி எப்படி? சின்ன வயசுல
அம்மாவுடைய ஒன்றுவிட்ட பாட்டி குடியிருந்த வீட்டுல
இரண்டு சமையல்கட்டு. அதுல ஒரு சமையல் கட்டுல
நித்திய சமையல் நடக்கும். பலகாரங்கள் எல்லாம்
இன்னொரு சமையல்கட்டுல செய்வாங்க. எனக்குத்
தெரிஞ்சு அங்க அதிகமா போளி செய்வதை பாத்திருக்கேன்
என்பதால அந்த சமையல் கட்டிற்கே” போளி செய்யும்
சமையல்கட்டு” என பெயர் வைத்திருந்தேன்.போளிக்கு மேல் மாவு 6 மணிக்கே பிசைஞ்சு வெச்சாச்சு.
அப்புறம் மெல்ல பூரணம் செஞ்சேன். பசங்க இரண்டு
பேரும் வெல்லம் இடிச்சு கொடுத்தாங்க.( அடுத்த நாள்
பொங்கலுக்கும் சேர்த்து). சமையல் சிம்பிளா செஞ்சேன்.
பருப்பு வடை செஞ்சு ரசத்துல போட்டிருந்தேன். சூப்பரா
இருந்தது. போளி செய்ய ஆரம்பிச்சப்போ அயித்தானும்
வந்து ஹெல்ப் செஞ்சாக. நான் ஒத்தி கொடுக்க அவுகளும்
பிள்ளைகளுமா சேர்ந்து சுடறதும் சாப்பிடறதும்னு செஞ்சு
அப்புறம் பக்கத்துலேயே நின்னு சுட்டு எடுத்தாங்க.

எங்க வீட்டுல நாளு கிழமைன்னு ஒரு பாலிசி.
எனக்கு அடுப்பாங்கரையில வேலை அதிகமா இருக்கும்னா
அயித்தானும் பிள்ளைகளும் மத்த வேலையை பகிர்ந்து
செய்வாங்க. துணி துவைக்க போட்டு, காயப்போட்டு,
பாத்திரம் கவுத்துன்னு அவுக பாத்துக்கிடுவாக.
பொங்கல் அன்னைக்கு கோலம்:

கோலம் போடலாமா வேணாமான்னு யோசிக்கும்
அளவுக்கு குளிர். கதவைதிறந்து கோலம் போட
உட்கார முடியலை. முதல் நாளைவிட ரொம்பவே
சில்லுன்னு காத்து!!!!!!!! கோலமாவை எடுத்து
போட கை வெரெச்சு போகுது. கலர் எல்லாம்
கொடுத்து முடிச்சு கை கழுவ தண்ணி திறந்தா
ஐஸ்கட்டி மாதிரி தண்ணி ஜில்லுன்னு வருது.
அதுல கை கழுவி குளிர் இன்னும் அதிகமாச்சு.
(இன்றைய பேப்பரில் கொடுத்திருக்காங்க
பொங்கல் சமயத்தில் ஹைதையில் குளிர்
அதிகமாக இருந்ததுல 1 உயிர் பலின்னு!!)

பொங்கல் பானை, கரும்பு போட்டது அம்ருதம்மா.
நானும் மகளுமா சேர்ந்து கலர்போட்டோம்.அடுத்த நாள் பொங்கல். அம்மா 9 மணிக்குள்ளாற
பொங்கல் வைக்கணும்னு சொல்லியிருந்தாங்க. சீக்கிரமே
எழுந்து குளிச்சு, புத்தாடை கட்டி பொங்கப்பானை
ரெடி. அதுக்கு முன்னாலேயே காய், பருப்பு வேக
வைச்சு வெச்சிருந்தேன். பால் பொங்கியதும் அரிசியை
போட்டு பொங்கல் வெச்சுகிட்டே சாம்பார், எலுமிச்சம்
ரசம் செஞ்சாச்சு. பொங்கலுக்கு சூப்பர் ஜோடியா
கொத்தமல்லி,கறிவேப்பிலை சட்னியும் ரெடி.
அன்னைக்கு மெதுவடை. பால்கனியில் சூரியன்
படம் வரைந்து சூரியனுக்கு பூஜை செஞ்சோம்.
நிவேதனம் வெச்சு முடிச்சு உறவுகள் நட்புக்களுக்கு
போன் போட்டு பேசிட்டு சாப்பிட்டோம்

பால்கனியில் பூஜை:


சாப்பிட்டு எல்லாரும் நல்லத்
தூக்கம். 3 மணிக்கு அலாரம் வெச்சு எழுந்து ”கோ”
படம் பாத்தோம். ரொம்ப ரசிச்சேன். தெலுங்கிலயும்
இந்தப் படத்தை கொண்டாடியது தப்பே இல்லை.
நல்ல கதை, நல்ல நடிப்பு, நல்ல போட்டோகிரபின்னு
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

காலையிலேயே அப்பார்ட்மெண்ட்ல இருக்கறவங்க
வீட்டுக்கெல்லாம் பொங்கல் அனுப்பியாச்சு. சாயந்திரமா
சில நட்புக்கள் வீட்டுக்கு போய்வந்து திரும்ப டீவி
முன்னாடி உக்காந்த பசங்க.

அடுத்த நாள் காணும் பொங்கல் மெனு
புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்சாதம்,
அவியல், அப்பளம் அம்புட்டுதான். இப்படியாக
இந்த வருட பொங்கல் திருநாள் நல்லபடியா
முடிஞ்சது.

11 comments:

அமைதிச்சாரல் said...

பொங்கல் அமர்க்களமா கொண்டாடியாச்சா :-)

இனிய வாழ்த்துகள்.

கணேஷ் said...

பக்கத்தில் இருந்து நானும் பொங்கல் கொண்டாடியது போல ஒரு உணர்வைத் தந்தது தங்களின் விவரிப்பு. அருமை.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அமைதிச்சாரல்,

பசங்களும், அயித்தானும் ஜாமாய்க்க வெச்சிட்டாங்க.

வருகைக்கு வாழ்த்திற்கும் நன்றிப்பா

புதுகைத் தென்றல் said...

வாங்க கணேஷ்,

செஞ்சது சாப்பிட்டதுன்னு சொல்லாட்டி செஞ்சு சாப்பிட்டதுல அர்த்தம் இல்ல பாருங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

அட, அம்மாவும் புள்ளையுமா போட்ட கோலங்கள் அசத்தலாருக்கு!! குளிர் மட்டும் இல்லைன்னா, இன்னும் பெரிசா கோலங்கள் கிடைச்சிருக்கும், இல்லையா?

எல்லாருமாச் சேந்து செஞ்ச போளி... ஸ்ஸ்.. நாக்கு ஊறுது..

ம்ம்.. அமர்க்களமான பொங்கல் போல!!

//சாப்பிட்டு எல்லாரும் நல்லத்
தூக்கம். 3 மணிக்கு அலாரம் வெச்சு எழுந்து //

இதுதான் கொஞ்சம் ஓவராத் தெரியுது!! :-))))))

வல்லிசிம்ஹன் said...

அமிர்தாம்மா போட்ட கோலங்கள் சூப்பர். இந்தக் குளிரிலயும் தமிழ்ப் பொங்கல் ஹைதையில் மணத்திருக்கும்!!குடும்ப ஒத்துழைப்புதான் கலகலப்புக்குக் காரணம். கோ'' படம் பார்க்காம விட்டுட்டேனே.பொங்கலன்னிக்கு ஒரே ஆஸ்பத்திரிப் படங்கள் .ஆஷிஷ் அண்ணாவுக்கும் அமிர்தா அம்மா அவங்க அம்மா அப்பா எல்லாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பொங்கல் நினைவுகள் அருமை.
கோலம், பொங்கல் படங்கள் அருமை.
போளி செய்ய குடும்பத்தில் எல்லோரும் உதவியது மகிழ்ச்சி.
பண்டிகை இனிக்க வேண்டும் என்றால் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து வேலைகளை சந்தோஷமாய் பகிர்ந்து கொள்ளும் போது தான்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா

//எல்லாருமாச் சேந்து செஞ்ச போளி... ஸ்ஸ்.. நாக்கு ஊறுது..

ம்ம்.. அமர்க்களமான பொங்கல் போல!!//

போளி சாஃப்டா வந்துச்சு. செய்யும் பொழுதே பூரி போல உப்பியதை பாக்க சந்தோஷம். மொத்து மொத்துன்னு இல்லாம மெலிசா செஞ்சிருந்தேன். எல்லாமே அமர்க்களம் தான்

//சாப்பிட்டு எல்லாரும் நல்லத்
தூக்கம். 3 மணிக்கு அலாரம் வெச்சு எழுந்து //

இதுதான் கொஞ்சம் ஓவராத் தெரியுது!! //

ரொம்பவே ஓவர்னு தெரியுது. :)) உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டுங்கும் பொழுது வேலை செஞ்சு களைப்புல உண்டதக்கப்புறம் உறங்கிட்டா பார்க்க நினைச்ச படம் மிஸ் ஆகிடுமே. (தெலுங்குலயாவது பாத்திடணும்னு நினைச்சேன் முடியலை)

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

!குடும்ப ஒத்துழைப்புதான் கலகலப்புக்குக் காரணம்.//

ஆமாம்மா அதுதான் உண்மை. உங்க வாழ்த்தை சொல்லிடறேன். வருகைக்கு ரொம்ப நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

அயித்தான் பசங்களுக்கு அப்படித்தான் பழக்கி வெச்சிருக்காரு. அவரும் கூடமாட செய்வாரு. நம்ம உடம்பும் லோ லோ பீபி ஆகிடும் அதனாலேயே ரொம்ப பத்திரமா பாத்துக்குவாரு. :))

வருகைக்கு ரொம்ப நன்றி

கோவை2தில்லி said...

பொங்கல் கொண்டாட்டம் அசத்தலாயிருக்குங்க....

படங்கள் சூப்பர்...

அம்ருதாவின் கோலம் அழகாயிருக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க.