Tuesday, January 31, 2012

CHEESE MACRONI

எங்க அம்ருதம்மா பிறந்தநாள் அன்னைக்கு இதுதான் செஞ்சு கொடுத்தேன்.
ஜூஸி ஜூஸியா வெஜிடபிள்ஸ் இல்லாம வேணும்னு அம்ருதம்மா
ஆர்டர் செஞ்சிருந்தாங்க. ரெசிப்பி தெரியாதவங்களுக்காக இங்கே
கொடுக்கறேன்.

தேவையான பொருட்கள்:
எல்போ மேக்ரோனி - 2 கப்
ப்ராஸஸ்ட் சீஸ் - துறுவியது 1/2 கப்.
மைதா மாவு - 2 ஸ்பூன்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள்( கறுப்பு மிளகுத்தூள் போட்டாலு வித்தியாசம் தெரியாது) கொஞ்சம்.
பார்ஸ்லி இலைகள் (காய்ந்தது) கொஞ்சம்.
ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்.

எல்லாம் ரெடியா வெச்சுகிட்டாச்சா. இனி எப்படி
செய்வதுன்னு பாப்போம்.

முதல்ல இந்த மேக்ரோனியை வேக வெச்சுக்கணும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணியை வெச்சு தட்டை
போட்டு மூடி அடுப்புல வெச்சா தண்ணி டான்ஸ்
ஆடும் (அதான் கொதிப்பது) சமயத்துல் கொஞ்சம்
உப்பு, 1 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து
அதில் இந்த மெக்ரோனியை சேர்த்து ஒரு தடவை
நல்லா கலக்கணும். இல்லாட்டி ஒரே இடத்துல
செட்டிலாகி கூட்டு குடும்பமா போயிடும்.

6 நிமிஷத்துல நல்லா வெந்திடும். எடுத்து
வடிகட்டில வடிகட்டும் பொழுதே பைப்லேர்ந்து
பச்சைத் தண்ணி (பச்சைக்கலர் தண்ணியான்னு
கேக்கக்கூடாது) மேலே விழும்படி செஞ்சோம்னா
மெக்ரோனி அதிகம் வெந்திடாமா, அதே சமயம்
ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம இருக்கும். அதை
அப்படியே வடிகட்டில போட்டு அடியில ஒரு
பாத்திரத்தை வெச்சிட்டு வாங்க. அடுத்த
வேலை பாப்போம்.

சீஸ் மெக்ரோனிக்கு ரொம்ப முக்கியம் வொயிட் ஸாஸ்
தயாரிப்பதுதான். ஒரு கடாயில் கொஞ்சம் பட்டர்
போட்டு, அதில் இந்த மைதாமாவைப்போட்டு
கொஞ்சம் வறுக்கணும். (ஹோட்டலில் இதோடயே
பாலை சேர்த்து கொதிக்க வைப்பாங்க) எனக்கு
அப்படி செய்யும் பொழுது கட்டிதட்டிடும். அதனால
பாலில் வறுத்து வைத்திருக்கும் மைதாவை போட்டு
நல்லா கலக்கி அடிச்சு அதை தவாவில் ஊற்றி
கொதிக்க விட்டேன். ஆனாலும் பாருங்க கொஞ்சம்
கட்டி தட்டிச்சு. சரின்னு வடிகட்டி திரும்ப கொதிக்க
விட்டேன். அத்துடன் துறுவிய சீஸ் சேர்த்து திக்காகும்
வரை கலக்கினால் வொயிட் ஸாஸ் ரெடி.

அடுத்து வேறொரு கடாய் எடுத்து அதில் ஆலிவ்
ஆயில் சேர்த்து சூடானதும் வேக வெச்சு வெச்சிருக்கும்
மெக்ரோனியைச் சேர்த்து இந்த வொயிட் ஸாஸையும்
சேர்த்து நல்லா கலக்கணும். கொஞ்சமா உப்பு,
மிளகுத்தூள் (ஜாஸ்தி போட்டுடாதீங்க) பார்ஸ்லி
இலை எல்லாம் சேத்து கலக்கி இறக்கிட்டா சீஸ் மெக்ரோனி
ரெடி.


விரும்பினா வேகவெச்ச சோளத்தை கொஞ்சமா
சேத்துக்கலாம்.

டிஸ்கி:
இன்னைக்கு காலை டிபன் பிட்சா இட்லி: :)
கொஞ்சம் குழிவான தட்டிலோ அல்லது
குக்கர் செப்பரேட்டர் கிண்ணத்திலோ எண்ணெய்
தடவி மாவு ஊற்றி ஸ்டீம் செய்தால் பிட்சா இட்லி
ரெடி. தொட்டுக்க காரம் சாரமா வேர்க்கடலை சட்னி.
அதை அப்படியே இட்லி மேலே ப்ரெட் ஸ்ப்ரெட்
மாதிரி போட்டு கொடுத்தா இன்னும் சூப்பர்.



10 comments:

ராமலக்ஷ்மி said...

செய்முறைக்கு நன்றி.

/அப்படி செய்யும் பொழுது கட்டிதட்டிடும். /

ஆமா:)! நீங்க சொல்லியிருக்கும் விதத்தை இனி கடைப்பிடிக்கிறேன்.

pudugaithendral said...

பதிவு போட்ட உடனே கமெண்ட் :))

வருகைக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

பாஸ்தா ஸ்டைலில் மக்ரோனி..சூப்பர் அதை சொல்லித்தந்த விதம் அதைவிட சூப்பர்:)

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

ஆமாம் அதே மாதிரிதான்.

வருகைக்கு மிக்க நன்றி

Pandian R said...

மேலிடத்தின் பார்வைக்கு இதையுமு அனுப்பி இருக்கேன்

கோமதி அரசு said...

புதுகை, சொல்லி தருவது ஒரு கலை அது உங்களுக்கு நல்லவே வருகிறது.

குழந்தைகளுக்கு பிடித்ததை செய்து கொடுத்து, அதை அவர்கள் விரும்பி உண்பதை பார்பதே ஆனந்தம் தான்.

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,
//சொல்லி தருவது ஒரு கலை அது உங்களுக்கு நல்லவே வருகிறது.//

இப்ப ஹோம் மேக்கரா வீட்டில் உக்காந்திருந்தாலும் பேசிக்கா குடும்பமே டீச்சர் குடும்பமாச்சே. :))

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

எங்க வீட்டில் இது ‘அவசர சமையல்’ வகையில வரும். ஒயிட் சாஸ் செய்யும்போது, வறுபட்ட மைதா மேலே கொஞ்சம் கொஞ்சமாப் பாலை ஊத்தி முதல்ல ஒரு பேஸ்ட் மாதிரி ஆக்கி, (கட்டி இருந்தாலும் இப்ப கரைச்சுவிட வசதியா இருக்கும்) அப்புறமும் கொஞ்சம் கொஞ்சமாப் பாலை ஊத்தி கலக்கிகிட்டே வந்தா கட்டி பிடிக்காது. (எனக்கு இப்படி வொர்க் அவுட் ஆகும்)

அப்புறம், சீஸை நான் கடைசியில மேலே போட்டு விடுவேன். சூடான மக்ரோனி மேலே சீஸ் உருகி, சாப்பிடும்போது பீட்ஸா மாதிரி நூல்நூலா நீளமா வரும். சில சமயம் நேரம் இருந்தா, ஒரு பைரக்ஸ் பவுலில் மக்ரோனியைப் போட்டு, மேலே சீஸைப் போட்டு ஒரு ரெண்டு நிமிஷம் மைக்ரோ வேவில் ”கிரில்” செஞ்சா, (பார்க்க) 5-ஸ்டார் டிஷ் மாதிரி இருக்கும்!!

ஸைட்ல தனி ரீலே ஓட்டிட்டேனோ? :-)))

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

வொயிட் ஸாஸுக்கு உங்க செய்முறையை அடுத்த வாட்டி கண்டிப்பா ட்ரை செய்யறேன்.

சூப்பர் டிப்ஸ்கள் கொடுத்திருக்கீங்க.

மிக்க நன்றி