Monday, February 06, 2012

அமைதிச்சாரல் வாங்க ரெசிப்பி ரெடி :)))

போனவாட்டி புளிப்பொங்கல் பத்தி பதிவு போட்டதும்
ரெசிப்பபி தெரிஞ்சு பதிவு போடுங்கன்னு அமைதிச்சாரல்
கேட்டிருந்தாங்க. அவங்களுக்காகவும் புளிப்பொங்கல்
தெரியாதவங்களுக்காகவும் இந்தப் பதிவும் (நேத்துதான்
மொதோ வாட்டி செஞ்சேன்)



இந்தப் புளிப்பொங்கல் நொய்யரிசிப்பொங்கல்னு
சொல்வாங்களாம். அதாவது நொய் (குருணை)
இதில் தான் செய்வாங்க. நம்ம மக்கள் குருணையும்
விடாமல் ஏதோ ஒரு தின்பண்டம் செஞ்சிடறாங்க
பாருங்க. கஞ்சிக்கு உபயோகிச்சுகிட்டிருந்த நொய்யில்
சூப்பரா புளிப்பொங்கல். இது புழுங்கலரிசியில் செஞ்சாதான்
ருசிக்குமாம்.

இப்ப குருணை,கல், நீக்கப்பட்ட அரிசிதான் நாம் வாங்குறோம்
அதனால நாமளே குருணையாட்டம் மிக்சியில் உடைச்சிக்கிடலாம்.
அரிசி உப்புமாவுக்கு உடைப்போமே அதுமாதிரி கொஞ்சம்
பெரிய்ய சைஸ் ரவையா உடைக்கணும். முக்கியமா
ஒண்ணு சொல்ல மறந்திட்டேனே அதுல 1/2 கப்
துவரம்பருப்பு சேர்த்து ரவை மாதிரி உடைச்சு வெச்சுங்கங்க.

புளிப்பொங்கலுக்கு புளி இல்லாமலா!!! எலுமிச்சம் சைஸ்
புளியை நல்லா ஊறவெச்சு, கரைச்சு ரசம் எடுத்து வெச்சுக்கோங்க.

தாளிக்க வழக்கம் போல காஞ்ச மிளகா, கறிவேப்பிலை,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கொஞ்சமா நிலக்கடலை,
கடுகு, கொஞ்சமே கொஞ்சம் வாசனைக்காக வெந்தயம்,
எல்லாம் ரெடியா வெச்சிக்கிடுங்க. பெருங்காயம் சேத்தா
இன்னும் வாசனையா இருக்கு. உப்பு, மஞ்சத்தூள் கூட
ரெடியா வெச்சிக்கிடுங்க.

அடுப்புல ப்ரஷர் பேன் மாதிரியோ அல்லது குக்கரையோ
வெச்சு நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊத்துங்க.
காஞ்சதும் தாளிக்கிற சாமான்களை சாமான்களை
ஒவ்வொண்ணா போட்டு தாளிச்சு அதுல கரைச்சு
வெச்சிருக்கிற புளிக்கரைசலை ஊத்தணும். மஞ்சள்
தூள், உப்பு சேர்த்து நல்லா கலக்கிட்டு ரவை மாதிரி
பொடிச்சு வெச்சிருக்கிற அரிசி+ துவரம்பருப்பை
சேத்து நல்லா கிண்டனும். கொஞ்சமா கெட்டி ஆனதும்
மூடி விசில் போட்டு, இரண்டு அல்லது 3 விசில் வந்ததும்
அடுப்பை ஆஃப் செஞ்சிடுங்க.

ஸ்டீம் போனதும் குக்கரைத் திறக்கும் பொழுதே
வாசனை தூக்கும்!! :)) சுடச்சுட புளிப்பொங்கல்
ரெடி. தொட்டுக்க எதுவுமே வேணாம். ஆனா அப்பளத்தை
சுட்டு வெச்சீங்கன்னா இன்னும் இரண்டு கரண்டி கூட
உள்ள போகும். :))

படம் நெட்டுல சுட்டதுதான்.


14 comments:

வெங்கட் நாகராஜ் said...

என் அத்தைப் பாட்டி செய்வார்கள்... சிறுவயதில் ருசித்திருக்கிறேன்....

CS. Mohan Kumar said...

ஆஹா புளி பொங்கல் !! வீட்டம்மா கிட்டே செய்ய சொல்லி கேட்டு பாக்குறேன் !

pudugaithendral said...

வாங்க சகோ,

எங்க சித்தப்பா ரொம்ப நல்லா செய்வாரு. அவருகிட்ட கத்துகிட்டேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க மோகன் குமார்,

ருசி பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

வருகைக்கு நன்றி

Vidhya Chandrasekaran said...

எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம். நல்லெண்ணைய் வாசத்தோடு சுடசுட சாப்பிடும்போது...ஆஹா சொர்க்கம்..

சாந்தி மாரியப்பன் said...

வாசனை இழுத்துட்டு வந்துருச்சுங்க. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான் :-))

ஸ்பெஷலாச் செஞ்சு பரிமாறியதுக்கு நன்றியோ நன்றி :-)

Jaleela Kamal said...

புளி பொங்கலா?
நாவூறுது

வல்லிசிம்ஹன் said...

இப்ப தான் என் பொண்ணுக்குப் புளி உப்புமா ரெசிபி அனுப்பினேன். இங்கவந்தால் புளிப் பொங்கல்.
இங்க இன்னும் அந்த அரிசி ஜல்லடை இருக்கு. பெரிய வட்டமா பித்தளை செய்தது. அரிசி தங்கிடும். குருணை கீழ விழுந்துடும்.
நல்ல பகிர்வு தென்றல்.

pudugaithendral said...

வாங்க வித்யா,

ந.எ வாசம் நிஜமாவே கும்முன்னு தான் இருந்தது..

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

நட்புக்களுக்காக எப்பொழுதுமே ஷ்பெஷல் தான். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

சிம்பிள்தான் செஞ்சு ருசிங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அரிசி வாங்கியதும் பாட்டி ஜல்லடை வெச்சு குருணை தனியா எடுத்தது ஞாபகம் இருக்கு. புளி உப்புமா எனக்கும் ரொம்ப பிடிக்கும். :))

வருகைக்கு நன்றிம்மா

ADHI VENKAT said...

எங்க பாட்டி அரிசியை திருகையில் போட்டு அரைத்து.....உப்புமாவுக்கு, புளிப்பொங்கலுக்கு என்று தனித்தனியா பிரித்தெடுப்பாங்க.... பாட்டி கையாலும் அம்மா கையாலும் ருசித்தது....பிரமாதமா இருக்கும்.

இதுக்கு அப்பளம், வடாம் அல்லது வெங்காய தயிர்பச்சடி கூட சூப்பரா இருக்கும்.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ரொம்ப தாமதமா பதில் கமெண்ட் போடுறேன். மன்னிக்கனும்.

நீங்க சொல்லியிருக்கற சைட்டிஷ்ஷும் சூப்பர்.

வருகைக்கு ரொம்ப நன்றி