Wednesday, February 01, 2012

IKEA...

நான் சிங்கை போவதாக (5 வருடம் முன்னாடி) சொன்னப்ப
அப்போதான் சிங்கை போயிட்டு வந்த தோழி நிறைய்ய
டிப்ஸ் சொன்னது எனக்கு உதவியா இருந்தது. அதில் முக்கியமாக
மறக்காம அவங்க போயிட்டு வான்னு சொன்னது IKEA.
அங்கே என்ன இருக்கும்? அப்படின்னு கேட்க அவங்க காமிச்ச
சாம்பிள்ஸை பாத்ததும் கண்டிப்பா போயாகணும்னு முடிவே
செஞ்சிட்டேன்.

ஆப்பிள் ஸ்லைசர்னு இப்ப மார்க்கெட்டில் ஒண்ணு விக்குதுல்ல
அது அநேகமா சைனீஸ் ப்ராடக்டாத்தான் இருக்கும். அது
ரொம்ப நாள் உழைக்காது. ஆனா என் ஃப்ரெண்ட் காட்டியது
ஐக்கியாவில் வாங்கியது. இப்ப வரைக்கும் என் வீட்டில்
உபயோகத்தில் இருக்கு.


அதுக்கப்புறம் இது ரொம்ப முக்கியமா வாங்கிக்கோ கலான்னு
சொன்னாங்க. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த கிளிப்.
ப்ரெட், ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய சில கவர்கள்,
சிப்ஸ், ஊருக்கு போகும் பொழுது பிஸ்கட் எல்லாம் இப்படி
ஜிப் லாக் கவரில் போடுவதையும் விட ஏர் டைட்டா வைக்க
உதவுதுன்னு காட்டினாங்க. நானும் போய் இரண்டு கவர்
வாங்கியாந்தேன். சின்னதும் பெருசுமா ரொம்ப ஹேண்டியா
இருக்கு. 3 வருஷம் முன்னாடி ப்ரூ இன்ஸ்டண்ட் காபி
பொடியோட ஃப்ரெஷ்ஷா வைக்க லாக்குடன்னு மஞ்சக்கலர்ல
கூட கொடுத்தாங்க. ஆனா IKEA கிளிப்ஸ் மாதிரி வராதுங்க.




வீட்டில் பசங்க இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சனை பிள்ளைகளூக்கு
ஏத்தாமாதிரி சாப்பாடு கொடுக்கும் பொருள் இருக்கணும். பார்க்க
நல்லாவும் இருக்கணும், அத்தோட உடையாம பத்திரமாவும்
இருக்கணும். இதுக்கு IKEAவோட இந்த செட் ரொம்ப
உபயோகமா இருக்கும். கலர்ஃபுல்லா எம்புட்டு அழகா
இருக்கு பாருங்க.

சரி இதைத்தவிர இன்னும் என்ன நல்லா இருக்கும்னு நீயே
போய் பாத்து தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டாங்க. ஆவலோட
IKEA ஸ்டோருக்கு போன என்னை ஏமாத்திடலை. அங்கே
கிடைக்கும் வெரைட்டிதான் என்ன? ஃபர்னீச்சர்ஸ், கிச்சன்
கேபினெட்ஸ் எல்லாமே கிடைக்கும் அங்கே. டிஸ்மாண்டில்
செஞ்சு வேற எடுத்துக்கு தூக்கிகிட்டு போறமாதிரி இருக்கும்.

எனக்கு அங்க ரொம்ப பிடிச்சது கத்தியை ஷார்ப்பாக்கறதுக்கு
உபயோகமா இருக்கும் இந்த ஷார்ப்பனர்.

சின்ன க்ரைண்டிங் மில். இதுல ஜீரகம், மிளகு, வெந்தயம்
எல்லாம் போட்டு கையாலேயே திருப்பி திருப்பி பொடிச்சிடலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது கொஞ்சமா வெந்தயத்தை
வறுத்து அதை இதில் போட்டு சாதத்தின் மேலே அப்படியே
பொடிச்சு போடலாம்.

இப்படி இந்தக்கடையில நிறைய்ய உபயோகமான பொருட்கள்
கிடைச்சது. ஒரு வாட்டி சிங்கையிலிருந்து வரும்பொழுது
பசங்ககிட்ட என்னடா வேணும் உங்களுக்குன்னு தம்பி கேட்க
இது வாங்கிகிட்டு வாங்க மாமான்னு போட்டோ அனுப்பினாங்க.
வலையால செய்யப்பட்ட இந்த ஹேங்கிங் செல்ஃப்ல நாம
என்ன வெச்சிருக்கோம்னு அழகா தெரியும். பசங்க டாய்ஸ்,
பெல்ட் எல்லாம் ஒரே இடத்துல் வெச்சிடவும் உதவியா இருக்கும்.

அதை வாங்கப்போனப்போ இந்த லாண்டரி பேக்கும் கண்ணுல பட்டு
தம்பி வாங்கியாந்தாப்ல. துவைக்க வேண்டிய துணிகளை அழகா
இதுல போட்டு வெச்சிடுவோம். கண்ட இடத்துல துணி கிடக்கமா
காத்தோட்டமா துவைக்கறவைக்கும் சொகுசா துணிகள் இந்த
கூடைக்குள் அடைக்கலம் ஆகிடும். நம்ம ஊர்லயும் கிடைக்குது.
ஆனா அது அவ்வளவு ஸ்டராங்கா இருப்பதில்லை.

இது சிங்கையில் மட்டுமில்ல பல நாடுகளில் இருக்கு.
அதைத் தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க.

IKEAவில் என்னென்ன பொருட்கள் கிடைக்குதுன்னு பார்க்க
இங்க சொடுக்கினால் பார்க்கலாம்.


இந்த ikea சீக்கிரம் இந்தியாவில் கடை திறக்கும் வாய்ப்புக்கள்
இப்ப வந்திருக்கு. நம்ம இந்தியாவின் கொள்கையால இங்கே
வரமுடியாம இருந்திருக்கு. ஆனா இப்ப Foreign direct investment
கொண்டு வரப்போறதால ikea வந்திடும்னு சொல்றாங்க.

அதைப்பத்தி இங்கப்போனா தெரிஞ்சிக்கலாம்.

இந்தியாவுக்கு வரும் வரைக்கும் யாரும் ஃபாரீன் டூர் போனீங்கன்னா
அங்கே ஐக்கியா ஸ்டோர் இருக்கான்னு பாத்து கண்டிப்பா ஒரு
எட்டு போயிட்டு வாங்க. இல்ல சொந்தக்காரங்க யாரும் வர்றதா
இருந்தா ஐக்கியா போயிட்டு வாங்கிகிட்டு வரச் சொல்லுங்க.


31 comments:

வல்லிசிம்ஹன் said...

ஐகியா என்னைப் பொறுத்தவரை பூலோக சொர்க்கம். துபாய்ல ஒரு மாதிரி இருக்கும். ஸ்விட்சர்லாண்ட்ல ஒரு மாதிரி இருக்கும். அமெரிக்காவில் ஒரு மாதிரி இருக்கும்.
ஆனால் ஒரீ செட் அப் தான். அதேஆரோ மார்க். .
அங்க்கயும் கப் சாஸ்ர்தான் வாங்குவேன்:)
கம்ஃபர்ட்டரும் உண்டு. அழகான தலயணை உறைகள் ,படுக்கை விரிப்புகள்
எல்லாமீ என்னைத் தடுமாற வைக்கும். ஃப்ளாஸ்குகளும்.
வம்ம ஊர்ல வந்து என்ன விப்பாங்க்களோ.
ஸ்வீடன்ல இருந்து வந்து என்னமா சாதிக்கறாங்கப்பா.!
பகிர்வுக்கு மிக மிக
நன்றி தென்றல்

ஹுஸைனம்மா said...

ஸேம் பிஞ்ச்!! இதுல இருக்க எல்லாமே (ரெண்டைத் தவிர - ஆப்பிள் ஸ்லைஸர், கலர் பவுல்ஸ்) என்கிட்டயும் இருக்கு!!

ஆப்பிள் ஸ்லைசர் வர்றதுக்கு ரொம்ப நாள் முன்னயே, “ஸ்கூரூவர்”னு ஒண்ணு வந்துது. அதாவது, ஆப்பிள் நடுவில இருக்க தண்டுப் பகுதியை மட்டும் அப்படியே அலேக்கா கட் பண்ணி எடுக்கலாம். அதனாலேயோ என்னவோ எனக்கு ஸ்லைஸர் வாங்கணும்னு தோணவேயில்லை :-)))

(ஆஹா, நானும் என் “கிச்சன் காபினட்” கண்காட்சி போடலாம் போல இருக்கே!! ஆனா, வேணாம். அப்புறம் “போகாத போருக்கு இவ்ளோ ஆயுதங்களைச் சேத்து வச்சிருக்கியே?”ன்னு என் ரங்ஸ் மானத்தை வாங்குவாரு!! ;-)))))) )

இங்கயும் ஐகியா இருக்கு. ஆனா, அடிக்கடி போறதுக்கு எனக்கு பயம். ஏன்னா, அங்க இருக்க இந்த மாதிரி குட்டிகுட்டி பொருட்களை வாங்காம வர்றதுக்கு ரொம்ப-ரொம்பவே ஸெல்ஃப்-கண்ட்ரோல் வேணும்!! அவ்வளவு அழகும், வெரைட்டியும்!!

அதே சமயம், ஐகியாவுல பெரிய ஃபர்னிச்சர்கள்லாம் வாங்க முடியாது. ஓன்லி விண்டோ-ஷாப்பிங்தான்!! அம்புட்டு காஸ்ட்லி! :-))))

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஐகியா என்னைப் பொறுத்தவரை பூலோக சொர்க்கம்.//
ரொம்பச் சரி.

வருகைக்கு மிக்க நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா

ஸ்கூர்வர் நானும் பார்த்திருக்கிறேன். ஆனா ஸ்லைசர் தான் முதலில் வாங்கியது. நீங்க சொல்லியிருக்கற மாதிரி ஒரு வாட்டி போனதுக்கே இந்த “குட்டி குட்டி” ஐட்டங்களை விட்டுட்டு வர முடியலை. :))

pudugaithendral said...

. அப்புறம் “போகாத போருக்கு இவ்ளோ ஆயுதங்களைச் சேத்து வச்சிருக்கியே?”ன்னு என் ரங்ஸ் மானத்தை வாங்குவாரு!! ;-)))))) )//

உங்களுக்கும் மைண்ட் வாய்ஸ் தொந்திரவு வந்திருச்சா

வருகைக்கு நன்றி

Mahi said...

அடடே..IKEA-வை அழகா சுத்தி காமிச்சிட்டீங்களே?:) இங்கே ஒவ்வொரு சிட்டிலயும் IKEA இருக்குது. கிச்சன் பொருட்கள் நிறைய நானும் அங்கே வாங்கியிருக்கேன்.

/ஐகியாவுல பெரிய ஃபர்னிச்சர்கள்லாம் வாங்க முடியாது/காஸ்ட்லி மட்டுமில்லை, தரமும் 'அவ்வளவா' நல்லா இருக்காதுங்க. பர்னிச்சர்ஸ் எல்லாமே பார்க்க அழகா இருக்கும்,ஆனா மரம் நல்லா இருக்காது, ஆக்ச்சுவலி அது எல்லாமே உள்ளே காலியா இருக்கும் டப்பாக்கள்! ;)

பட், ரொம்பநாள் வைத்து உபயோகிக்க வேணாம், இருக்கும் சில வருடங்கள் வரை நீட்டா இருந்தா போதும்னு நினைக்கும்போது கை கொடுப்பது IKEAதான். :)

கடையும் பெரீஈஈஈஈஈஈசா இருக்கும்,அட்லீஸ்ட் 2 மணிநேரமாவது வேணும்,சும்மா ஒரு சுத்து போய்வர! அப்பறம் அங்கே சூப்-பாஸ்டான்னு ஒரு புடி புடிச்சிட்டு வந்துரலாம்!;)

நல்ல பதிவுங்க.

pudugaithendral said...

வாங்க மஹி,

என் நண்பர் ஒருவரின் வீட்டில் தான் ஐக்கியா ஃபர்னீச்சர்ஸ் பார்தது. இப்பொழுது கூட இங்கே விற்கும் சில மரச்சாமன்கள் இறக்குமதி செய்யப்பட்ட ரகம் தான். விலைகளும் அந்த ரேஞ்சில் தான் கிடைக்கிறது.

ஃபர்னீச்சர்கள் அவ்வளவா நல்லா இருக்காது என்று சொல்லியிருக்கிறீர்கள். நான் உபயோகித்தில்லை என்பதால் எனக்குத் தெரியவில்லை. :)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

ப்ரூவோட இப்பவும் வருதுங்க.. எக்கச்சக்கமா சேருதுன்னு நான் தூக்கிப் போட்டுடுவேன். அதுவுமில்லாம அத்தனை தரமாவும் இல்லை.

@ ஹூஸைனம்மா,.. கண்காட்சிக்கு வர நாங்க தயாரா இருக்கையில் கவலை எதுக்கு?.. எண்ட்ரி ஃப்ரீன்னு ஒரு போர்டு மட்டும் வையுங்க. மொய்ச்சுட மாட்டோமா :-))

ஸாதிகா said...

இங்கேயும் ஆப்பிள்கட்டர் முட்டை கட்டர் என்று ஏகப்பட்ட கட்டர்கள் விற்பனைக்கு இருந்தாலும் ஹெங்கிங் செல்ஃப் சூப்பரா இருக்கு.இதை வாங்குவதற்காகவே ஐகியா ஸ்டோருக்கு போகணும்.உபயோகமான பகிர்வு.

கோமதி அரசு said...

நானும் அமெரிக்காவில் ஐகியா போய் கொஞ்சம் சாமான்கள் வாங்கிவந்தேன்
தென்றல்.


குட்டிகுட்டி பொருட்களை வாங்காம வர்றதுக்கு ரொம்ப-ரொம்பவே ஸெல்ஃப்-கண்ட்ரோல் வேணும்!! அவ்வளவு அழகும், வெரைட்டியும்!!//

ஹூஸைனம்மா சொல்வது போல் மனது நமது கட்டுக்குள் இல்லை என்றால் மிகவும் கஷ்டம்.
எல்லாம் வாங்க தூண்டும் பொருட்கள் தான்.

பாச மலர் / Paasa Malar said...

வல்லிமா சொன்னது மாதிரி அம்புக்குறிகள் மயம்தான்...எதையும் கடைசி வரை பார்க்காமல் தப்பிக்கவே முடியாது...IKEA ன்னா IKEA தான்

Pandian R said...

அருமை.
----------------
சின்ன க்ரைண்டிங் மில். இதுல ஜீரகம், மிளகு, வெந்தயம்
எல்லாம் போட்டு கையாலேயே திருப்பி திருப்பி பொடிச்சிடலாம்.
-----------------

கரண்டு இல்லாம மிக்சி ஓடாது. அம்மி அரைக்கத் தெரியாது என்று சலம்பவேண்டியதில்லை!

நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,
அது அவ்வளவு தரமானதா இல்லைதான்.

ஹூஸைனம்மா,.. கண்காட்சிக்கு வர நாங்க தயாரா இருக்கையில் கவலை எதுக்கு?.. எண்ட்ரி ஃப்ரீன்னு ஒரு போர்டு மட்டும் வையுங்க. மொய்ச்சுட மாட்டோமா //

:)))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

வாங்கிட்டு சொல்லுங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

ஃப்ளைட்ல நிறைய்ய வெயிட் ஆகிடும்னே பல சாமான்களை விட்டுவந்திருக்கேன். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

IKEA ன்னா IKEA தான்//

ஆமாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

கரண்டு இல்லாம மிக்சி ஓடாது. அம்மி அரைக்கத் தெரியாது என்று சலம்பவேண்டியதில்லை!//
ஆஹா !!!

வருகைக்கு நன்றிங்க

Rithu`s Dad said...

எதோ எங்க வீட்ல வந்து போட்டோ புடிச்சு போட்ருக்கமதிரில இருக்கு..

நல்ல பகிர்வு..

அன்புடன் அருணா said...

ஹாங்கிங்க் ஷெல்ஃப் சூப்பர்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இங்கயும் இந்த கடை இருக்கு. compact furnitureகளுக்கு நல்ல இடம்னு சொல்லுவாங்க இங்க, ஆனா ஒண்ணு, பர்னிச்சர் எதுனா வாங்கினா கூடவே ஒரு engineerம் வாங்கணும்... :) They give furnitures in pieces and we need to fix it...:) When we came here new we used to visit Ikea often, ஆன ரெம்ப டெம்ப்டிங் பண்ற குட்டி குட்டி பொருட்கள் இருக்கும், யூஸ் பண்றமோ இல்லையோ வாங்க சொல்லும், அதனாலேயே நான் அதிகம் போறதில்ல,... நீங்க சொல்லி இருக்கற சில சாமான்கள் என்கிட்ட இருக்கு, ஆனா அந்த ஆப்பிள் கட்டர் என் கண்ணுல பட்டதில்ல, இந்த வாரம் போய் பாக்குறேன்...:)

pudugaithendral said...

வாங்க ரீத்து அப்பா,

ஐக்கியா போயிட்டுவந்தவங்க வீடுகள்ல முக்கியமா நான் பார்த்த விஷயங்கள் இது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

ரொம்பவும் யூஸ்ஃபுல் கூட.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க புவனா,

இங்கயும் இப்பல்லாம் ஹோம்டவுன், ஹோம் இப்படிக்கடைகள்ல ஃபர்னீச்சர் வாங்கினால் அவங்களே ஃபிக்ஸ் செய்யவும் ஆளை அனுப்பிடறாங்க.

ஆனா அந்த ஆப்பிள் கட்டர் என் கண்ணுல பட்டதில்ல, இந்த வாரம் போய் பாக்குறேன்...//

வெரி குடு :))

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

mm எனக்கும் இது போல அழகான பொருட்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும்

ஐக்யா, ஹோம் செண்டர் போன்ற இடங்களில் இதே தான் வெரைட்டியாக இருக்கும்

எல்லாமே ரொம்ப காஸ்ட்லி

லான்ரி பேக்கும் அருமையா இருக்கு அது போல் அடுக்கு உள்ளது இன்னுமிங்கு பார்க்கல..

கோவி.கண்ணன் said...

எங்க வீட்டுக்கு மிக அருகே இருக்கிறது ஐக்கியா பெருவளாகம். பொழுது போக்கிற்கு அடிக்கடி நடந்து சென்று திரும்புவோம்.

Kanchana Radhakrishnan said...

உபயோகமான பகிர்வு.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி ஜலீலா

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி கோவி.கண்ணன்

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி காஞ்சனா

சரவணகுமரன் said...

சமீபத்தில் சென்று வந்தேன்.

http://www.saravanakumaran.com/2012/08/blog-post_13.html