ஹைதையில் நேற்று கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
பிசினஸ் ஆஃப் டாலிவுட் எனும் அமைப்பு வேறு சில பார்டனர்களுடன்
சேர்ந்து நேற்று இந்த புதிய சாதனையை நடத்தியிருக்கிறார்கள்.
அயித்தானின் நண்பர் மூலமாக எங்களுக்கும் பாஸ் கிடைத்து
நாங்களும் கலந்துகொண்டோம். ஹைதராபாத்தின்
ஹைடெக்ஸ் சிட்டியி நேற்று இரவு ஸ்கை
லேண்டர்ன்கள் விண்ணில் பறந்தது.
மேகத்துக்கு தூது விட்டது போலிருந்த இந்த நிகழ்ச்சியில்
கொஞ்ச நேரம் வானமே இந்த விளக்குகளால் நிரம்பி
காற்றில் அசைந்து சென்றது அழகோ அழகு. சரியாக
இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தச்
சாதனை நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன் இந்தோனேஷியாதான் 10,283 லேண்டர்ன்களை
பறக்க விட்டு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. நேற்று
ஹைடெக்ஸ் சிட்டியில் 8000த்திற்கும் மேல்பட்ட மக்கள்
திரண்டு 12000 லேண்டர்ன்களை விண்ணில் அனுப்பி சாதனை
புரிந்திருக்கிறார்கள். இதில் நாங்களும்பங்கு பெற்றோம்
என்பதில் ரொம்ப சந்தோஷம்.
இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி இல்லையாம். முன்பு விவசாயிகள்
மாதம் மும்மாரி பெய்து நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும்
என்று இப்படி விளக்குகளை விண்ணில் செலுத்தி வருணபகவானுக்கு
வேண்டுகோள் விடுப்பார்களாம். இப்போதும் நல்ல மழை வேண்டி
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக விழா நிர்வாகிக்கள் சொல்லியிருந்தார்கள்.
7.45க்கு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் மண்ணில் ஓவியம்
வரைவதை காட்டினார்கள். மிக அருமையாக இருந்தது.
முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி (தன்னை அப்படி அழைப்பதை
அவர் விரும்புவதில்லை. சாந்தி மட்டும்தான்) தனது கணவர்
நடிகர் ஸ்ரீஹரியுடன் பங்கேற்றிருந்தார். அவர்களின் அக்ஷரா
ஃபவுண்டேஷன் அமைப்பும் தனது பங்களிப்பை இந்த நிகழ்ச்சிக்காக
அளித்திருந்தது.
நேரம் கிடைக்கும் பொழுது வீடியோ, மற்றும் வேறு சில
புகைப்படங்களை பதிவிடுகிறேன்.

5 comments:
நல்ல பகிர்வு. உங்களுக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.
நல்ல தகவல்....
கின்னஸ் சாதனையில் நீங்களும்... வாழ்த்துகள்...
நல்ல பகிர்வு
கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்குமே..
வருகைக்கு மிக்க நன்றி கோவை2தில்லி
வருகைக்கு நன்றி சகோ
நன்றி மாலதி
ஆமாம் பாசமலர் வானமே ஜகஜ்ஜோதியா இருந்தது. வருகைக்கு நன்றி
Post a Comment