Thursday, May 10, 2012

ஊட்டிமல ரோட்டுமேல ஓடிய எங்க வண்டி....

மேட்டுப்பாளையத்தில் காலை உணவு சாப்பிட்டு கிளம்பியாச்சு ஊட்டிக்கு.
மொத்தம் 14 கொண்டை ஊசி வளைவுகள். அருமையான பயணம்.
இரண்டு கார்ல போய்க்கிட்டு இருந்தோம். ஒரு வண்டில ஆஷிஷ்,
அவங்க அண்ணா, அண்ணி, குட்டி பாப்ஸ், இன்னொரு வண்டில
நான், அம்ருதா ,அயித்தான்.

குன்னூரில் சிம்ஸ் பார்க் நல்லா இருக்கும் பாருங்கன்னு டிரைவர்
சொல்லி கூட்டிப்போனாரு. நிஜம்மாவே சூப்பரா இருந்துச்சு.
மலர்களும், மரங்களும் நிறைஞ்சு கண்ணுக்கு குளிரிச்சியா,
சீதோஷ்ணம் உடலுக்கு குளிர்ச்சியாவும் இதமா இருந்துச்சு.
ஆஷிஷையும் கேமிராவையும் பிரிக்க முடியலை. :))
போட்டாவா எடுத்து தள்ளிட்டாரு.

Flickr
போய் பார்த்த சில படங்கள் ஏத்தியிருக்காரு. அதை பார்க்கலாம்.

குன்னூரிலேர்ந்து அடுத்து போன இடம் கேத்தி ஷ்டேஷன்.
நம்ம மூன்றாம்பிறை கிளைமாக்ஸில் ஆடுடாராமான்னு கமல்
குட்டி கரணம் போடுவாரே அந்த ஸ்டேஷன். பல தெலுங்கு
படத்திலும் நடிச்சிருக்கு!!

இந்த ஷ்டேஷனில் வேலை கிடைச்சா போதும்னு அயித்தான்
கமெண்ட் அடிச்சாக. நாங்க போவதற்கு கொஞ்சம் முந்திதான்
அந்த மலைப்பாதை ரயில் போனிச்சு. (மேட்டுப்பாளையத்திலேர்ந்து
அதுலதான் மலையேற ப்ளான். டிக்கெட் கிடைக்கலை!!!)

இம்புட்டுதான் ஷ்டேஷன். நாங்க போனபோது யாருமே இல்லாம
காலியா இருந்துச்சு. ட்ராக்மேல நின்னு போட்டோல்லாம் எடுத்து
கிட்டோம். :)) அங்கேயிருந்து போனது லவ்டேலில் இருக்கும்
லாரன்ஸ் ஸ்கூல்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
“சுந்தரி சிறிய ரைட்டைவால் சுந்தரி” பாட்டு ஆரம்பத்துல
வருமே அது இந்த ஸ்கூல் தான். ஆனா உள்ளே விடலை.
அயித்தானுக்கு தெரிஞ்ச நண்பர் ஊரில் இல்லை. சரின்னு
ஊட்டிக்கு கிளம்பிட்டோம். எல்லோருக்கும் செம பசி.
அயித்தானுக்கு எங்கே என்ன கிடைக்கும்னு நல்லா
தெரியும். ஊர் உரா சுத்தும் வேலையில இருப்பவங்களுக்கு
இது நல்லாவே தெரியும். ராஜஸ்தான் போஜனாலயா
கூட்டிப்போனாரு.

Sri Ambika Bhojanalaya
(jain, gujarathi, Rajasthani, Bombay meals, Panjabi dises)
opp. Alankar theatre, Ettines road, ooty.
(near Rose garden)
இங்க தான் சாப்பிடப்போனோம். இங்கே ஹைதையில்
ஷ்யாம் நிவாஸ்னு ஒரு ஹோட்டல் பத்தி சொல்லியிருக்கேன்ல.
அதே மாதிரி தான் இங்கேயும். அன்லிமிட்டட். சுடச்சுட
சப்பாத்தி, அதிக காரமில்லாத காயகறிகள்னு அருமையான
உணவு. ப்ளேட் 90ரூவா. இவங்களுக்கு மைசூரிலும் ஒரு
கிளை இருக்காம். அதோட அட்ரஸையும் போட்டு
எழுதச் சொன்னாரு :))

Sri Balaji Bhojanalaya restaruant,
2885, Near Jain temple,
Behind Sangam Talkies & KSRTC Bus stand,
Halladkeri, Mysore.

100% வெஜிட்டேரியன் உணவு கிடைக்கும். ஆம்பியன்ஸ்
அவ்வளவா ஓகோன்னு இருக்காது. சுமாராத்தான் இருக்கும்.
எங்க மருமகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. வயிறு கெடுக்காத
சாப்பாடு கிடைக்கும் இடத்துக்கு கூட்டியாந்திருக்கிக்கன்னு
சின்ன மாமானாருக்கு ஒரே பாராட்டு மழைதான்!!!!

மணி 3 தாண்டிடிச்சு. இனி நேரா ஹோட்டலுக்குத்தான்னு முடிவு
செஞ்சிட்டோம். அயித்தானின் அண்ணன் மகன் தனது
நண்பர் மூலமா ஸ்டர்லிங் ரிசார்ட்டில் ஏற்கனவே ரூம்
புக் செஞ்சு வெச்சிருந்தாப்ல. செக் இன் செஞ்சுகிட்டோம்.
இங்கே வித்தியாசமா கீழே இருந்துச்சு ரூம்!!! பைப்பைத்
தொறந்தா சில் சில்ன்னு தண்ணி வருது. குட்டி பாப்பா
இருந்த ரூம்ல ஹீட்டர் வேலை செய்யலை!!! அதுக்கு
ஆளைக்கூப்பிட்டு வேலை நடந்துச்சு. ஆனாலும் நோ ஹாட்
வாட்டர். எங்க ரூம்ல டீவி வேலை செய்யலை!!

தொலையுதுன்னு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். இண்டர்காம்
அடிச்சிச்சு. எடுத்து யாருன்னு கேட்டா ஹாலிடே டிப்பார்ட்மெண்டிலிருந்து
பேசறாங்களாம். 7 மணிக்கு அந்த ரூமுக்கு எல்லா விருந்தினர்களையும்
வரச்சொல்லி கூப்பிட்டாக. விளையாட ரூம் நல்லா இருக்கு. குட்டீஸுக்கு
பெரியவங்களுக்கு டீடீ எல்லாம் இருந்துச்சு. கம்ப்யூட்டர் கேம்ஸ்
கூட இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு 100 ரூவா.

இடி மின்னலுடன் மழை பெஞ்சுகிட்டு இருந்துச்சு. தம்போலா
விளையாடினாங்க எல்லோரும். ஒரு 7 குடும்பங்கள் இருந்துச்சு.
அது முடிஞ்சு சாப்பிடப்போனோம். சாப்பாட்டுக்கு ஒரு பேக்கேஜ்
வெச்சிருக்காங்க. இரவு உணவு + காலை உணவு ரெண்டுக்கு
சேர்த்து பேக்கேஜ். புஃபே சிஸ்டம் தான். வேணுங்கறது சாப்பிடலாம்.
அந்த பேக்கேஜுல 20 % டிஸ்கவுண்டும் கிடைச்சது. உணவும்
சுவையா நல்லாவே இருந்துச்சு.

ரூமில் ஹீட்டர் போட்டு படுத்ததுதான் தெரியும்.

தொடரும்...

5 comments:

மனோ சாமிநாதன் said...

உங்கள் பார்வையில் ஊட்டி சுற்றுப்பயணமும் அதைச் சார்ந்த இடங்களைப்பற்றிய விவரிப்பும் அருமை!

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

வல்லிசிம்ஹன் said...

எப்பவோ போனது ஊட்டி. ரொம்பக் கூட்டம் வருதுன்னு சொன்னாங்களே. ஹீட்டராவது வேலை செய்ததே அதுவும் இல்லைன்னா நரகம்தான். காலியா இருந்தாலும் ரயில் ட்ராக் நல்லாதான் இருக்கு:)
இன்னும் நிறைய படங்களோட அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்.

கோவை நேரம் said...

நம்ம ஏரியா பக்கம் வந்து இருக்கீங்க,,,என்ஜாய்...

kiran said...
This comment has been removed by the author.