Friday, May 25, 2012

ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவா..... பூவே நுவ்வா....

ஹோம் மேட் சாக்லெட் எல்லாம் வாங்கிகிட்டு தூற ஆரம்பிச்சிருக்க
சூடா டீ குடிக்கலாம்னு போனோம். பால்வடியா ஒரு டீ கொடுத்தாங்க.
ரொம்ப ஸ்ட்ராங்கா இல்லாட்டியும், டீயும், மணமும், சுவையும்
சேர்ந்து இருந்தாத்தான் டீ ருசிக்கும். சக்கரை தூக்கலா இருக்க
கூடாது. ஆனா டீ குடிச்சதுல பால், சர்க்கரைதான் அதிகம். :((
இப்படித்தான் டீ இருக்கணும்னு அரசு சட்டம் ஏதோ போட்டிருக்காங்கன்னு
டிரைவர் சொன்னாரு. எம்புட்டு நிஜமோ!! (கலப்படம் ஏதும்
செய்யக்கூடாது, டீ இந்தக்கலரில் இல்லாட்டி தண்டம் கட்டணுமாம்)


அங்கேயிருந்து ரோஸ் கார்டன் போகலாம்னு கிளம்பினோம்.
ரோஸ்கார்டன் கிட்ட நுழைவு சீட்டு வாங்கிட்டு வண்டியில
அயித்தான் ஏறும் பொழுது திரும்ப தூற ஆரம்பிச்சிடிச்சு!!!!
சரி போவோம்னு நுழைஞ்சோம். தலைப்பி இருப்பது ஒரு
தெலுங்கு பாடல். ஆங்கிலத்தில் “ A ROSE IS A ROSE IS ROSE!!"
சொல்வது தப்பே இல்லை. ரோஜா எப்போதும் அழகு.
வகை வகையா கலர் கலரா பாத்துக்கிட்டே இருக்கலாம்.

கடல் மட்டத்திலேர்ந்து 2200 அடி உயரத்தில் எல்க் மலையில்
அமைந்திருக்கும் இந்த தோட்டத்துக்கு ஜெயலலிதா ரோஜா
தோட்டம், நூற்றாண்டு ரோஜா தோட்டம்னெல்லாம் பேரு
இருக்கு. இப்போதைய பெயர் அரசு ரோஜா பூந்தோட்டம்.
இந்தியாவிலேயே இதுதான் பெரிய ரோஜா பூந்தோட்டம்.


நாங்க நாலு பேரும் இருக்கற மாதிரி ஃபோட்டோ வேணும்னு
ரொம்ப நாலா நினைப்பு. எங்க போனாலும் யாராவது ஒருத்தர்
போட்டோ எடுப்பதால் மிஸ்ஸிங். சரி ஸ்டுடியோவுக்கு
போகலாம்னா ஊர் கூடி தேர் இழுக்கும் வேலை. :))

குன்னூர் சிம்ஸ் பார்க்கில் போட்டோ எடுத்துகிட்டோம். ஆனா
அது சின்ன சைஸ். ரோஸ் கார்டனில் போட்டோ கிராபர்
இருந்ததால் சரி பெருசா ப்ரிண்ட் போட்டுத் தர்றாங்களேன்னு
கேட்டோம். 100 ரூவான்னு சொன்னாங்க. சரின்னு சொன்னோம்.
ரோஸ் கார்டன் பேக்க்ரவுண்ட்ல போட்டோ எடுத்து குடுய்யான்னா
உக்கார வெச்சு எடுக்கறேன்னு சொல்ல சரின்னு போஸெல்லாம்
கொடுத்தோம். ப்ரிண்ட் போட்டு பாக்கையில எனக்கு மனசு
ஒப்பவே இல்லை. :((

அயித்தானின் அண்ணன் மகன், மருமவ, பேத்திக்குட்டி 3 பேரும்
சுத்தி பாக்க போயிட்டாங்க. நாங்க செம டயர்ட். போன தடவையும்
பாத்திருப்பதால அங்கயே இருந்திட்டோம். சரியா டீ குடிக்காததாலா?
இல்ல மழை தூறலாலான்னு தெரியலை தலைவலியா இருந்துச்சு.
கார்ல போய் உட்கார்ந்திட்டேன். அப்பத்தான் பக்கத்தில் கவுண்டர்
பாத்தேன். ஜாதிக்காய் ஊறுகாய் நல்லா இருக்கும். ஆனா அரசாங்க
இடமாச்சே 5 மணிக்கெல்லாம் கவுண்டரை மூடிட்டாங்க. நாளை
காலை 9 மணிக்குத்தான்னாங்க சரின்னு அயித்தான் அண்ணன்
மகனை இன்னும் காணமேன்னு பாத்துகிட்டு இருந்தேன். மனசு
ஃபோட்டோ சரியா வரலையேன்னு இருந்துச்சு. அயித்தான் கிட்ட
இன்னொரு ஃபோட்டோ எடுக்கலாம்னு சொன்னேன். சரின்னு
அங்கே இருந்த இன்னொரு ஃபோட்டோ கிராபர் கிட்ட கேட்டோம்.

அவர் நல்லா பேங்க்ரவுண்ட்ல எடுத்துக்கொடுத்துகிட்டு இருந்தார்.
அவரை எடுக்கச் சொல்லவும் இன்னொரு ஆளுக்கு கோவம்.
என் கிட்ட இப்பத்தானே எடுத்தீங்கன்னு கேட்க சும்மா கோவம்
வந்து கத்தினேன். படம் சரியில்ல பணத்தை திருப்பிக்கொடுன்னா
கேட்டேன்!! என் இஷ்டம் நான் எடுக்கறேன் போய்யான்னதும்”தான்
அந்தாளு போனாப்ல. படம் நல்லா வந்திருந்துச்சு. அயித்தானின்
அண்ணன் மகனும் வர அவங்களும் ஃப்போட்டோ எடுத்துகிட்டாங்க.
பக்கத்துல தான் ஹோட்டல். ஹோட்டலுக்கு திரும்பும் பொழுது

ரூமை மாத்திருப்பாங்களா? இல்லையான்னு டென்ஷனா இருந்துச்சு.
ரிஷப்ஷனில் வேற ரூம் சாவி கொடுத்தாங்க. இது எப்படி இருக்கப்
போகுதோன்னு நினைச்சுகிட்டே கதவைத் தொறந்தா ஷாக்!!!!
பள பள புத்தம் புது ரூம். ரெனவேஷன் செஞ்சுகிட்டு இருந்தாங்க.
அதுல புது ரூம் கொடுத்திருந்தாங்க. புது டீவி, பாத்ரூம் ஸ்டார்
ஹோட்டல் மாதிரி இருந்துச்சு. முக்கியமா கெட்டில் இருந்துச்சு.
உடன் சூடா ப்ளாக் டீ கலந்து குடிச்சேன். அப்புறம் தான் தலைவலி
விட்டிச்சு. :))

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் திரும்ப பேக்கேஜ் வாங்கிகிட்டு
இரவு உணவு அங்கேயே முடிச்சோம். ஹெர்பல் சூப் ரொம்ப சூப்பரா
இருந்துச்சு. மழை பெய்ய தொடங்கியிருந்தது!!!!

இந்தியா வந்து 4 வருஷம் முடிஞ்சிட்ட நிலையில எங்களுக்கு
எங்களையே பிடிக்காம போன ஒரு விஷயம் கத்தறது. பொதுவா
எனக்கும் அயித்தானுக்கு யார் கிட்டயும் சண்டை போடுறது
பிடிக்காது. அதுவும் ஸ்ரீலங்காவுல எல்லாம் ப்ளாண்டா இருந்த
இடத்துல 6 வருஷம் வாழ்ந்ததற்கு அப்புறம் கத்துறது என்பதே
இல்லாம இருந்தது. ஆனா இங்க வந்தற்கு அப்புறம் நிலமையே
தலைகீழ். சவுண்ட் விடாட்டா எதுவும் நடக்கறதில்லை. தான்
செய்ய வேண்டிய கடமையை மக்கள்ஸ் பொறுப்புணர்ந்து
செய்யாம இருப்பதால போராடத்தான் வேண்டி இருக்கு.

பால்காரரில் ஆரம்பிச்சு எல்லார்கிட்டயும் கத்தினோம்னாத்தான்
வேலை நடக்குது. இதை துரதிர்ஷ்டம்னு சொல்லாமா வேற
என்னன்னு சொல்றது?? ஹைதையில் மட்டுமில்ல சென்னை
விசிட், தமிழக பயணங்கள், பெங்களூரு, தில்லி பயணங்கள்னு எல்லா
இடத்துலயும் இப்படித்தான் அனுபவம்.


நம் தாய்த்திரு நாடு முன்னேறனும்னா மக்கள்ஸ் மனசுல
மாற்றம் வரணும்!!!

நடப்பதைப் பத்தி பேசுங்கிறீங்களா!!!! அதுவும் சரிதான்
அடுத்த பதிவுல சந்திப்போம்.

(படங்களை ஏத்த முடியாம ப்ளாக்கர் சதி செய்யுது. அப்புறமா
படங்கள் போடுறேன்)

13 comments:

Mahi said...

ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அனுபவம் போங்க! :)

நான் காலேஜ் படிக்கிற காலத்தில் ஊட்டி போயிட்டு வந்தது! இந்த முறை ஊருக்குப் போகைல கண்டிப்பா போகணும் என்ற ஆசையைக் கிளப்பிவிடுது உங்க பதிவுகள்!

சாந்தி மாரியப்பன் said...

//சவுண்ட் விடாட்டா எதுவும் நடக்கறதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையை மக்கள்ஸ் பொறுப்புணர்ந்து
செய்யாம இருப்பதால போராடத்தான் வேண்டி இருக்கு.//

ரொம்ப கரெக்டா சொன்னீங்க,.. ஆனாலும் கடைசியில், சவுண்ட் பார்ட்டின்னு பெயர் கிடைக்கிறதுதான் சில சமயங்களில் மிச்சம் :-))

pudugaithendral said...

வாங்க மஹி,

தினம் தினம் புது அனுபவம் தான் :))

உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம்பா கரீக்டா சொன்னீங்க.

வருகைக்கு மிக்க நன்றி

ஆத்மா said...

நீங்க உங்க அனுபவத்த சொல்லுற விதம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது....இப்போதுதான் மெல்ல மெல்ல படித்து வருகிறேன்....தொடருங்கள்

துளசி கோபால் said...

ஆமாம்ப்பா..... கத்துனாத்தான் வேலை நடக்குது.

சாதாரணமாச் சொன்னா கேட்பதே இல்லை. நம்மை ஏமாளின்னு நினைச்சுக்கிட்டு எப்படியெல்லாம் ஏமாத்தலாமுன்னு பார்க்கறாங்க.

எனக்கு கடந்த ரெண்டரை வருட இந்திய வாழ்க்கை நிறையக் கத்துக் கொடுத்துருக்கு:(

வல்லிசிம்ஹன் said...

நல்லவங்களாச் சத்தம் போடறவங்களா இருந்துட்டா நாம அதோகதிதான். அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஈன்னும் இரண்டு பொறுத்து துணி எடுக்கலாம்னு மீனாவே லாண்ட்ரி எடுக்க வரமாட்டார்.
அதை மீறிஏதாவது கோவிச்சா,அம்மாவுக்கு எப்பவும் முன்கோபம் னும் சொல்லுவா. அய்ய அலுப்பா இருக்குப்பா. ஊட்டி!!! நான் வரேன்:)

காற்றில் எந்தன் கீதம் said...

சீக்கிரமா படங்களை போடுங்க அக்கா...
ரோஸ் கார்டன் இப்போ எப்பிடி இருக்குன்னு பாக்கணும்....

சவுண்ட் விடாட்டா எதுவும் நடக்கறதில்லை. தான் செய்ய வேண்டிய கடமையை மக்கள்ஸ் பொறுப்புணர்ந்து
செய்யாம இருப்பதால போராடத்தான் வேண்டி இருக்கு.//
இந்தியாவ பொறுத்தவரை இதை நான் வழிமொழிகிறேன்....:)

Anonymous said...

//கடல் மட்டத்திலேர்ந்து 2200 அடி உயரத்தில் // madam that is 2200 meter not feet... ( 2200meter = 7216 feet)..

pudugaithendral said...

வாங்க சிட்டுக்குருவி,

நிதானமா படிங்க. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

பல சமயம் அழகன் பட டயலாக்கை மாத்தி சொல்வோம்.

“பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்!!!”

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எத்தனைவிதமான போராட்டங்கள் தினம் தினமும். அயித்தானுக்கு நான் அடிக்கடி சொல்லும் டயலாக். கடல் அலை ஓஞ்சாலும் ஓயும் இந்த பிரச்சனைகள் ஓயாது. :))

ஊட்டிக்கு சீக்கிரம் விசிட் அடிங்க

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க விஷ்ணு குமார்,

சுட்டினதுக்கு மிக்க நன்றி