Saturday, June 09, 2012

என்ன அழகு? எத்தனை அழகு?!!!

தொட்டபெட்டாவிலிருந்து கிளம்பியாச்சு. வேற பாதையில்
கோவை போகலாம்னு அயித்தான் சொன்னாங்க. அந்த
பாதையில் யானைகள் வருமாம்! தவிர மழை பெஞ்சிருப்பதால
எப்படி இருக்கும்னு கணிக்க முடியாது வேற. திரும்ப ஊட்டிபோய்
கோவை போக இஷ்டமில்லை. அப்ப ட்ரைவர் கோத்தகிரி
வழியா போகலாம்னு சொன்னாரு. மழை துரத்திகிட்டே வருது.
சீக்கிரமா மதிய உணவுக்கு மேட்டுப்பாளையம் போயிடம்னு
புறப்பட்டோம்.

ஊட்டி பகுதியில் தேடினாலும் கிடைக்காத டீ எஸ்டேட்டுக்கள்
எங்களை இருகரம் நீட்டி அழைச்சது.கோத்தகிரி பாதையில் மேட்டுப்பாளையம் போனா 7
கொண்டை ஊசி வளைவுகள்தான். அதுவே ஊட்டி
வழியில போனா 14!! ரோடு சும்மா ஸ்மூத்தா
இருந்தது ஆச்சரியமோ ஆச்சரியம். டிராபிக்கும் அதிகம்
இல்லாம சும்மா சல்லுன்னு பயணம்.அப்புறமா தான் டிரைவர் சொன்னாரு அம்மா ஓய்வெடுக்க
அடிக்கடி கொடநாட்டு(கோத்தகிரிக்கு பக்கத்துலதான் இருக்கு)
இந்தப்பாதையில அடிக்கடி போவாக. அதனாலயே ரோடு
ரொம்ப நல்லா இருக்கும்னு!!!! நெசமான்னு தெரியாது.
நெசமா இருந்தா அவுக புண்ணியத்துல ஒரு ஜெர்க் கூட
இல்லாத சூப்பர் பயணம். கண்ணுக்கு குளிரிச்சியா


டீ எஸ்டேட்டுக்கள், வழுக்கும் சாலைன்னு....
தேயிலை பறிக்கும் பெண்கள்...


ஊட்டி அளவுக்கு ஃபேமஸா இல்லாட்டியும் கோத்தகிரிக்குன்னு
நிறைய்ய புகழ் இருக்கு. வெள்ளைக்காரங்க மொதல்ல இந்த
இடத்தை கண்டுபிடிச்சு குடி புகுந்தாங்க. 1843ல இங்க
காபி பயிரிட்டு இருக்காங்க. அப்புறம் 1863லதான் தேயிலை
பயிரிட ஆரம்பிச்சு தேயிலை நல்லா வர காபியை விட்டுட்டு
தேயிலையை மட்டும் பயிரிட ஆரம்பிச்சிருக்காங்க.
19ஆம் நூற்றாண்டில் வெறும் 3000 ஏக்கரில் தேயிலை
பயிரிடப்பட்டு இருந்துச்சாம். இப்ப 30,000 ஏக்கரில் தேயிலை
விளைவிக்கறாங்க. நான் முன்னமே சொன்னது போல
கடல் மட்டத்துலேர்ந்து எம்புட்டு உசரத்துல தேயிலை பயிராகுதோ
அப்பத்தான் ருசி அதிகம். கோத்தகிரி கடல்மட்டத்துலேர்ந்து
1700 சொச்சம் உசரம் இருக்கு. ஓகே ஓகே ரக டீ கிடைக்கும்னு
சொன்னாங்க.

கோலார் தங்க சுரங்கம் போல ஒரு காலத்துல கோத்தகிரியிலையும்
தங்கம் கிடைச்சதாம் (வெள்ளைக்காரங்க காலத்துல) இப்பவும்
ஏதாவது மிச்சம் சொச்சம் இருக்குதான்னு ஆராய்ச்சி நடக்குதாம்.
அதனால நான் எல்லோருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா...
ஊட்டி போறதா இருந்தா ஒரு வாட்டி கோத்தகிரிக்கு போயிட்டு
வாங்க. ஏறுவது குன்னூர் பாதைன்னா இறங்குவதாவது
கோத்தகிரி வழின்னு வெச்சுக்கோங்க. இயற்கையை அனுபவிச்சுகிட்டே
ஒரு அழகான பயணமா இருக்கும். இதுக்கு நான் கியாரண்டி. :))

வழியில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பளையம் ஊரை பாக்க
கொடுத்து வெச்சிருக்கணும்.... டிரைவருக்கு நன்றி சொன்னோம்.
எதுக்குங்கன்னு கேட்டார்? இல்ல ஃப்ளைட் செலவு இல்லாம,
பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாம சும்மா அப்படியே
நுவரேலியா, கண்டிக்கு போயிட்டு வந்த திருப்தியை
கொடுக்கும் பாதையில அழைச்சுகிட்டு வந்தீகளேன்னு”
சொன்னோம். நிறைய்ய பேருக்கு இந்த வழி தெரியாது
சார். ரொம்ப அருமையான பாதைன்னு சொன்னார்
டிரைவர். ஓட்டுறவங்களுக்கும் சுகம், உக்காந்து
வர்றவங்களுக்கு சுகம்.


மதிய லஞ்சுக்கு மேட்டுப்பாளையம் வந்திட்டோம்.
அயித்தானின் அண்ணன் மகனுக்கும், மருமகளுக்கும்
சுத்தி சுத்தி வந்ததுல வயிறு சரியில்லாம போச்சு. நீங்க சாப்பிடுங்கன்னு
அவங்க இளநி தேட போயிட்டாங்க. நாங்க சாப்பிட்டு முடிச்சு
வரவும் அவங்க வரவும் சரியா இருந்துச்சு. கிளம்பி கோவை
போனோம். கோவையில் தங்கறதுக்கு அயித்தானின்
நண்பரின் உதவியோடு ரூம் புக் செஞ்சிருந்தோம்.

இதோ வந்துக்கினே இருக்கோம்னு போன் போட்டு சொன்னோம்.
வாங்க வாங்கன்னு சொன்னாங்க. சரின்னு 4 மணி வாக்குல
அந்த ஹோட்டலுக்கு போனா அங்க ஒரு அம்மா ஒக்காந்திருந்தாப்ல.
“ஆங். ரூம் புக் செஞ்சிருக்கு. ஆனா இப்ப ஏஸி ரூம் காலியில்ல.
இப்போதைக்கு ஏதாவது ரூம்ல தங்குங்க!!! ராத்திரிக்கு மாத்தி
தாரோம்னு” சொன்னாக. அயித்தானின் அண்ணன் மகன்
குடும்பத்தினருக்கு உடம்பு சுகமில்லை. ஓய்வு எடுக்கணும்.
தவிர 6 மணிக்கு மேல வேற வேலைகள் இருந்துச்சு. ரூமை
மாத்தினா சரி, மாத்தாட்டி!!! காலி ஆகுமான்னு கேட்டா,
“காஞ்சாலும் காயும், பெஞ்சாலும் பேயும்” அப்படிங்கற
மாதிரி அந்தம்மா பேச வந்திச்சு கோவம்.

நீங்க காலையில ஒரு வாட்டி போன் செஞ்சு ஞாபக
படுத்தி இருக்கணும்னு!! சொல்ல செம காண்டாகி
நல்லா காச்சி விட்டோம். அதோட மட்டுமில்லாம அந்தம்மா
நீங்க அந்த ஹோட்டல் போங்க, இந்த ஹோட்டல் போங்கன்னு
ரூட் காட்டினிச்சு. கடுப்பாகி அதெல்லாம் நீங்க சொல்லத்
தேவையில்லைன்னு சொல்லிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு எதிரில்
ஆர் ஆரோ ஏதோ ஒரு ஹோட்டல் ரொம்ப நல்லா இருந்துச்சு.
அங்க போனோம். ரூம் இருக்கான்னு கேட்டோம். இருக்குன்னு
கூட்டிப்போய் காட்டினாங்க. பிடிச்சிருக்க பணத்தை கட்டிட்டு
ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்தோம். காபி ஆர்டர் செஞ்சு
குடிச்சோம். கொளரிசங்கர் காபி மாதிரி இல்லம்மான்னு
ஆஷிஷ் சொல்லிக்கிட்டே குடிச்சாரு. :))

அயித்தான் அண்ணன் மகனுக்கும் கொஞ்சம் உடம்பு
சரியாகி கிளம்பலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்தாரு....

பதிவு பெருசா போச்சு. போன இடம் எங்கப்பா...
அடுத்த பதிவுல சொல்றேன்ப்பா..... :)))


7 comments:

வெங்கட் நாகராஜ் said...

// போன இடம் எங்கப்பா...
அடுத்த பதிவுல சொல்றேன்ப்பா..... :))) //

நானும் காத்திருக்கேன்பா....

நல்ல பகிர்வு... கோத்தகிரி அழகை நானும் ஒரு முறை ரசித்திருக்கிறேன்.... மீண்டும் செல்லும் ஆசையைத் தூண்டியது உங்கள் பகிர்வு.

இராஜராஜேஸ்வரி said...

கோத்தகிரி வழி இயற்கையை அனுபவிச்சுகிட்டே
ஒரு அழகான பயணமா இருக்கும்.

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கோவை நேரம் said...

உங்க பயணம் நல்லா இருந்துச்சு...ஓஹோ..நீங்க ஊட்டிக்கு புதுசா..
கோத்தகிரி வழி எப்பவும் ட்ராபிக் இல்லாம தான் இருக்கும்.அந்த ஹோட்டல யா தங்கினீங்க..அங்க எதுவுமே சாப்பிடற மாதிரி இருக்காதே..

அமுதா கிருஷ்ணா said...

கொடநாடு வியூவையும் பார்த்து வந்திருக்கலாம்.அம்மாவின் மிக பெரிய பங்களாவினை தாண்டி தான் அந்த வியூவிற்கு போக வேண்டும். நாங்க எப்ப போனாலும் ஊட்டி ஒரு நாள் விசிட் தான். கோத்தகிரி தான் பெஸ்ட். ஒரு நாளைக்கு 1000, 1500 ரூபாய்க்கு அருமையான வீடுகள் இங்கு வாடகைக்கு கிடைக்கும்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவைநேரம்,

ஊட்டிக்கு புதுசுதாங்க. அந்த ஹோட்டல் பேரு சரியா ஞாபகம் இல்லை. ஆனா நாங்க தங்கியிருந்த ஹோட்டல்ல காம்ப்ளிமெண்டரி ப்ரெக்ஃபாஸ்ட். ரொம்ப சுவையா அருமையா இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,
கொடநாடு போக நேரம் இல்லை. அடுத்தநாள் காலை அயித்தானின் அண்ணன் மகனுக்கு பெங்களூர் செல்ல ட்ரையின். தவிர அவங்க உடம்பும் சரியில்லாம இருந்ததால சீக்கிரம் கோவை போய் சேர்ந்தா போதும்னு ஆயிடிச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

நம்ம நாட்டு நுவரெலியா, கண்டி பற்றி கூறியது மகிழ்ச்சி.

எனக்குப் பிடித்த இடம் ஊட்டி. நான் இரண்டுதடவை வந்திருக்கின்றேன்.