சில ஞாபகங்கள் நமக்கு மறக்காது. இல்லாட்டி மறந்திடக்கூடாதுன்னு
நினைப்போம். அப்படித்தான் எங்களுக்கு ....... அதே ஊர்தான்!!!
அதைப்பத்தின் இன்னும் எங்க வாழ்நாள் முழுக்க பேச சொன்னாலும்
அலுக்காம பேசுவோம் (கேட்டு உங்களுக்கு அலுத்திருக்கலாம்!!:)) )
தினத்துக்கு 10 வாட்டியாவது ஒவ்வொருத்தரும் ஞாபகப்படுத்திட்டு,
ஸ்ஸ்ஸ்ஸ் ஏன் ஞாபகப்படுத்தறீங்கன்னு... செல்லமா சலிச்சுக்குவோம்.
அயித்தானின் நண்பர் வருவதாக தகவல் சொன்னாரு. அவரும்
வழக்கம்போல ஏதேனும் வேணும்னா மெசெஜ் அனுப்புங்கன்னு
சொல்ல அயித்தான் என்ன வாங்கியாறாச் சொல்லணும்னு கேட்டாக.
பிள்ளைகள் பெரிய்ய்ய லிஸ்டே கொடுத்தாங்க. :)) அத்தனையும்
கட் ஷாட் செஞ்சு கடைசியில் EGB யும் ஜெஸ்டா டீயும் வாங்கியாரச்
சொன்னோம். அதென்ன EGB? இதான். ஜிஞ்சர் பியர்.
அந்த ஊர் உணவும் பிள்ளைகளுக்கு ரொம்ப விருப்பம். அந்த உணவு
பழக்கம் பத்தி அடிக்கடி பேசுவோம். போன வாரத்துல ஒரு நாள்
காலை உணவு பிரட்டுன்னு முடிவு செஞ்சோம். சரி அம்மா
எப்பவும் போல டோஸ்ட் இல்லாட்டி சாண்ட்விச் செய்வாங்கன்னு
பேசாம அவங்க வேலையை பாத்துக்கிட்டு இருக்க. ப்ரேக்ஃபாஸ்ட்
டேபிளில் ப்ரெட்டோடு ஸ்ரீலங்கன் தால் சர்வ் செஞ்சதும் முகத்தில்
ஆயிரம் வால்ட்ஸ் பல்ப்.
யம்மி யம்மி சொதின்னு தலைப்பு வெச்சிட்டு என்னென்னவோ கதை
பேசிக்கினு இருக்கேன்னு திட்டாதீக. நேற்று டின்னருக்கு ஆலு சொதியும்,
இடியாப்பமும் வெச்சதும் செம குஷி. யம்மி யம்மின்னு ரெண்டு பேரும்
எஞ்சாய் செஞ்சாங்க. அந்த ரெசிப்பியை இங்கே தர்றேன்.
தேவையான சாமான்கள்:
உருளைகிழங்கு - 1/4 கிலோ (வேகவைத்து தோலுரித்து, வெட்டி
வைத்துகொள்ளவும்.
பூண்டு - 4 பல்
பெரிய வெங்காயம் - 3.நீளமா அரிந்து கொள்ளனும்.
ப.மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
தனியா பொடி - 1 ஸ்பூன் (எண்ணெய் இல்லாம சின்ன கடாயில்
வறுத்துக்கணும். கூடவே சீரகப்பொடு சேத்தாலும் தப்பில்லை)
எண்ணெய் - 1 ஸ்பூன்.
உப்பு, மஞ்சள் தேவைக்கேற்ப
தேங்காய்ப்பால் அல்லது தேங்காய்ப்பால் பவுடர்
செய்முறை:
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்து தாளிக்கவும்.
கடுகு தாளித்து ப.மி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பூண்டு சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு, தனியா சீரகப்பொடி
சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காய்ப்பால் பவுடரை திக்காக கலக்கி அதில் ஊற்றவும்.
நல்லா கொதிக்கும் போதே வாசனை தூக்கலா இருக்கும்.
சுடச்சுட இடியாப்பம் இல்லாட்டி ரைஸ் சேவைக்கு சூப்பர்
காம்பினேஷன்.
படம் நெட்டுல சுட்டதுதான். நான் செஞ்சது போட்டோ எடுக்கும் முன்னரே
காலி ஆகிடிச்சு. :( :))
17 comments:
ஐ ..நேத்து நம்ம வீட்டுலயும் இதே சொதி..ஆனா புட்டு தான் மெயின் டிஷ் :)
வாங்க சுதர்ஷிணி,
ஆஹா புட்டா ம்ம்ம்...
போல் ரொட்டி, ஆப்பம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.
:))
வருகைக்கு நன்றி
இலங்கை ரெஸிப்பிகள் நல்லாருக்கும். என்னிடம் வேலைபார்த்த சில பணிப்பெண்கள் மூலமா சில ரெஸிப்பிகள் தெரியும்.
ஆமா, இந்த சொதி இலங்கை உணவா?
இங்கேயும் உண்டே? சில ஊர் கல்யாணங்களில் இது முக்கிய உணவுன்னு சொல்வாங்க. அதில் நிறைய காய்கறிகள், பாசிப்பருப்பு போட்டிருக்கும்.
நீங்கச் செஞ்சிருக்க முறையில் நாகர்கோவிலிலும் செய்வார்கள். பேர்தான் ‘உருளைக்கிழங்கு stew’.
நானும் சொதியை ருசித்திருக்கிறேன் - நண்பர் பத்மநாபன் [ஈஸ்வரன்] வீட்டில்...
ஆசையைக் கிளப்பி விட்டுட்டீங்க சகோ.... :)
I love SriLankan food..coconut milk is the only concern! ;)
Sothi is so good..will try it soon. Will it go with idli/dosa? :)
வணக்கம் தோழி சொதி எனக்கும் பிடிக்கும் அதுவும் இறால் மீசையில் செய்தால் இடியப்பத்தோடு ஒரு பிடி பிடிக்கலாம் ஆனால் அது எல்லாம் ஒரு காலம்!ம்ம்ம் இங்கு தேங்காய்ப்பால் கொழுப்பு என்று தவிர்க்க வேண்டிய நிலை !
புதுகைத் தென்றலுக்கு தனிமரம் முகவரி தெரியாது ஆனால் நான் நல்ல சொதி வைப்பேன் !:)))
வாங்க ஹுசைனம்மா,
நான் இந்த உணவை அங்கேதான் சாப்பிட்டேன். வேறெங்கும் ருசித்ததில்லை. பாசிப்பருப்பு சேக்க மாட்டாங்க. அங்கே பொதுவா தேங்காய்ப்பால் சேர்த்துதான் உணவு.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
ரெசிப்பி கொடுத்திருக்கேனே!! தங்க்ஸை செய்ய சொல்லிடுங்க. :))
வருகைக்கு நன்றி
வாங்க மஹி,
நாம என்ன நிதமுமா தேங்காய்ப்பால் சேத்து சாப்பிடப்போறோம். எப்பவாவதுதானே ஓகே.
இட்லி தோசைக்கு ட்ரை செஞ்சதில்லை
வருகைக்கு நன்றி
வாங்க தனிமரம்,
உங்க முகவரி இப்ப தெரிஞ்சிக்கிட்டேன்ல...
நீங்க நல்லா சொதி வைப்பீங்கன்னு சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
puthusaa irukkee
நல்லதொரு குறிப்பு! எப்போதும் இந்த சொதி இடியாப்பத்துக்கும் ஆப்பத்துக்கும் அருமையான பக்கத்துணை!
;) ஞாபகப்படுத்திட்டீங்களே
அந்த ஶ்ரீலங்கன் தால் எப்படிச் செய்யணும்?
நம்ம வீட்டுலே புட்டுன்னா.... அதுக்கு நெய் சர்க்கரை. இடியப்பம் ஆப்பமுன்னா அதுக்குத் தேங்காய்ப்பால்.
வாங்க துளசி டீச்சர்,
ஸ்ரீலங்கன் தால் செய்முறை:
மசூரி தால் - 1 கப், பூண்டு - 4 பல், வெங்காயம்-நீளமாக அரிந்தது, பச்சை மிளகாய், உப்பு மஞ்சள் தூள், கறிவேப்பிலை, தேங்காய்ப்பால்.
மசூரிதாலை கழுவி அதில் மஞ்சள்தூள் பூண்டு சேர்த்து வேகவிடவும். எண்ணெய் சூடேற்றி கறிவேப்பிலை, ப.மி, வெங்காயம் சேர்த்து வெங்காயம் நல்லா பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி வைத்துக்கொள்ளவும். பருப்பில் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விட்டு மேலே சொல்லியிருக்கும் வதக்கலை சேர்த்தால் சரி. உப்பு சேர்க்க மறந்திடாதீங்க.
ப்ரெட்டுக்கு சூப்பர் ஜோடி :)
தேங்க்ஸ்ப்பா.
நம்ம வீட்டுலே மசூர் பருப்பு இல்லை. பாசிப்பருப்பு போட்டுச் செஞ்சு பார்க்கறேன்.
Post a Comment