Saturday, July 21, 2012

pizza bread...

ஃபாஸ் ஃபுட், ஜங்க் ஃபுட் இவைகளை பசங்க அதிகமா விரும்பி
சாப்பிடறாங்க. என்ன செய்யறதுன்னே புரியலை இதுதான் பல
வீடுகளில் புலம்பல். அதுலயும் இந்த மேகி இல்லாட்டி பசங்க
அம்புட்டுதான். வாரத்துக்கு ஒரு நாள் இல்லை பல வீடுகளில்
தினமும் ஏதோ ஒரு வேளை உணவாக மேகித்தான் இருக்கு.

நாம என்னதான் மறுத்து கத்தினாலும் ஜெயிக்கப்போவது
பசங்கதான்!!! என்னதான் செய்ய. என்னுடைய ஐடியா படி
பாத்தா அதையும் நம்ம வாழ்க்கையில் அனுமதிச்சிடறது
பெட்டர். எப்படியும் பசங்க தான் ஜெயிக்கப்போறாங்கன்னு
இல்லை, ஆனா நாம் எதிர்க்க எதிர்க்க அவங்களும் குதிக்கத்தான்
போறாங்க. :( :)

எங்க வீட்டுல பிட்சா, பர்கர், நூடில்ஸ் எல்லாமே உண்டு.
அவை எல்லாம் மாசத்துக்கு ஒரு தரம் மட்டும்தான். ஆனா
அதே பிட்சாவை நானே வீட்டுல செஞ்சு சில சமயம் கொடுத்திடுவேன்.
பர்கர், வெஜி நூடில்ஸ் (சைனீஸ் நூடில்ஸ்), பாஸ்தா
எல்லாமும் வீட்டிலேயே செஞ்சு கொடுத்திடறது. மேகி நூடில்ஸ்
கூட மாசத்துக்கு ஒரு தரம் உண்டு. பிட்சா ப்ரெட்னு தலைப்பு
போட்டுட்டு என்னா கதை பேசிக்கினு இருக்கன்னு கேக்கறீங்கள்ல...
மேட்டருக்கு வர்றேன். பிட்சா டேஸ்ட்ல நாம விரும்பும் சத்துக்களோட,
செஞ்சு கொடுத்தா எப்படி இருக்கும்??!!! ஐடியா நல்லா இருக்குல்ல.
இதுக்கும் சாதாரண சாண்ட்விச் ப்ரெட் போதும்.

தேவையான ஐட்டங்கள் பாப்போம்:

சாண்ட்விச் ப்ரெட் - 4
வெங்காயம் நீளமாக அரிந்தது - 1
தக்காளி நீளமாக அரிந்தது - 2
குடை மிளகாய் அரிந்தது - 2
கார்ன் - 1/2 கப்.
(விரும்பினால் காரட் துருவல், பீன்ஸ் பொடியா அரிந்தது)
சேத்துக்கலாம்.
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
பிட்சா வாங்கும் போது கொடுப்பாங்களே சில்லிஃப்ளேக்ஸ் அது
ஒரு பாக்கெட், அதோடு வரும் இத்தாலியன் சீசனிங் ஒரு
பாக்கெட். - இதுதான் முக்கியாமான பொருள். இது இல்லாட்டி
பிட்சா ப்ரெட் சரியா வராது. (அடுத்தவாட்டி பிட்சா ஆர்டர்
செஞ்சா தூக்கி எறிஞ்சிடாம பத்திராமா எடுத்து வெச்சுக்கோங்க).
சீஸ் ஸ்லைஸ் - 2
பட்டர்- கொஞ்சம்.
உப்பு சுவைக்கேற்ப

சாமான் ரெடி. செய்வது எப்படின்னு பாக்கலாம். அவன்லயோ
இல்ல கடாயிலோ ஆலிவ் ஆயில் சேர்த்து வெங்காயத்தை
வதக்கி, தக்காளி, குடைமிளகாய், கார்ன் சேர்த்து நல்லா
வேக விடவும். வதங்கியதும் சில்லி ஃப்ளேக்ஸ், இத்தாலியன்
சீசனிங், உப்பு போட்டு கலந்து திரும்ப கொஞ்சம் சூடு
செஞ்சுக்கணும். மசாலா ரெடி.



ப்ரெட் ஸ்லைஸ் எடுத்து நடுவில் மசாலாவை வெச்சு, மேலே
ஒரு ஸ்லைஸ் சீஸ் வெச்சு, இன்னொரு ஸ்லைஸ் ப்ரெட்டால
மூடி அதை தவாவில் பட்டர் போட்டு இரண்டு பக்கமும் கொஞ்சம்
ப்ரவுன் கலர்ல டோஸ்ட் போட்டுக்கோங்க. தவாவோட சூட்டுக்கு
கொஞ்சமா சீஸ் மெல்ட்டாகி சாப்பிடும்போது அப்படியே....
பிட்சா சாப்பிடும் டேஸ்ட் கொடுக்கும். :))


டோஸ்டரில் போட்டும் செய்யலாம். ஆனா சிலசமயம் சீஸ் உருகி ஒட்டிக்கிற
வாய்ப்பு அதிகம். ஆனா தவாவில் அழகா வருது. செஞ்சு பாத்து சொல்லுங்க.

கிட்டுமணிகள், தங்கமணி ஊருக்கு போயிட்டதால தற்காலிகமா
கிட்டுமணிகளா இருப்பவங்க எல்லோருக்கும் இது ரொம்ப ஈசியான ஒரு
ரெசிப்பி. :))

ஹேப்ப்பி வீக் எண்ட்.

18 comments:

கோமதி அரசு said...

நாம என்னதான் மறுத்து கத்தினாலும் ஜெயிக்கப்போவது
பசங்கதான்!!! என்னதான் செய்ய. என்னுடைய ஐடியா படி
பாத்தா அதையும் நம்ம வாழ்க்கையில் அனுமதிச்சிடறது
பெட்டர். எப்படியும் பசங்க தான் ஜெயிக்கப்போறாங்கன்னு
இல்லை, ஆனா நாம் எதிர்க்க எதிர்க்க அவங்களும் குதிக்கத்தான்
போறாங்க. :( :)//

நாமே அவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுத்து நல்ல அம்மா என்று பெயர் எடுத்து விடுவது நல்லது.

எதிர்ப்பை இணக்கமாக்கி குழந்தைகளை மகிழ்விக்கும் தென்றலுக்கு நன்றி.

காற்றில் எந்தன் கீதம் said...

சூப்பர் ரெசிபி அக்கா நாளைக்கே செஞ்சு அசத்திருவோம்... உங்க புண்ணியத்துல...நாளைக்கு நம்ம வீட்டுல சுவையான புது சாப்பாடு...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு ரெசிப்பி...
பகிர்வுக்கு நன்றி...

CS. Mohan Kumar said...

டிபரண்டா இருக்கு டிரை போன்றோம்

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. பிஸ்ஸா பிரியையான என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிக்குமே. செஞ்சுரலாம். எங்கூட்லயும் பிஸ்ஸாவோட கிடைக்கும் பொடிகளை ரெகுலரா செய்யற ஹக்கா நூடுல்ஸ்ல சேர்ப்பேன். ஹோட்டல்ல சாப்பிட்ட மாதிரியே இருக்குன்னு பசங்க சொல்வாங்க.

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

எங்க அம்மம்மா பழக்கம் எனக்கும். வேண்டியதை வீட்டுலேயே செஞ்சு கொடுத்து அசத்திடுவாங்க அம்மம்மா. :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

ஹேப்பி வீக் எண்ட். :)) வீட்டுல காய்ந்த பார்சி இலைகள் இருந்தா அதையும் அந்த மசாலாவில் தூவிட்டா வாசனை சும்மா கும்முன்னு தூக்கும்

எஞ்சாய்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மோகன் குமார்,

கண்டிப்பா செஞ்சு பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

உங்க ஐடியாவும் சூப்பர்.

வருகைக்கு மிக்க நன்றி

துளசி கோபால் said...

சூப்பர் ஐடியா!

நானும் மகள் சின்னவளா இருந்தபோது எல்லாத்தையும் வீட்டுலேயே செஞ்சு கொடுப்பேன், சூஷி உள்பட:-))))

ஸாதிகா said...

சுலபமாக செய்து காட்டி இருக்கீங்க.

ஹுஸைனம்மா said...

இதுல சீஸ் ஸ்லைஸுக்குப் பதிலா ஷ்ரெட்டட் சீஸ் இன்னும் நல்லா இருக்கும். பீட்ஸாவில் வர்ற மாதிர்யே நூல் மாதிரி வரும். டோஸ்டர்லயும் வடியாது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ரெசிப்பி... பார்க்க நல்லா இருக்கு! :)

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

அந்த ரெசிப்பியும் சொல்லிக்கொடுங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

கொஞ்சம் வளர்ந்த பசங்கன்னா அவங்களே செஞ்சு சாப்பிடலாம். அம்புட்டு ஈசி ரெசிப்பி.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இதுக்குத்தான் ஹுசைனம்மா கிட்ட கருத்து கேட்டுடணும்னு நினைக்கிறது. ஐடியா சூப்பர்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

டேஸ்ட்டும் நல்லா இருக்கும் :)

வருகைக்கு மிக்க நன்றி