Saturday, August 18, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 17/8/12

அம்மா,அப்பா ஹைதை வந்திருக்காங்க. போன சனிக்கிழமை
டிக்கெட் புக் செஞ்சாச்சு படத்துக்கு போகலாம்பான்னு சொன்னேன்.
அப்பா நான் வரலைன்னு சொன்னாரு. கேன்சல் செய்ய முடியாது
கண்டிப்பா போவோம்னு சொல்லி அழைச்சு போனப்படம் “ஈகா”
தெலுங்கில் பாத்தோம். செம படம். ராஜமொளலியை தலையில்
வெச்சு கொண்டாடுவதில் தப்பே இல்லை. ஈயோடு போட்டி போட்டு
சுதீப் நடிப்பு சூப்பர்.


இதுவரைக்கும் பாக்கலைன்னா கண்டிப்பா ஒருவாட்டி பாத்திருங்க.
ஏன்னா? வரமாட்டேன்னு சொன்ன எங்கப்பா இன்னொரு வாட்டி
படம் பாக்கணும்மா ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரு. :))

**********************************************************************
இது பெண்களுக்கான தகவல். (ரங்க்ஸ்கள் படிச்சாலும் தங்க்ஸுக்கு
சொல்லுங்க)
அடிக்கடி தலைவலி, முதுகுவலின்னு வருதா? மருந்து சாப்பிட்டாலும்
பெருசா வித்தியாசம் தெரியாம இருந்தா எதுக்கும் உங்க “பிரா”வை
செக் செய்யுங்க. ரொம்ப டைட்டா இருந்தாலோ, தவறான சைஸ்
அணிஞ்சாலோ கழுத்தையும், தோள்பட்டையும் இணைக்கும் இடத்தில்
தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்து அதனால இந்த வலி
இருக்க சாத்தியம் அதிகமாம். புருவத்துக்கிட்ட வலி, உச்சிமண்டையில்
வலின்னு கூட இருக்கும்.

அதிக டைட்டா இருந்தாலும் கஷ்டம், அதிக லூசா இருந்தாலும்
கஷ்டம். மார்பகங்கள் தளர்ந்திடும். அதனால ப்ர்ஃபெக்ட் ப்ரா
சைஸை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
************************************************************

எப்படியாவது 1000 பதிவுகள் போட்டிடணும்னு இருந்தேன்.
ஆனா இதுவரைக்கும் முடியலை. காரணம் லோ பீபி +
வயிற்றுவலி. ஏப்ரல் மாதமெல்லாம் கடுமையான வயித்துவலி.
எண்டோஸ்கோபி, கொலோனோஸ்கோபி எல்லாம் செஞ்சு
பாத்ததுல அல்சர் ஆரம்ப நிலை. மருந்து எடுத்துகிட்டு
கொஞ்சம் சரியா ஆனிச்ச்சு. சரியா சாப்பிடக்கூட முடியாம,
டீ,காபி, கோதுமை ஐட்டங்கள் எல்லாம் தியாகம் செஞ்சு
இருந்தேன். போன வாரம் திரும்ப வலி. இந்த வாட்டி
எங்க வீட்டு டாக்டருக்கு போன் செஞ்சேன். (எங்க அம்மம்மா
தான் அது :))

அம்மம்மா எப்பவும் கைவைத்தியம் சொல்வாங்க. அது
நல்லா கேக்கும். இப்ப அம்மம்மா சொன்ன மருந்து எல்லோருக்கும்
உதவும்னு இங்கே தர்றேன். அசிடிட்டி, வாயுத்தொல்லை,
அல்சர் இருக்கறவங்க இந்த மருந்தை தொடர்ச்சியா எடுத்துக்கலாம்.

1 கப் சீரக, 1/4 கப் வெந்தயம், கல் உப்பு கொஞ்சம்.
இவைகளைத் தனித்தனியா வறுத்து மிக்சியில் பொடிச்சு
வெச்சு காலையில் வெறும் வயித்தில் ஒரு ஸ்பூன்
தண்ணீரில் கரைச்சு தினமும் சாப்பிட்டு வர வயிற்றுப்புண்
ஆறும். சோறு சாப்பிடும்போது இதே பொடியை போட்டு
முதல் உருண்டை சாப்பிட்டு மத்த சாப்பாடு சாப்பிடலாம்.

இப்பதான் பசிச்சு சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். :))
*******************************************************************

அடுத்ததும் மருந்துதான் இதைச் சொன்னது எங்க வீட்டு
ஆயுர்வேதிக் டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருக்கற மாமா பொண்ணு.
ராத்திரிகளில் சரியா தூக்கம் வராம கஷ்டப்படுறவங்க
1 டம்ப்ளர் இளம் சூடான எருமைப்பாலில், ஒரு சிட்டிகை
ஜாதிக்காய் பொடி சேர்த்து சர்க்கரை கலந்து குடிச்சு படுத்தா
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான். :))

நம்புங்க இட்ஸ் வொர்க்கிங். நல்லா தூங்கினேன். :))

**********************************************************



16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல்கள்... நன்றிங்க....

மனோ சாமிநாதன் said...

இரண்டுமே அருமையான மருத்துவக்குறிப்புகள் தாம்! அன்பு நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல். எனக்கும் மாத்திரைகளினால் தலைவலி+வயித்துவலி. ஜீரகத்தண்ணி குடிச்சுட்டு வரேன். மெந்தியம் நல்லது முயற்சிக்கிறேன். கண்டிப்பா பலன் இருக்கும். நீங்கள் நலமே வாழ என் பிரார்த்தனைகள். அம்மா அப்பாவுக்கு என் நமஸ்காரங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

கோமதி அரசு said...

தென்றல் நல்ல மருத்துவ குறிப்பு.
வலை பூவரசி விருதுக்கு வாழ்த்துக்கள்.
வை.கோ அவர்களிடம் விருது வாங்கியதற்கும் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

பிரியாணி (அரசியல்) காரம் குறைவா இருக்கேன்னு பாத்தா, ஓ, அல்சர் தொந்திரவா??!!

உடம்பைப் பாத்துக்கோங்க.

சந்திர வம்சம் said...

அவள் விகடனில் தங்கள் வலை பற்றி கண்டேன். மிக்க மகிழ்ச்சி. உடன் ஃபாலோயராகி விட்டேன்.
பார்க்க எனது தளம்.
பத்மாவின் தாமரை மதுரை & மாதேஸ்வரன் மதுரை

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்

pudugaithendral said...

வருகைக்கு ரொம்ப நன்றி மனோசாமிநாதன்

pudugaithendral said...

நன்றி சுரேஷ், அவசியாமன பதிவா இருக்கும் போல இருக்கே. வந்து படிக்கிறேன்.

pudugaithendral said...

ஆமாம் வல்லிம்மா,
சீரகம் வெந்தயம் ரெண்டையும் சேர்த்து பொடிச்சு சாப்பிடறேன். நல்ல முன்னேற்றம். முக்கியமா வயித்தை தொட்டாலே, பச்சைப்புண்ணா வலிப்பது குறைஞ்சிருக்கு.

pudugaithendral said...

பாத்தேன் இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி

pudugaithendral said...

ஆமாம் கோமதிம்மா,

இரட்டை சந்தோஷங்கள். நன்றி

pudugaithendral said...

பிரியாணி (அரசியல்) காரம் குறைவா இருக்கேன்னு பாத்தா, ஓ, அல்சர் தொந்திரவா??!!//

ஹைதை பிரியாணி காரம் குறைவுதான். அதனாலத்தான் ஆவக்காய் சேர்த்திருக்கேன் தலைப்பில் :))

உடம்பைப் பாத்துக்கோங்க.//

நன்றி

pudugaithendral said...

ரொம்ப சந்தோஷம் சந்தர வம்சம்.

கண்டிப்பா வந்து பாக்கிறேன்.