Friday, August 24, 2012

DI(N)E MORE!!!!!

வார இறுதியில் எங்கே சாப்பிடப்போவது??!!! இது ரொம்ப பெரிய
விஷயமா இருக்கும். நமக்கு சைவ சாப்பாடு. அதுக்கு தகுந்த
மாதிரியான ஹோட்டல்கள்தான் போக முடியும். இந்திய
உணவகங்கள் ரொம்ப குறைவு. அதுக்காக எப்பவும் இந்திய
உணவுகள் தான் வேணும்னு அடமெல்லாம் பிடிக்க மாட்டோம்.
ஆப்பம், புட்டு, கொத்து, போல் ரொட்டி எல்லாமும் சாப்பிடுவோம்.
(கொழும்பில் இருந்தப்ப நடந்த கதையை சொல்லிக்கிட்டு
இருக்கேன்.)

எங்கயாவது வித்தியாசமா சாப்பிட போகலாம்னு அயித்தானைக்
கேட்டோம். சரி வாங்க அழைச்சிக்கிட்டு போறேன்னு
அயித்தான் சொன்னாக. அப்ப என் தம்பி கார்த்தியும் எங்க
கூட கொழும்பில் இருந்தாப்ல. தம்பி ஐயா என்ஐஐடில ஃபேக்வல்ட்டியா
இருந்தாப்ல. சனிக்கிழமை சாயந்திரம்தான் நம்ம அவுட்டிங்.
சனிக்கிழமை கொஞ்சம் சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வந்து
சினிமா பாத்திட்டு தூங்குவோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை
லேட்டா.....ஆ எந்திரிப்போம். மொதோ நாள் கொஞ்சம்
ஹெவியா இருக்கும் சாப்பாடு. அதனால் ஞாயிற்றுக்கிழமை
காலையில் “நோ ப்ரெக்ஃபாஸ்ட்” டீ, பிஸ்கட் சாப்பிட்டு
12 மணிக்கு சாப்பாடு.

அன்னைக்கு அயித்தான் ஃப்ளவர் ரோடில் இருக்கும் அந்தக்கடைக்கு
அழைச்சுகிட்டு போனாரு. அங்க நாம சாப்பிட என்ன கிடைக்கும்னு
ரோசனை. அந்தக்கடைக்கு பேரு Dinemore. சப்மரைன்னு
சொல்லக்கூடிய சாண்ட்விச்கள் கிடைக்கும் அப்படின்னு
சொன்னாங்க அயித்தான்.


அயித்தானுக்கு தெரியும்லன்னு,”நீங்களே ஆர்டர் செஞ்சிருங்கன்னு!!”
சொல்லிட்டு நானும் பசங்களும் டேபிள் தேடி உக்காந்திட்டோம்.
அயித்தானும் தம்பியும் ஆர்டர் செய்ய போனாங்க.

நீள்ளள....மா ப்ரெட். அதில் செலரி, கொஞ்சம் வெஜிடபிள்
எல்லாம் போட்டு வந்துச்சு. அதிகா மயனைஸ் சாஸ்தான்
இருந்தது. ஒரு கடி வாயில் வெச்சா.... சப் சப்புன்னு இருந்துச்சு.
எந்த சுவையும் தெரியலை. தக்காளி சாஸ் கேட்டு வாங்கி
சேத்து ஒரு வழியா சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

இரண்டு நாளைக்கு பசியே எடுக்கலை!!!! அப்படி ஒரு மாதிரி
ஆகிடிச்சு வயிறு. அதிகமா சீஸ் + மயனைஸ் சாஸ் எல்லாம்
சேர்ந்து ஒரு மாதிரி ஆகிடிச்சு. :(( அந்த ஏரியா பக்கம்
போகும்போதெல்லாம் இந்தக்கடைக்கு DINE MORE அப்படிங்கறதுக்கு
DI(N)E MORE பேர் வெச்சிருக்கலாம்னு சொல்வோம்.
செம கொலஸ்ட்ரால் ஏறுதே அதனாலத்தான் இந்தப் பேரு. :))

ஹைதை வந்ததற்கப்புறம் சப்வே ரெஸ்டாரண்ட் அழைச்சு
கிட்டு போனார் அயித்தான். உடனே டைன்மோர்தான் ஞாபகம்
வந்தது. ஆனா இங்க நம்ம சாய்ஸுக்கு ஏற்ப தயாரிச்சு
தர்றாங்க. அதனால மயனைஸ் இல்லாம நாம விரும்பும்
சாஸ் போட்டு, ஜால்பனோஸ் எல்லாம் சேர்த்து ருசியா
தயார் செய்ய சொல்லலாம். நம்ம கண்ணுமுன்னாடியே
அழகா செஞ்சு கொடுக்கறாங்க.


அதிலயும் இந்த கடுகு சாஸ் உடம்புக்கு ரொம்ப நல்லது.
கொழுப்பு குறைக்கும். கொஞ்சமா புளிப்பு சுவையோட
ரொம்ப நல்லா இருக்கும்.

அப்புறம் இந்த பிட்சா, பர்கரை விட என்னைப்பொறுத்தவரை
சப்வே சாண்ட்விச்கள் ஆரோக்கியமானவை. தேவையான
அளவு காய்கறிகளும் சேர்த்துக்கலாம். வேண்டாம்னா
சீஸை தவிர்த்திடலாம். பனீர் சப்வே சாப்பிட்டிருக்கீங்களா??
சூப்பர் டேஸ்ட்.

ஆனா ஒண்ணுங்க. இங்க இந்தியா வந்த புதுசுல கூட
விடாம வார இறுதியில வெளிய சாப்பிட போய்க்கிட்டு
இருந்தோம். இப்ப ரொம்ப பெம்மா இருக்கு. வரிதான்!!!
எங்க ஊர்ல 14.50 சர்வீஸ் டாக்ஸ், தவிர சேல்ஸ்டாக்ஸ்
எல்லாம் போட்டு பில்லை பாக்கும்போதே சாப்பிட்டது
செமிச்சிடும்!!!! :(( (ஒரு ஆள் சாப்பாடு வரியாவே
கட்டும் கொடுமை)

புலம்பி ஆவப்போறது ஒண்ணுமில்ல. சம்சாரம் அது
மின்சாரம் வசனம்தான். “ம்ம்ம் நீயும் பழகிக்க” :)

ஹேப்பி வீக் எண்ட்


5 comments:

அன்புடன் அருணா said...

//வார இறுதியில் எங்கே சாப்பிடப்போவது??!!! //

super question!
question of the week!

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

super question!
question of the week!//

ஆமாம்பா அடுத்தவங்க சமைச்சு கொடுத்தா நல்லா இருக்குமேன்னு தோணும். அதனாலத்தான் வார இறுதியில் அவுட்டிங். (ஒரு வேளையாவது அடுப்பாங்கரையிலிருந்து ஓய்வு கிடைக்குமே) :))

வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு அயிட்டங்கள் இருக்கா...?

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

ஆமாம். அடுத்தவாட்டி ட்ரை செஞ்சு பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

இலங்கை Dinemore இப்போது இளம் கூட்டங்கள் எல்லோரும் இங்குதான் சாப்பிடப் போகின்றார்கள். அசைவம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

எல்லாம் சீஸ் கலந்த கொழுப்பு உணவுகளாகத்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

நான் இங்கு போனது இல்லை.