Monday, August 27, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 27/8/12

ஆந்திராவில் 717 இஞ்சினியரிங் கல்லூரிகள் இருக்கு. என்ன மாதிரி
பணத்தை பிடுங்கறதுன்னு புரியாம இருந்தாங்க. அதனால எம்செட்
(லோக்கல் எண்ட்ரன்ஸ்) ரிசல்ட் தள்ளிவைப்புன்னு ஏகபட்ட
கலேபரம். அதிக பட்சமா 1.05 லட்சம் வரைக்கும் ஃபீஸ் வாங்கிக்கப்பான்னு
அரசாங்கமே சொல்லிடிச்சு. மேனேஜ்மெண்ட் கோட்டான்னா அதுக்குத்
தனி ஃபீஸ்!!!!! ஆந்திராவில் இஞ்சினியரிங் படிக்கறவங்க அதிகம்.
பாவம் பெற்றோர்கள். :((
***********************************************************************
அரசாட்சின்னா என்னன்னு சொல்லமுடியாத ஒரு கந்தர்வகோலத்தில்
இருக்கு இப்ப ஆந்திரா. இருக்கும் சொச்ச வருஷத்தையும் இப்படித்தான்
ஆளப்போகுது காங்கிரஸ்னா அடுத்து எலக்‌ஷன் வெச்சா ஓட்டுப்போட
மக்கள்ஸ் இருக்கணும்!!! அதுசரி மத்தியிலேயே அவங்க ஆட்சி
டான்ஸ் ஆடும்போது மாநிலத்தில் தப்பில்லையே.

முன்னேற்றம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு மாநிலமா
ஆகிடிச்சு ஆந்திரா. வரி,வட்டி, கிஸ்தி இதெல்லாம் நாங்க ஏன்
வெள்ளையனுக்கு கொடுக்கணும்னு அடிச்சு பத்திவிட்டோம்.
ஆனா நம்ம ஆளுங்களே நமக்கு தொட்டதுக்கெல்லாம் வட்டி
போட்டு மக்களை நசுக்கும் கொடுமை.
*********************************************************************
சமீபத்தில் ரசித்த காமெடி:

ஏண்டா நண்பா அந்தக்கடையில நகை வாங்கி அதை இன்னொரு
இடத்தில அடகு வெக்கற???

பாரு எனக்கு நாகார்ஜுனாவும் ஒண்ணுதான், வெங்கடேஷும்
ஒண்ணுதான்.அவங்க ரெண்டு பேரும் மாமன் மச்சானா
இருக்கலாம்! ஒருத்தர் பேச்சைக்கேக்கலைன்னு இன்னொருத்தர்
கோவிச்சுக்க கூடாதுல்ல....

என்ன சொல்ற??!!!??

நாகார்ஜுனா “கல்யாண் ஜுவல்லர்ஸ்” விளம்பரத்துல வந்து
நகை வாங்கச் சொல்றாரு. வெங்கடேஷ் ”மணப்புரம் கோல்
லோன்ல” வந்து நகையை அடகு வெக்கச் சொல்றாரு.
அதான் அந்தக்கடையில வாங்கி இங்க அடகு வெச்சேன்.!!!!

( வெங்கடேஷின் சகோதரி நாகார்ஜுனாவின் முதல் மனைவி)
:)))))
****************************************************************
திரைப்படங்களில் குணசித்திர நடிகரா இவரைப் பார்த்திருக்கிறேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாவர்ச்சி படத்தில் மூத்த அண்ணனா
வருவார். அபிமான் படத்தில் ஜெயாபாதுரியின் தந்தையா
நடிச்சிருப்பார். ஷோலே, நமக்ஹராம் இதெல்லாம் இவருக்கு
நல்ல பேரு வாங்கி கொடுத்த படம்.


நேத்து ஃபில்மி சேனலில் அபிமான் பாத்தபோது கூட
ஆகா இவருக்கு உடம்பு சுகமில்லாம இருக்கேன்னு நினைச்சேன்.
இன்னைக்கு காலையில் செய்தியில் இயற்கை அடைஞ்சிட்டாருனு
படிச்சு வருத்தமா இருந்தது. சுதந்திர போராட்ட தியாகியா இருந்து
பின்னாடி நாடகங்களில் நடிச்சு அப்புறமா சினிமாவுக்கு வந்தவர்
A. K. Hangal. 98 வயசுல இறந்திருக்காரு. ஆன்மா சாந்தி
அடைய என் பிரார்த்தனைகள்.
************************************************************************
அப்பா,அம்மா வந்திருந்தாங்க. பசங்களுக்கு கொண்டாட்டம்தான்.
அதுவும் தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடக்கும் செல்ல சண்டைகள்....
ம்ஹூம் சான்சே இல்ல. வரவிருக்கும் பிறந்தநாளுக்காக அப்பா
பணம் கொடுத்து ட்ரெஸ் வாங்கிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“தாத்தா! பொண்ணை கவனிக்கறீங்க சரி!! அப்படியே ஏதோ
கொஞ்சம் பேத்தியையும் கவனிங்க!!!!” என டக்கென சொல்லவும்
அப்பாவுக்கு செம சந்தோஷம். பேரப்புள்ளைக இப்படி பேச
கொடுத்து வெச்சிருக்கணும். :)(இதுவே நாங்க பேசி
இருந்தா பல் உடைஞ்சிருக்கும். :( )

தீபாவளிக்கு தம்பி ஹைதை வருவதாகவும், அதனால அப்பா
அம்மாவும் அதுக்கு முன்னாடியே கிளம்பி ஹைதை வந்து
பண்டிகையை இங்கே ஆனந்தமா கொண்டாடுவதாகவும் திட்டம்.
அம்மம்மா தாத்தா வரும்பொழுது கொண்டுவரச்சொல்லி
பேரன் பேத்திகள் கொடுத்திருக்கும் லிஸ்ட்டில் முக்கிய
இடம் “ 3 கிலோ ரவா லட்டு பொடி, தீபாவளி லேகியம்”

என்ன ஒரு திட்டம் பாருங்க!!!! :))
******************************************************************
இப்படி ஏமாந்திட்டோமேன்னு இருக்கு.!!!!

நம்ம முகம் யாருக்கும் தெரியாது என்பதால பல சொளகர்யங்கள்,
அசொகரியங்க. :)) சேட்டைக்காரன் பதிவுகள் படிச்சிருப்பீங்க.
அவர் என் பதிவுக்கும் வந்திருக்காரு. வாங்க சேட்டைத்தம்பின்னு
நானும் வரவேற்று கமெண்ட்டெல்லாம் போட்டிருக்கேன்.
இன்னைக்கு அவரோட புகைப்படத்தை இங்கே பார்த்தேன்.

அண்ணாச்சி என்னிய போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே இது நியாயமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// சமீபத்தில் ரசித்த காமெடி: ///

நல்ல நகைச்சுவை...

///அண்ணாச்சி என்னிய போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே இது நியாயமா?///

இதுவும்...

பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

நேற்று விழாவில் கலந்துகிட்டீங்க போல. போட்டோக்கள் பார்த்தேன். முன்னமே தெரிஞ்சிருந்தா நானும் கலந்துகிட்டு இருக்கலாம்.

(அடுத்தவாட்டியாவது 1 மாசத்துக்கு முன்னாடி தெரிஞ்சா வர ப்ளான் போடலாம். பெரிய பிரதமமந்திரின்னு நினைக்காதீங்க. அவரைவிடவும் அயித்தான் பிசி என்பதால அவருடைய செக்கரட்டரி நானும் பிசி :))
//அண்ணாச்சி என்னிய போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே இது நியாயமா?///

இதுவும்...//

செம பல்புங்க அது. :( :)

வருகைக்கு நன்றி

எல் கே said...

enaku koncha naluku munbe theriyum :))

ஹுஸைனம்மா said...

பதிவர் சந்திப்பு அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு மாசம் முன்னேயே வந்துடுச்சே? போயிருக்கலாம். சரி, பரவல்ல. நான் கலந்துக்கற சந்திப்பில் தவறாம வந்துடுங்க!! :-)))

//அதிக பட்சமா 1.05 லட்சம் வரைக்கு//
இது ட்யூஷன் ஃபீஸ் மட்டும்தான்! இதுகூட இன்னும் என்னென்ன பேருலயெல்லாமோ புடுங்குவாங்களே... :-((((

//A. K. Hangal. 98 வயசுல இறந்திருக்காரு//
ஆரம்பகால டிவி தொடர்களில் இவர் இல்லாமல் இருக்காது.

//அண்ணாச்சி என்னிய போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே இது நியாயமா?//
உங்க ஃபீலிங்ஸ் புரியுது. என்னையும் ‘அக்கா’வை வாபஸ் வாங்க வச்சீங்களே!!

அதென்னவோ, பொதுவா ஆண்களுக்கு தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக் கொள்வதில்தான் விருப்பம். ஆனால் பெண்களைத்தான் மேக்கப்பிற்கு அதிக நேரம், பணம் செலவு செய்கிறார்கள் என்று குற்றம் சொல்வார்கள்!!! :-)))))

வெங்கட் நாகராஜ் said...

இனிய பகிர்வு. இன்று காலை பேப்பரில் பார்த்து தான் திரு ஹங்கல் அவர்களின் மரணம் பற்றி தெரிந்தது. சிறப்பான நடிகர். கடைசி காலத்தில் பணம் இல்லாது மிகவும் கஷ்டப்பட்டார்... :(

சேட்டை அண்ணே... :))) ரசித்தேன்.

அமைதிச்சாரல் said...

//அண்ணாச்சி என்னிய போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே இது நியாயமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நீங்க வாங்குன பல்பை வெச்சு ஆந்திராவையே ஒளி வெள்ளத்துல மூழ்கடிக்கலாம் போலிருக்கே :-))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

ம்ம்ம் எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருந்திருக்கீங்க. :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

ரொம்ப ஆக்டிவா வலையுலகத்துல இல்லாததால தெரியாம போயிடிச்சு. நீங்க வரும்போது சொல்லுங்க ஃப்ளைட் பிடிச்சாவது வந்திர்றேன். :)
//அதென்னவோ, பொதுவா ஆண்களுக்கு தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக் கொள்வதில்தான் விருப்பம். ஆனால் பெண்களைத்தான் மேக்கப்பிற்கு அதிக நேரம், பணம் செலவு செய்கிறார்கள் என்று குற்றம் சொல்வார்கள்!!! :-)))))//

ஹா ஹா ஹா

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

அமீர்கான், அமிதாப் போன்றவர்கள் உதவி செஞ்சதாகவும் படிச்சேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

நீங்க வாங்குன பல்பை வெச்சு ஆந்திராவையே ஒளி வெள்ளத்துல மூழ்கடிக்கலாம் போலிருக்கே :-))))))//

ஆமாம்பா தினம் 3 மணிநேரம் கரண்ட் கட்டில் ஹைதை தவிக்குது. :( :)

வருகைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

முன்னேற்றம் என்பது மருந்துக்கும் இல்லாத ஒரு மாநிலமா
ஆகிடிச்சு ஆந்திரா.

ஆவக்காய் பிரியாணி செம காரம்!

புதுகைத் தென்றல் said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

ஆவக்காய் பிரியாணி செம காரம்//

:) வருகைக்கு மிக்க நன்றி