வலைப்பூவரசியா வந்ததற்கு வாழ்த்து சொன்னதோட ட்ரீட்டுக்கு
எங்க சாப்பிடப்போனேன்னு பதிவா போடச்சொன்ன ஹுசைனம்மாவுக்காக
இந்தப் பதிவு. (ட்ரீட் கேட்டா அயித்தான் சொன்ன டயலாக்-
ஏதோ ஒருவாட்டின்னா ட்ரீட் தரலாம். சும்மா சும்மால்லாம்
கஷ்டம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ. விகடன் வரவேற்பரையில்
என் வலைப்பூ வரட்டும், அப்ப பெரிய வேட்டா வெச்சுக்கறேன். :)))
செகந்திராபாத்தில் ரொம்ப பிரபலமான ஹோட்டல் இது.
லோக்கல் ட்ரிப்களுக்கு பிக் அப் பாயிண்ட் இந்த ஹோட்டல்தான்.
(ராமோஜி ஃபிலிம் சிட்டி, கோல்கொண்டா, சிட்டி ரவுண்ட் அப்)
யாத்ரி நிவாஸ். யாத்ரி நிவாஸ் AMOG GROUP OF HOTELSஆல்
நிர்வாகிக்கப்படுது.
SP ROAD அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் 5 ரெஸ்டாரண்ட்
இருக்கு. வெளியிலே காத்தோட்டமா உக்காந்து சாட் சாப்பிடலாம்.
Angan, Tamarind tree, The Hunter's roast, On the rock (pub),
Amogh takeaway.
இதுல நாங்க போனது ஆங்கன். மல்ட்டிஹுசைன் ரெஸ்டாரண்ட்.
இங்கே சாப்பாடு ரொம்ப சுவையா இருக்கும்.
என்ன ஆர்டர் செய்யலாம்னு ரொம்ப மண்டைய குழப்பிக்காம,
1 பை 2 க்ரீம் மஷ்ரூமும், ஸ்வீட் கார்ன் சூப்பும் ஆர்டர் செஞ்சோம்.
ஸ்டார்ட்டர் பனீர் 65. கொஞ்சம் காரமா இருந்தது. (நமக்குத்தான்
வயிறு வெந்து கெடக்கே!!)
அடுத்து மெயின் டிஷ்:
இங்கே வித்தியாசமா தால் மஹாராணின்னு பாத்தோம். எப்பவும்
தால் மக்கனிதானே சாப்பிடறோம்னு தால் மஹாராணி, வெஜிடபிள்
லஜீஜ் சொன்னோம். இந்தியன் ப்ரட்டில் ஸ்டஃப்டு குல்சா, பட்டர்
குல்சா ஆர்டர் செஞ்சோம்.
சுடச்சுட மெத்து மெத்துன்னு குல்சா வந்துச்சு. தால் மஹாராணியை
ஒரு சின்ன எவர்சில்வர் பக்கெட்டில் கொண்டு வந்து வெச்சாங்க.
காரம் அதிகமில்லாத உணவு. தால் மஹாராணி சுவை நல்லா
இருந்தது (அதே முழு கருப்பு உளுந்துலதான் செஞ்சிருந்தாங்க)
வெஜிடபிள் லஜீஜும் காரமில்லாம நல்லா இருந்தது.
ஸ்வீட் லஸ்ஸி வரவழைச்சு குடிச்சேன். டெசர்ட்டுக்கு போக
மனமில்லை. இங்கே ஹைதை டபுள் கா மீட்டான்னு ஒண்ணு கிடைக்கும்.
செம சூப்பரா இருக்கும். ப்ரெடில் செய்வது. ஆனா அன்னைக்கு
டெசர்ட் எதுவும் சாப்பிடலை.
பில் அதிகம் இல்ல. அந்த தரமான உணவுக்கு நியாயமான காசு.
எங்க 4 பேருக்கும் சர்வீஸ் டாக்ஸ், லொட்டு லொசுக்கு டாக்ஸ்
எல்லாம் சேர்த்ததால 1300/-. ஆனந்தமா எஞ்சாய் செஞ்சாச்சு.
ஹைதையில் பான் ரொம்ப ப்ரபலம். மத்த ஹோட்டல்களில்
பான் கிடைக்காது. அதனால பான் ஷாப் தேடி ஓடணும்.
ஆனா யாத்ரிநிவாசில் அந்த பிரச்சனையே இல்லை. பானுக்குன்னே
தனியா ஒரு கடை உள்ளே இருக்கு. ரெடியா செஞ்சு வெச்சிருக்கும்
பானை வாங்க மாட்டேன். அதுல தேங்காய்த் துருவல் எல்லாம்
போட்டிருக்கும். நமக்கு மீட்டா பான் தான். அதுலயும் பாக்கு
கெட்டியா இருப்பதை போடச் சொல்லாமல், மெலிசா இருக்கும்
அதை போடச்சொல்லி தயார் செஞ்சு வாங்கி எஞ்சாய் செஞ்சாச்சு.
கார்பார்க்கிங் ப்ராப்ளம் இல்ல. நல்ல விஸ்தாரமா இடம் இருக்கு.
வேலே பார்க்கிங்கும் உண்டு. ஹைதை வர்றவங்க கண்டிப்பா
இங்கே ட்ரை செஞ்சு பார்க்கலாம். இங்கே தங்கும் வசதியும்
இருக்கு. இங்கே சாட் அயிட்டம் கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா
ருசி அபாரமா இருக்கும்.
ரவுண்ட் அப் ரிப்போர்ட் போட்டு காதுல புகை கிளப்பியாச்சு.
1000மாவது பதிவுக்கு இன்னும் 100 பதிவுகள்தான் இருக்கு.
என்னுடைய 900ஆவது பதிவுக்கு வந்திருக்கும் உங்களுக்கு...
31 comments:
900-ஆவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்:)! ஆயிரம் நிறைவுக்கு இப்படி படம் போட்டுல்லாம் ட்ரீட் கொடுக்கக் கூடாது. எல்லோருக்கும் நெஜம்மான ட்ரீட் வேணும். ஆமா:)!
வாங்க ராமலக்ஷ்மி,
மனமார்ந்த நன்றி.
ஆஹா அதுக்கென்ன!!
முன்னக்கூட்டி சொல்லிடறேன். . ஹைதைக்கு கிளம்பி வந்திடுங்க. :))
ஆயிரம் பதிவு காணப்போகும் தென்றல் வாழ்க :-))
//ஹைதைக்கு கிளம்பி வந்திடுங்க. :))//
நீங்க இவ்ளோ ஆசையா கூப்பிடும்போது வராம இருப்போமா?.. நீங்க டிக்கெட் எடுத்து அனுப்புன உடனேயே கெளம்பிருவோமில்லே ;-)
மீட்டா பான்.. slurp..
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
வாவ்!!!!!!! இன்னும் வெறும் நூறுதான் பாக்கி!!!!
இனிய பாராட்டுகள்.
ட்ரீட் அபாரம்!
என்னது.... 900 ஆ? தலை சுத்துதுங்க தென்றல். நான்லாம் 200க்கே மேட்டர் கிடைக்காம முழி பிதுங்கிட்டு (இருக்கற கொஞ்சநஞ்ச) முடியப் பிச்சுட்டு இருக்கேன். 1000த்தையும் அசால்ட்டா நீங்க கடந்து எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் தர என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வாங்க அமைதிச்சாரல்,
வாழ்த்துக்கு நன்றி. அதுக்கென்ன டிக்கெட் எடுத்து அனுப்பிடலாம். டொராண்டோல புக் செஞ்சிடவா
வருகைக்கு நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.
வாங்க டீச்சர்,
ஆமாம் வெறும் 100 தான் :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க கணேஷ்,
வர்ற நவம்பர்ல பதிவு எழுத ஆரம்பிச்சு 6 வருஷம் ஆகுது. 6 வருஷமா 900 தான் பதிவு வந்திருக்கு. :(
1000 அடிச்சதும் கண்டிப்பா ட்ரீட் தந்திடுவோம். :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாழ்த்துக்கள்! நல்லதொரு பகிர்வு!
இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html
900 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். விரைவில் ஆயிரத்தை எட்டுங்கள்.
ஸ்ரீ....
900 enna oru villathanam??? vaalthukkal...
எச்சுஸ் மீ
//மல்ட்டிஹுசைன் ரெஸ்டாரண்ட்.//
அப்படினா என்னங்க.. புதுசா இருக்கே ??
:))
விரைவில் ஆயிரம் தொட வாழ்த்துகள் ...
வாங்க ஸ்ரீ,
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாங்க எல்கே,
ஆங்கிலத்தில் டைப் செய்ய சோம்பேறித்தனப்பட்டு தமிழ்படுத்தி டைப் செஞ்சேன். :))
multicuisine. இப்ப ஓகே வா!!
:))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க அமுதா கிருஷ்ணா,
வில்லத்தனமே தான் :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
900 பதிவுகள்...
மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.
சீக்கிரமே 1000 பதிவு வெளிவரணும்... அதுக்கு எங்களுக்கும் ட்ரீட் கொடுக்கணும்...
சரியா...
ஆஷிஷ் அம்மா !
900 க்கு வாழ்த்துக்கள் !!
வாழ்த்துவதற்கே வார்த்தைகளை தேட வேண்டி உள்ளது....900 பதிவுகள் போட்டு உள்ளீர்கள்..வாழ்த்துகள்..!! ..
check your email...tq
//மல்ட்டிஹுசைன் ரெஸ்டாரண்ட்.//
அதானே, நானும் பாத்துட்டு நம்ம பேருல ஓட்டலே தொடங்கிட்டாஙக்ளா நம்ம ரசிகர்கள்னு நினைச்சேன்!!
900-க்கும், கிடைச்ச ட்ரீட்டுக்கும் வாழ்த்துகள். :-))))
ஏ அப்பா .... வாழ்த்துகள்..:)
ஆயிரம் க்கு எல்லாரையும் கூப்பிட்டு நிஜம்மான ட்ரீட் கொடுத்துடுங்க..
( அய்யோ பாவம் தலைவர்)
ஆயிரம் இப்பவே வந்துடாதா. தென்றல் சீக்கிரம் எழுதிடுங்க.
900 பதிவுகளுக்கும் எடுத்துக் கொண்ட உழைப்புக்கு என் வாழ்த்துகள். கலையம்சமும்,குடும்ப விஷயமும், ஆகார சம்பந்தமான பதிவுகளும் சரியான பிரியாணியாகவே வந்திருக்கின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாங்க சகோ,
ட்ரீட் கொடுத்திட்டா போச்சு.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க பாலா,
நலமா. ஆஷிஷ் அம்மாவேதான். :))
வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி
வாங்க அப்பாஜி,
வாழ்வதே வார்த்தைகளால் தான். :))
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
அதானே, நானும் பாத்துட்டு நம்ம பேருல ஓட்டலே தொடங்கிட்டாஙக்ளா நம்ம ரசிகர்கள்னு நினைச்சேன்!!//
:)) வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
வாங்க கயல்,
ஆயிரம் க்கு எல்லாரையும் கூப்பிட்டு நிஜம்மான ட்ரீட் கொடுத்துடுங்க..
( அய்யோ பாவம் தலைவர்)//
அதுக்கென்ன கண்டிப்பா கொடுத்திடுவோம். வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாங்க வல்லிம்மா,
ஆயிரம் இப்பவே வந்துடாதா. தென்றல் சீக்கிரம் எழுதிடுங்க.//
இந்த வருஷக்கடைசிக்குள்ள கண்டிப்பா 1000 அடிச்சிடறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்மா.
////////////
ஸ்வீட் லஸ்ஸி வரவழைச்சு குடிச்சேன். டெசர்ட்டுக்கு போக
மனமில்லை.
///////////
Same pinch! Wishes for a sooner 1000th post.
Post a Comment