Thursday, August 30, 2012

ஷீரடிசாயி

பக்தி படங்கள் தமிழில் அதிகமா வர்றது இல்லை. வந்தாலும்
கிராஃபிக்ஸோடுதான் வருது. உண்மை கதைகளை படமா
எடுக்க ஏன் யாரும் அதிகமா முன்வருவதில்லைன்னு தெரியலை.
இங்கே தெலுங்கில் ஷீரடிசாயி படம் பிரபல இயக்குனர்
ராகவேந்திரராவ் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில்
வெளிவர இருக்கு. சமீபத்தில்தான் ஆடியோ ரிலீஸ்
நடந்திருக்கு.

பக்திபடத்தில் நாகார்ஜுனாவுக்கு புதிசில்ல.
அன்னமய்யா படத்தில் தத்ரூபமா இருக்கும் அவரது
நடிப்பு. ரொம்ப பிரபலம் இந்தப் படம்.

அதற்கு அடுத்த ஹிட் பக்தி படம் ராமதாசு.
பத்ராசல ராமதாசுவாக நாகி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்
படம். இதில் நாகிக்கு ஜோடி சினேகா. படம்
மிக அருமையாக இருக்கும்.

இந்த வரிசையில் நாகி நடித்து வெளிவர இருக்கும் படம் ஷீரடிசாயி.



ஷீரடி போனால் அங்கே ஆந்திரமக்கள் கூட்டம் 75 சதவீகிதம்னு சொல்வாங்க.
அவ்வளவு பக்தர்கள் இங்கே. பாடல்கள் ரொம்ப அருமையா இருக்கு.
கண்டிப்பா இந்தப்படமும் ஹிட்டாகும்.

நேற்றுதான் நாகார்ஜுனா தன்னுடைய 53ஆவது பிறந்தநாளை மிக
எளிமையா கொண்டாடினார். 6 மாதம் முன்னாடிதான் தன் தாயார்
அன்னப்பூர்ணாவை இழந்திருக்கிறார். அதனால் பெருசா கொண்டாடலை.
நாகேஸ்வரராவ் அவர்களும் அந்த இழப்பிலிருந்து மீள ரொம்ப
கஷ்டப்பட்ட சூழலில் அவரை இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு
அழைத்துச் சென்றிருக்கார் நாகார்ஜுனா.

ராமதாசு படத்தில் நாகேஸ்வரராவும் நடிச்சிருப்பாரு.





நாகிக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்தப்
படமும் சூப்பர்ஹிட்டாக வாழ்த்துக்கள்

8 comments:

எல் கே said...

மற்ற மொழிகள் அளவிற்கு தமிழில் பக்தி படங்கள் எப்பொழுதுமே வந்ததில்லை ...

pudugaithendral said...

வாங்க எல்கே,

தாய்முகாம்பிகை, நவக்கிரகநாயகி இப்படி ரொம்ப குறைவான படங்களே வந்திருக்கு.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அன்னமய்யா பார்த்து விட்டேன்... இந்தப்படம் பார்த்ததில்லை... தமிழில் பக்திப்படம் எடுக்க சில பேர் இருந்தாலும், "போட்ட பணம் கிடைக்குமா...?" அது தான் அவர்களின் சிந்தனை... பகிர்வுக்கு நன்றி...

settaikkaran said...

நானும் இந்தப் படத்துக்காக வெயிட்டிங்! :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

தமிழில் பக்தி படங்கள் - முன்பு நிறைய வந்திருக்கு சகோ. இப்போது வருவதில் தான் நிறைய கிராஃபிக்ஸ்.

திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற அந்த கால படங்களை மறக்க முடியுமா.....

நாகி: பிறந்த நாள் வாழ்த்துகள் என் சார்பாகவும்! ;))

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

ராமதாசு பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.

// "போட்ட பணம் கிடைக்குமா...?" அது தான் அவர்களின் சிந்தனை... //

ம்ம்ம்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சேட்டை அண்ணாச்சி,

நிறைய்ய எதிர்பார்ப்பை இந்தப்படம் உருவாக்கியிருக்கு. அன்னமய்யா, ராமதாசு படங்களின் கதைகள் முன்னமே தெரிஞ்சாலும் அதை எப்படி எடுத்திருக்காங்க, நாகி இந்த ரோலுக்கு சூட் ஆவாரா!! எல்லாம் பார்க்கணும்னு இருந்துச்சு.

இப்ப ஷீரடி சாயி கதையை எப்படி செஞ்சிருப்பாருன்னு பார்க்க ஆவலா இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆமாம் அதெல்லாம் கிளாசிக் படங்கள். அந்தமாதிரி இப்ப வருவதில்லை அதான் குறை.

வருகைக்கு மிக்க நன்றி